Friday 6 August 2021

 

வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

தாய்க்குக் கோயில்

ராமாபுரம் தோட்டத்தில் தன் தாய்க்கு கோயில்கட்டினார். மக்கள்திலகம் வெளியே போகும் போது தினம்தோறும் தன் தாயை வணங்கிவிட்டு தான்செல்வார்.
இதே போல், ராயபேட்டையில் தன் தாய் வீட்டிலும் ஒரு பெரிய தாயின் படம், "சத்யா ஸ்டூடியோ"விலும் அவருடைய அலுவலகத்திலும் தாயின் படம் மாம்பலம் அலுவலகத்திலும் தாயின் படம். தாயே தெய்வம் என்று தினந்தோறும் பூஜித்து வந்தார் மக்கள் திலகம். மக்கள் சேவையே என் சேவை. நான் முதல் மந்திரியாக இருந்தாலும் மக்கள் சேவகன். மக்கள் வாழ்வே என் வாழ்வு இது எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக ஆன பிறகு, அவர் சொன்ன வார்த்தைகளும், எண்ணமும் இது தான்.

தன் தாய் இறந்த பிறகு தன் அண்ணன் சக்கரபாணி அவர்களை தாயாக நினைத்து எந்த விஷயமாக இருந்தாலும் கலந்து பேசாமல் செய்ய மாட்டார். இதில் அவர்கள் இருவரும் அண்ணன் தம்பியும் சொந்தத்தில் ஆரம்பித்த நாடக கம்பெனிக்கும் சினிமா கம்பெனிக்கும், முழு பொறுப்பையும் தன் அண்ணணிடமே கொடுத்து இருந்தார். அவருக்கு துணையாக இருந்து எல்லா பொறுப்புகளையும் கணக்கு, வழக்குகளையும் கவனிக்கும்படி ஆர். எம். வீரப்பன் அவர்களை நியமித்தார். தான் முதல் அமைச்சராக ஆன பிறகும் கூட தன் அண்ணனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து கொண்டே இருந்தார். இதே போல் சக்கரபாணி அவர்களும் தன் உடன் பிறந்த தம்பி மனம் நோகாமல் நடந்து கொள்வார். தம்பி தன்னிடம் பேசும்போதெல்லாம் மிக கவனமாக தம்பிக்கு ஏற்றமாதிரி பதில்களை சொல்வார். திரு. சக்கரபாணி அவர்கள் தன்னுடன் பிறந்த மூத்தவர்கள் சகோதரிகளையும், சகோதரனையும், தன் தந்தையுடைய புகழ்களையும் தன் தாய் அவர்களுக்கு பிறகு தன்னையும் தன் உடன் பிறந்த தம்பியையும், வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நினைக்காத நேரமும்இல்லை. இதை பற்றி தனக்கு வேண்டிய முக்கியஸ்தர்களிடம் பேசாமல் இருப்பதும் இல்லை. தன்னையும் மனைவி மக்களையும் எந்த குறைகளும் இல்லாமல் எனது தம்பி ராமச்சந்திரன் பார்த்து கொள்கிறான் என்ற பெருமையை வெளியே பேசாமலும் இருப்பதும் இல்லை. தன் தம்பி ராமச்சந்திரன் சிறுபிள்ளையாக இருக்கும் போது ரொம்பவும் சுறுசுறுப்பாகவும், சட்டித்தனமாகவும் இருப்பான். அவன் செய்யும் குறும்புகளை அம்மா ஒருவரால் தான் அவனை அடக்க முடியும். அப்படிப்பட்ட என் தம்பியுடன் நாடகம், சினிமா, அரசியல், இப்படி அவனுடன் நான் சேர்ந்து வாழ்ந்த காலங்களை நினைத்து ஆச்சரியப்படுவேன். அவன் பிரபலமாக வாழ்கின்ற இந்த காலத்தில் பெரிய சாது போலவும், ஞானிகள் போலவும் பெரும் அரசியல் தலைவர் போலவும் அவன் பேசுவதும் அவன் நடந்து கொள்ளும் விதமும் ஒரு பெரிய உயர்ந்த மாமனிதனாக ஆகிவிட்டான் என்பதை நினைத்து பூரிப்பு அடைகிறேன்.


வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

1957ல் ஒரு முக்கியமானவரிடம் மக்கள் திலகம் அவர்கள் சொன்ன விஷயம்

மக்கள் திலகம் அவர்களிடம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டி உங்களுக்கு அறிவுரைகளை சொன்னது யார், யார், என்பதை தயவுடன் சொல்லுங்கள் என்று ஒரு முக்கியமானவர் கேட்டார். உடனே திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் சற்றும் யோசிக்காமல் அந்த விஷயத்தை சொன்னார் சுருக்கமாக.
1. எனது தாயுடைய அறிவுரைகள், கண்டிப்பான வளர்ப்பும் தான்.
2. அடுத்து நான் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனக்கு நாடகத்தில் நடிக்க சொல்லி தந்த வாத்தியார்.
3. கம்பெனி முதலாளி
4. நடனம், சண்டை பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவரும் எனக்கு நல்ல முறையில் மிகவும் கண்டிப்பான விதத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். நானும் அவர்களுடைய கண்டிப்பு, அடி, இவைகளையெல்லாம் சமாளித்து கொண்டு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிலும் நல்ல பையன் சுறுசுறுப்பானவன் நல்ல அறிவுள்ளவன் என்று அவர்களால் புகழப்பட்டேன். நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கூட திரை மறைவில் நின்று கொண்டு பிரம்பால் அடிப்பார்கள் அதை எல்லாம் அன்றைக்கு சமாளித்ததால் தான் சினிமாவில் நல்லா நடிக்க முடிந்தது என்றார் மக்கள் திலகம். அன்றைக்கு குருவாக இருந்தவர்கள் மதுரை பாய்ஸ் கம்பெனி முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், ஆசிரியர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு. கந்தசாமி, காளி. என். ரத்தினம் அவர்களும் சண்டைப் பயிற்சியாளர் இவர்கள் தான் இதற்கு மேல், பி.யு. சின்னப்பா, கிட்டப்பா, எம்.கே. ராதா இவர்களை விட தன் உடன் பிறந்த தம்பிபோல் பாவித்து என் மனம் கவலைபடாத அளவிற்கு குடும்ப விஷயத்திலிருந்து அதாவது குடும்ப விஷயத்தை பற்றி கூட அறிவுரைகளை சொல்லக்கூடியவர் திரு. என்.எஸ்.கே அவர்கள் தான்.

எனக்கு மனதில் சஞ்சலம் ஏற்பட்ட போதெல்லாம் அவரிடம் போய்விடுவேன். அவரிடம் ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தால் போதும், அவர் ஒரு காலகட்டத்தில் வெள்ளைக்கார ஆட்சியில் ஜெயிலுக்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது என்.எஸ்.கே. தியாகராஜபாகவதர் இவர்கள் மீது ஒரு பத்திரிகை ஆசிரியர் கொலை சம்பந்தமாக 1944ல் ஜெயிலில் போட்டு விட்டார்கள். அது சமயம் நான் மிக மிக வேதனை அடைந்தேன். பிறகு, அவர்கள் ஜெயில் தண்டனை, முடிந்து விடுதலை ஆகி 1947க்க வீட்டுக்கு வந்த பிறகு, எல்லோரையும் பார்த்து நடந்த சம்பவத்தை பற்றி ஆறுதல் செய்திகள் சொன்னேன். பிறகு, என்.எஸ்.கே. அவர்களுக்கு என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து கொண்டு இருந்தேன். அவர் கேட்காமலேயே நானும் அந்த சமயம் கொஞ்சம் வசதி உள்ளவன் ஆகிவிட்டேன். அப்படி நான் செய்யும் உதவிகளை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். கடவுள் தான் ராமச்சந்திரன் உருவத்தில் வந்து இருக்கிறாரோ என்று கலைவாணர் நினைப்பாராம். இதை என்னிடம் சொல்லுவார்கள்.

