Friday 6 August 2021

 



வி.என். ஜானகி அம்மா வரலாறு

வி.என். ஜானகி அம்மா அவர்கள் சொந்த ஊர் கேரளா பாலக்காட்டுக்கு அடுத்து உள்ள வைக்கம் என்ற ஊர். இவர் பிரபல கர்நாடக பாடல் அசிரியர் பாபநாசம் அவருடைய தம்பி ராஜகோபால் ஐயருடைய மகள் தான் வி.என். ஜானகி அம்மா அவர்கள். வைக்கத்தில் பிறந்தவராக இருந்தாலும் படித்தது, நடனம் கற்றக்கொண்டது எல்லாம் சென்னைதான். இவருடன் பிறந்தது ஒரு ஆண் அவர் பெயர் நாராயணன். இவர்கள் சென்னை மைலாப்பூர் கேசவப் பெருமாள் கோயிலுக்கு அருகில் வசித்தார்கள். இவர்கள் பக்கா பிராமின் வி.என். ஜானகி அவர்கள், பிரபல டைரக்டர் K. சுப்பிரமணி, நடிகை S.D. சுப்புலட்சுமி அவர்கள் நடத்தி வந்த நாடக குழுவில் நடித்து வந்தார். பிறகு டைரக்டர் K. சுப்பிரமணி வழியாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" இந்த படத்தில் கதாநாயகியாக ரொம்ப பிரமாதமாக நடித்துள்ளார். அந்த படத்தில் இவர் ஆயிரம் தலைகளை வெட்டி குவிக்கும் காட்சி மயிர் சிலிர்க்க வைக்கும் அந்த படம். எம்.ஜி.ஆர். அவர்களுடன் கதாநாயகியாக நடிக்க சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் மோகினி 1948ல் வெளிவந்தது. அதை அடுத்து மருதநாட்டு இளவரசி, நாம் போன்ற படங்கள் இவர்கள் நடித்த படங்கள். இந்த கால கட்டத்தில் இல்லற வாழ்க்கையே நமக்கு இனிமேல் ௾ல்லை தான் உண்டு தன் தொழில் உண்டு உழைப்பே உயர்வு என்ற ஏணியில் ஏறிக்கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய சறுக்கல் அதாவது எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மூன்றாவது கல்யாணம் நடக்க இயற்கை அழைக்கிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் மூன்று படங்களில் ஜானகி அம்மாள் நடித்து உள்ளார்கள்.

இதற்கு இடையில் எம்.ஜி.ஆர். மீது அன்பு கொண்டார். (காதல்) இதை அறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அன்புக்கு அடிமையானார். ஆனால் காதல் என்பது சினிமாவில் மட்டும் (நடிப்பில்) என்னுடைய சொந்த வாழ்க்கையில் இல்லை. என் தாய் உடனே எனக்கு கேரளாவில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். நான் அந்த பெண்ணுடன் ஒரு வருடம் தான் வாழ்ந்தேன். பிறகு ஒரு வருடம் கழித்து எனக்கு கட்டாயமாக இரண்டாவது கல்யாணம் நடந்தது. அந்த பெண்ணோடு நான் ஒரு வருடம் தான் நல்ல சந்தோஷமாக வாழமுடிந்தது.

