NEERKUMILI REVIEW
NEERKUMILI REVIEW #நாகேஸ் #ஒருதுளியில்கடல்_கொண்டவன் #நீர்க்குமிழி தாழ்மையான அறிவிப்பு The Fault In Our Stars என்ற மூவிக்கு தான் நான் எதாவது எழுதலாம் என வந்தேன். மரண தேதி குறிப்பிட்ட ஒரு மனிதனின் நடிவடிக்கையை ஏற்கனவே பாலசந்தர் தன் முதல் படத்தில் நாகேஸ் மூலமாக சொல்லிவிட்டார். அதை தாண்டி The Fault In Our Stars படத்தை பற்றி சொல்லுவது ஏதோ என்னை அறிவு ஜீவியாக காட்டுகிற வேலை.. மற்றது நான் எழுதுவது ரிவியூ அல்ல என் உணர்வு கடத்தல். ரிவுயூ எழுத எல்லாம் எக்ஸ்ரா மைண்ட் தேவை. I am sorry எக்ஸ்ரா மைண்ட் என்னிடம் இல்லை. பாலசாந்தர் அறிமுகப்படுதிய ரஜனிகாந்த் பற்றி பேசிய பல பேர் பாலசந்தரை அறிமுகப்படுத்திய நாகேஸ் பற்றி பேசவில்லை.. தன்னை எல்லோரும் புறக்கணிக்கிறார்கள் என அந்த மிகச்சிறந்த நடிகன் தன் கடைசிக் காலம் வரை வருந்தியே இறந்தார். ஓவர் ஆக்டிங் இல்லை. ( அது யார் என உங்களுக்குத் தெரியும் ) சாதாரண ரசிகனை ஏமாத்துற வார்த்தை ஜாலம் இல்லை ( எம்.ஜீ.ஆர் முதல் ரஜனி ஊடாக மற்றும் பல ) நடிகனாக கடைசி வரை நின்றவர் நாகேஸ் ஒருவர் தான். சாருக்கான் நாகேஸ் உடைய உடல் மொழியை சரியாக கற்றுத் தேர்ந்து அதன் ஊடாக மிகப் பெரிய...