More Articles

 

வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

1975-ல் மக்கள் திலகத்துக்கு வந்த சோதனை காலம்

இப்படிப்பட்ட பாரிவள்ளல் மனதிநேய சிகரத்திற்கு ஒரு சமயம் 1975ல் ஒரு சோதனை ஏற்பட்டது. அதாவது (அப்போது தி.மு.க அரசு) வருமானவரி பாக்கி இவ்வளவு ரூபாய் இருக்கிறது. அதை இவ்வளவு மாசத்திற்குள் கட்ட வேண்டும் என்று மக்கள் திலகம் அவர்களுக்கு வருமான வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இதை அறிந்த மக்கள் திலகம் மிகவும் மனம் நொந்து போனார். கடவுளை நினைத்து நான், யாருக்கும் எந்த வித துரோகமும் செய்ததில்லை யாரிடமும் நான் கடன் வாங்கியதும் இல்லை இப்படிப்பட்ட நான் அரசாங்கத்திடம் கடன்காரனாகிவிட்டேனே? இதை பற்றி மிகவும் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தார். பிறகு, இதை பற்றி யாரிடமும் பேசாமல் அவரே ஒரு முடிவுக்கு வந்தார். நஷ்டத்தில் இயங்கி கொண்டு இருக்கும் "சத்யா ஸ்டுடியோ"வை விற்று. இந்த அரசு கடனை கட்டிவிடலாம். நாம் சம்பாதித்து வாங்கிய சொத்துதானே, மேலும் இது நமக்கு லாபரமாக இல்லை. அதோடு சில மாதங்களாக ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கும் மற்றும் கரண்டுக்கு, டெலிபோனுக்கு நிலத்துவரி, கட்டிடவரி இப்படி எவ்வளவு நாளைக்குத்தான் நாம் நடித்து வாங்கும் சம்பளத்தை இந்த ஸ்டுடியோக்களுக்கு செலவு செய்ய முடியும். எனவே இதைவிற்றுவிடலாம் என்ற முடிவோடு தன்னுடைய உற்ற நண்பர் ஒருவரை வரவழைத்து அவரிடம் இந்த விஷயத்தை மிக உருக்கமாக சொன்னார். இதை கேட்ட அவருக்கு உடம்பே புல்லரித்துவிட்டது. அவர் சிறிது நேரத்திற்கு பிறகு சார் இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்த முடிவு உங்களை பொருத்தவரையில் சரிதான். ஆனால், இப்போது உள்ள உங்களுடைய மதிப்புக்கு இது சரிவராது. அரசியல்வாதிகளும், பொதுமக்களும் இந்த விஷயத்தை பற்றி என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீங்க நீங்க சினிமாவிலும், அரசியலிலும் கொடி கட்டி பறக்கிறீங்க இந்த நேரத்தில் யாரோ ஒரு வருமான வரி அதிகாரி உங்களுக்கு வரிபாக்கி இருக்கு அதை, உடனே கட்டவேண்டும் என்று ஒரு கடிதத்தை அனுப்பிவிட்டார் என்பதற்காக நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுப்பது சரி இல்லை. தயவு செய்து எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடுங்கள் பிறகு அதை பற்றி பேசுவோம்.

