எம்.ஜி.ஆர். முத்து தினமும் பனங்கள்ளை சாப்பிட வேண்டும் இது வரையிலும் எம்.ஜி.ஆருக்கு தன் உடம்பு என்ன செய்கிறது, எதற்தாக தனக்கு மருந்து கொடுக்கின்றார்கள். அதுவும் ஒரு மாத காலத்திற்கு என்று நினைத்து கொண்டு இருக்கிறார், ஆறுமுக நாடார் நேராக கல் இறக்கும்தோப்புக்கு செல்கிறார். அங்கு முக்கியமான ஒரு நபரை அழைத்து தினமும் காலையில் 7 மணிக்கு ஒரு மரத்து பணமரத்து கள் ஒரு முட்டியோடு (சிறிய மண் குடுவை) பனங்கள்ளை, சத்தியபாமா அவர்கள் வீட்டில் இது மருந்துக்காக மிக கவனமாக எச்சரிக்கையாக எடுத்து சென்று கொடுக்கவேண்டும். அதன்படி மறுநாள் காலையில் 7 மணிக்கு ஒரு மண் குடுவையுடன் சத்தியபாமா வீட்டில் கதவை தட்டி அம்மாவை அழைத்து அம்மா தோப்புக்கார அய்யா அவர்கள் இதை தங்களிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார். இது போல் தினமும் காலை 7 மணிக்கு கொண்டு வருவேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அடுத்து குடுவையில் கொண்டு வந்த பனங்கள்ளை சுத்தமாக ஒரு துணியில் வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து கொண்டு காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும்போது தன் மகனை அழைத்து ராமச்சந்திரா வைத்தியற் கொடுத்து அனுப்பிய மருந்த ரெடி. இதை உடனடியாக வந்து சாப்பிட்டு விடு தன்மகனை அழைக்கிறார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் முகபாவம் கசப்பு அடைந்து போய் வேண்டா வெறுப்போடு, இதை வாங்கி குடித்த எம்.ஜி.ஆர் சற்று நேரத்தில் என்ன இனிப்பாக இருக்கிறதே இது என்ன மருந்து என்று தாயிடம் கேட்கிறார். உடனே தாய், நீ சாப்பிடுவது மருந்து அது இனிப்பா இருக்கா கசப்பா இருக்கா என்று கேட்க கூடாது. கொடுத்ததை குடித்து விடவேண்டும். இதே போல் தினம் 7 மணிக்கு குடிக்க வேண்டும். இதை கேட்ட MGR அவர்கள் அம்மா சொல்லை தட்டாமல் பயபக்தியோடு நடந்து கொள்ளுபவர். ஒரு நாள் காலையில் உடற்பயிற்சிக்கு செல்லாமல் வீட்டு வாசலிலே வெளியே நின்று கொண்டு மருந்து எடுத்து கொண்டு வரும் நபரை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் மருந்து கொண்டு வரும் அவரும் ஒரு துணி பையில் ஒரு சிறிய மண் குடுவையில் நிறைந்த பனை மரத்து கள்ளை கொண்டு வருகிறார். இதை MGR அவர்கள் அம்மா உள்ளே வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் இதை என்னிடம் கொடுங்கள் கொடுத்து விடுகிறேன் என்று கேட்டு வாங்கி கொண்டார், குடுவையே பிரித்து பார்க்கிறார். அந்த குடுவையில் உள்ள கல்லில் தேன் ஈக்கள் செத்து மிதப்பதோடு நூங்கு நொறையோடு இருப்பதை பார்க்கிறார். இது என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும்போது, வீட்டில் உள்ளிருந்துகள் குடுவை இன்னும் வரவில்லையே என்று நினைத்து கொண்டு வெளியே வருகிறார்கள் சத்தியபாமா அம்மா அவர்கள். கள் குடுவை MGR கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியோடு மண் குடுவையை கையில் வாங்கி கொள்கிறார். உடனே MGR அம்மாவை பார்த்து அம்மா இது என்ன இதிலே பூச்சி புழுவும் பொங்கும் நுறையாக இருக்கிறதே இது என்ன என்று அம்மாவிடம் சற்று கோபத்தோடு கேட்கிறார். உடனே அம்மா! ராமசந்திரா இது உனக்கு தேவையில்லை, நான் இதை சுத்தம் செய்து கொண்டு வருகிறேன். நீ குடித்துவிட வேண்டும் என்று அம்மா சொன்னவுடன் அவர் குடித்து விட்டார். இருந்தாலும் MGRக்கு குடிப்பதற்கு சுவையாக இருக்கிறது. அன்னைக்கு குடுவையைப் பார்க்கும்போது பூச்சி புழுவும்இ பொங்கும் நுறையாக இருந்தது இது என்ன மருந்து என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணத்தோடு MGR அவர்கள் இந்த பிரச்சனையை விட்டு விட்டு ஒரு நாளைந்து நாள் கழித்து அந்தகல் குடுவை கொண்டு வரும் நபரிடம் ஐயா, இந்த மருந்து குடிப்பதற்கு நல்ல சுவையாக இருக்கிறது. முன்னைவிட என் உடம்பு நல்ல தெம்பாக, வலுவாக இருக்கின்றது. இது என்ன மருந்து எங்கே இருந்து எடுத்து வருகிறீர்கள். பொங்கும் நுறையாக இருக்கிறது என்று அவரிடம் அன்போடு கேட்கின்றார். உடனே கள் குடுவையை கொண்டு வந்தவர் இந்த கள்ளுடைய விவரத்தையும் மகிமையையும் விவரமாக சொல்லி விடுகிறார். இதை அறிந்து கொண்ட MGR அடுத்து ஒரு இரண்டு நாளில் மதிய நேரத்தில் சாப்பாட்டு நேரத்தில் தன் தாயிடம் அம்மா எனக்கு கொடுத்து வருகிறீர்களே அதற்கு பெயர் என்ன என்று அம்மாவிடம் கேட்கிறார். அம்மா நீங்கள் சொன்னால்தான் மருந்தை சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கிறார். ராமசந்திரா இதற்கு பெயர் பனங்கல் வைத்திய முறைபடி இதை வைத்தியர் ஆறுமுக நாடார் ஏற்பாட்டில் நான் உனக்கு தினமும் நான் கொடுக்கின்றேன் என்று சொல்கிறார். இதை கேட்ட MGR சற்று யோசிக்கிறார். கம்பெனியில் வேலை செய்கின்ற வாத்தியார்கள் மற்றும் பெரிய ஆட்கள் கள் குடிப்பதை பற்றி பேசி கொண்டு இருப்பதை MGR சில நேரங்களில் கேட்டு இருக்கிறார். அந்த