Friday 6 August 2021

 



வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடந்து சென்ற இடங்கள் அந்த காலத்தில்

வால்டாக்ஸ் ரோடு to ராயப்பேட்டை, மைலாப்பூர் அடையார் ஸ்டூடியோ, கோடம்பாக்கம் ஸ்டூடியோ கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோ, மாம்பலம் சினிமா கம்பெனி, மெளவுண்ட் ரோடு ஸ்டூடியோ, (ஜெமினி) இந்த பூமியில் மண் உலகில் நான் ஏன் பிறந்தேன் தந்தை இறந்த பிறகு படிக்க வசதி இல்லை. பசிதீர சாப்பாடு இல்லை, தாய் படும் துயரத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை பத்து வயதில் பட்டினியாய் இருக்க முடியவில்லை. வேலைக்கு போகலாம் என்றால் எனக்கு வேலை தர ஆள் இல்லை. பதினைந்து வயதில் ஒரு மகனும் 10 வயதில் ஒரு மகனும் இருக்கும் போது எங்களைப் பெற்ற தாய் வேலைக்கு செல்வதா அய்யோ நான் என்ன செய்வேன், எங்கே போவேன் என்று அழுது புலம்பிக்கொண்டு இருக்கும்போது எங்கிருந்தோ வந்தார் நாராயணன் என்ற எங்கள் குடும்ப உறவினர். நீங்கள் இருவரும் தயங்கவேண்டாம் என்னுடன் வாருங்கள். உங்கள் இருவருக்கும் நான் வேலை வாங்கி தருகிறேன் என்றார். அப்பவே அவருடன் சென்றோம். நாடகத்தில் நடிகனாய் நடித்தோம். மூன்று வேலை உணவு கிடைத்தது மூன்று ரூபாய் சம்பளமும் கிடைத்தது. இந்த உதவியை செய்த திரு. நாராயணன் அவர்களை எங்கள் உயிர் உள்ளவரையிலும் என்றென்றும் வணங்குவோம் என்றார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர் உள்ளத்தால் மக்களை கவர்ந்தவர் அஷ்டலெட்சுமி அனுக்கிரகம் கொண்டவர்.

மாவீரன் மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் சண்டைக்காட்சி இல்லாமல் நடித்தால், அது உப்பு இல்லாத சாப்பாடு போல, ஆனால், "என் தங்கை" 1952ல் சண்டைக்காட்சியே இல்லாத ஒரு படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்தது.

வள்ளல் எம்.ஜி.ஆர். கண்ட கனவு

கடவுளே எனக்கு புகழை கொடு, நல்ல மனதையும் கொடு கடவுளே அப்படியே நல்ல உடலையும் கொடு என்றார். "நாடோ டி மன்னன்" படம் வெற்றி அடைந்தால் மன்னன் இல்லையென்றால் வெறும் நாடோ டிதான் இந்த எண்ணத்தோடு இந்த படத்தை 1957ல் தயாரித்தவர். இந்த படம் வெற்றி அடைந்து அவர் நினைத்தது நடந்தது.

வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

சோதனைகளை சாதனை ஆக்கியவர்

1958ல் அவருடைய சொந்தநாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும் போது கால் உடைந்தது. அது சமயம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமா படங்களில் இனிமேல் நடிக்க முடியாது என்று பேசப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும் போது, மக்கள் திலகம் அவர்கள் கடவுளே இது என்ன சோதனை என்று நினைத்துக்கொண்டார். கடவுளின் ஆசிர்வாதத்தால் மேலும், புகழை அடைந்தார்.

1967ல் எம்.ஆர். ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காலத்தில் கடவுளே நான் பிழைப்பேனா மீண்டும் எனக்கு சோதனையா என்று நினைத்தார். கடவுள் முன்னை விட மேலும் நீ புகழ் அடைவாய் என்று சொன்னது போல் எம்.எல்.ஏ.வாக வெளியே வந்தார். 1984ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும்போது, மறுபடியும் கடவுளை நினைக்கிறார். கவலைபடாதே உன் ஆயுள் வரை நீ முதல்அமைச்சராக இருந்து மக்களுக்காக சேவை செய்வாய் என்று கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்