பிறகு அந்த பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அது சரி ஆகாமல் தொடர்ந்து உடல் நலக்குறைவாகவே இருக்குது. இந்த மாதிரியான சூழ்நிலையில் உள்ள என்னிடம் என்னை நீங்கள் விரும்புவது எப்படி சரியாகும், தயவு செய்து இது வேண்டாம் நாம் இருவரும் நண்பர்களாக ௾ருப்போம் தொடர்ந்து படங்களில் நடிப்போம் என்று எம்.ஜி.ஆர். அவர்கள் மிக விளக்கமாக சொன்னார். இருந்தாலும் தன்னுடைய குடும்ப நிலைகளை விபரமாக சொன்னார். வி.என். ஜானகி அவர்கள் பெண் என்றால் பேயின் மனம் இறங்கும் என்பது போல் எல்லாவற்றையும் யோசித்த எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்பட்டார். ஒரு பக்கம் தன் தாய், மறு பக்கம் தன் மனைவி, மேலும் மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணை காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ சட்டப்படி குற்றம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்கள் நன்கு அறிவார். அவர் நாடகம், சினிமா, குடும்ப வாழ்க்கையில் மிகவும் அனுபவம் பெற்றவர். எதையும் யோசிக்காமல் செய்யமாட்டார். அப்படிபட்ட இவருக்கு வி.என். ஜானகி அம்மா விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. வி.என். ஜானகி அம்மாவிடமும், சதானந்தவதியிடமும் பேசுவது, சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடுவோமே என்று மிகவும் மனதை தைரியப்படுத்தி கொண்டு ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் முதலில் தன் மனைவியை பார்த்து விட்டுத்தான் மற்ற வேலைகளை செய்வது வழக்கமாக நடக்கிற விஷயம். இப்போ தன் மனைவியிடமே நேரடியாக இதை பற்றி பேசி விடலாம் என்ற எண்ணத்துடன் தன் மனைவியிடம் வி.என். ஜானிகி அவர்களைப் பற்றி முழுவிவரத்தையும் சுருக்கமாக சொல்லிவிட்டு பிறகு காதல் கல்யாண விஷயத்தையும் கடகடவென்று சொல்லிவிட்டு தன் மனைவியின் கையை பிடித்து கொண்டார். இந்த விஷயத்தில் மனைவியின் சம்மதம் இருந்தால் போதும். பிறகு மற்றவர்களுடைய சம்மதத்தை பெற்று விடலாம். தன் கணவர் தன்னிடம் பேசியதை கேட்டு கொண்டு இருந்த சதானந்தவதி அவர்களின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

இதை பார்த்த எம்.ஜி.ஆர். உடனே கண்ணீரை துடைத்து விட்டு கொண்டே தன் மனைவியிடம் உனக்கு இது பிடிக்காவிட்டால் விட்டு விடு அழாதே உன்னுடைய சம்மதம் இல்லாமல் இனி மேல் அந்த பெண்ணிடம் பேச கூட மாட்டேன். கவலைபடாதே இந்த விஷயத்தை அம்மாவிடம் கூடநான் சொல்லவில்லை நீ நல்லா யோசித்து உன் முடிவை மெதுவாக சொல் அவசரம் இல்லை என்று சொல்லிவிட்டு அவருடைய அறைக்குள் போய்விட்டார். இவர் சென்ற பிறகு தன்னுடைய கணவருடைய நிலமையைப் பற்றியும் அவருடைய வேண்டுகோளைப் பற்றியும் நினைத்து இந்த விஷயத்தை அடுத்த நாள் தன் மாமியார் இடமும் எம்.ஜி.சி. அவர்களிடமும் இந்த விஷயத்தை பற்றி பேசினார். இந்த செய்தியைக்கேட்ட இந்த இருவருக்கும் அதிர்ச்சி அடைந்து போனார்கள். பிறகு சதானந்தவதி சத்தியதாயிடமும் எம்.ஜி.சி அவர்களிடமும் தன் கணவர்விருப்பப்படி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும், எனக்கு என் கணவருடைய மன நலம் தான் முக்கியம் அவருடைய மனம் நோகக்கூடாது. என்னுடைய உடல் இனிமேல் நலம்பெற்று நான் எழுந்து மீண்டும் என்னுடைய பொறுப்புகளை சேவைகளை அவருக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே தயவு செய்து அவரிடம் எந்த வித மறுப்பும் சொல்லாமல் கேள்விகள் கேட்காமல் அவரிடம் நீங்களே உங்களுடைய சம்மத்தை சொல்லுங்கள். அவர் மனம் புன்படாமல் நல்ல சந்தோஷமாக இருப்பது தான் நமக்கு முக்கியம் என்று சொல்லிக்கொண்டு சத்தியதாயுடைய கையை பிடித்து கண்ணீர் விட்டார். இந்து அகராதிப்படி கணவன் தன் மனைவியிடம் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளபோகிறேன் என்று சம்மதம் கேட்டதும் இல்லை. மனைவி கணவருக்கு சரி செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதில்லை. எந்த சூழ்நிலையிலும் தன் கணவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் வைப்பாட்டியோ 2வது பெண்டாட்டி வைத்து கொள்ள நல்லமனத்துடன் சம்மதிக்க மாட்டார்கள்.