கள்ளுதானே இது என்ற முடிவோடு தன் தாயிடம் அம்மா நீ இதை மருந்து என்று நினைக்கிறாய். அம்மா இது மருந்து அல்ல இது போதை பொருள் இதை இப்போ குடிப்பவர்கள் நாளடைவில் ஒரு பெரிய குடிகாரனாக ஆகிவிடுவார்கள். இப்படிப்பட்ட பொருளை எனக்கு கொடுத்து என்னை ஒரு குடிகாரனாக்கி விடாதே நாளையிலிருந்து குடிக்கமாட்டேன் என்று கடுமையாக சற்று கோபத்தோடு சொல்கிறார். உடனே சற்றும் தயங்காமல் அம்மா படபடவென்று மகனே என்ற பொருள் நாம் எப்படி எடுத்து கொள்கிறோம் என்பது நமது மனநிலையை பொருத்தது. நீ சொல்வது போல் மற்றவர்களுக்கு போதை பொருளாக இருக்கலாம், ஆனால் இது உனக்கு மருந்து, எனவே நீ இதை மருந்தாக நினைத்து 30 நாட்களுக்கு குடித்தாக வேண்டும். இது மாதிரி குடிபொருள்களையோ, போதை பொருள்களையோ, குடிப்பர்களை என் வீட்டுக்குள் கூட நுழையவிடமாட்டேன் இதை மிக கண்டிப்பாக சொல்கிறார். இது உங்களுக்கும் தான் என்று சொன்னவுடனே இதை கேட்ட MGR அவர்கள் தாயின் அறிவுரைகளை கேட்டு மெளனமாக இருந்து விட்டார். அதோடு சத்திய தாய் சில அறிவுரைகளை கூறினார்க்ள. கம்பெனியில் உடல்நிலை வளர்ச்சிக்காக பனங்கல் வாங்கி கொடுத்தார்கள் என்று அண்ணன் சக்கரபாணி உள்பட யாருக்கும் தெரியகூடாது. அதற்கு பதிலாக ஏதோ கசாயம் கொடுத்தார்க்ள என்றுதான் நீ சொல்ல வேண்டும். இப்படி ஒரு மாதத்திற்குள் ஓர் அளவு உடல் சற்று, உடல் வளர்ச்சியடைந்து இருந்தது. ஒரு மாதம் ஆகிவிட்டது, நான் வரும்போது இருந்த உடல் நிலை எனக்கே கொஞ்ச நல்லா வந்து இருக்கிற மாதிரி தெரியுது, நல்லா பசிக்குது நல்லா சாப்பிடுகிறேன். கம்பெனிக்கு சென்ற பிறகு கம்பெனியில் எல்லோருக்கும் கொடுக்கும் உணவைதான் உண்ணமுடியும் எனக்கு என்று தனியாக கேட்க முடியாது. மேலும், காலையிலேயே உடற்பயிற்சி, சண்டை பயிற்சி, மாலையில் நடன பயிற்சி, நடிப்பு பயிற்சி இப்படி எனக்கு தினமும் பயிற்சிகள் இருக்கும் இந்த மாதிரி பயிற்சி எடுத்து கொள்ளும் காலத்திலே உடல் சற்று மெலியலாம் அதை பார்த்துவிட்டு மகனை சரியாக சாப்பிடுவது இல்லையா என்று கேட்க கூடாது. அம்மா எனக்கு உடல் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆசையில்லை. அதற்கு பதிலாக உடல் வளர்ச்சியை மன வளர்ச்சி, திடம் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, நான் தொழிலில் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும், அதோடு அண்ணனும் தொழிலில் வளர்ச்சி அடையவேண்டும் என்பது என்னுடைய நோக்கம், என்று சொல்லி முடித்தவுடனே சத்தியதாய் தன்மகனை கட்டி பிடித்து, உச்சி முகர்ந்து மிக ஆனந்தப்படுகிறார். மகனே உங்கள் தொழிலில் மேலும் மேலும் உயரவேண்டும் எந்த குறையும் இல்லாமல் வளர்ச்சி அடையவேண்டும் என்று கடவுளை நான் வணங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி மகனை கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறார்கள். கம்பெனி சென்ற MGRரை பார்த்து எல்லோரும் இப்போது உன் உடல்நிலை நல்லா இருக்கு, ஓரளவு உன் உடம்பு நன்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று சொல்லி அண்ணன் சக்கரபாணி உள்பட எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். அவர்களிடம் விடைபெற்று கம்பெனி முதலாளியைப் பார்த்து வணங்குகிறார். என்னாடா ராமசந்திரா மருந்துகளை எல்லாம் ஒழுங்காக சாப்பிட்டியா இப்போ உன் உடம்பு எப்படி இருக்கு என்று கேட்கிறார். உடனே MGR ஐயா எங்க அம்மா கொடுத்த மருந்துகளையும், உணவுகளையும் ஒழுங்காக சாப்பிட்டேன், இப்போ என் உடம்பு எப்படி இருக்குது நீங்கள் சொல்லுங்கள், இதை கேட்ட முதலாளி இவன் அழகன் மட்டுமல்ல, மிக அறிவிலும் கூட என்று நினைத்து கொண்டு ராமசந்திரா நீ முன்னைவிட நல்லாதான் இருக்கிறாய் என்று கம்பெனி முதலாளி வாழ்த்துகிறார். பிறகு MGR அவர்கள் தொடர்ந்து தன் பணிகள் எந்த குறைகளும் ஏற்படகூடாது என்ற எண்ணத்துடன், அடுத்து நமக்கு என்ற வேஷத்தில் நடிப்பு பாத்திரம் கிடைக்கும் அதில் நாம் எப்படி புகழ் அடைய வேண்டும் என்று நினைத்து கொண்டு தன் பணிகளை தொடர்கிறார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணத்துடன் கம்பெனியில் பல நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும்போது ஒரு நாள் தனக்கும் அண்ணன் சக்கரபாணிக்கும் சரியான சம்பளம் போடவில்லை. ஏதோ அப்போ அப்போ அம்மாவிக்கு அனுப்பி வைப்பதற்கு பணம் கொடுக்கிறார்கள் தனக்கு சம்பளம் நிர்ணயிக்கவில்லையே என்பதை பற்றி யோசிக்கிறார்கள். நாடக கம்பெனியில் சேர்ந்து கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் பணியாற்றியும் நமக்கு சம்பளம் நிர்ணயிக்கவில்லையே என்று நினைத்து கவலைபடுகிறார்கள். இவர்கள் இருவரும் நாடக கம்பெனியில் பயிற்சி கற்றுக் கொள்ளும்போது முக்கிய நாடக நடிகர்கள் P.U. சின்னப்பா, காளி.என். ரத்தினம், மற்றும் பல முக்கிய நடிகர்கள், நாடக வாத்தியர் T.S. பாலையா, M.