எம்.ஜி.ஆர். முத்து மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது தன் மகன்களுக்கு எப்படியாவது படத்தில் நடிக்க சீக்கீரமாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து அந்த அம்மன் கோயிலுக்கு மகன்களுக்கு தெரியாமல் சென்று பூஜை செய்து வருகிறார். இப்படி இருக்கிற காலகட்டத்தில் இருவருக்கும் சில படங்களில் நடிக்க சிறு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தன்னுடைய விடா முயற்சியால் இம்மாதிரி வாய்ப்புக்கள் கிடைப்பதில் குறைவு ஒன்றும் இல்லை ஆனாலும் அவர் மனதிற்குள் நாம் எப்போது கதாநாயகனாக நடிக்க போகிறோம் என்ற ஏக்கம் இருந்து கொண்டு இருந்தது. இப்படியொரு காலகட்டத்தில் ஒரு சிலருடைய முக்கிய சிபாரிசின்படி டைரக்டர் A.S.A. சாமி பட தயாரிப்பாளர் சோமசுந்தரம் இவர்கள் இருவரும் இணைந்து ராஜகுமாரி என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்க எல்லா ஏற்பாடுகளையும் முடித்து கொண்டு கதாநாயகன் தேர்வு நடத்தப்பட்டது. அப்பொழுது எம்.ஜி.ஆர் அவர்களும் இந்த தேர்வில் கலந்துகொண்டார். தேர்வை டைரக்டர் A.S.A. சாமி அவர்கள் மிக கவனமாக தெளிவாக நடத்தினார். இதில் எம்.ஜி.ஆர் ஆள் வாட்டசாட்டம், அழகு, நிறம் மற்றும் பயிற்சிகள் இலைகள் எல்லாமே சரியாக இருந்தது. உடனே எம்.ஜி.ஆரிடம் ஏதும் சொல்லாமல் உன் வீட்டு விலாசத்தை கொடுத்து செல் நாங்கள் உன் வீட்டிற்கு தகவல் அனுப்புகிறோம் என்று சொல்லி எம்.ஜி.ஆரை அனுப்பி வைத்தார்கள். எம்.ஜி.ஆர் மன திருப்தி இல்லாமல் வீட்டிற்கு சென்றவர் அம்மாவிடமும், அண்ணனிடமும் நான் கதாநாயகனாக நடிக்க தேர்வு ஒரு கம்பெனியில் நடந்தது என்ற விவரத்தை சொல்கிறார். இதை கேட்ட அம்மாவுக்கும் அண்ணனுக்கும் மகிழ்ச்சி அடைந்து மகனே நீ கவலைப்படாதே இந்த தேர்வில் நீதான் வெற்றி அடைவாய் என்று அம்மா சொல்கிறார். (இது சுருக்கம்)
மறு நாள் தொடர்ந்து வேலை தேடும்படலம் தொடர்கிறது. ஒரு வார காலத்தில் மேற்படி டைரக்டர் A.S.A. சாமி அவர்கள் எம்.ஜி.ஆரை அழைத்து வரும்படி ஒரு ஆளை அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் வீட்டில் வேறு ஒரு படப்பிடிப்புக்கு சென்று உள்ளார் அம்மா அந்த ஆளிடம் மகன் வந்தால் அனுப்பி வைக்கிறேன் நேரம் (மதியம்)
எம்.ஜி.ஆர் இரவு வீட்டிற்கு வருகிறார். மகன் எப்போது வருவான் எனற் காத்துக்கொண்டு இருந்த தாய் ஏண்டா மகனே இவ்வளவு நேரம் உடனே மகன் சொல்கிறார் நான் ஊர் சுற்றி கொண்டா வருகிறேன். எனக்கு கிடைத்த ஒரு சின்ன வாய்ப்பு நடித்து முடித்தவுடன் நேராக வீட்டிற்கு வருகிறன் என்று சொல்லி பாத்ரூமூக்கு சென்று குளித்து விட்டு வந்தவுடன் சாப்பாடு தயார். மகன் சாப்பாடு சாப்பிடும்போது டைரக்டர் A.S.A. சாமி ஆள் அனுப்பி வைத்த விவரத்தை சொல்கிறார். அப்படியாமா மறுநாள் காலையில் கம்பெனிக்கு செல்கிறார். டைரக்டர் சாமி இவரை பார்த்தவுடன் நேத்திக்கே வரசொன்னேன் ஏன் வரவில்லை என்று கேட்கிறார்.
உடனே எம்.ஜி.ஆர் அய்யா நான் வேறு ஒரு படத்தில் சூட்டிங்க முடித்து வீட்ற்கு போக இரவு 9 மணி ஆகியது. அதனால் தான் நான் இப்போது வந்தேன் என்றவுடன் டைரக்டர் சரி பராவாயில்லை. உன்னை எங்கள் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யபோகிறோம். நாளைக்கு நல்ல நாள் உனது அண்ணன் சக்கரபாணியையும் அழைத்துகொண்டு வந்து ஒப்பந்ததாளில் கையெழுத்து போடனும் என்று சொல்லி அனுப்புகிறார். இதை கேட்டவுடன் எம்.ஜி.ஆர் வேறு எங்கையும் செல்லாமல் நேராக வீட்டிற்கு வந்து விடுகிறார். இதற்கு இடையில் தன் இளைய மகனுக்கு அந்த கம்பெனியில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சொல்லி அம்மன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கி தன் இளைய மகனுக்காக காத்து கொண்டு இருக்கிறார். இளைய மகன் எம்.ஜி.ஆர் அவர்கள் சந்தோசத்தோடு வீட்டிற்கு வருகிறார். இடை இடையே சிறு தோல்விகள் சந்தித்த எம்.ஜி.ஆர் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொள்ளமல், ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போட, மறுநாள் அன்று வெள்ளிகிழமை காலையில் எழுந்து மகன் இருவரும் கம்பெனிக்கு புறப்படும்போது அம்மனுடைய குங்குமம் நெற்றியில் இட்டு ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைக்கிறார். குங்குமம், பொட்டோ ட சென்ற இருவரையும் டைரக்டர் கம்பெனி முதலாளி பார்த்து வாங்க வாங்க நாங்கள் உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
அன்று காலை நல்ல நேரம் 9-10 1/2 நேரம் என்றும் இந்த நேரத்தில் தான் எடுக்கப் போகும் படத்தின் பெயர் "ராஜகுமாரி" இந்த படத்தின் தொடக்க விழா பூஜை நடைபெறுகிறது. இதில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகி சக நடிகர்களும், சக தொழிலாளர்களும் அங்கு கூடி இருக்கிறார்கள். இந்த பூஜையில் விசேஷமாக வினாயகர் படம், சரஸ்வதி லட்சுமி படம் ஒரு அம்மன் படம் ராஜராஜேஸ்வரி படம் வைக்கப்பட்டு இருந்ததை எம்.ஜி.ஆர் மிக கவனமாக கவனித்தார். படத்தின் பெயர் ராஜகுமாரி (இது ஒரு சுருக்கம்)