ஆனால் சதானந்தவதி அவர்கள் தன் கணவர் தன்னிடம் நான் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டதை நினைத்து பூரிப்பு அடைந்து போனார். தன் மனைவி ஒரு படுக்கை நோயாளி என்று நினைக்காமல் பாசத்தோடும் பற்றோடும் கேட்டாரே இவர் வேறு திருமணம் செய்து கொண்ட பிறகு நம் மீது வைத்துள்ள அன்பும், பாசமும், பற்றும் போய்விடுமோ என்று நினைத்து எதுவானாலும் சரி அவர் நல்லா இருந்தால் போதும். நாம் சாகும் வரை அவருடைய முகத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் போதும். இந்த விஷயத்தில் சத்தியத்தாயும் எம்.ஜி.சி. அவர்களும் எந்த வித மறுப்பும் சொல்லவில்லை. அப்படி இப்படினு எப்படியோ 1957ல் எம்.ஜி.ஆர் அவர்களும், வி.என். ஜானகி அம்மா அவர்களும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு ராயப்பேட்டையிலேயே ஒரு தனி வீடு பார்த்து குடித்தனம் அமைத்தார். திருமணம் செய்து கொண்ட உடனே வி.என். ஜானகி அவர்களை சதானந்தவதிக்கு அறிமுகப்படுத்தினார். உடனே வி.என். ஜானகி அவர்கள் சதானந்தவதி அவர்களுடைய காலை தொட்டு வணங்கி விட்டு அக்கா நான் உங்களுடைய உடன் பிறவா தங்கை என்னை உங்கள் தங்கை போல் நினைத்து கொள்ளுங்கள் எனக்கு இப்போ என் உடன் பிறந்த தம்பியைத் தவிர வேறு யாரும் இல்லை. இதை கேட்ட சதானந்தவதி அவர்கள் வி.என். ஜானகி அவர்களுடைய கையைப்பிடித்து கொண்டு நான் இருக்கிறேன் கவலைபடாதே என்றார்.


வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய
தகப்பனார் வழி பூர்வீகம்

M G Rமக்கள் திலகம் அவர்களுடைய தந்தை கோபாலன் அவர்களுடைய தந்தை பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்து஡ர் என்ற கிராமம். அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் "கொங்கு நாடு" என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்று சொல்லப்படுகிறது.

இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்த காலத்தில் கோபாலன் அவருடைய தாய் தந்தை கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது. எப்படி கோவை மாவட்டம் என்பது என்னுடைய ஆய்வில் தெரிகிறது. எப்படி இருந்தாலும் கோபாலன் அவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது என்னுடைய ஆய்வில் தெரிகிறது. இப்போது என்னுடைய ஆய்வில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜி.ஆர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்விகம் தமிழ்நாடு இவர் பிறந்தது ஈழத்தமிழ்நாடு இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது. செந்தமிழ்நாடு கும்பகோணம் ஆரம்பம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைதான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.

இது மக்கள் திலகம் அவர்களுடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் தந்தை கோபாலன் அவர்கள் கேராளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் கேரளா வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனு஡ர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம் கோபாலன் அவர்கள் பட்ட படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விஷயத்திலும் கோபப்படமாட்டார். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தது இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளது. இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இருந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சொத்து விஷயத்தில் தகராறுகள் ஏற்பட்டு அது ரொம்ப பெரிய விஷயமாக பெரிய தகராறுகள் பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிறீர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும். வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் அவர்கள் மிக ரகசியமாக இந்த விஷயத்தை வைத்து கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.

MGRகோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட முனிசிப்பு கோர்ட்டில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள். அதை ஏற்றுக்கொள்ளாத துணை நீதிபதி உங்க்ள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பும் அந்த ஊரில் கோபாலன் அவர்களுக்கு உண்டு. அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துகொண்டு இலங்கைக் செல்கிறார். இலங்கை கண்டிக்கு சென்றவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் அவர்கள் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டி என்பது ஒரு பெரிய நகரம் அங்கு 100க்கு 50 சதவிதம் பேர்கள் தமிழர்கள். இதே போல் இலங்கையில் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாடுதான் ஈழநாடு இலங்கை மறுபெயர் ஈழநாடு என்று சொல்லப்படுகிறது. இது உலகம் அறிந்த விஷயம்.