இந்த விஷயத்தைப் நினைத்து கவலைபடாதீர்கள் என்று சொல்லிவிட்டு, அந்த பெரிய மனிதர் போய்விட்டார். பிறகு, அவர் வருமானவரி அதிகாரிகளை சந்தித்து எப்படி இவ்வளவு பெரிய தொகை பாக்கி ஏற்பட்டது. உங்களுடைய கணக்கு விவரம், முழுமையாக விபரம் எழுதிகொடுங்க ஏன் இவ்வளவு நாள் கழித்து உங்களுக்கு பாக்கி இருக்கிறது? என்று இப்போ எழுதி உள்ளீர்கள். இதற்கு சரியான பதில் எழுத்து வழியாக அனுப்புங்கள் என்று அவர் சென்னை வருமானவரி உயர் அதிகாரிகளிடம் பேசிய பிறகு, அவர் மீண்டும் மக்கள் திலகத்திடம், சார், இது விஷயமாக சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பேசி விட்டேன். அதாவது நியாயப்படி ஏன் இவ்வளவு காலதாமதம்? இவ்வளவு ஒரு பெரிய தொகையை கட்ட வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளீர்கள் அது தவறு. மீண்டும் கணக்கு பார்த்து சரியான பதிலை அனுப்பும்படி சொல்லிவிட்டு வந்து, உள்ளேன். தயவு செய்து நீங்கள் ஸ்டூடியோவை விற்கனும் என்று நினைக்காதீர்கள். கடன் உங்களை விட இன்னும் பெரிய கோடீஸ்வரர் என்று சொல்பவருக்கு கூட இருக்கும். நீங்கள் கடன்காரனாக வாழ கூடாது என்று நினைப்பதில் தவறு இல்லை. இதை கேட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் குறுக்கிட்டு சார், இப்போ இது வெறும் கட்டுகதைதான் என்று நாம் எப்படி சொல்ல முடியும் சார், என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு கடன்காரன் என்ற, சொல்லை கேட்ககூடாது. இதுதான் என்னுடைய லட்சியம், அடுத்து சார் இந்த ஸ்டூடியோவில் இருந்து எந்த வித லாபமும் இல்லை. சமீபகாலமாக ஸ்டூடியோ தொழிலாளர்களுக்கம் கரண்டுக்கும், போனுக்கும் நான் என் கையில் இருந்து கொடுத்து வருகிறேன். இப்படி இருந்தால் எப்படி சார் எல்லாவற்றையும் என்னுடைய நடிப்புத் தொழிலில் இருந்துதானே சார் சமாளிக்கனும் சினிமாவைத் தவிர, வேறு எனக்கு என்ன தொழில் இருக்குது. என் உடல் உழைப்பை தவிர, இந்த விஷயம் மக்கள் திலகம் அவர்களுக்கு ஒரு பெரிய சிந்தனையை உருவாகியது. அது தான் 1976ல் "சத்யா ஸ்டூடியோ"வை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கே சொந்தமாக (லீசுக்கு) வாடகைக்கு கொடுத்து சிரமத்தை தீர்த்துக்கொள்ளனும் அல்லது விற்றவிடனும். பிறகு, ஒரு மாதத்தில் எப்படியோ அந்த பெரிய மனிதர் உதவியால் அரசாங்க கடனை தீர்த்தாச்சு. இனிமேல் நாம் மாதாமாதம் கையில் இருந்து ஸ்டூடியோ தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது பிரச்சனை என்று நினைத்த மக்கள் திலகம் அவர்கள் சத்தியா ஸ்டூடியோவை அங்கு வேலை செய்யும் சக தொழிலாளர்களையும் அழைத்து ஒரு குறிப்பிட்ட வருசத்துக்கு குறைந்த வாடகைக்கு எழுதி கொடுத்துவிட்டு ஒரு பெரிய சிக்கலில் இருந்து தப்பினார் வள்ளல்.


வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடைய முதல் திருமணம்

வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களுடைய முதல் திருமணம் நடந்த நாள் புதன்கிழமை அவருடைய முதல் மனைவி பெயர் "தங்கமணி" என்பதாகும். இவர் பிரசவத்திற்காக ஊருக்கு போனது புதன்கிழமை இவர் வள்ளலையும், உலகத்தையும் விட்டு பிரிந்து சென்றதும் புதன்கிழமை இதை அடிக்கடி சொல்வார். வள்ளல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த நாள் செவ்வாய்கிழமை காலை 11.35 மணிக்கு அவருக்கு திருமணம் நடந்தது புதன்கிழமை காலை 10.15க்கு இதை விட முக்கியம் வள்ளல் பிறந்த வருடம் 17.1.1917 ஜனவரி காலை 11.55க்கு பிறந்தவர் அதே செவ்வாய் கிழமை இரவு மரணம் அடைந்தார்.