கந்தசாமிபிள்ளை, MGR, சக்கரபாணிக்கும் நாடக பயிற்சியாளராக இந்த நாடக கம்பெனியில், MGRக்கும் MGCக்கும் தினம் பல பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. அந்த கால கட்டத்தில் MGRக்கு சண்டை பயிற்சி மிக கடுமையாக இருக்கும், MGR மிக சுறு சுறுப்பாகவும் கற்றுக் கொண்டார். கம்பெனியின் முதலாளி பெயர் சச்சிதானம் பிள்ளைக்கு MGR இவ்வளவு சிறிய வயதில் புத்தி கூர்மையுடன் பயிற்சிகளை இவ்வளவு பெரிய அறிவுள்ளவனாக இருக்கிறானே என்று பெருமை அடைந்தார். முதன் முதலில் பேசிய வசனம் இந்த பயிற்சிகளை தனக்கு சொல்லி தரும் வாத்தியார்களிடம் MGR மிகவும் பயபக்தியாக இருப்பார், இவைகளில் MGRக்கு நடனம் கற்று கொள்வதில் சற்று கடினமாக இருந்தது. அந்த காலத்தில் நாடகங்களில் ஆண்கள் தான் பெண் வேடம் போட வேண்டும். ஆகவே நாடகத்தில் நடிக்க வசனம் பேச பாட தெரியனும். MGRக்கு பாட்டும் நடனமும் சரியாக வரவில்லை நடன ஆசிரியர் ஸ்ரீராமுலு என்பவர் மிக கோபக்காரர் இவரிடம் நடனம் கற்றுக் கொள்ளும்போது அடியும் வாங்குவாராம் எப்படியோ மிக சிரமப்பட்டு நடனத்தை கற்று கொண்டார். இந்த நடன கலை பிற்காலத்தில் சினிமாவுக்கு ரொம்ப உதவியாக இருந்தது. MGR சிறு சிறு வேடங்கள்தான் கம்பெனியில் கிடைத்தது, இந்த கம்பெனியில் ஏற்கனவே எல்லா வேடங்களுக்கும் ஆண்கள் உள்ளனர். கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் நடிகர்களுக்கு சாப்பாடு தங்கும் இடம், உடை, சம்பளம், இவைகள் அதிகமாக இருக்கும். இப்படி முக்கிய வேடங்களில் நடிப்பவர்கள் மற்ற சக நடிகர்களுடன் அதிகமாக பேசமாட்டார்கள். இப்படிபட்ட பெரிய நடிகர்களுடன் நல்லா பேசவேண்டும் என்ற ஆசை MGRக்கு உண்டு. என்ன செய்வது MGR சின்னபையன் கம்பெனிக்கு புதுசு ஆயினும் அந்த ஆசையை அவர் விடவில்லை. அதோடுதான் நாமும் இவர்களைபோல் நடித்து பெரிய அளவில் புகழ் பெறவேண்டும் அப்போதுதான் நாம் அம்மாவுக்கு அதிகமாக பணம் அனுப்பமுடியும் என்ற எண்ணமும் உண்டு. அவர் நடித்த முதல் நாடகம் "மகாபாரதம்" முதல் நாடக மேடையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த ஆண்டு 1924. MGRக்கு முதல் வசனம் அய்யயோ பாம்பு காப்பாற்றுங்கள் என்று பலமுறை அலறி அடித்துக்கொண்டு ஓடும்போது அர்சுணன் மீது மோதி கீழே விழுந்து விட்டார் தவறுதளாக, ஆனால் அது பொது மக்களிடம் இருந்து பெரிய அளவில் கை தட்டல் கிடைத்தது. MGRக்கு எதிர்பாராமல் இப்படியொரு கைதட்டல் கிடைத்தது. அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் மற்ற நடிகர்களுக்கு இந்த சின்னபையன் ராமசந்திரனுக்கு முதல் நாடகம் முதல் நாளிலேயே இப்படி ஒரு கை தட்டலா என்று ஒரே ஆச்சரியம் ஏற்பட்டது. இப்படியாக பல நாடகங்களில், பல சிரமமான காட்சிகளில்நடித்து வந்தார். MGRக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இந்த கம்பெனியில் P.U. சின்னபா, காளி.என், ரத்தினம் இவர்களுடன் மிக சிரமபட்டு MGR தொடர்பு வைத்துக் கொண்டார். அவர்களும் MGR மீது அன்பாக இருந்தார்கள். நாடகமும் பல ஊர்களுக்கு சென்று கொண்டு இருந்தது. கோயம்பத்தூரில் நாடகம் அமைக்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில், ஒரு நாள் MGR, P.U. சின்னப்பாவிடம் தன் விருப்பத்தை சொன்னார், சின்னப்பாவும் MGRக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டும் பிறகு சினிமாவில் நடிக்கலாம் என்று சொல்லி நாடகத்திலேயே நடித்து நல்ல தேர்ச்சி பெறு என்று சொல்லிவிட்டார். ஒரு நாள் தசவதாரம் நாடகம் இதில் P.U. சின்னப்பாவுக்கு தொண்டை சரியில்லை, உடல்நிலை சரியில்லை, அவருக்கு பதிலாக MGRரை அந்த வேடத்தில் போட்டு பரதனாக நடிக்க சொன்னார் முதலாளி, MGRக்கு மிகபெரிய சங்கடமாக ஆகிவிட்டது. காரணம் அது பெரிய சீன் எப்படியோ தைரியத்துடன் மேக்கப் முடித்து MGR அவர்கள் மேடைக்கு வந்தார். அன்று இந்த நாடகத்தை பார்க்க கிட்டப்பா வந்து முன் வரிசையில் அமர்ந்து இருந்தார். இதை MGR பார்த்துவிட்டார். MGRக்கு ஒரே சந்தோஷம் ஒரு பிரபல நடிகர் நம்ப நாடகத்தை பார்க்க வந்து இருக்கிறார், அதுவும் நாம் இந்த சின்னப்பாவுக்கு பதிலாக இந்த பையன் நடிக்கிறானே என்று ஆச்சரியப்பட்டார். அன்று MGR முடிந்தவரை சிரமப்பட்டு நல்லாவே நடித்து விட்டார். MGR நடித்த சீன் இடைவேளையோடு முடிந்துவிட்டது. கம்பெனியில் மற்ற நடிகர்களும், முதலாளியும் ஆழுசு P.U. சின்னப்பாவை போல் எதுவும் குறையும் இல்லாமல் வசனம் பேசி நடித்து விட்டான் என்று சந்தோஷப்பட்டார்கள். நாடக இடைவேளையில் கிட்டப்பா மேடை கொட்டைக்குள் வந்து காளி.