இந்த காலகட்டத்தில் ஈழ தமிழர்கள் வாழும் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர் அவர்கள் 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36க்கு பிறக்கிறார். 5வது குழந்தையாக தாய் தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா அவர்கள் ரசிப்பார்கள். நான்காவது குழந்தையாக சக்கரபாணிக்கும் எம்.ஜிண.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜிண.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் அவர்கள் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டி பிடித்து கொஞ்சுவாராம்.

இந்த காலகட்டத்தில் கோபாலன் அவர்களுக்கு ஒரு கல்லூரியில் பேராசியராக வேலை கிடைத்தது. அதில் இருந்த சில வருடங்கள் கழித்து கண்டியின் மாவட்ட நீதி மன்றம் ஆங்கிலத்தில் முனிசிப் போர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலன் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. கோபாலன் அவர்கள் மாரடைப்பால் 1920ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை அவர்கள் ஆறுதல் சொல்லி செல்கிறார்கள். அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா அவர்கள் தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்க பட்ட சொந்த வீடு சேர்த்து வைத்து இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண்குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.

MGRஏற்கனவே தன் கணவரை பறிக்கொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமா அவர்களுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் MGR தன் தாயின் கழுத்தை கட்டி பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம். ஐந்தாவது குழுந்தையாக நீ பிறந்த பிறகு தான்னடா. பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று MGRரை கட்டி பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போதும் எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபானியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளை அவர்களின் உதவியை நாடுகிறார்கள். அது சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிக சிறந்தது ஆகும். அது சமயம் சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம். இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. அது சமயம் தான் கும்பகோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவர் இவர் சத்தியபாமா அவர்களுக்கு நெருங்கிய உறவினர் நாராயணனுக்கு சத்திய பாமா அவர்கள் தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார். அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு கும்பபோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்து கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.

சத்தியபாமா அவர்கள் நாராயணன் அவர்களுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று திரு. நாராயணன் அவர்களிடம் சத்தியபாமா அவர்கள் சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளி கூடத்தில் சேர்த்து விட்டார்க்ள. மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சனை உண்டாகிறது. இந்த நேரத்தில் சத்தியபாமா அம்மா அவர்கள் மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து தன் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள். MGRஇந்த நிலையில் MGR அவர்களும், சக்கரபானி அவர்களுக்கும் 3வயதுதான் வித்தியாசம். சக்கரபானி, தம்பியை ராமசந்திரா என்று அழைப்பார். பள்ளிகூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம். நேர்மை, நீதி பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர் நீதிபதியாகவம். பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர் அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதை கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதிமொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைகக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். தன் தாயினுடைய உழைப்பாள் நாம் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மனதுக்குள் நாளுக்கு நாள் வளர தொடங்கியது. இந்த இருவருடைய பள்ளி வாழ்க்கையின் சில சம்பவங்களை இங்கே கூறுகிறேன்.

தொடரும்

வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

பத்து வயதில் கணக்கு கேட்டார்!

MGRஎம்.ஜி.ஆர் அவர்கள் பள்ளிக்கூடத்தில் மூன்றாவது வகுப்பு படித்து கொண்டு இருக்கும் காலத்தில் ஒரு நாள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் குடிக்க ஒரு மண்பாணையில் தண்ணீரும், பக்கத்தில் ஒரு அலுமினிய டம்பளரும் வைத்து இருப்பார்கள். தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு வருகிற பிள்ளைகள் வரிசை பிரகாரம் இந்த மண்பானை சுத்தமாக கழுவி தண்ணீர் கொண்டு வந்து வைக்கவேண்டும். இதுமுறை. இந்த பள்ளிகூடத்தின் விதிமுறை