பூஜை முடிந்தவுடன் கதாநாயகன் எம்.ஜி.ஆரிடம் ஒப்பந்த கடிதத்தில் கையெழுத்து இடும்படி சொன்னார்கள். உடனே அண்ணன் சக்கரபாணி அந்த ஒப்பந்தத்தைப்படித்து காண்பிக்க சொன்னார். அதில் இந்த படம் சூட்டிங் முடியும் வரையில் நான் வேறு எந்த படத்திற்கும் நடிக்க ஒப்பந்தம் செய்துகொள்ள மாட்டேன் நீங்கள் சூட்டிங்குக்கு அழைக்கும் போது எல்லாம் வரவேண்டும். உங்களுக்கு சம்பளம் பிறகு நிர்ணயிக்கப்படும். இப்பொழுது முன் தொகையாக ரூ. 1001/- தருகிறோம். இது தான் ஒப்பந்தப்பத்திரம். அண்ணனும் தம்பியும் ஒருவருக்கு ஒருவர் முகத்தை பார்த்துக்கொள்கிறார்கள். உடனே அண்ணன் தம்பிக்கு முகத்தினால் கையெழுத்துபோட சைகை காண்பிக்கிறார். தம்பி கையெழுத்துபோடுகிறார். அண்ணனும் சாட்சி கையெழுத்து போடுகிறார். உடனே முதலாளியையும், டைரக்டர் A.S. சாமியும் ரூ. 1001/- முன்தொகையாக கொடுத்தார்கள். எம்.ஜி.ஆர் அதை பெற்றுக்கொண்டார். பிறகு சூட்டிங் தேதிகளை நாளைக்கு சொல்கிறோம் அடுத்து ரூபாய் 1001/- பெற்றுக்கொண்டு நேராக வீட்டிற்கு சென்று அம்மாவை பார்த்து காலில் விழுந்து வணங்கி அம்மாவிடம் முதன் முதலாக கதாநாயகனாக நடிப்பில் நடிக்க முன்தொகையாக ரூபாய் 1001/- கிடைத்ததை நினைத்து அந்த அம்மனை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் அன்னை. அடுத்து, மறுநாள் ஒப்பந்தப்படி கம்பெனிக்கு செல்கிறார். அங்கு டைரக்டர் சாமியும் கம்பெனி முதலாளியும் எம்.ஜி.ஆரிடம் தான் இந்த படத்தில் நடிக்க போகும் கதாபாத்திரத்தையும் தன்னுடன் நடிக்கும் கதாநாயகி மாலதி என்ற ஒரு பெண் நடிக்க இருக்கிறார் அவள் தான் ராஜகுமாரி இத்துடன் டி.எஸ். பாலையா, எம்.என். நம்பியார் என்று விவரத்தை சொல்லுகிறார்கள். கதாநாயகி மாலதி தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர் (தாய்மொழி) டி.எஸ். பாலையா, எம்.என். நம்பியார், நாராயணபிள்ளை போன்றவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரை விட நடிப்பில் அனுபவத்தில் மூத்தவர்கள் இந்த விவரங்களை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய வயசுக்கு மீறிய திறமைகளை காட்டி, திறமைகளுடன் நடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது. 1946ல் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. 1936 சதிலீலாவதி முதல் படம். 10 ஆண்டுகள் கழித்து இவருக்கு கதாநாயகன் வேடம் கிடைத்தது. இதற்கு இடையில் சிறு சிறு வேடங்களின் 14 படங்களில்நடித்து உள்ளார். சிறு வயதில்நாடகத்தில் நடித்து கைதட்டலும் பாராட்களையும் பெற்று பிறகு 14 சினிமா படங்களின் நடித்து அனுபவங்களை வைத்து கொண்ட இவருக்கு கொடுத்த கதாபாத்திரங்களில் சிரமம் இல்லாமல் தங்கு தடை இல்லாமல், நடிக்க முடிந்தது. இந்த படத்தில் இவர் ஒரு நாட்டின் ராஜகுமாரன். கதாநாயகியும் ஒரு நாட்டின் இளவரசி இந்த இளவரசியை வில்லன்கள் ஒரு சமயத்தில் கடத்தி செல்கிறார்கள். இதை எதிர்பாராமல் பார்த்த ராஜகுமாரன் எம்.ஜி.ஆர் வில்லன்களுடன் குதிரையில் போராடும்போது டி.எஸ். பாலையாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் கத்தி சண்டை ஏற்படுகிறது. இந்த கத்தி சண்டையின் படபிடிப்பின் போது டைரக்டர் இந்த காட்சியை மிக தெளிவாக படப்பிடிப்பை படம் எடுக்கிறார். இதில் இயற்கையானவை எம்.ஜி.ஆர். அவர்களிடம் வாள்வீச்சு திறமை இயற்கையாகவே உள்ளது. மிக வேகமாகவும் உள்ளது என்பதை கவனித்த டைரக்டர் மிக மகிழ்ச்சி அடைகிறார். இந்த சண்டை காட்சி மிக அருமையாக அமைந்து உள்ளது என்பதை பட தயாரிப்பாளர்கள் எல்லோரும் பாராட்டுகிறார்கள். படம் 1947 வெளியிடப்படுகிறது. இந்த படம் வெளிவந்த பிறகு அடுத்து அடுத்து பல படங்களில் இவர் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தங்கள் ஏற்பட்டது. இவர் எத்தனை படங்களில் எப்படி எப்படியெல்லாம் நடித்து பாராட்டுகளை பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
ஒரு படத்திற்கு படம் நடிப்பு வித்தியாசங்கள் கதாபாத்திரங்கள், மிக வித்தியாசமாகவும், தத்துவமாகவும் அவருக்கும் அதை மாதிரி இவர் நடிக்கும் பாடல்களிலும் மிக கருத்து உள்ளதாக இருக்கும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே நடித்து வந்த இவர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இவர் நடிக்கும்படங்கள் எல்லாம் ஒரு புரட்சிகரமாகவே இருக்கும். அது தான் புரட்சி நடிகர், ஆரம்பத்தில் சதிலீலாவதியில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்த இவர், நியாயம், நீதி நேர்மையோடு பல குற்றவாளிகளை பிடித்து தண்டிக்ககூடிய வேடம் போலீஸ் அதிகாரி அதே போல் கடைசிபடம் 1978ல் "மதுரை மீட்டசுந்தர பாண்டிய"னாக நடித்தார். மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் படம் 1978 வெளியிடப்பட்டது. (இது ஒரு மிக சுருக்கமாக எழுதப்பட்ட விஷயம்) இதற்கு முன்னால் உள்ள விஷயங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.