மக்கள் திலகம் அவர்களுக்கு ஏற்பட்ட பெரும் சோதனைகள் முதல் மனைவி தங்கமணி திருமணம் ஆகி ஓரே வருடத்தில் இறந்து போனது. அடுத்து இரண்டாவது திருமணம் சதானந்தவதியை திருமணம் செய்து இரண்டாவது வருடத்தில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு மக்கள் திலகத்துடன் சேர்ந்து வாழமுடியாமல் போனது. 1957ல் மூன்றாவது முறை திருமணம் செய்து கொள்ள ஏற்பட்ட நிபந்தனை. 1959ல் தன் தாய் இறந்துபோனது. அதேவருடம் தன்னுடைய சொந்த நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கையில் கால் உடைந்தது. 1967ல் துப்பாக்கியால் சுடப்பட்டது. 1969ல் தன்னுடைய அரசியல் ஆசான் அறிஞர் அண்ணா இறந்தது. 1972ல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறியது. 1973ல் தன்னுடைய சொந்த கட்சி சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளரை நிறுத்த ஏற்பட்ட சூழ்நிலை, 1977ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சந்தித்தது. 1980ல் தமிழ்நாட்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது. தன்னுடைய அரசாட்சியை கலைத்தது. அதே 1980ல் மீண்டும் தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தலை சந்தித்து தர்மயுத்தத்தில் இறங்கியது. 1984ல் தனக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியத்திற்காக அமெரிக்கா சென்றது.

More Articles

 

வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

மக்கள் திலகம் நிறுவனத்தில் ஆர்.எம்.வீ.

ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும் போது, நாம் இந்த மாதிரி சொந்தத்தில் நாடகங்கள் நடத்தனும். பிறகு, சினிமாவில் நடித்து கொண்டு இருக்கும் போது, நாம் சொந்தத்தில் படம் எடுக்கனும். சொந்தத்தில் வீடு கட்டணும், சொந்தமாக ஒரு ஸ்டுடியோ வாங்கனும் என்றெல்லாம் நினைத்தார். அவர் நினைத்தது எல்லாம் நடந்தது. இதில் முதலில் 1953ல் சொந்த நாடக கம்பெனி "எம்.ஜி.ஆர் நாடக மன்றம்", ஆரம்பிக்கப்பட்டது. பிறகு அதே 1953ல் "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் சினிமா கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரண்டு ஸ்தாபனத்திற்கம் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களை நிர்வாக பொருப்பாளராக நியமித்தார். ஆர்.எம்.வீ. அவர்கள் இந்த ஸ்தாபனத்தில் 1953ல் இருந்து முழுப்பொறுப்புடன் நிர்வாகித்து கவனித்து வந்தார். மக்கள் திலகம் அவர்கள் ஆர்.எம்.வீ அவர்களிடம் சிலமுக்கியமான விஷயங்களை கலந்து பேசுவதில் தவறுவதில்லை. ஆர்.எம்.வீ. அவர்கள் கம்பெனி வரவு செலவுகளை மிக திறமையுடன் கவனித்து மக்கள் திலகம் மனதில் இடம்பிடித்தார். ஆர்.எம்.வீ. அவர்கள் சுமார் 10 ஆண்டுகாலம், "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" நிறுவனத்தில் பொறுப்பாளராக இருந்தார். இவருக்கு சம்பளம் 500 ரூபாய். சில சமயங்களில் மக்கள் திலகம் அவர்களிடமும் திரு. சக்கரபாணி அவர்களிடம் கணக்கு கேட்பார். இந்த கணக்கு விஷயத்தில் ஆர்.எம்.வீ. அவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டார். இவர் நாடகம், சினிமா, அரசியலில் மிகவும் அனுபவமுள்ளவர். இவர் ஒரு சமயம் மக்கள் திலகம் அவர்களிடம் 1963ல் நான் சொந்தத்தில் ஒரு படம் எடுக்கனும் அதில் நீங்களே நடிக்கனும். அந்த படத்திற்கு எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளனுமென்று வேண்டிக்கொண்டார். இதைகேட்ட மக்கள் திலகம் அவர்கள் உடனே சம்மதம் சொல்லிவிட்டார்.