இப்படி இருக்கும் போது ஒரு நாள் தண்ணீர் கொண்டு வரபோகும்போது பானை உடைந்து விடுகிறது. இதற்கு மறு பானை வாங்கி தண்ணீர் வைக்க வேண்டும். ஆனால் இதற்கு காசு யார் கொடுப்பது என்ற விஷயத்தில் வாத்தியார் தலையிட்டு பிள்ளைகளிடம் ஆளுக்கு 1/4 அணா போட்டு பானையை வாங்கி வரவேண்டும் என்று வாத்தியார் சொல்லிவிட்டார். இப்போது வருடம் "1925" 1/4 அணா என்பது இந்த காலத்தில் 100 பைசா கொண்டது ஒரு ரூபாய். அந்த காலத்தில் 16 அணா கொண்டது ஒரு ரூபாய். இந்த ஒரு ரூபாயை வசூல் செய்து கொண்டு அருகாமையில் உள்ள சந்தைக்கு (மார்க்கெட்) சட்டாம்பிள்ளையும் மூன்று மாணவர்களும் பானை வாங்க செல்கிறார்கள். அதில் ஒருவர் எம்.ஜி.ஆர் பானை 3/4 ரூபாய்க்கு வாங்கியது போக மீதி 1/4 ரூபாய் சட்டாம்பிள்ளை கைவசம் உள்ளது. இந்த பானையை வாங்கி எம்.ஜி.ஆரிடமும் இன்னொரு பையனிடமும் கொடுத்து நீங்கள் முன்னால் போங்கள் நாங்கள் பின்னால் வருகிறோம் என்று சொல்லி அனுப்பிவிட்டு சட்டாம்பிள்ளையும் மற்றொரு பையனும் மீதி 1/4 ரூபாயிற்கு பொறி உருண்டையும், முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருவதை முன் சென்ற எம்.ஜி.ஆரும் மற்றொரு பையனும் மறைவான ஒரு இடத்தில் நின்று அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பார்க்கின்றார்கள்.

அந்த நேரத்தில் பின்வரும் சட்டாம்பிள்ளையும் சாப்பிட்டு வருவதை பார்த்து மீதம் உள்ள காசுக்கு இவர்கள் நமக்கு கொடுக்காமல் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறார்கள் என்று எம்.ஜி.ஆரும் நண்பரும் பேசி கொண்டு வருகிறார்கள். அங்கு சட்டாம்பிள்ளையும் கூட வந்த சட்டாம்பிள்ளை நண்பனை பார்த்து எம்.ஜி.ஆர் கேட்கிறார் பானை வாங்கி விட்டு மீதம் உள்ள காசுக்கு நீங்கள் ரெண்டு பேரும் பொறி உருண்டையும் முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்ட வருகிறீர்களே பானை வாங்கியது போக மீதம் உள்ள காசு எவ்வளவு என்று கேட்டு இருவருக்கும் வாதம் நடக்கிறது. அப்போது நீ யார்டா என்று சட்டாம்பிள்ளை வாய் வித்தியாசமாக தகாத வார்த்தைகளை பேசும் போது எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்து சட்டாம்பிள்ளையை அடிக்கின்றார். இதை அறிந்த மற்ற பிள்ளைகள் எல்லோரும் கூக்குரல் போட்டு கொண்டு வாத்தியாரிடம் சென்று இந்த சம்பவத்தை சொல்லுகிறார்கள். உடனே வாத்தியார் வந்து இருவரையும் சமாதனப்படுத்தி நாளை தலைமை வாத்தியாரிடம் சொல்லி ராமச்சந்திரன் நடந்த சம்பவத்தை முழுமையாக சொல்கிறார். இதை கேட்ட தலைமையாசிரியர் சட்டாம்பிள்ளையிடம் கேட்ட போது சரியான பதில்களை சொல்ல முடியவில்லை. அதனால், அந்த நேரத்திலிருந்து சட்டாம்பிள்ளைக்கு பதிலாக எம்.ஜி.ஆரை சட்டாம்பிள்ளையாக தலைமை ஆசிரியர் நியமித்தார். முதல் நாள் பானைக்காக கணக்கு கேட்டு பள்ளிக் கூட வாசலில் சண்டை போட் கொண்டு இருக்கும் போது பள்ளிக்கூட பையன்கள் எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணி அவரிடம் தகவல் சொல்லி அழைத்து வருகின்றார்கள். அப்போது சக்கரபாணி வந்து ஏன் சண்டை போடுகிறாய் என்று சொல்லி தம்பியை கண்டிக்கிறார். அண்ணா உங்களுக்கு ஒன்றும் தெரியாது நான் அப்புறம் சொல்கிறேன் என்ற சொல்லிவிட்டார். பிறகு பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் அண்ணன் சக்கரபாணி அவர்கள் சண்டை நடந்த விபரத்தை பற்றி கேட்கிறார். அண்ணனிடம் தம்பி நடந்த விபரத்தை சொல்லி முடிக்கிறார். உடனே சக்கரபாணி சொல்லுவதும் சரிதாண்டா. நீ சட்டாம்பிள்ளையை அடித்துவிட்டே. நாளைக்கு நம்மல பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள் நாம் என்ன பன்றது இதை அறிந்தால் அம்மாவின் மனநிலமை எப்படி இருக்கும் என்று சொல்லி தம்பியை கோபப்படுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே தயவு செய்து அம்மாவிடம் சொல்லாதீங்க. நாளை என்ன நடக்கும் என்று பார்ப்போம் என்று சொல்லி அண்ணனை சமாதப்படுத்துகிறார் எம்.ஜி.ஆர்.