அடுத்து 1936ல் சினிமாவில் நடிக்க தொடங்கியவர், 1940ல் அரசியலில் காங்கிரசில் ஈடுபடுகிறார். வெளிபடியாக இல்லாமல் தன் முன்னேற்றத்தை கருதி அரசியலில் முன்னேற்றத்திற்குத் தடை ஏற்படுமோ என்று கருதி வெளிப்படியாக ஈடுபடுவதில்லை. 1948க்கு பிறகு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு சற்று அரசியலில் வெளி ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் அப்போது காமராஜர் மிக உயர்ந்து நின்றார். அவருடைய கொள்கையை பின்பற்றி அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் அரசியலில் ஈடுபாடு வைத்து கொண்டார். இதற்கு இடையில் சினிமா துறை, நாடக துறை என்று பல ஊர்களுக்கு செல்லும் போது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி இவர்களை பற்றி மிக தெளிவாக தெரிந்து கொண்டார். மேலும் கலைஞர் கருணாநிதியும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் ஒரு காலகட்டத்தில் கோவையில் சந்தித்துக் கொண்டார்கள். படத்தில் நடிக்க எம்.ஜி.ஆரும் கதை வசனம் எழுத கருணாநிதியும் இணைந்து இருந்தார்கள். எங்கு சென்றாலும் ஒன்றாக போவார்கள். சிறந்த நண்பர்களாக இருந்தார்கள் ஆனால் கருணாநிதி அவர்கள் திராவிட கழகத்தின் கொள்கையை அடிக்கடி பேசுவார். நாடகம், சினிமாவுக்கு கதை வசனம் எழுதுவதில் திறமைசாலி என்று நினைத்தேன். ஆனால், அதை விட அரசியலில் மிக திறமை உள்ளவர் போல் தெரிகிறதே என்றுதும் கலைஞர் உடனே எம்.ஜி.ஆர் நீங்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால், பிற்காலத்தில் நீங்களும் ஒரு பெரிய மனிதர் ஆகலாம். இதை நினைத்து எம்.ஜி.ஆர் ஒரு அலட்சிய சிரிப்பு சிரிக்கிறார். அதோடு அவருடைய மனதிற்குள் இவருடன் அரசியல் பேச கூடாது என்று நினைக்கிறார். சேலத்தில் ஒரு லாட்ஜில் ஒரு காலத்தில் தங்கி இருக்கும் போது பேசி கொண்ட விஷயம் பிறகு இந்த அரசியல் விஷயம் எம்.ஜி.ஆர் மனதில் மிக ஆழமாக பதிந்து விட்டது. அடிக்கடி யாருடன் அரசியல் பேச கூடாது என்று நினைத்தாரோ பிறகு அவருடன் அரசியலை பற்றி திராவிட கழகம் கொள்கைகளை பற்றி கேட்கும் போது காங்கிரசுக்கும் தி.க. கொள்கைக்கும் மிக வித்தியாசங்கள் இருந்தன. இது நாள் அளவில் எம்.ஜி.ஆர் மனதில் கொஞ்ச கொஞ்சமாக பதிந்தது. அதே நேரத்தில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மனவேற்பாடு ஏற்பட்டு அண்ணா அவர்கள் தனியாக திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். அதன் பிறகு தான் 1953ல் முழுக்க முழுக்க அண்ணாவின் கொள்கைகளை அலசி எடுத்தார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்ணாவுடைய முன்னிலையில் 1954 தி.மு.க கட்சியில் சேர்ந்தார். இது எம்.ஜி.ஆர் அவர்களுடைய அரசியல் சரித்திரம். இதன் பிறகு எம்.ஜி.ஆர் அவர்கள் அரசியலில் எப்படி என்பதை உலக மக்களுக்கும் தெரிந்த விஷயம்.
1936ல் வெள்ளையர் ஆட்சி காலத்தில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த எம்.ஜி.ஆர் அவர்கள், மிக துடிப்போடு அரசியலில் போயிருந்தார். வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்து காந்தி அடியார் அவர்களுடைய கொள்கைகளை கற்று கொண்ட இவர், அண்ணாவின் கொள்கைகளை தன் மனதில் பதிந்து கொண்டவர். அதன்படி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடவும் இவர் கலை துறையில் இருந்து கொண்டே நாட்டின் பொதுமக்களுக்கு சேவை செய்யவும் சட்டமன்ற உறுப்பினராகவும் எம்.எல்.ஏ பரங்கிமலைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக நின்று ஜெயிக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிற்க அண்ணா அவர்கள் வாய்ப்புக் கொடுத்தார்கள். அதற்கு இடையில் பிரபல நடிகர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று கொண்டு வரும் காலத்தில் தமிழ்நாட்டில் (ஜனவரி 12, 1967ல் சுடப்பட்டார்) இந்தச் சமயத்தில் தமிழகத்தில் காங்கிரசுக்கும், திமுகவிற்கும் மிக பெரிய அளவில் போர்களம் போல் பிரச்சாரங்கள் நடக்கிறது.
இந்த பிரசார காலத்தில், மகாபாரதத்தில் அந்தண்ணன்னை போல் தமிழ்நாட்டிற்கு பிரசாரத்தில் செல்லவேண்டிய எம்.ஜி.ஆர் அவர்கள் ஆஸ்பத்திரியில் துப்பாக்கியில் சுடப்பட்டு காயத்தோடு படுத்து இருக்கிறார். தர்மயுத்தத்தில் தர்மராகிய அண்ணா அவர்கள் காங்கிரஸ் இடத்தில் இருந்து தமிழ்நாட்டை கைப்பற்றுகிறார். பரங்கிமலையில் வேட்பாளராக எம்.ஜி.ஆர் அவர்களை நிறுத்தி, காலம் காலமாக பரங்கிமலை தொகுதி காங்கிரசாரின் கோட்டையாக இருந்து வந்தது. 1967 ஆம் ஆண்டு பரங்கி மலை தொகுதியை எம்.ஜி.ஆர் அவர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் பரங்கி மலை தொகுதியை கைப்பற்றினார்கள். அந்த நேரம் எம்.ஜி.ஆர் அவர்கள் எம்.ஆர். ராதாவால் சுடபட்டு சென்னை மத்திய அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த தமிழ்நாட்டில் உள்ள எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் பொங்கி எழுந்தனர். பெரும் போர் படை போல் சென்னை பரங்கிமலை தொகுதிக்கு வந்து வீடுவீடாக சென்று 25 மைல் சுற்றுவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் சென்று எம்.ஜி.ஆர் அவர்கள் ஓட்டு அளிக்கும்படி இரு கரம் கூப்பி வணங்கி ஓட்டு சேகரித்தார்கள். எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற தொண்டர்கள். 1936ல் தமிழக சினிமா துறையில் நுழைந்த எம்.ஜி.ஆர் 1954வது வருடத்தில் அரசியலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்ணாவின் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இது அவருடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதி. இது சுருக்கம்.
