Friday 13 August 2021

BIOGRAPHY OF VYJEYANTHIMALA

 



BIOGRAPHY OF VYJEYANTHIMALA



🌹🌹🌹🌹💐Happy Birthday Vyjayanthimala mam💐🎂


🌹இன்று புகழ் பெற்ற பழம் பெரும் இந்திய நடிகையும் பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக சங்கீத கலைஞருமான வைஜெயந்தி மாலா அவர்களின் பிறந்த நாள்.🌹🎂🍰💐


வைஜெயந்திமாலா பாலி (Vyjayanthimala Bali, பிறப்பு: ஆகத்து 13, 1936)👇👇👇👇🌹

 B: வைஜெயந்திமாலா


ஆடலழகி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட வைஜெயந்திமாலா, தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னர் ஹிந்தி நடிகையாகப் பிரபலமானார்.

வைஜெயந்திமாலா, சிறுவயதில் வழுவூர் ராமையாப் பிள்ளையிடம் பரத நாட்டியம் பயின்று தனது நாட்டிய திறனை நன்கு வளர்த்துக் கொண்டார்.

வைஜெயந்திமாலாவின் அம்மா வசுந்தராதேவி, மைசூர் அரண்மணையில் யுவராஜா முன்னிலையில் பாட்டு கச்சேரி நிகழ்த்தினார். பின்பு வசுந்தராதேவி, தன் கணவர் எம்.டி.ராமன், தாயார் யதுகிரி, மகள் வைஜெயந்திமாலா ஆகியோருடன் ரோம், வாடிகன், மிலான், பாரீஸ், லண்டன் ஆகிய உலக நகரங்களுக்கு பயணம் சென்றார். அங்கு இவர் கச்சேரியும் இவரின் மகள் வைஜெயந்திமாலா நடனத்தையும் நடத்தி விட்டு தாய்நாடு திரும்பினார்கள்.

இங்கிலாந்து ராணி எலிசபெத், ரஷ்ய பிரதமர் புல்கானின், யூகோ அதிபர் டிட்டோ, கிரீஸ் மன்னர், பெல்ஜியம் மன்னர் ஆகியோர் இந்தியா வந்தபோது, இந்திய அரசாங்கத்தின் சார்பில் நடனமாடி இவர்களை மகிழ்வித்தார் வைஜெயந்திமாலா.


ஹிந்தியில் 19 படங்கள், தெலுங்கில் 2 படங்கள், வங்காளத்தில் 1 படம் நடித்துள்ள வைஜெயந்திமாலா, தமிழில் மொத்தம் 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் நடித்த முதல் படம் வாழ்க்கை. கடைசிப் படம் சித்தூர் ராணி பத்மினி. டி.ஆர்.ராஜகுமாரி, கே.ஆர்.ராமசாமி நடித்த விஜயகுமாரி (1950) என்ற படத்தில் ஒரு நடனம் மட்டும் ஆடியுள்ளார்.

இவர் நடித்த 12 படங்களில் பாட்டாளியின் சபதம், வாழ்க்கை, பெண், அதிசயப் பெண், இரும்புத் திரை, தேன் நிலவு ஆகிய படங்கள் சமூக கதையமைப்பைக் கொண்ட படங்களாகவும், மர்ம வீரன், வஞ்சிக் கோட்டை வாலிபன், ராஜ பக்தி, பாக்தாத் திருடன், பார்த்திபன் கனவு, சித்தூர் ராணி பத்மினி - ஆகிய 6 படங்கள் ராஜா ராணி கதையமைப்பைக் கொண்ட படங்களாகவும் உள்ளன. இப்படங்களில் பாட்டாளியின் சபதம் படம் மட்டும் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட படமாகும்.




இவர் நடித்த வாழ்க்கை, தேன்நிலவு ஆகிய இரு படங்களும் 100 நாட்களுக்கும், இரும்புத் திரை 175 நாட்களுக்கும் திரையிடப்பட்டு வெற்றிப் படங்களாயின. இவர் தமிழில் நடித்த வாழ்க்கை, தெலுங்கில் ஜீவிதம் என்ற பெயரிலும், இந்தியில் பஹார் என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டது. மூன்று படங்களிலுமே வைஜெயந்திமாலாதான் நாயகி. மூன்று படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.

[15:43, 8/13/2021] Duraikannan B: இந்தியில் வெற்றி பெற்ற ஆஷா என்ற படம் தமிழில் அதிசயப் பெண் என்று படமானபோது வெற்றி பெறவில்லை. இந்த இரு படங்களிலும் இவரே கதாநாயகியாக நடித்தார். இவர் நடித்த 12 தமிழ் படங்களுமே கருப்பு வெள்ளை படங்களாகும். தமிழில் வண்ணப் படம் எதிலும் இவர் நடிக்கவில்லை என்றாலும், அதிசயப் பெண் படத்தின் பாடல் காட்சிகள் மட்டும் வண்ணத்தில் வார்க்கப்பட்டிருந்தது.