அதன்படி மறுநாள் பள்ளிக்கூடத்துக்கே சட்டாம்பிள்ளையாகிவிட்டார். இதை அறிந்து சக்கரபாணி ஆனந்தப்படுகிறார். அன்று வீட்டுக்கு திரும்பும்போது தம்பி நேற்றுக்கு நடந்த விஷயத்தை பற்றி நான் இரவில் நினைத்து என்க்கு தூக்கம் வரவில்லை. இந்த விசயத்தை உடனே அம்மாவிடம் சொல்லப்போகிறேன் இந்த நல்ல செய்தியை என்று தம்பியிடம் சொல்லுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே எதுவானாலும் நம்ம இருவரோடு இருக்கட்டும். அம்மா இதை நம்பமாட்டார்கள். ஏன், எதற்கு என்று துருவி துருவி கேட்பார்கள்.

நடந்த சம்பவத்தை சொல்லி விடுவீர்கள் அது அம்மாவுக்கு தவறாகத்தான் தோந்றும் இது இப்போ நமக்கு தேவையா,

இதை போல் இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன். பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் லீவுநாள் அன்று காலையில் இவர்களுடைய உடைகளை எல்லாம்எடுத்து கொண்டு காவேரி ஆற்றுக்கு சென்று உடைகளை துவைத்து குளித்து வருவது வழக்கம்.

அண்ணனிடம் கோபம் கொண்டார்

MGRஇது ஒரு பொதுவான விஷயம். இதே போல் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆற்றுக்கு குளிக்க சென்று இருக்கும் போது அண்ணன் தம்பி இருவருக்கும் வாய் தகராறு வந்து விட்டது. காரணம் இவர்கள் கொண்டு போன ஆடைகளை எல்லாம்துவைத்து காயபோட்டுவிட்டு, ஆற்றில் நீந்தி விளையாடி கொண்டு இருக்கும் போது மற்ற பையன்களோடும் குளித்துவிட்டு கரை ஏறும் போது அண்ணன் சக்கரபாணி கட்டி இருந்த கோமணம் இடுப்பில் இல்லை உடனே சக்கரபாணி தம்பியை பார்த்து ஏய். ராமச்சந்திரா என் கோமணம் தண்ணீர்ல் போயிடுச்சி என்று சொல்லி உன்னுடைய கோமணத்தை கொடுடா என்று தம்பியிடம் கேட்கிறார். அந்த நேரத்தில் கரையில் நின்று கொண்டு சிரித்து துள்ளி குதித்து ஆடி கொண்டு, நான் தரமாட்டேனே என்று சொல்லி சிரிக்கிறார். அந்த நேரத்தில் அண்ணன் தம்பியிடம் கோமணத்தை கேட்டு செஞ்சுகிறார். தம்பியோ தன் கோமணத்தை கொடுக்க மறுக்கிறார்.