அவர் நடித்த ஒவ்வொரு படங்களிலும் இடையிலேயும் ஏற்பட்ட சிரமங்களை சமாளித்து கொண்டு தாம் இம்மாதிரி மென்மேலும் சினிமா தொழிலில் உயர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தன் விடா முயற்சிகளை ஈடுபாடு கொண்டு வருங்காலத்தில் தன் சகோதரர் சக்கரபாணி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க சத்தியதாய் அவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். கேரளாவிலேயே பாலகாட்டிற்கு அடுத்து உள்ள வடவனூர் என்ற கிராமத்தில் பெண் பார்த்து சக்கரபாணி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் இவர்கள் முன் குடி இருந்த வால்டாக்ஸ் ரோட்டிற்கும் சுபாஸ் சந்திரபோஸ் சாலைக்கும் கூடும் இடத்தில் ஒரு சாதாரண வீட்டில்இருந்து சக்கரபாணி அவர்களுக்கு கல்யாணம் முடிந்த பிறகு சற்று பெரிய வீட்டில் வால்டாக்ஸ் ரோட்டில் முதலியார் அவர்களின் வீட்டில் குடி போகிறார்கள். முதலில் மூவராக வசித்தவர்கள் திருமணம் ஆன பிறகு நான்கு பேர்களாக ஆகிவிட்டார்கள். முதல் முதலாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி கால்நடையாகவே சென்று சினிமா கம்பெனிகளுக்கு ஒரு வேலை சாப்பிட்டும் சாப்பிடாமலேயும் ஸ்டூடியோக்களுக்கு சென்று வந்து கொண்டு இருந்தார்கள். பிறகு ஒரு காலகட்டத்தில் ரிக்ஷாக்களிலும், குதிரை வண்டிகளிலும் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் அதிகமாக பெரிய ரோட்களில் டிராம் என்ற வண்டி போகும் இப்படி இவைகளில் எல்லாம் சென்று வந்தவர்கள். பிறகு டாக்சி கார்களில் அல்லது கம்பெனிகாரர்களில் போய்வருவார்கள். இவர்கள் ஸ்டூடியோ இருக்கும் வடபழனி சினிமா கம்பெனிகள் இருக்கும் ராயபேட்டை, மாம்பலம், இந்த மாதிரி இடங்களில் குடி இருக்காமல் சென்னை ஜார்ஜ் டவுனில் ஏன் குடி இருந்தார்கள் வால்டாக்ஸ் ரோட்டில் ஒற்றவாடை என்ற நாடக தியேட்டர் பழமையான தியேட்டர். இது சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு பக்கத்தில் அமைந்து உள்ளது. அந்த கால கட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நாடாககொட்டகை (தியேட்டர்) என்பது இந்த ஒற்றவாடை தியேட்டர் மட்டும்தான் நகரத்தில் உள்ளவர்கள் நாடகம் பார்க்க வேண்டுமென்றால் இங்குதான் வரவேண்டும். சென்னை நகரத்தின் முதன்மையான இடம் எம்.ஜி.ஆருக்கு மிக பழகி போன இடம் அவருக்கு மிக பிடித்தமான இடம்.
அதனால்தான் அப்பகுதியில் குடியிருந்தார்கள் அதோடு சத்தியதாய் அவர்களுக்கு அந்த இடத்தில் உள்ள அம்மன்மீது அதிக பக்தி கொண்டிருந்தார். ஆனால், சத்தியதாய் அவர்களுக்கு அந்த இடத்தை விட்டு போக மனம் இல்லை. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அவர் கதாநாயகனாக நடித்து முதல் படம்வெளிவந்த பிறகு அடுத்து கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வர கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. இனிமேல் இவர் எந்த படத்தில் துணை நடிகனாக நடிக்க முடியாது. இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய புராண படத்தில் ஒரு பிரபல இந்தி டைரக்டர் இயக்க கூடிய அந்த படத்திற்கு இவர் கதாநாயகனாக நடிக்க பல தேர்வுகள் அதாவது கத்தி சண்டை, குதிரை சவாரி, சண்டை காட்சிகள் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க திறமை, நல்ல அழகு, உடல் அமைப்பு, முக அழகு உடல் நிறம் இவைகள் அனைத்தும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிக பொருத்தமாக இருந்தது. இது பட முதலாளிக்கும், பட இயக்குநருக்கும் எம்.ஜி.ஆரை மிக பிடித்துவிட்டது. இந்த ஒப்பந்தம் செய்து முன் பணம் கொடுக்கப்பட்டு, படபிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில் சொந்த குரலில் பாடி நடிக்ககூடிய ஒருவர் இருந்தால் நல்லா இருக்கும் என்ற ஒரு எண்ணம் பட தயாரிப்பாளருக்கு தோன்றுகிறது.
இதை மனதில் வைத்துக்கொண்டு பி.யு. சின்னப்பாவை போடலாம் என்று பட முதலாளி இயக்குநரிடம் சொல்லுகிறார். இதை ஏற்று கொள்வதா டைரக்டர், 'எம்.ஜி.ஆர்' தான் இந்த படத்திற்கு மிக பொருத்தமானவர் என்று நறுக்கு என்று சொல்லிவிட்டார். ஏற்கனவே இந்த இந்தி டைரக்டர் நத்லால் அவர்கள் மிக சுறுசுறுப்பானவர் முன் கோபக்ககாரர் அவர் தேர்ந்து எடுத்த எந்த காரியத்தையும் விட்டு கொடுக்காதவர். இவர் நாராயணன் கம்பெனியில் இந்த முதல் படத்திற்கு டைரக்டராக அமைக்கப்பட்டார். இயக்குனருடைய முழு முயற்சியின் காரணமாக எம்.ஜி.ஆர் அவர்கள் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கிறார் (இது சுருக்கம்) வாசகர்களுக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் நாடகம், சினிமா அரசியல் இவைகள் எல்லாம் இவைகளிலிருந்து இவர் எப்படி எப்படி வந்தார் என்பதை நான் சொல்லவேண்டியது இல்லை. அடுத்து அவருடைய குடும்ப வாழ்க்கை வரலாறுக்குச் செல்வோம். வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு | எம்.ஜி.ஆர். முத்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது தன் அண்ணனுக்கு திருமணம் நடந்து விட்டு, ஒரு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இவர்கள் குடும்பத்தில் ஏகபோக சந்தோஷமாக இருந்து வருகிறார். இந்தநிலையில் தன்னை பெற்று எடுத்த தாய் தன் மூத்த மகனுக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்துவிட்டது. இனி இளைய மகனுக்கும் கல்யாணம் செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தோடு தன் மூத்த மகன் சக்கரபாணியிடமும் தன் மருமகளிடமும் தன் எண்ணத்தை சொல்கிறார். அவர்களும் ஆமாம் கல்யாணம் செய்து விடவேண்டியது தான் என்று மூவரும் கலந்து பேசி தன் மூத்த மருமகள் வழியாக எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்ய கடிதம் மூலமாக பெண் தேடும் படலம் தொடர்கிறது. விரைவிலேயே, சத்தியதாய் அவர்களின் பாரம்பரிய வழியிலேயே பெண் கிடைத்துவிட்டது. இந்த விஷயத்தை படப்பிடிப்பு முடிந்து இரவில் வீட்டிற்கு வந்த உடனே கல்யாண விஷயத்தை மகனிடம் தாய் சொல்கிறார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் அம்மா தயவு செய்து எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம். இதை பற்றி என் கிட்ட எதுவும் பேசாதீர்கள் என்று சொல்லிவிடுகிறார். அவர் சொல்லி விட்டு படுக்கைக்கு சென்று விட்டார். அடுத்து மகன் இப்படி சொல்லிவிட்டானே என்று மூவரும் யோசிக்கிறார்கள். சக்கரபாணியும், மருமகளும் அம்மாவிடம் இன்னும் ஒருவாரம் சென்ற பிறகு பேசுவோம். அடுத்து ஒரு வாரத்தில் படப்பிடிப்பு சீக்கிரமாக முடித்து வீட்டுக்கு வந்து விடுகிறார். வீட்டிற்குள் விளையாடி கொண்டு இருந்த தன் அண்ணன் குழந்தையை எம்.ஜி.ஆர் அவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து கொஞ்சி கொண்டு இருந்தார். அப்பொழுது தனது அண்ணி தன் கொழந்தனாருக்கு குடிக்க பால் கொண்டு வருகிறார். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு காபி, டீ எப்போதும் பிடிக்காது அண்ணி கொண்டு வந்த பாலை தான் குடித்து விட்டு அண்ணன் குழந்தையை கொஞ்சி விளையாடுகிறார்.
