Monday 23 August 2021

NEERKUMILI REVIEW

 

NEERKUMILI REVIEW



#நாகேஸ்

#ஒருதுளியில்கடல்_கொண்டவன்

#நீர்க்குமிழி

தாழ்மையான அறிவிப்பு

The Fault In Our Stars என்ற மூவிக்கு தான் நான் எதாவது எழுதலாம் என வந்தேன்.


மரண தேதி குறிப்பிட்ட ஒரு மனிதனின் நடிவடிக்கையை ஏற்கனவே பாலசந்தர் தன் முதல் படத்தில் நாகேஸ் மூலமாக சொல்லிவிட்டார்.


அதை தாண்டி The Fault In Our Stars படத்தை பற்றி சொல்லுவது ஏதோ என்னை அறிவு ஜீவியாக காட்டுகிற வேலை..



மற்றது நான் எழுதுவது ரிவியூ அல்ல என் உணர்வு கடத்தல்.


ரிவுயூ எழுத எல்லாம் எக்ஸ்ரா மைண்ட் தேவை.

I am sorry எக்ஸ்ரா மைண்ட் என்னிடம் இல்லை.


பாலசாந்தர் அறிமுகப்படுதிய ரஜனிகாந்த் பற்றி பேசிய பல பேர் பாலசந்தரை அறிமுகப்படுத்திய நாகேஸ் பற்றி பேசவில்லை..


தன்னை எல்லோரும் புறக்கணிக்கிறார்கள் என அந்த மிகச்சிறந்த நடிகன் தன் கடைசிக் காலம் வரை வருந்தியே இறந்தார்.


ஓவர் ஆக்டிங் இல்லை. ( அது யார் என உங்களுக்குத் தெரியும் )



சாதாரண ரசிகனை ஏமாத்துற வார்த்தை ஜாலம் இல்லை ( எம்.ஜீ.ஆர் முதல் ரஜனி ஊடாக மற்றும் பல )


நடிகனாக கடைசி வரை நின்றவர் நாகேஸ் ஒருவர் தான்.


சாருக்கான் நாகேஸ் உடைய உடல் மொழியை சரியாக கற்றுத் தேர்ந்து அதன் ஊடாக மிகப் பெரிய சக்ஸஸ்சை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.


அழும்போது, காதலை சொல்ல முற்படும்போது,வார்த்தைகளை தடுமாறி பேசும்போது, சிரிக்கும் போது, தன் இயலாமையை காட்டும் போது என பல வகையான சமயங்களில் நாகேசின் உடல் மொழி சாரூக்கானில் இருப்பது போல தோணுவது என்னுடைய கண்ணின் பழுதோ தெரியவில்லை.



அப்படி இல்லை என்பவர்களிடம் நான் வாதாடா ரெடி. ஆனால் உடல்மொழியை மையமாக வைத்து எப்படி வாதாடுவது ? இது அறிவுசால் விசயம் இல்லை உணர்வுசால் விசயமாச்சே. கிட்டத்தட்ட எனது மகள் இறந்து போன அம்மம்மா போல இருக்கிறாள் என்ற உள்ளுணர்வு சார்ந்தது..

சாருக்கானின் உடல் மொழியும் நாகேஸ் உடல் மொழியும் ஒன்றென்பது ..

அதனால் கொஞ்சம் யோசிக்கிறேன்..*


(*இதில் ஆரம்பித்து * இதில் முடியும் வார்த்தை எனக்குத் தோணியது.

மன்னிச்சுடுங்கோ..எனக்கான பார்வை ஏதோ ஆர்வக்கோளாரில் பதிஞ்சுட்டேன்)


தமிழில் மிகச் சிறந்த நடிகன் நாகேஸ் தான் அது தான் உண்மை.

அது தான் சத்தியம். ஏதோ உப்புக்கு சப்பாக அவர் நடித்த துணை நடிப்பான காமெடி பாத்திரங்களை வைத்து அவரை எடை போடாதீர்கள்.


அவர் ஹீரோவாக நடித்த நீர்க்குமிழி / சர்வர் சுந்தரம் போல மற்றைய படங்களை பார்த்தால்..

ரொம்ப ஈசியாக அநாயாசமாக மற்ற நடிகர்களை தூக்கி சாப்பிடுவார்.


நீர்க்குமிழி தாக்கம்


படம் முழுவதும் ஆஸ்பத்திரியில் தான்.

சாவின் தேதி அறிந்த ஒருவன் மிச்ச உள்ள வாழ்க்கையை எப்படி happy ஆக மற்றவர்களுக்கு பிரயோசனமாக வாழ்கிறான் என்பது தான் கதை..


அதிலும் அமர்த்தி விட்ட ஸ்பிரிங் போல படம் முழுவதும் நாகேஸ் எனர்ஜியாக நடிப்பார்.

ஒரு சேர்ட்டு ஒரு ஜீன்ஸ் இவ்வளவும் தான் உடை.


ஆனால் உதறி எடுப்பார் நடிப்பில்


அதுவும் ஒருத்தருக்கு கொடுக்க வேண்டிய கடனை கொடுக்க கூடிய வசதி இருந்தும் நாகேஸ் கொடுக்கமாட்டார்.


அவரும் எவிரி வீக்கும் தவறாமல் ஆஸ்பத்திரி வந்து நாகேஸ் இடம் கடனை கேட்டு சத்தம் போடுவார்..


இன்னும் இரண்டு மூன்று நாள் தான் உயிரோடு இருக்கப் போகிறோம் எனத் தெரிந்த உடன் நாகேஸ்


"அண்ணா என்னை யாருமே பார்க்க இங்கே வருவதில்லை சரி கடனை கேட்டாவது நீ கிழமைக்கு ஒரு தடவை வருவாய் எனத்தான் இவ்வளவு நாளும் கடனை தரவில்லை " என்று சொல்லுகிற அந்த தொணியில்..

நாகேஸ் எப்பேர் பட்ட நடிகன் என காட்டி விடுவார்..


இந்தப்படத்தை எப்படியாவது பாருங்க...


முடிஞ்சால் The Fault In Our Stars மூவி பற்றிய எனது தாக்கத்தையும் எழுத முயற்சி பண்ணுறேன்.


பின்குறிப்பு

*16 வயதிலேயே சினிமாவை பாரதிராஜா நாகேஸ் வைத்து எடுக்கத்தான் கதை எழுதினார்

நீர்க்குமிழி படத்தில் தான் ஆடி அடங்கும் வாழ்க்கை என்ற சிறந்த பாடல் இருக்கிறது. இயலாதவன் வலியை சரியாக இந்த பாடலில் நாகேஸ் காட்டுவார்.

அலைபவன் ஐச்சு

.

No comments:

Post a Comment