கோமணம் இல்லாமல் அறிந்த MGR உடன் துவைத்து போட்ட டவுசரே போட்டுகிட்டு தன்னுடைய கோமணத்தை தண்ணீரில் பரிதாபமாக நின்று கொண்டு இருந்த அண்ணன் வசம் கோமணத்தை கொடுக்க, வேறுவழி இல்லாமல் கோபத்தோடு கரைக்கு வந்து துவைத்து போட்டு இருக்கும் டவிசரை எடுத்து மாட்டிக் கொண்டு தம்பியிடம் பேசாமல் கோபமாக வீட்டிற்கு வருகிறார். வீட்டுக்கு வந்தவுடன் அம்மா஡஡விடம் என் கோமணம் தண்ணீரில் போய்விட்டது. தம்பியின் கோமணத்தை கேட்டேன் தர மறுத்துவிட்டான். பிறகு நான் வாதாடிய பிறகு கரையில் காயிந்து கொண்டிருந்த டவுசரை போட்டு கொண்ட பிறகு அந்த கோமணத்தை கேலி செய்து கொண்டு தண்ணீருக்குள் நிற்கும் என்னை பார்த்து தூக்கி போட்டான். நான் அந்த கோமணத்தை எடுத்துக் கட்டிக் கொண்டு கரை வந்தேன். இதை அம்மாவிடம் கோபமாக சொல்லுகிறார் இதை கேட்ட அம்மா MGRரை பார்த்து நீ ஏன்டா இப்படி செய்தாய் என்று கோபப்படுகிறார்.

அம்மா கோபமாக பேசி முடித்த உடனேயே MGR பதில் சொல்கிறார். அம்மா ஆற்றிலே நானும் அண்ணனும் மட்டும் குளிக்கவில்லை எங்களை போல் எவ்வளோ பையன்கள் குளிக்கின்றார்கள் அவ்வளவு பேரும் கோமணத்தை கட்டி கொண்டுதான் குளிக்கின்றார்கள். தன்னுடைய கோமணத்தை தண்ணீரிலேயே போயிடிக்சே என்று சொல்லி அடுத்தவங்க கோமணத்தை யாரும் கேட்பதில்லை, அப்படி இருக்கையில் அண்ணன் தன் கோமணம் போவது கூட தெரியாமல் குளித்து இருக்கிறார். கரைக்கு வரும் நேரத்தில் தன்னிடம் கோமணம் இல்லையே என்ற வெட்கப்பட்டு கொண்டு என் கோமணத்தை அவிழ்த்து கொடும்கும்படி கேட்டார். நான் தண்ணீர்லிருந்து கரைக்கு ஏறும் நேரத்தில், ராமசந்திரா என் கோமணத்தை அவிழ்த்து கொடுடா என்று சத்தம் போட்டு கேட்கிறார். நான் உடனே என் கோமணத்தை அவிழ்த்து கொடுத்து விட்டேன். அம்மனகுண்டியோடு துணி காயிக்கின்ற இடத்திற்கு எப்படி போவேன். அதனாலே நான் காயும் என்னுடைய டவுசரை தண்ணீரில் நிற்கும் அண்ணன்கிட்டே கொடுத்தேன். நான் அதை கட்டிகொண்டு தான் கரைக்கு வந்தார். இது அவரோட தவறு இந்த விஷயம் ஆற்றோடு முடிந்து விட்டுது. அம்மா இதை வந்து ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொண்டு உங்களிடம் குறை கூறுகிறாரே இது என்ன நியாயம். சற்று கோபத்தோடு அம்மாவை பார்த்து இந்த நியாத்தை கேட்கும்போது அந்த தாயினுடைய மனநிலை எப்படி இருந்து இருக்கும்? இப்படி இருக்கும் காலத்தில் மகன்கள் இருவரும் நான்காம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் கால கட்டத்தில் தன்னுடைய குழந்தைகள் 10 வயதுக்கு மேற்பட்ட தன் ஒரு மகன்களுக்கும் மூன்று நேரமும் வயிறார சாப்பாடு கொடுக்க முடியவில்லையே என்று அந்த தாய் மனம் வேதனை படுவதை அறிந்து இவர்களோட மன வேதனையே தன் தாயிடம் சொல்லாமல் நாங்கள் இருவரும் படித்தது போதும் என்று கெஞ்சி கேட்கின்றார்கள். இந்த வார்த்தையை கேட்ட தாய் மகன்களிடம் என்ன பதிலை சொல்லுவார்? ஆனாலும் தன் தாய் சத்தியபாமா அவர்கள் தன் மகன்கள் தன்படும் கஷ்டத்தை அறிந்து அவர்களே வேலைக்கு போவதாக சொல்லுகின்றார்களே என்று நினைத்து வேதனை படுகிறார்.


No comments:

Post a Comment