அது சமயம் இவர் மிக சந்தோசமாக நல்ல மூடுடன் இருக்கிறார் இந்த நேரத்தை பார்த்த சத்தியதாய் தன் மகன் எம்.ஜி.ஆரிடம் கல்யாணத்தைப் பற்றி மீண்டும் தொடர்கிறார். உடனே எம்.ஜி.ஆர் அம்மா நான் அன்னைக்கே சொல்லி விட்டேன் எனக்கு கல்யாணம் ஒன்றும்வேண்டாம் இன்னும் கொஞ்சகாலம் போகட்டும் நீங்கள் அவசரப்படாதீர்கள் என்று சொல்கிறார். இந்த சமயம் வெளியே சென்று இருந்த தன் அண்ணன் சக்கரபாணி வீட்டிற்குள் நுழைகிறார். வீட்டிற்குள் நுழையும்போது தன் தம்பி வீட்டிற்குள் இருப்பதை அறிந்து என்னடா ராமசந்திரா இன்றைக்கு இவ்வளவு சீக்கிரமாக வந்துட்டே என்று கேட்ட உடனே ஆமாங்க அண்ணே இன்னிக்கு பட பிடிப்பு சீக்கிரமாக முடிந்துவிட்டது. நாளைக்கு கூட எனக்கு படபிடிப்பு இல்லை நாளை மறுநாள் தான் படபிடிப்பு உள்ளது என்று சொல்லி முடிக்கிறார். அப்படியா நான் பாத்ரூம் சென்று வருகிறேன் என்று சொல்லி செல்கிறார். அவர் பாத்ரூம்சென்று வருவதற்குள் அவருடைய மனைவி காப்பியோடு வந்து நிற்கிறார். காப்பியை கையில் வாங்கி கொண்டு தம்பிக்கு பால் கொடுத்தியா என்று கேட்கும்போது எம்.ஜி.ஆர். இப்போதான் சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க அவரும் பக்கத்தில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு அருகில் அமர்ந்து கொண்டு இருந்த அம்மாவை பார்த்து என்னம்மா ஓர் மாதிரியாக இருக்கே, உனக்கு அடிக்கடி தலைவலி வருமே அது வந்திருச்சோ என்று அம்மாவை பார்த்து கேட்கிறார். அம்மா சிரித்துக்கொண்டே இல்லையடா மகனே மனம் தான் சரியில்லை எனக்கு என்று சொல்கிறார். உடனே, அம்மா! தம்பி ஏதாவது கோபித்துக் கொண்டானா நீ அவன் கிட்ட ஏதாவது ஏடாகோடமாக பேசினியா என்று கேட்கிறார். இதை சொல்லி முடிவதற்குள் எம்.ஜி.ஆர் பேச தொடங்கினார். அண்ணனிடம், அண்ணே அம்மா எனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக பேசுறாங்க, இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம், ஏன் வேண்டாம் என்று சொல்கிறேன். அதையும் சொல்கிறேன் நாமோ எவ்வளவோ கஷ்டத்திற்கு இடையிலே கொஞ்ச கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இதற்கு உங்களுக்கு ஒரு கல்பாணம் பண்ணி ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. இவ்வளவு நாளாக மூன்றுபேராக இருந்த நாம் 5 பேர்களாகி விட்டோ ம் இதற்கு எல்லாம் வருமானம் முக்கியம். நாம் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்த பிறகு என் கல்யாணத்தைப் பற்றி பேசுவோம். அதுவரைக்கும் இனி மேல் என்கிட்ட கல்யாணத்தைப் பற்றி பேசாதீங்க. சரிடா ராமச்சந்திரா நீ சொல்வது சரிதான். இதையெல்லாம் கேட்டு கொண்டு இருந்த சத்தியதாய்க்கு சற்று மனம் வருத்தம் அதிகமாகிவிட்டது.
உடனே சத்தியதாய் சமையல் அறைக்கு சென்று விட்டார். காலங்கள் ஒருமாதம் கடந்து விட்டது. எம்.ஜி.ஆர் அவர்கள் சில படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகிஉள்ளது. முன்பை விட எம்.ஜி.ஆர் அவர்கள் பிஸியாகி விட்டார். சக்கரபாணி அவர்களும் அதற்காக வீட்டிலேயே சும்மா உட்கார்ந்து இருக்காமல் படகம்பெனிகளுக்கு சென்று சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். மீண்டும் ஒரு நாள் எம்.ஜி.ஆர் அவர்களின் திருமணம் பேச்சு தொடங்குகிறது. அன்று திருமணம் பேச்சு மிக சூடுபிடிக்கிறது. அம்மாவும், அண்ணனும் கல்யாணம் முடித்தே ஆகவேண்டும் என்று திரும்ப, திரும்ப சொல்கிறார்கள். இதை எல்லாத்தையும் கேட்டு கொண்டு இருந்த எம்.ஜி.ஆர் சற்று எதிர்பார்க்காமல் சமையல் கட்டுக்குள் இருந்த அண்ணியை சத்தம் போட்டு அழைக்கிறார். தன் கொழுந்தன் ஏதோ சத்தம் போட்டு கூப்பிடுகிறாரே என்ன தம்பி என்று கேட்கிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணி நம் குடும்ப விஷயம் எல்லாம் நல்லா தெரியும் உங்களுக்கு நான் ஆரம்பத்திலிருந்து எனக்கு இப்போ திருமணம் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன். இவர்கள் மீண்டும் மீண்டும் நீ இப்போ திருமணம் செய்து கொள் என்று சொல்கிறார்களே இது என்ன நியாயம் என் மனதில் எவ்வளவோ லட்சியங்கள் இருக்கிறது.