எப்போதுமே வெள்ளிக்கிழமை அவர் அசைவம் சாப்பிடமாட்டார். அதே போல், அவருடைய பொன்மேனியை பூமியில் வெள்ளிக்கிழமை புதைத்தார்கள். அவருடைய புகழையும் தர்மத்தையும், மனித நேயத்தையும் நாடெங்கும் விதைத்து உள்ளார்கள். மக்கள் திலகம் அவர்கள் வருடத்தில் முதல்மாதம் செவ்வாய்கிழமை பிறந்தார். அதேபோல் வருடத்தில் கடைசிமாதம் செவ்வாய்கிழமை இரவு மறைந்துள்ளார். இந்த கடைசி டிசம்பர் மாதத்தில் காலம் சென்ற இந்திய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய முழு உருவச்சிலை தமிழக அரசின் சார்பில் சென்னையில் உருவாக்கிய பிரமாண்டமான விழா கோலத்தில், அப்போது உள்ள இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தலைமையில் சிலை திறப்பு விழா நடந்தது. இதுவே மக்கள் திலகம் அவர்கள் கலந்து கொண்ட கடைசி விழா ஆகும். விழா நடந்த தேதி 22.12.87 மாலை விழா முடிந்தது. வள்ளல் மறைந்தது 23.12.1987 இரவு. 24.12.1987 காலை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ கட்டிட பல்கலைக்கழகம் திறப்பு விழா அது நடைபெறவில்லை. பிறகு இந்த கட்டிடத்தை 1990ல் அப்போதைய தமிழக முதல் அமைச்சராக இருந்த கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்கள் தலைமையில் மிக எளிமையான முறையில் திறப்பு விழா நடந்தது.



ஆங்கிலோ போலீஸ் அதிகாரியை பார்த்து ஆச்சர்யப்பட்டார் மக்கள் திலகம்.

இது ஒரு மலரும் நினைவாக இருந்தது.

மக்கள் திலகம் தமிழக முதல் அமைச்சர் ஆக அவையில் 1977 ஆண்டில் அரச சபையில் கோட்டையில் ஆட்சியில் அமரும் முதல்நாளன்று, தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரியாக (ஐ.ஜி) யாக இருந்தவர் ஒரு ஆங்கிலேயர் பார்ப்பதற்கு நல்ல உயரமாக வாட்ட சாட்டமாக இருப்பார். அவர் பெயர் டிரைசி முதல் நாள் அன்று கோட்டையில் இம்மாதிரி உயர் அதிகாரிகளை சந்திக்கும்போது, கோட்டையில் தமிழ்நாடு போலீஸ் உயர் அதிகாரி அப்படி அறிமுகப்படுத்தும்போது, மக்கள் திகலம் அவர்கள் அவருக்கு கை கொடுத்து அந்த அதிகாரி முதல் அமைச்சருக்கு தரும் மரியாதையை பெற்று கொள்ளும் போது சற்று நேரம் அவர் கையை பிடித்தமுதல் அமைச்சர் அவர்கள் அவரையே சற்று நேரம் உற்று பார்த்தார். பிறகு, அந்த அதிகாரி தமிழ்நாட்டில் உள்ள காவல்துறையைப் பற்றியும், ஆங்காங்கே நடக்கும் அசம்பாவிதம் நடக்கும் இடங்களைப் பற்றியும், முதல் அமைச்சர் அவர்களே நேரில் சந்தித்து முக்கிய சம்பவங்களை பற்றி பேசுவார். இந்த மாதிரி விஷயங்கள் பேசுவதற்காக சென்னை தி.நகரில் அமைந்து உள்ள முதல் அமைச்சர் அலுவலகம் (மாம்பலம் ஆபீஸ்) இது இப்போது "எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்". இந்த கட்டிடத்திற்கு, அந்த போலீஸ் அதிகாரி முதல் அமைச்சர் அவர்களை பார்க்க வரும்போதெல்லாம் இவரை வரவேற்று முதல் அமைச்சர் அமர்ந்து இருக்கும் மேல் மாடிக்கு அழைத்து செல்லும் போது அவரை பார்த்த உடனே வணக்கம் சார் என்று சொல்வேன். ஏன் என்றால் அவர் ஆங்கிலேயர் அவருக்கு அந்த வார்த்தை சொல்ல வராது. இதே மாதிரி முதல் அமைச்சர் அறைக்குள் சென்றவுடனே முதல் அமைச்சர் மக்கள் திலகம் இவரை பார்த்தவுடனே வணக்கம் வாங்க உட்காருங்க.