பாக்தாத் திருடன் படத்தின் டைட்டிலில் ஆடலழகி வைஜெயந்திமாலா என்று இவர் பெயர் பதியப்பட்டுள்ளது.

சில நடிகர்களின் செல்லப் பெயர்களை பாடலில் நுழைத்து விடுவார்கள் பாடலாசிரியர்கள். வைஜெயந்திமாலாவின் செல்லப் பெயரான பேபி என்பதை, தேன் நிலவு படத்தில் "ஓஹோ எந்தன் பேபி நீவாராய் எந்தன் பேபி' என்ற பாடலில் நுழைத்திருப்பார் கண்ணதாசன்.




8வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் சபாஷ் சரியான போட்டி என்று பி.எஸ்.வீரப்பாவின் வசனம் இடம்பெற்ற "கண்ணும் கண்ணும்' என்ற துவைத நடனப் போட்டி பாடல் காட்சியில் பேபியும் (வைஜெயந்திமாலாவும்) பப்பியும் (பத்மினி) உண்மையிலேயே போட்டி போட்டுக் கொண்டு நடனமாடினார்கள். இப்பாடல் காட்சியில் யாராவது ஒருவர் தோற்பது போல் காட்சியை முடிக்க வேண்டும். ஆனால், தோற்கும் விஷயத்திற்கு பேபியின் பாட்டியும் ஒப்புக்கொள்ளவில்லை, பப்பியின் அம்மாவும் ஒப்புக்கொள்ளவில்லை. பின்பு பாடலின் முடிவில் யாரும் ஜெயிப்பது போலவோ தோற்பது போலவோ காட்சி அமைக்கப்படவில்லை. சாதுரியம் பேசிய இந்த இரு நாயகிகளின் பிரச்னையை சாதுரியமாக தீர்த்துவிட்டார் இயக்குநர் எஸ்.எஸ்.வாசன்.

8இவர் எந்தப் படத்திலும் இரு வேடங்களில் நடித்ததில்லை. இருப்பினும் மர்ம வீரன் படத்தில் வரும் "இத்தனை நாளாக என்னிடம் சொல்லாமல்' என்ற பாடல் காட்சியில் சிங்கனாக ஆண் வேடத்திலும் சிங்கியாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

8திரைப்பாடல்களில் எலந்தப் பயம், எளநி எளநி, வளையல் ஐயா வளையல், தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் போன்ற பொருட்களை விற்கும் பாடல்களை கேட்டிருக்கிறோம். பெண்களை விற்கும் பாடல்களும் திரைப் பாடல்களில் உள்ளன. ஹரிச்சந்திரா படத்தில் உலகம் அறியா புதுமை என்று பாடியபடி ஹரிச்சந்திரன் தன் மனைவி சந்திரமதியை விற்பனை செய்வான். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சாட்டையடிக்கு பயந்தபடி ஆடாமல் ஆடுகிறேன் என்று ஆடும் ஜெயலலிதாவை விற்பார்கள்.பாக்தாத் திருடன் படத்தில்சாட்டையடிக்கு பயந்தபடி, கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதையா என்று ஆடிப் பாடும் அடிமைப்பெண் ஜெரினாவை (வைஜெயந்திமாலாவை) விற்பனை செய்வார்கள். பொன்னுக்கு விலைகூறும் பொருளாகினேன் என்று கண்ணீரோடு பாடும் இவளை நாயகன் அபு (எம்.ஜி.ஆர்.) ஏலத்தில் எடுக்கிறார்.

[15:44, 8/13/2021] Duraikannan B: 8நடிகர் ஸ்ரீராம் தயாரித்த மர்ம வீரன் படத்தில் வைஜெயந்தி நடிக்கும்போது, வைஜெயந்தி நடத்தி வந்த நாட்டியக் குழுவில் ஹார்மோனியம் வாசித்து வந்த வேதாவுக்கு, மர்ம வீரன் படத்தில் இசையமைக்கும் வாய்ப்புக்கு உதவி புரிந்தார் ஆடலழகி. வேதா இசையமைத்த முதல் தமிழ்ப்படம் மர்ம வீரன் என்பது குறிப்பிடத்தக்கது. மர்ம வீரன் படத்திற்கு முன்பே ஸ்ரீராம் செய்த சிபாரிசால், 10 சிங்களப் படங்களுக்கு இசையமைத்திருந்தார் வேதா.