அவைகளைவிட எனக்கு இப்போது திருமணம் தான் முக்கியமா என்று அண்ணியைப் பார்த்து கேட்கிறார். உடனே அண்ணி தம்பி நீங்க பேசுவது எல்லாமே நியாயம் தான். நீங்கள் நினைக்கிறபடி நீங்க ஒரு லட்சாதிபதியா ஆகுவிங்க அதற்கு உங்களுடைய திருமணம் தடையாக இருக்காது. அம்மாவுக்கு உங்களுக்கு திருமணம் செய்து பார்ப்பதில் மிக ஆசையோடு இருக்காங்க. உங்களுக்கும் திருமண வயது வந்து விட்டது. இப்போ நாங்க உங்களுடைய சம்மதம் பெறாமலேயே பெண் வீட்டாரிடம் பெண்பார்க்க வருகிறோம் என்று சொல்லி விட்டோ ம். அதனாலே ஒரு இரண்டு நாளைக்கு நீ படப்பிடிப்பிலிருந்து அம்மாவுடன் ஊருக்கு சென்று அந்த பெண் உங்களுக்கு பிடிக்குதா இல்லையா என்பதை என்ற விவரத்தை சொல்லிவிடுங்கள். இது நீங்கள் உங்கள் தாய்க்கு செய்யும் கடமையாகும் என்று சொல்லிவிட்டார்கள். இதை கேட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் சற்று நேரம் எதுவும் பேசாமல் யோசித்து கொண்டு இருந்த எம்ஜிஆர் அவர்கள் கோபமாக சமையல் அறையில் இருந்த தன் தாயை அம்மா என்று சத்தம் போட்டு அழைக்கிறார். உடனே தாய் என்னடா மகனே என்று அருகில் வந்து நிற்கிறார். தாயிடம் உடனே எம்.ஜி.ஆர் உங்களுடைய மணம் நோகாமல் நடந்து கொள்வது தான் எனக்கு முக்கியம். முதலில் உங்கள் எண்ணங்கள் பிறகு தான் என் எண்ணங்கள். அந்த பெண் எனக்கு தகுந்த மாதிரி இருக்குமா என்பதை எல்லாம் அறிந்து கொண்டு வாருங்கள். பெண் வீட்டார் மாப்பிள்ளை எப்படி இருப்பார் என்று கேட்டால், இங்கிருந்து நீங்கள் போகும் போது என் போட்டோ வை ஒன்றை எடுத்து பெண் வீட்டாரிடம் காண்பிங்கள் என்று பட பட என்று சொல்லி பேச்சை முடித்து கொண்டார்.
பிறகு இரண்டு மூன்று நாட்களில் சென்னையிலிருந்து கேரளாவுக்கு தானும் தன் மருமகளும் குழந்தையும் தூக்கிகொண்டு போகிறார்கள். அங்கு தன் மருமகள் வீட்டில் தங்கி கொண்டு பெண் வீட்டார்க்கு தகவல் கொடுத்துவிட்டு தானும் தன் மருமகளும் மருமகள் வீட்டை சேர்ந்தவர்கள் பெண் பார்க்க செல்கிறார்கள். அங்கு என்ன என்ன விஷயம் பேச வேண்டுமோ பேசி விட்டு பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளையோட போட்டோ வை காண்பித்து பேசுகிறார்கள். பெண் வீட்டாருக்கும் சம்மதம் தெரிவிக்கிறார்கள். எப்போது திருமணம் வைத்து கொள்ளலாம் என்று பெண் வீட்டு சம்மதத்தோடு தெரிவிக்கிறார்கள். பெண் வீட்டிலிருந்து புறப்படும் சமயத்தில் சக்கரபாணி அவர்களின் மனைவி பெண் வீட்டாரிடம் பெண் போட்டோ இருந்தால் ஒன்று கொடுங்கள் நாங்கள் மாப்பிள்ளைக்கு காண்பிக்க வேண்டும் என்று கேட்கிறார். அவர்களிடத்தில் போட்டோ இல்லை உங்களுக்கு பெண் பிடித்து இருக்கும் போது அப்படியே மாப்பிள்ளையிடம் சொல்லுங்கள். எல்லாத்தையும் முடித்துவிட்டு சென்னைக்கு வருகிறார்கள். பெண் வீட்டில் நடந்த சம்பவத்தைபற்றியும் பெண்ணின் அழகை பற்றியும் சக்கரபாணி அவர்களிடம் சொல்லுகிறார்கள். சரியம்மா தம்பி வரட்டும் பேசுவோம். இரவு படபிடிப்பு முடிந்து கொண்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்கு நுழைந்த உடனே அம்மாவை பார்த்தவுடன் என்ன அம்மா பெண்ணை எல்லாம் பார்த்து விட்டு வந்துட்டீங்களா என்று சிரித்த முகத்தோடு கேட்கிறார். மகனே நீ குளித்து விட்டு வந்து சாப்பிடு என்று அம்மா சொல்லுகிறார்கள். எம்.ஜி.ஆரும் குளித்து விட்டு வந்து சாப்பிட்டு விட்டு அண்ணனுடன் அமர்ந்து கொண்டு அண்ணியையும் உட்கார சொல்லி ஊருக்கு சென்று வந்த விஷயத்தை சுறுக்கமாக சொல்ல சொல்கிறார். உடனே அம்மா தன் மருமகளைப் பார்த்து சைகை காண்பிக்கிறார். நீ சொல்லு, என்று உடனே எம்.ஜி.ஆரிடம் தம்பி எங்களுக்கு பெண் பிடித்து இருக்கிறது. பெண் உனக்கு மிக பொருத்தமானவள், பெண் வீட்டாரும் மிகவும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதை நான் உங்களுக்கு மிக சுருக்கமாக சொல்கிறேன். இதற்கு மேல் உங்கள் உடைய முடிவுதான் என்று சொன்னதும் இதை கேட்ட எம்.ஜி.ஆர் சற்று மெளனமாக இருந்து விட்டு அம்மாவையும், அண்ணியையும் பார்த்துவிட்டு இருக்கிற பண வசதிப்படி எப்போ எங்கே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு பத்திரிகை அடித்து எல்லோரையும் அழைத்து பிரபலியம் செய்யாமல் மிக சுருக்கமாக செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு அம்மாவையும், அண்ணியையும் பார்த்து அம்மா பெண் உங்களுக்கு பிடித்து போச்சி, ரொம்ப அழகாக இருக்கிறாள் என்று இருவரும் வர்ணித்து விட்டீர்கள். பெண் வீட்டாருக்கும் என்னை பிடித்து இருக்கா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது. உடனே அம்மா மகனே நாங்கள் அங்கு போகும் போது உன்னுடைய சினிமா போட்டோ க்களை எடுத்து போயிருந்தோம்.