இந்த வார்த்தையை முதல் அமைச்சர் அவர்கள் சொல்லுவார். இதை கவனித்த அந்த போலீஸ் அதிகாரி சற்று நேரத்தில் இந்த வணக்கத்துக்குரிய உட்காருங்கள் என்ற சொல்லை சற்று நேரம் மெளனமாக நின்று விட்டு பிறகு உட்காருவார். அவர் முதல்அமைச்சர் அவர்களிடம் என்ன பேச வேண்டுமோ, தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுவார் முழுமையாக அவருக்கு தமிழ் பேச தெரியாது. அப்படி இருந்தும் மக்கள் திலகம் அவர்களுக்கு அவர் மீது தனி ஒரு பிரியம் உண்டு. காரணம் மக்கள் திலகம் அவர்கள் 1935-ம் ஆண்டு "சதிலீலாவதி" என்ற சினிமா படத்தில் முதன்முதலில் நடிக்கும் போது போலீஸ் அதிகாரியாக நடித்தவர் மக்கள் திலகம். அந்த படத்தின் இயக்குநர் ஒரு ஆங்கிலேயர் அவர் பெயர் எல்லீஸ்டங்கன். மேலும், அது ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். இதையும் அவர் பல வருடங்கள் கழித்து பல போராட்டங்களை சந்தித்து தான் வந்து ஒரு முதல்அமைச்சராக அமர்ந்த அன்று தன் கட்டுப்பாட்டில் உள்ள மிக பொறுப்பில் உள்ள போலீஸ் இலாகா, அந்த போலீஸ் இலாகாவில் இருக்கும் ஒரு உயர் அதிகாரியான (ஐ.ஜி) ஒரு ஆங்கிலேயர்? இதை நினைத்து ஆனந்த பூரிப்பு அடைந்தார். ஆனால், அவர் ஒரு சில மாதங்களில் வயது கட்டுப்பாட்டின்படி ஓய்வு பெற்றுவிட்டார்.

சிறப்பு குறிப்பு:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் படமான "சதிலீலாவதி" 1935 நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஒரு ஆங்கிலேயர் பிறகு 42 ஆண்டுகள் கழித்த பிறகு, தமிழக முதல் அமைச்சர் ஆனபிறகு, தன் இலாகாவான போலீஸ் இலாகாவின் போலீஸ் அதிகாரி I.G. அவர்கள் ஒரு ஆங்கிலேயர் ஆவார்.

More Articles

 

வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

திருமணப் பத்திரிகை அடிக்காமல் திருமணம் செய்து கொண்டவர் மக்கள்  திலகம்

மக்கள் திலகம் அவர்கள் திருமணங்கள் விஷயங்களில் வித்தியாசமானவராக நடந்து கொள்வார். ஆரம்பத்தில் தான் சினிமா காலத்தில் நடித்து கொண்டு முன்னேற்றம் அடையும் சமயங்களில் படபிடிப்பு நிலையத்தில் (ஸ்டூடியோ) பணியாற்றுபவர்களும் இவருடன் நடிக்கும் சக நடிகர்களும் அவர்களுக்கோ அல்லது அவர்கள் குடும்பத்துக்கோ திருமணம் நடந்தால் படமுதலாளி, இயக்குனர், மற்றும் இது போன்ற முக்கியஸ்தர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்கும் போது எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் பத்திரிகை கொடுக்க தவறுவது இல்லை. இந்த மாதிரி கால கட்டத்தில் தனக்கு கொடுத்த பத்திரிக்கையை நன்கு படித்துவிட்டு, அதற்கு தகுந்த மாதிரி இவருடைய வசதிக்கு ஏற்ப பணம் கொடுப்பார். ஆனால் திருமணத்திற்கு போகமாட்டார். இதனுடைய முக்கிய தத்துவம் என்னவாக இருக்கும். சரி இவருக்கு முதல் திருமணம் கேரளாவில் நடக்கும் பொழுது இவர் அப்போது சினிமாவில் நடித்து கொண்டு இருந்தார். திடீர் என்று அவருடைய தாயாரும், அண்ணனும் திருமணத்திற்கு முடிவு செய்துவிட்டதால் இவருடைய திருமணமும் இதே போல் கேரளாவில் நடிந்தது. அடுத்த இரண்டாவது திருமணம் அதுவும் கேரளாவில் எளிமையான முறையில் நடந்தது. மூன்றாவது திருமணம் சென்னையில் இதே போல் எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்து கொண்டார். ஒரு மனிதனுக்கு திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது போல் ஒரு விஷயம் அவருடைய வாழ்நாளில் முதல் முதலாக நடந்த திருமண விழாவை காண்கிறார். திருமணம் என்பது ரகசியமாக ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் நடப்பது ஒரு காதல் திருமணமாகும். அதுவும் இந்த காலத்தில் மாறிவிட்டது. உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் சூழ வருகை தந்து நடக்கும் திருமண விழாவாகும். ஆனால் இது மக்கள் திலகம் அவருடைய வாழ்க்கையில் ஒன்று இரண்டு, மூன்று என்று திருமணம் அவருக்கு நடந்தது. ஆனால், அது மேலே குறிப்பிட்டது போல் நடைபெறவில்லை. பத்திரிகை அடிக்கவில்லை. பலரை சந்தித்து அழைக்கவும் இல்லை. இது அவருக்கு அவருடைய வரலாற்றில் முக்கிய விஷயமாகும்.