என். ரத்தினத்தை அழைத்து எங்கே P.U. சின்னப்பா என்று கேட்டார். அவருக்கு தொண்டை கட்டி போச்சு அதனாலே அவர் வரவில்லை என்று சொன்னார்கள். அடுத்து கிட்டப்பா உள்ள வந்ததை அறிந்த MGR மிகவும் பதட்டம் அடைந்துவிட்டார். தன்னை பற்றி எதுவும் குறை சொல்ல வந்து இருப்பாரோ என்று நினைத்து கிட்டப்பா காளியிடம் P.U. சின்னப்பாவுக்கு பதிலாக நடித்த பையன் யார், பெயர் என்ன என்று கேட்டார், காளி இவன் பெயர் ராமசந்திரன் நல்ல பையன், நல்ல குணம் உள்ளவன், அறிவாளி கொடுத்த வேளையை சரியாக செய்வான் என்றார் காளி உடனே கிட்டப்பா MGRரை பார்த்து, கிட்ட வரும்படி அழைத்தார் MGR தயங்கினார். உடனே காளி அடவாப்பா அண்ணன் கூப்பிடுராங்க வந்து அண்ணன் கிட்ட ஆசிர்வாதம் பெற்றுக்கொள் என்று சொன்னதும் MGR ஆனந்த கண்ணீருடன் கிட்டப்பாவின் காலை தொட்டு வணங்கினார். கிட்டப்பாவும் MGRரை கட்டி தழுவி முதுகில்தட்டிக் கொடுத்தார். வளரும் பயிர் முளையிலேயே தெரியும் நீ நல்லா முன்னுக்கு வருவாய் என்று வாழ்த்தி சென்றார். இப்படியாக ஊர் ஊராக சென்று நாடகங்களை நடத்தி வந்த அந்த கம்பெனிக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்து. இதில் சிங்கப்பூர் மலேசியா, ரங்கூன், பர்மா போன்ற ஊர்களுக்கு சென்று நாடக கம்பெனி நல்ல பெயரை எடுத்தது, முதலில் பர்மா தமிழ்ர்கள் சார்பில் நாடக கம்பெனியை அழைக்கப்பட்டது. அதில் பெரிய நடிகர்களோடு MGRருக்கும், சக்கரபாணிக்கும் பர்மாவுக்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து கப்பல் வழியாக பர்மாவுக்கு புறப்பட்டார்கள். கப்பலில் MGR அவர்களுக்கு தாயாரை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றோமே இனி எப்போ தமிழ்நாட்டிற்கு திரும்புவோம் எப்போ நம் தாயை பார்ப்போம் என்ற பெரும் கவலை அண்ணனிடம் இதை சொல்லி அழ ஆரம்பித்துவிட்டார். அண்ணனும் மற்ற நடிகர்களும் MGRரை சமாதானப்படுத்தினார்கள். கப்பலில் 3வது நாள் MGRக்கு குமட்டல், வாந்தி, ஏற்பட்டது, மிகவும் சிரமப்பட்டார். இது முதலாளிக்கும் மற்ற பெரிய நடிகர்களுக்கும் தெரிந்தது கம்பெனியில் நிர்வாக பொறுப்பில் உள்ள கந்தசாமியின் மகன் M.K. ராதா அவர்களும் MGRக்கு மாத்திரை மருந்துகளை கொடுத்து சமாதானப்படுதினார்கள். முதன் முதல் கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு இப்படிதான் சில கோளாறுகள் வரும் என்று சொல்லி சென்றார்கள். கப்பல் பர்மா ரங்கோன் சென்று அடைய 7 நாட்கள் ஆச்சு, பர்மா ரங்கோன் சென்று அடைந்ததும் இவர்களை வரவேற்று அழைத்து சென்று ஒரு பெரிய பள்ளிகூடத்தில் தங்க வைத்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் ரங்கோன் தமிழ் சங்க தலைவர். ரங்கோன் பர்மா தமிழர்களின் வரவேற்யும், உபசரிப்பும் MGR அவர்களுக்கு இதை எல்லாம் பார்த்து மிக சந்தோஷமும் ஆனந்தமும் அடைந்தார். பர்மா ரங்கோனில் 15 நாட்கள் மிக சிறப்பாக நாடகம் நடந்தது. 15 நாட்கள் இதில் MGR நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு மிகவும் வரவேற்பும் கை தட்டலும் கிடைத்தது. மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. சில சமயங்களில் ஆங்கிலம் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது சக்கரபாணி சொல்லி பேச சொல்லுவார்கள். அவர் ஏற்கனவே ஆங்கிலம் நன்கு கற்று கொண்டவர் இந்த விசயத்தில் சக்கரபாணிக்கு கம்பெனியில் நல்ல மதிப்பும் இருந்தது. 15 நாள் கழித்து சென்னைக்கு திரும்புகின்ற நேரத்தில் எல்லோருக்கும் வெளிநாடு நாடகங்களை மிக சிறப்பாக முடித்து வெற்றி நடைபோட்டு கொண்டு தாய்நாட்டிற்கு போகிறோமே என்ற மகிழ்ச்சியோடு கப்பலில் வாந்தி, மயக்கம், கவலைஇன்றி சந்தோஷமாக சென்னை வந்து சேருகிறார்கள். சென்னையிலிருந்து தாயை சந்திக்க கும்பகோணம் சென்று தாயை சந்தித்து பர்மா ரங்கோனில் தனக்கு கிடைத்த மரியாதையை பர்மா தமிழர்களின் வாழ்த்துக்கள், ரங்கோனில் கிடைத்த அதிக சம்பளம் இவை அனைத்தும் சொல்லி இருவருடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்து அம்மாவின் காலில் வழிந்து ஆசிர்வாதம் பெற்றார்கள். வெளிநாடு சென்று வந்த மகன்களை கண்ட அந்த தாய் அளவற்ற அளவிற்கு ஆனந்தம் அடைந்தார். அப்போது MGRக்கு 14 வயது ஆகிவிட்டது பிறகு தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியிலே இருக்க வேண்டியதாகியது. MGR அவர்களும் P.U. சின்னப்பாவும், காளியும் மிக மிக உதவியாக நாடக கம்பெனியில் இருந்தார்கள். அண்ணன், தம்பி இருவருக்கும் சினிமாவில் நடிக்க ஆசை எப்படியும் இந்த கம்பெனியில் இருந்து வெளியே போக வேண்டும். அப்போதுதான் நாம் முன்னுக்கு வரமுடியும் என்ற முடிவுக்கு வந்த MGR, அவர்களும் சக்கரபாணி அவர்களும் இந்த யோசனையை, P.U. சின்னப்பாவிடம் சொன்னார்கள். P.U.C. கம்பெனியை விட்டு ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் சக்கரபாணிக்கு மட்டும் எல்லா விபரங்களையும் சொல்லிவிட்டு, பெட்டி, சில உடைகளை மட்டும் விட்டுவிட்டு பணம் நகைகள் மற்றும் சில பொருள்களோடு வெளியேறி விட்டார். | More Articles | |
வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு | எம்.ஜி.ஆர். முத்து நாடக கம்பெனி சென்னை விஜயம் பாய்ஸ் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து தேசம்காக்கும் என்ற நாடகத்தை ஆரம்பித்து (நடத்த) ஏற்பாடு செய்தது. நடிகர்கள் தேர்வு நடந்தது. இந்த நாடகம் காந்தியவாதி, சுதந்திர போராட்ட கதை பெரிய நாடகம் 1930ல் இதில் நடிக்க MGR, MGCக்கும் முக்கிய வேடங்கள் கொடுக்கப்பட்டது. நாடகம் நடத்த அன்றைய வெள்ளையர் ஆட்சி காலத்தில் போலீஸ் தடை விதித்தது. தடையை மீறி நாடகம் நடத்தப்பட்டது. போலீஸ் தடியடி நடத்தியது. இந்த செய்தி சென்னை நகரில் மற்றும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை உண்டாக்கியது தேசபக்தி என்றதும் இந்த நாடகத்திற்கு பொதுமக்கள், காங்கிரஸ்காரர்களும் பெரும் அளவில் ஆதரவு ஏற்பட்டது. இந்த நாடகத்தில் MGRக்கு தேசபக்தர் ஒரு சாமியார் வேசம். 17 வயது பையன் சாமியார் வேசத்தில் நடிக்கிறான் என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது. இந்த நாடகம் சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஒற்றவாடை என்ற நாடகக் கொட்டகையில் நடந்தது. 17 வயது பையன் பழுத்தபழம் போல் சாமியார் வேடத்தில் MGR மிக சிறப்பாக நடித்து இருந்தார். இந்த நாடக கம்பெனி பல ஊர்களுக்கு சென்று கடைசியாக சென்னைக்கு வந்தது. இதில் இந்த நாடகத்தில் அரசியல் காங்கிரஸ் இருந்தது. MGR 17 வயதில் அரசியலில் (காங்கிரஸில்) சுபாஷ்சந்திரபோஸ் பக்தன் ஆகிவிட்டார். இந்த நிலையில் சென்னையில் எப்படியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஆர்வம் ஏற்பட்டு விடவே அம்மா அண்ணன் இவர்களிடம் தெரியபடுத்தினார். அவர்களும் சினிமாவில் நடிக்க எப்படி சான்ஸ் கிடைக்கும் யாரை போய் பார்த்து, எப்படி பார்ப்பது நமக்கு சினிமா ஆசை வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் எம்.ஜி.ஆர். சினிமா மோகத்தை விடவில்லை. சென்னை வால்டாக்ஸ்ரோடு நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ரோடு சந்திப்பில் பழைய நண்பர் உதவியுடன் ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து கொண்டு சென்னையில் ஏற்கனவே தங்கி இருந்து சினிமாவில் நடிக்கும் நாடக கம்பெனி முதலாளி கந்தசாமியும் P.U. சின்னப்பா, M.K. ராதா போன்றவர்களிடம் தினமும் அவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தார். 18வது வயதில் நல்ல உடல் கட்டு, கதர் வேட்டி, ஜிப்பா, சாப்பாடு இவைகளைப்பற்றி கவலைபடுவதில்லை, உடை மிக சுத்தமாக இருக்கணும், உள்ளமும் சுத்தமாக இருக்கணும் என்று நினைத்து கொண்டு காலையும் மாலையும் அவர்களை சென்று பார்த்து வந்தார். மேலும், இந்திய சுதந்திர போராட்டம் மிகவும் வலுவாக இருந்தது மகாத்மா காந்தியின் தலைமையில் இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ஆங்கிலேயேருடைய முதல் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. இந்த மாதிரி விஷயங்களை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள், தானும் ஏன் அரசியலில் ஈடுபடகூடாது. நம் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் பல விதமான போராட்டங்களை நடத்தித் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் ஏன் காந்தியவாதியாக இருக்கக்கூடாது என்று நினைத்து இவரை ஒரு கதர் ஜிப்பா ஒரு கதர் பைஜாம்மா யாருக்கும் தெரியாமல் வாங்கி தைத்து போட்டு கொண்டார். எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாள் கம்பெனி முதலாளியைப் பார்த்து இத்தனை வருடங்களாக எனக்கும் என் அண்ணனுக்கும் நாடகங்களில் நடிக்க எங்களுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்து எங்களுக்கு பல வேஷங்களை கொடுத்து நடிக்க வைத்து நாடகத்தில் எங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்படி எங்களை ஒரு நல்ல நாடக நடிகனாக வளர்த்துவிட்ட உங்களை நாங்கள் எங்கள் உயிர் உள்ளவரை என்றென்றும் மறக்க மாட்டோ ம். ஐயா நானும் என் அண்ணனும் சினிமாவில் நடிக்க ஆசைபடுகிறோம். எங்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புங்கள் என்று சொன்னவுடன், கம்பெனி முதலாளி இதற்கு ஏதும் பதில் சொல்லமுடியாமல் சற்று மெளவுனமாக இருந்தார். உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் காலில் விழுந்து, என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள். கோபம் இல்லாமல் என்னை சந்தோஷமாக அனுப்பி வையுங்கள் என்று சொன்னதும் இந்த சொல்லை கேட்ட முதலாளி பதில் ஏதும் சொல்ல முடியாமல் எம்.ஜி.ஆரின் தோள்பட்டையும் தட்டிகொடுத்து நீ, சினிமாவில் சேர்ந்து முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன். இந்த செய்தியை கேட்ட எம்.ஜி.ஆர் மிகுந்த மன மகிழ்ச்சியோடு தன் பெட்டிகளை எடுத்துகொண்டு தன்னுடைய சக நடிகர்களிடம் பிரியாவிடை சொல்லி ஆனந்த கண்ணீரோடு வெளியே வரும்போது அந்த இடத்தில் கம்பெனி முதலாளி நின்று கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உடனே, முதலாளி எம்.ஜி.ஆரிடம் வந்து கைபிடித்து எம்.ஜி.ஆரிடம் ரூ. 