அதை அவர்களிடம் காண்பித்தோம். அந்த போட்டோ வை வாங்கி பார்த்த அவர்கள் நீ பாரு, நான் பாரு என்று ஆளுளுக்கு அந்த போட்டோ வைப் பார்த்து கொண்டே உன்னை வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுவரைக்கும் அந்த போட்டோ வை அந்த பெண்ணிடம் காண்பிக்கவில்லை. இதை எல்லாம் கவனித்து கொண்டிருந்த அண்ணி உடனே அந்த இரண்டு போட்டோ வை வாங்கி பெண்ணை அழைத்து இந்த இரு போட்டோ வையும் பெண் கையில் கொடுத்து உனக்கு பிடித்து இருக்குதா என்று தனியாக அந்த பக்கம் போய் பார்த்து உனக்கு பிடித்து இருக்கிறதா என்று சொல், போட்டோ வை பார்த்த பிறகு வெட்கப்பட்டு கொண்டு போட்டோ வை தன் கையில் வைத்து கொண்டு சிரித்த முகத்தோடு எனக்கு பிடித்து இருக்கு என்று சிரித்த முகத்தோடு சொன்னார். இந்த விபரத்தை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த எம்.ஜி.ஆர் அண்ணி இந்த போட்டோ வை சினிமா மேக்கப் போட்டோ அதை பார்த்து நல்லா இருக்கேன்று சொன்னா அது எப்படி நான் மேக்கப் இல்லாமல் நான் அசிங்கமா இருந்தால் அவுங்க என்ன செய்வாங்க என்று முடித்து உடனே அம்மா மகனே அசிங்கம் என்ற வார்த்தைக்கே நம் இடத்தில் இடம் இல்லை. நான் பெற்ற பிள்ளைகள் அத்தனைபேரும் தங்கம், வைரம், மாணிக்கம், முத்து என்று வர்ணிக்க கூடிய வகையில் எல்லோரும் அழகா இருப்பீங்க. இதிலே நான் பெற்ற கடைசி செல்ல மகன் நீ எவ்வளவு அழகு எவ்வளவு திறமையை பற்றி மற்றவர்களுக்கு தான் தெரியும் உனக்கு தெரியாது.
இப்படி எல்லாம் விதண்டா வாதம் பேசாதே எல்லாம் நல்ல படியாக நடக்கும் கவலைபடாதே என்று அம்மா சொல்லி ஒரு வழியாக தன் இளைய மகனிடம் சொல்லி முடிக்கிறார். இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அண்ணன் மனதிற்குள்ளேயே இவன் ஒரு முரண்டு பிடித்தவன். கல்யாணம் எப்படியும் நல்ல விதமாக முடியனும் என்று மனதிற்குள் ஆண்டவனை நினைத்து கொள்கிறார். அடுத்த நாள் காலையில் எழுந்து "ஜோதிமலர்" என்ற படபிடிப்புக்காக (1941)ல் ஸ்டுடியோவுக்கு சென்று விட்டார். இதே போல் எம்.ஜி.சியும் வேறு ஒருபடத்தில் வாய்ப்பு கிடைத்து விட்டது. அதைப்பற்றி தெரிந்து கொள்ள கம்பெனிக்கு சென்றுவிட்டார். இதற்கிடையில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிக நெருக்கமான மூத்த நடிகருமான பி.யு. சின்னப்பா, எம்.கே. ராதா இவர்கள் இருவரையும் சந்தித்து இவருடைய கல்யாண விஷயத்தை அவர்களிடம் சுருக்கமாக சொல்கிறார்.
உடனே அவர்கள் சந்தோச முகத்தோடு சிரித்து கொண்டு சரி கல்யாணம் எங்கே வைக்க போகிறீர்கள் முதலில் தான் உன் அண்ணன் சக்கரபாணி கல்யாணத்தை எங்களுக்கு எல்லாம் சொல்லாமல் நடத்தி விட்டீர்கள். அப்படி இல்லாமல் உன் கல்யாணத்திற்கு நாங்கள் வரவேண்டும். நாங்கள் வருவோம் நீ உன் கல்யாணத்தை சொல்லு. அல்லது கல்யாண பத்திரிகை கொடு. ஒரு நிமிஷம் மவுணமாக இருந்து விட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் பேச தொடங்குகிறார். அண்ணே நான் ஒரு நியாயத்தை இப்போ பேச போகிறனே. நீங்கள் இருவரும் சரியான பதிலை சொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு பேச தொடங்குகிறார்.
அண்ணே, என்னுடைய பாட்டனார் பாரம்பரியம் கோவை மாவட்டத்தை அடுத்து உள்ள காங்கேயம் என்ற ஊருக்கு பக்கத்தில் ஒருகிராமம். அது ஒரு சிறிய ஜமீன் போல் மன்றாடியார் என்று சொல்லுவார்கள். எங்கள் பாட்டனார் வம்சத்தை கொங்குவெள்ளாலர் என்று சொல்வார்கள். நான் ஈழதமிழ் நாட்டில் இலங்கை கண்டியிலே எனது தாய் தந்தையாருக்கு நான் 5வது குழந்தையாக பிறந்தவன் என் உடன்பிறந்த சிலரும், என் தந்தையும் இறந்த பிறகு, என் தாய் என்னையும், என் அண்ணன் எம்.ஜி.சியையும் அவர்களையும் அழைத்து கொண்டு செந்தமிழ்நாடு என்று இப்போ சொல்லப்படும் கவிஞர்களும், புலவர்களும் நிறைந்த சோழ மன்னர் நாட்டிலேயே தஞ்சையை சேர்ந்த கும்பகோணத்திற்கு என் தாய் எங்களை அழைத்து கொண்டு வந்து பள்ளிக்கூடத்தில் சேர்த்து 4ஆம் வகுப்பு வரை படிக்க வைத்து பிறகு நாடககம்பெனியில் எங்களை சேர்த்து விட்டு நாடகத்திலே நானும் எனது அண்ணனும் எப்படி வளர்ந்தோம் என்பது உங்களுக்குத் தெரியும், பிறகு நாங்கள் சினிமாவில் எப்படி இருக்கிறோம் என்பதும் தெரியும்.