பயந்து பயந்து கேட்ட ஆர்.எம்.வீ. அவர்களுக்கு, உடனே சம்மதம் கிடைத்ததை நினைத்து அளவற்ற ஆனந்தப்பட்டு அவருக்கு வேண்டியர்களிடமெல்லாம் இந்த விஷயத்தை சொல்லி ஒரு மாதத்தில் "சத்யா மூவிஸ்" என்ற பெயரில் சினிமா பட கம்பெனி தயாராகிவிட்டது. இந்த அலுவலகத்தை திறந்து வைக்க மக்கள் திலகத்தை அழைத்தார். அதன்படி அலுவலகத்தில் 1963ல் விளக்கு ஏற்றி வைத்து முதல் படத்திற்கு பூஜையும் நடந்தது. படத்தின் பெயர் "தெய்வத்தாய்", நியாயம், சத்தியம், கடமை இவைகளை கொள்கை உள்ள ஆர்.எம்.வீ. அவர்களுக்கு இந்த படம் ஒரு சவாலாக இருந்தது. தமிழ் சினிமா துறையில் ஆர்.எம்.வீ. அவர்கள் முழுக்க முழுக்க மக்கள் திலகம் அவர்களுடைய கொள்கையை பின்பற்றுபவர். நல்லவர், இவரை நம்பி இந்த படத்தை தயாரிக்கிறேன். இது நிச்சயமாக எனக்கு வெற்றியையும், நல்ல முன்னேற்றமும் கிடைக்கும் என்று மனதிடத்துடன் அந்த படத்தை "சத்யா மூவிஸ்" தயாரித்தது. ஆர்.எம்.வீ. வெளியிட்டார். அந்த படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தொடர்ந்து மேலும் ஐந்து வெற்றி படங்களை தயாரித்தார். ஆனாலும் தொடர்ந்து மக்கள் திலகம் அவர்களிடமே பொறுப்பில் இருந்தார்.


வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

மக்கள் திலகத்துக்கும் நடிகர் திலகத்துக்கும் போட்டி

1950க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுகொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யு. சின்னப்பாவும் சினிமாத்துறையை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர்களுக்கு பிறகு, மக்கள் திலகமும், நடிகர் திலகமும் இந்த இரு திலகமும் சேர்ந்து 1954ல் "கூண்டுகிளி" என்ற படத்தில் நடித்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்களுடைய ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. படமும் சரியாக ஓடவில்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை. ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர்கள் 1954க்கு பிறகு, மக்கள் திலகம் அவர்கள் அண்ணாவுடைய அன்பையும், நடிகர் திலகம் காமராஜர் அவர்களது அன்புக்கு உரியவர்களாக இருந்தார்கள். சினிமாவில் இந்த இருவருக்கும் பெரும் அளவில் மதிப்பு இருந்தது. ரசிகர்களும் மிக அதிக அளவில் உருவானார்கள். தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை இப்படி உலக நாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் ஏற்பட்டது.

இதே போல் அரசியலில் உயர்ந்து நின்றார்கள். இருவருமே தனது இல்லங்களுக்கு தாய் பெயரை சூட்டினார்கள். இவர்கள் இருவருக்கும் ராசியில் சற்று வேறுபாடு இருந்தது. ஆனால், ரசிகர்கள் ஒற்றுமை இல்லாமல் வளர்ந்து வந்தார்கள். சினிமாவில் இந்த ஒரு திலகங்களுக்கும் திரைக்கதைபடி முடிவில் இறக்கும்படி எம்.ஜி.ஆர். "மதுரை வீரன்" படத்தில் மாறுகால் மாறுகை வெட்டப்பட்டது. கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு தூக்குமேடை அமைந்து இருந்தது. இதை எப்படி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று வினவும் போது, படத்தின் கதை அம்சம் இவர்களுடைய நடிப்பு இதுதான் ரசிகர்களுக்கு முக்கியம். கடைசி காட்சியில் தியேட்டருக்குள் இருப்பது இல்லை. எப்படியோ அந்த இரு படமும் மிக அதிக நாள் ஓடி மிக மிக அதிகமான வசூலை கொடுத்தது. இப்படி இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்து வந்தார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் இடை இடையே சிறு சிறு சறுக்ககல்கள் ஏற்பட்டாலும், புகழ்கள் உயர்ந்து கொண்டே வந்தது. உலகம் அறிந்த இவர்கள் அண்ணன் முந்தியும், தம்பி பிந்தியும் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டார்கள். அவர்களின் புகழ்கள் மட்டும் மறையவில்லை இவர்கள் இருவரும் திரைஉலகுக்கு இரண்டு தூண்களாக இருந்தார்கள்.

More Articles

 

No comments:

Post a Comment