100/- பணத்தை கொடுத்து வழி அனுப்பிவைக்கிறார். அடுத்த நாள் சென்னையில் இருக்கும் பி.யு. சின்னப்பா, எம். கே. ராதா இவர்களைப் பார்க்க செல்கிறார். அப்போது என்னடா ராமசந்திரா, ஏதோ வேசத்தில் வந்திருக்கே ஏதாவது சினிமாவில் நடித்துவிட்டு வருகிறாயா என்று ஆச்சரியத்தோடும், சிரிப்போடும் கேட்கிறார்கள். உடனே எம்.ஜி.ஆர் அது எல்லாம் ஒன்றும் இல்லை நானாகவே ஒரு உடையை மாட்டிகொண்டேன் வேண்டாம் என்று சொன்னால் நான் கழற்றிவிடுகிறேன். ஐய்யயோ வேண்டாம் உடை உனக்கு மிக பிரமாதம்மா இருக்கு நீ ஒரு காந்தியவாதி மாதிரி இருக்கிறே. ஆனால் உத்திராட்ச கொட்டையும் நெற்றியில் விபூதியும் தான் பொருத்தமில்லாமல் இருக்கு என்று சொல்லுகின்றார்கள். இதை கேட்ட எம்ஜிஆர் சற்று மனவருத்தத்தோடு பதில் சொல்லுகிறார், இந்த உடையையும், உத்திராட்சகொட்டையும் நேற்றுதான் அணிந்தேன். இதை அணிந்ததிலிருந்து எனக்கு ஏதோ ஒரு பெரிய மனமகிழ்ச்சி உண்டாகிறது. ஆனால் எனக்கு சினிமாவில் நடிப்பு சான்ஸ் கிடைக்கும் வரையில் இந்த உத்திராட்சகொட்டை வெளியில் தெரியாமல் சட்டைக்குள் போட்டு கொள்கிறேன் என்று சொல்லுகிறார். அதற்கு அவர்கள் ராமசந்திரா நாங்கள் இப்படி சொல்லிவிட்டோ மே என்று வருத்தப்படக்கூடாது என்று சொல்லி முடிக்கிறார்கள். பிறகு, மறுநாள் கும்பகோணத்திலிருக்கும் அம்மாவுக்கு நீங்கள் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்னைக்கு தாமதப்படாமல் உடனே வாருங்கள் என்று கடிதம் எழுதுகிறார். அதோடு நாராயணனுக்கும் கடிதம் எழுதுகிறார். அம்மாவையும் அண்ணனையும் சென்னைக்கு அனுப்பி வையுங்கள் நான் தனியாக ரூம் எடுத்து ஒட்டலில் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்று கடிதம் எழுதுகிறார். நான் சினிமாவில் சேர்ந்தவுடன் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று கடிதம் எழுதுகிறார். எம்.ஜி.ஆர் சலிப்பு இல்லாமல் சாப்பாட்டை பற்றி கவலைபடுவதில்லை, உடையை மட்டும் வெள்ளையாக வைத்து கொண்டு தினமும் காலை நீட்டா உடை உடுத்திக் கொண்டு சினிமா கம்பெனிகளுக்கும் நாடக வாத்தியார் கந்தசாமி முதலியார் வீட்டிற்கும் சென்று விடுவார். இப்படியே மாதங்கள் பல கடந்தன இவரது நிலைமை நன்கு புரிந்து கந்தசாமி முதலியார். ராமசந்திரனுடைய திறமைக்கும் நல்ல அழகுக்கும், கட்டான உடலமைப்புக்கும் இவை அனைத்தையும் நன்கு அறிந்த கந்தசாமி முதலியார், எம்.ஜி.ஆருக்கு எப்படியாவது சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தரவேண்டும் என்று ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் சென்று முயற்சி செய்தார் வாத்தியார் கந்தசாமி முதலியாரின் முயற்சி வீண் போகவில்லை. ஒரே வாரத்தில் ஒரு சினிமா கம்பெனியில் "சதிலீலாவதி" என்ற படத்தில் நடிக்க 1936ல் வாய்ப்பு கிடைத்தது. வேசம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சம்பளம் ரூ. 100/- அப்பொழுது எம்.ஜி.ஆருக்கு வயது 19 இதற்கு இடையில் கும்பகோணத்தில் இருக்கும் அன்னையும், சக்கரபாணியும் சென்னைக்கு வந்து வால்டாக்ஸ் ரோட்டில் ஒரு சிறிய வீட்டில் இருந்தார்கள். | More Articles | |
வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு | எம்.ஜி.ஆர். முத்து சதிலீலாவதியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் ஆகிறது. இந்த செய்தியை கேட்ட தாயும் அண்ணனும் அளவு கடந்த ஆனந்தம் அடைகிறார்கள். பிறகு, முதல் முதலில் சினிமா கம்பெனி ஒப்பந்தத்துக்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள். அப்போதுகூட அண்ணனையும் அழைத்துச் செல்கிறார் எம்.ஜி.ஆர். அடுத்து அவருக்கு மேக்கப் நடைகிறது போலீஸ் அதிகாரியாக வேடத்தில் நடிக்க. இது முடிந்து சூட்டிங் நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு இருந்த பல கம்பெனி முதலாளிகளும், டைரக்டரும் எம்ஜிஆரை பார்த்து மேக்கப் ஓகே என்று சொல்லுகிறார்கள். இந்த படத்துக்கு டைரக்டர் ஒரு வெள்ளைகாரர் அவர் பெயர் எல்லீஸ்டங்கன். எம்.ஜி.ஆர் அவர்கள் டைரக்டர் காலை தொட்டு வணங்குகிறார் பக்கத்தில் நின்ற தன் அண்ணன் பெயரை சொல்லி அறிமுகப்படுத்துகிறார். உடனே டைரக்டர் சக்கரபாணி அவர்களை உற்று கவனிக்கிறார். உடனே டைரக்டர் டங்கன் அவர்கள் சக்கரபாணியை பார்த்து நீ என்ன படித்து இருக்கிறாய் என்று ஆங்கிலத்தில் கேட்கிறார் அதற்கு சற்றம் தயங்காமல் ஆங்கிலத்தில் பதில் சொல்லுகிறார், இதை கேட்ட டைரக்டர் What man you are study only 7th standard. Yes sir, Why, sir I am very poor family இப்படி சக்கரபாணி ஆங்கிலத்தில் சரியாக பதில் சொன்னதால் டைக்ரடர் டங்கன் மனதில் இடம் பெற்றுவிட்டார். டங்கன் இந்த படத்திலே நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தார். இதை அறிந்த சத்தியதாய் அவர்கள் இந்த படம் என்று தியேட்டருக்கு வருமோ என்று ஏங்கி கொண்டு இருந்தார். மேலும் இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் NSK. T.S. பாலையா, M.K. ராதா. முதல் முதலாக இந்த படத்தில் முன்பணமாக ரூ. 