பிறகு, சினிமா துறையில் பிரபலம் அடைந்து இதே போல் அரசியலிலும் பிரபலம் அடைந்தபோது பலர் மக்கள் திலகம் தலைமையில்தான் திருமணம் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் திலகம் அவர்களிடம் சொல்லி அனுமதி பெறுவதற்காக பல நாட்கள் அவர்கள் அலைவதும் உண்டு. இந்த மாதிரி எந்த விஷயத்திலும் ஒதுங்கி இருக்காமல் கலந்து கொள்வதுதான் சரியாகும் இது உன்னுடைய பெயருக்கும் புகழக்கும் மிக உயர்ந்ததாக இருக்கும். இந்த விஷயத்தை ஒரு முக்கியமானவர் மக்கள் திலகம் அவர்களிடம் சொன்னார்கள். அதன்படி மக்கள் திலகம் அவர்களும் இதை பற்றி யோசித்து பார்க்கும் போது நமக்கு இப்படி நடக்கவில்லையே அப்படி என்கிற எண்ணம் மனதில் இருக்காமல், இன்னும்நாம் உயர வேண்டிய நாட்கள் இருக்கிறது. இந்த மாதிரி முடிவுக்கு பிறகு தன் பெயரை பத்திரிகையில் இட்டு தன்முன்னிலையில் திருமணம் நடத்துபவர்கள் அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நன்கு அறிந்த பிறகு, தான் சம்மதத்தை கொடுப்பார். இதில் எப்படிபட்டவர்களாக இருக்கனும் என்ற ஒரு முறை உண்டு மக்கள் திலகம் அவர்களிடம் இதில் விதி முறைகள் என்ன,
1. திருமண குடும்பத்தார் வசதியில் நடுநிலை குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2. காதல் திருமணமாக இருக்கக்கூடாது.
3. கோயிலில் திருமணம் நடத்தகூடாது.
4. திருமண மண்டபத்தில் ஐயர்களை வைத்து ஓம பூஜை நடத்த கூடாது.
இப்படிபட்ட திருமணங்களுக்கு தவறாமல் சென்று முன்நின்று நடத்தி வைப்பார். அது சமயம் மணமகனுக்கும், மணமகளுக்கும் தனி தனியாக பணம் கொடுத்து வாழ்த்துவார். அடுத்து சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, மிக ஆடம்பரமான முறையில் அதிக பணம் செலவழித்து திருமணம் நடத்துவார்கள் எப்படியாவது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இந்த திருமணத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு பலமுறை அவரே நேரில் சந்தித்து அழைப்பவர்களுடைய திருமணத்திற்கு வேறு வழி இல்லாமல் சென்று மணமக்களை வாழ்த்தி வருவார்.


No comments:

Post a Comment