8அதிசயப் பெண் படத்தின் எழுத்துப் பகுதியில், ஆடை அணி அலங்காரம் ஸ்ரீமதி யதுகிரிதேவி என்று பதிவாகியுள்ளது. பாட்டி யதுகிரி பேத்தி வைஜெயந்தியை வீட்டில் அலங்கரித்து அழகு பார்த்ததுடன், இந்தப் படத்திலும் பேத்தியை அலங்கரித்து அழகு பார்த்துள்ளார்.

8வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் எலியும் பூனையுமாக நடித்த வைஜெயந்திமாலாவும் பத்மினியும், ராஜபக்தி படத்தில் காந்தமும் இரும்புமாக நடித்திருப்பார்கள்.

8இரும்புத் திரை படத்தில், வசுந்தராதேவியும் வைஜெயந்திமாலாவும் அம்மா மகளாக நடித்திருப்பார்கள். கதைப்படி எஸ்.வி.ரங்காராவின் முதல் மனைவியாக வசுந்தராதேவியும் இவர்கள் மகளாக வைஜெயந்திமாலாவும் நடித்தார்கள். அடுத்த மனைவியாக ராதாபாயும் இவர்கள் மகளாக சரோஜாதேவியும் நடித்தார்கள்.

குமாரி ருக்மணி - லட்சுமி, எஸ்.பி.எல்.தனலட்சுமி-ஜோதிலட்சுமி, டி.எஸ்.தமயந்தி } குசலகுமாரி ஆகிய அம்மா - மகள்கள் நடிகைகளாக விளங்கியதுபோல, வசுந்தராதேவியும் வைஜெயந்திமாலாவும் நடிகைகளாக விளங்கினார்கள்.

வசுந்தராதேவி:

வைஜெயந்திமாலாவின் தாயார் வசுந்தராதேவியும் சிறந்த நடிகையாக விளங்கியுள்ளார். எம்.என்.ஸ்ரீனிவாசன் - யதுகிரி தம்பதிக்கு பிறந்தவர் வசுந்தராதேவி.

ஐந்துவயதில் அட்சராப்பியாசம் பெறத்தொடங்கிய வசுந்தராதேவிக்கு எட்டுவயதில் எம்.டி.ராமனுடன்  கல்யாணம் நடந்தது. இவரின் 16 ஆவது வயதில் (13.08.1933 இல்) வைஜெயந்திமாலா பிறந்தார்.

வசுந்தராதேவி 5 படங்களில்நடித்துள்ளார். ரிஷ்யசிருங்கர் (1941) படத்தில், முனிவர் ரிஷ்யசிருங்கரை (ரஞ்சன்) மயக்கும் அரண்மனை தாசிப்பெண் மாயாவாக நடித்தார். மங்கம்மாசபதம் (1943) படத்தில், நாயகி மங்கம்மாவாக இவர் நடித்தார். இப்படத்தில் நாயகனாக நடித்த ரஞ்சன் மங்கம்மாவின் கணவனாகவும் மகனாகவும் இருவேடங்களில் நடித்தார். உதயணன்-வாசவதத்தா (1946) படத்தில், நாயகன் உதயணனாக சங்கீதவித்வான் ஜி.என்.பாலசுப்பிரமணியமும் வாசவதத்தையாக வசுந்தராதேவியும் நடித்தார்கள். நாட்டியராணி (1949) படத்திலும் வசுந்தராதேவி நடித்துள்ளார். இரும்புத்திரை(1960) படத்தில், வசுந்தராதேவியும் வைஜெயந்திமாலாவும் அம்மா-மகளாக நடித்திருப்பார்கள்.

எம்.என்.ஸ்ரீனிவாசன்:

வசுந்தராதேவியின் தந்தையும் வைஜெயந்திமாலாவின் தாய்வழிப்பாட்டனாருமாகிய எம்.என்.ஸ்ரீனிவாசனும் ஒருநடிகராக இருந்துள்ளார். ஸ்ரீமதிபரிணயம் (அல்லது) ஸ்ரீராமஜென்மகாரணம் (1936) என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் எம்.என்.ஸ்ரீனிவாசன். இயக்குநர் ராஜாசாண்டோ இயக்கி மூன்று வேடங்களில்நடித்தவிஷ்ணுலீலா (1938) படத்தில் பிரம்பலன் என்ற புராணவேடத்தில் நடித்துள்ளார் இவர். எஸ்.டி.எஸ்.யோகியார் எழுதி இயக்கிய அதிர்ஷ்டம் (1939) படத்தில் வக்கீல் சோமநாதனாக நடித்துள்ளார் ஸ்ரீனிவாசன்🌹🌹🌹🌹

No comments:

Post a Comment