100/- பெற்றுக் கொள்கிறார் எம்.ஜி.ஆர். சதிலீலாவதி 1937 ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆனது. அதற்கு முன் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று எதிர்ப்பார்த்து கொண்டு இருந்த சத்தியபாமா அவர்களும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் ரிலீஸ் ஆன அன்று முதல் காட்சிக்கே தியேட்டருக்கு மகன்களை கூட எதிர்ப்பார்க்காமல் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு சென்று படத்தை பார்த்து பூரித்து போனார்கள். அடுத்த படம் என்ன செய்வது என்று நினைத்து பெரிய கம்பெனிகளுக்கும் நடிகர்கள் வீட்டிற்கும் சென்று வரும்போது வழியில் முன்னால் அவர்களுடன் நாடகத்தில் நடித்த நண்பர் கேசவன் என்பவரை திடீர் என்று வழியில் சந்திக்கிறார். அந்த நேரத்தில் நான் பாம்பேக்கு போகிறேன். எனக்கு படம் ஒன்று புக் ஆகியிருக்கு நீ வேண்டுமானால் என் கூடவா அந்த படத்தில் உனக்கு சான்ஸ் கிடைக்குமா என்று கேட்டு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னவுடன் தன் வீட்டுக்கு வந்து அம்மாவிடமும் அண்ணனிடமும் இந்த விவரத்தை சொல்கிறார். இதை கேட்ட இருவரும் சென்னையில் சினிமா சான்ஸ் கேட்டு அலைவதை விட கேசவன் அவர்களுடன் நீ பம்பாய்க்கு சென்று வருவதுதான் நல்லது, ஆனால் மகனே பம்பாய்க்கு சென்று ஒரு வாரம் 10 நாட்கள் நடிப்பு சான்ஸ்க்குகாக காத்து கொண்டு இருக்க வேண்டுமே இதற்கு பணம் அதிகம் தேவைப்படுமே என்று சொல்லும்போது உடனே சக்கரபாணி குறுக்கிட்டு அம்மா நானும் தம்பியும் கேசவன் அவர்களை சந்தித்து விவரத்தை பேசி வருகிறோம் என்று சொல்லி கேசவன் அவர்களை சந்திக்க செல்கிறார்கள். அவருடைய வீட்டில் அவரை சந்தித்து பணச் செலவை பற்றி பேசுகிறார்கள். இவர்கள் சொல்வதை கேட்ட கேசவன் அவர்கள் சற்று யோசித்து பிறகு நீங்கள் சொல்வது சரியான விஷயம்தான். ராமசந்திரனுக்கு என் கூட பம்பாய்க்கு வருவதற்கு டிக்கெட்டுக்கு மட்டும் பணம் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்புங்கள் மீதி செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன உடன் இருவரும் அம்மாவிடம் வந்து இந்த விஷயத்தை சொல்லுகிறார்கள்.
பம்பாய் சென்றார் எம்.ஜி.ஆர் அம்மாவும் சற்றும் யோசிக்காமல் மகனே நான் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீ புறப்படுவதற்கு தயாராகு என்று சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் சக்கரபாணியை அழைத்து மகனே நீ சென்று கேசவன் அவர்களிடம் ராமசந்திரனை எப்போ அனுப்ப வேண்டும் என்று கேட்டறிந்து வா என்று சொல்லி அனுப்பிவிட்ட பிறகு சத்தியதாய் அவர்கள் தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். கேசவன் அவர்களை சந்திக்க போன சக்கரபாணி அவர்கள் நாளை காலையில் ராமசந்திரனை பெட்டியோடு என் வீட்டிற்கு அனுப்பி வைக்கவும் என்று சக்கரபாணி அவர்களிடம் கேசவன் சொல்கிறார். அதன்படி மறுநாள் காலையில் சக்கரபாணி தம்பியை அழைத்துக் கொண்டு கேசவன் வீட்டிற்கு செல்கிறார். சென்ற உடன் நமக்கு மதியம் தான் பம்பாய்க்கு ரயில் அதனால் நீங்கள் இங்கேயே இருங்கள் என்று சொன்னார். அதன்படி அவர்களும் அங்கு தங்கி இருந்து மதியம் ரயிலுக்கு சென்று பம்பாய் ரயிலில் தம்பியை வழி அனுப்பிவிட்டு சக்கரபாணி வீட்டிற்கு வந்து, தம்பியை பாம்பேக்கு வழி அனுப்பிவிட்டு வருகிறேன் என்று அம்மாவிடம் சொல்லுகிறார். அன்று முழுவதும் அம்மா அவர்கள் சற்று மனவருத்தத்துடன் இருப்பதை கண்டு அம்மா என்ன ஒரு மாதிரியாக இருக்கிறாய் தம்பி நடித்த முதல் படம் ஜெ ஜெ என்று ஓடி கொண்டு இருக்கிறது. 2வது படத்தில் நடிக்க தம்பி வட இந்தியாவுக்கு செல்கிறான். அதை நினைத்து நீங்க ஏன் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள். அடுத்த நாள் சக்கரபாணி தனக்கு சினிமா தொழிலை தேடி கம்பெனிகளுக்கு செல்கிறார். அந்த நேரத்தில் "சதிலீலாவதி" டைரக்டர் எல்லீஸ் டங்கனை பார்க்கிறார். டங்கன் யோசிக்கிறார் அப்போது ஐயா நான் ராமசந்திரன் அண்ணன் My name is சக்கரபாணி என்று சரளமாக அடுத்து பேச வேண்டிய வார்த்தைகளை ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார். அவரும் சக்கரபாணியை அடிக்கடி நீ என்னை வந்து பார்த்து செல் சக்கரபாணி அவர்கள் ஒரு வெள்ளைக்காரர் சினிமா பட டைரக்டர் அவரிடம் இவர் எப்படி சரளமாக ஆங்கிலத்தில் பேச முடிந்தது? தன் தகப்பனார் கோபாலன் அவர்கள் நன்றாக ஆங்கிலம் படித்தவர் பெரும்பாலும் இவர் கண்டியில் ஆங்கிலத்தில்தான் பேசுவார் (ஆங்கில ஆட்கிக்காலம்) சில சமயங்களில் கோபாலன் அவர்கள் தன் மூத்த குழந்தைகளுக்கு ஆங்கிலம் படங்களை சொல்லி கொடுப்பார். அப்போது சக்ரபாணி அவர்கள் சிறு குழந்தையாக இருந்தாலும் அவருக்கு வயது 4 அவரும் மற்ற குழந்தை அண்ணன், அக்காவுடன் அமர்ந்து ஆங்கில உச்சரிப்புகளை கவனிப்பார் அதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் சகோதர சகோதரிகளிடம் அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவர்கள். அப்போது எனக்கு ஆங்கிலம் சொல்லி கொடுங்கல் என்று கேட்பாராம் இப்படி சக்கரபாணி ஆங்கிலத்தின் மேல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதுதான் இப்போது பயன் அளித்தது. பாம்பேக்கு வந்து பட முதலாளியை சந்தித்து எம்.ஜி.ஆருக்கு ஏதாவது ஒரு நல்ல சான்ஸ் கொடுங்கள் என்று சொல்லுகிறார். பட முதலாளியும், டைரக்டரும் எம்ஜிஆரை ஏற இறங்க பார்க்கிறார்கள் அந்த சமயம் எம்ஜிஆர் அவர்கள் ஜிப்பா, பைஜாமா அணிந்து இந்தி நடிகர் போல் நல்ல வாட்ட சாட்டமாக நிற்பதை கண்டு எம்ஜிஆரிடம் உனக்கு என்ன என்ன தொழில் தெரியும் என்று கேட்கிறார். உடனே எம்ஜிஆர் கடகட என தனக்கு தெரிந்த நடிப்புகளையெல்லாம் வரிசையாக சொல்கிறார். இதை கேட்ட அந்த இருவரும் எம்ஜிஆருக்கு அருகாமையில் நின்று கொண்டு இருந்த கேசவனை பார்க்கிறார்கள் இதை புரிந்து கொண்ட கேசவன் அவர்கள் பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் புரிந்து கொண்டு பையன் ஏற்கனவே நாடக கம்பெனியில் எல்லா நடிப்பிலும் தேர்ச்சி பெற்றவன் என்று சொல்லுகிறார். ஓ, அப்படியா சரி, பையன் ஒரு லாட்ஜியில் தங்க வையுங்கள். சாப்பாடு, லாட்ஜ் வாடகை எல்லாம் கம்பெனி கொடுத்துவிடும். பிறகு இந்த படத்தில் பையனுக்கு என்ன வேசம் கொடுக்கலாம் என்பதை பார்த்து முடிவு எடுக்கலாம். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு வயது 20 ஆகிறது. நேரத்துக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு லாட்ஜில் தங்கி இருக்கிறார். அதிகாலையில் எழுந்து எப்போதும் செய்வது போல் உடற்பயிற்சிகளை செய்வதில் தவறுவதில்லை (யோகாசனம்) படபிடிப்பு ஆரம்பமாகி நடந்து கொண்டு இருக்கிறது இடையில் எம்.ஜி.ஆர். டைரக்டர், பட முதலாளி, கேசவன் இவர்களை சந்திப்பதிலும் தவறுவதில்லை. எம்.ஜி.ஆர். இந்த படத்தில் சி.ஐ.டி. ஆபீசராக வேடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார்கள். பிறகு அந்த வேடம் வேர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. பிறகு எம்.ஜி.ஆருக்கு ஜெமீன்தார் வேடம் கொடுக்க முடிவு ஆனது. பிறகு அதுவும் அந்த வேடத்திற்கு T.S. பாலையாதான் மிக பொருத்தமானவர் என்று ஜெமீன்தார் வேடத்தை T.S. பாலையாவுக்கு கொடுத்துவிட்டார்கள். எம்.ஜி.ஆருக்கு இந்த படத்தில் சரியான கதாபாத்திரம் கொடுக்க முடியவில்லை. ஆதலால் கம்பெனி முதலாளி மிக சிரமப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ரூ. 500/- கொடுத்து ஆறுதல் கூறி அடுத்த படத்தில் கண்டிப்பாக உனக்கு நல்ல கதாபாத்திரம் தருகிறேன் என்று சொல்லி எம்.ஜி.ஆரை கேசவனிடம் சென்னைக்கு அனுப்பிவிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் படமுதலாளி. அதன்படி கேசவன் எம்.ஜி.ஆருக்கு சமாதானம் சொல்லி சென்னைக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கிறார். பாம்பேயில் புறப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் சென்னை ரயிலில் இறங்கி காலை வீட்டிற்கு வரும் வழியில் அம்மாவையும், அண்ணணையும் எதிர்பாராமல் பார்க்கிறார் எம்.ஜி.ஆரை பார்த்தவுடன் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் அதிர்ச்சி ஆகிறது. அம்மா மகனை என்ன திடீர் என்று வந்து விட்டாய், அம்மா எங்க நீங்க போயிட்டு வருகிறீர்கள் என்று அம்மாவிடம் எம்.ஜி.ஆர் கேட்கிறார். அம்மா உடனே நானும் அண்ணனம் கோயிலுக்கு சென்று அன்று வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை அம்மனுக்கு செய்து விட்டு வந்து கொண்டு இருக்கிறோம் நான் வேலை கிடைக்காமல் ஊர் ஊராக அலைந்து கொண்டு இருக்கிறேன். இந்த சமயத்தில் நீங்கள் தேவையில்லாமல் அனாவசிய செலவுகள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் சிறப்பு பூஜை என்றும் தெய்வம் என்று அனாவசிய செலவு செய்தால் அந்த கல்லா எனக்கு வேலை வாங்கி தரப்போகிறது கோபமாக ரோட்டில் நடந்து கொண்டே அம்மாவிடம் சற்ற கோபமாக பேசுகிறார். அம்மா மகனை வீட்டில் சென்று பேசி கொள்ளலாம் என்று மூவரும் வீட்டிற்கு வருகிறார்கள் முதலில் நீ குளித்து விட்டு வா, மெதுவாக உட்கார்ந்து பேசலாம் என்று அன்போடு சொல்கிறார். அவரும் அதன்படி குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு அம்மாவிடமும் அண்ணனிடமும் தானாகவே பாம்பேயில் நடந்த சம்பவங்களை சொல்கிறார். அதன் பிறகு உள்ளே என்று பெட்டியை திறந்து அவர்கள் கொடுத்த ரூபாய் 500/- வழியில் சாப்பிட்டு செலவு பேக மீதியை அம்மாவிடம் கொடுக்கிறார். அடுத்த நாள் மீண்டும் சென்னையில் உள்ள சினிமா கம்பெனிகளுக்கு ஸ்டுடியோக்களுக்கு வேலை தேடி நடக்கிறார் (இது ஒரு சுருக்கம்) | More Articles | |
| | | | | |
| |
| |
|
No comments:
Post a Comment