அண்ணே நான் தமிழ் ஈழத்திலேயே பிறந்து தமிழ் இலக்கியமான இந்த நாட்டில் படித்து வளர்ந்து கலை தொழிலிலே முன்னேற்றம் அடைந்து வரும் நான் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என் உடல் முழுவதும் தமிழ். இப்படி பட்ட எனக்கு இந்த தமிழ் நாட்டிலேயே இருந்து ஒரு பெண்ணை தேர்வு செய்து கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாதா, என் வாழ்நாளிலே நான் தெரிந்தோ தெரியாமலோ சமீப காலத்தில் நான் ஒரு தவறை விளையாட்டு பிள்ளை போல் செய்து கொண்டு வந்தேன். அதாவது நாங்கள் குடி இருந்த வீட்டில் எதிர்வீட்டில் ஒரு 17,18 வயது மதிக்கத்தக்க நல்ல ஒரு அழகான பெண் என்னை போல் அவளும் சுறுசுறுப்பாக இருப்பாள். அந்த பெண் நான் வீட்டிற்கு வந்த பிறகு என்னை பார்க்க தவற மாட்டாள். நான் தற்செயலாக இந்த பெண் என்னை பார்த்து சிரிப்பாள், நான் காலையில் வெளியே செல்லும் போது மெளனமாக சிரிப்பாள். இது நாள் அடைவில் என் மனதில் அவளுடைய அன்பார்ந்த சிரிப்பு முகமும், அவளுடைய உருவமும் என் மனதில் புகுவதை உணர்ந்தேன். பிறகு நான் எப்போதும் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன். உடற்பயிற்சி, யோகா என்னுடைய உள்ள பழைய ஆர்மோனிய பெட்டியை வைத்து குரல் சரியாக வரவேண்டும் என்பதற்காக நான் பாடுவேன். இதில் சில நேரங்களில் சத்தமாக பாட ஆரம்பித்தேன். இந்த சத்தத்தை கேட்ட எதிர்வீட்டு பெண் நான் எழுந்து விட்டேன். தயாராகிவிட்டேன் என்று அறிந்து கொண்டு அவுங்க வீட்டிலே குடி தண்ணீர் வசதி இல்லாததால் எங்கள் வீட்டில் குழாய் தண்ணீர் பிடித்து செல்ல இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டு குழாய் அடிக்கு வந்து விடுவாள். இதை அறிந்த நான் பல்பொடியை கையில் கொட்டி கொண்டு குழாய் அடிக்கு வந்து விடுவேன். இப்படி ஒரு சில மாதங்கள் இருவரும் கண் நோக்கினோம் என்று சொல்லுக்கு இணங்க நாங்கள் இருவரும் பேசினதே இல்லை. ஆனால் என் மனதிலே அந்த பெண் மீது கொஞ்சம் ஆசை ஏற்பட்டது. இவைகளை அறிந்த என் தாயும், அண்ணியும் சரி மகனுக்கு கல்யாண வயது ஆகிவிட்டது. எதிர் வீட்டு பெண்ணை இவன் காதலிக்கிறான் என்ற எண்ணத்தோடு கேளராவுக்கு சென்று என் தாயும், அண்ணியும் என்னை கட்டாயப்படுத்தி என் சம்மதத்தோடு கேரளாவுக்கு சென்று ஒரு பெண்ணை பார்த்து கல்யாணத்திற்கு பேசி முடித்துவிட்டு வந்துவிட்டார்கள். எப்போதுமே அம்மா சொல்லை தட்டாதவன் நான். நான் தமிழ்பெண்ணை தான் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று மிக மிக ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால் என் ஆசை நிறாசையாகிவிட்டது. இந்த செய்திகளை கேட்டு கொண்டு இருந்த பி.யு. சின்னப்பாவும் எம்.கே. ராதாவும் சற்று நேரம் பதில் ஏதும் சொல்லாமல் மெளனமாக இருந்தார்கள். பிறகு பி.யு. சின்னப்பா சரி நீ தாய் சொல்லை தட்டாதவன் நீ உன் அண்ணன் எம்.ஜி.சியிடம் சொல்லி இருக்கலாமே ஏன் சொல்லவில்லை. சரி உன்மனதில் உள்ள எண்ணங்களை உன் உடன் பிறவா சகோதரனாக நினைத்து கொண்டு இந்த விஷயத்தை சொல்லிவிட்டாய். ஆனாலும் இது உன்னுடைய வாழ்க்கை பிரச்சனை நாங்கள் உனக்கு ஆறுதல்தான் சொல்லமுடியுமே தவிர, மாற்று யோசனைகள் எதுவும் சொல்லமுடியாது. ராமச்சந்திரா என்று எம்.கே. ராதா ஆரம்பிக்கிறார். நீ நாடகத்தில் நடிக்கிற காலத்திலிருந்தே நீ ஒரு பெரிய திறமைசாலியாக, அறிவு உடையவனாகவும், அன்பு, பாசம், நேசம் கொண்டவனாகவும் நீ இருக்கிறாய் என்பதை நான் நன்கு அறிவேன். தாய்க்கு மிஞ்சிய கோயிலும் இல்லை. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை அறிந்தே நீ இனிமேல் தாய் சொல்லை தட்டாமல் நடந்து கொள்வது தான் நல்லது என்று நினைக்கிறேன். உனக்கு எப்போதுமே உதவி செய்ய நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோம். கவலைபடாதே என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
இந்த ஆறுதலைக் கேட்ட எம்.ஜி.ஆருக்கு மனதிலேயே உள்ள குழப்பங்கள் ஓரளவுக்கு தெளிவாகிவிட்டது. அடுத்த மாதம் கல்யாணம் நடைபெற இருக்கிறது. கேரளாவில் ஏதோ ஒரு கோயிலில் சென்னையில் இருந்து இவர்கள் ஐந்து பேர்கள் தாய், அண்ணன், அண்ணி, எம்.ஜி.ஆர் பிறகு குடும்ப நண்பர் நாராயணன் அவர்களும் எம்.ஜி.ஆருக்குக் கல்யாணம் செய்து வைக்க கேரளா போகிறார்கள். கல்யாணம் முடிந்து சென்னைக்கு பெண் வீட்டாருடன் எல்லோரும் வருகிறார்கள். இதை அறிந்த தெருவில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் எல்லோரும் வந்து பெண் மாப்பிள்ளை எல்லோருக்கும் வரவேற்பு கொடுத்து வாழ்த்தினார்கள்.
இதற்கு இடையில் சத்திய தாய் அவர்கள் மிக சாமார்த்தியமாய், புத்திசாலித்தனமாக மிக வேகமாக இந்த ஏரியாவே விட்டு காலி செய்து விட்டு யானைகவுனியிலிருந்து தென் சென்னை அடையாருக்கு ஒரு சுமாரான வீட்டை பார்த்து மூத்த மகன் எம்.ஜி.சி. மூலமாக வைத்து இருந்தார்தள். உடனே நல்ல நாள் பார்த்து அடையாறு வீட்டுக்கு குடியோய்விட்டார்கள். சுமார் 10 ஆண்டு காலமாக வால்டாக்ஸ் பகுதியிலேயே இவர்கள் குடி இருந்த தெருவில் இருந்த அத்தனை பேர்களையும் விட்டு பிரிய மனம் இல்லாமல் சென்றது ஒரு பெரிய விஷயமாகும். (இது ஒரு சுருக்கம்)
இப்படி ஒரு சுருக்கத்திற்கு ஒரு அர்த்தம் தருகிறேன். முடிவில் இது நாள் வரையிலும் சென்னை வால்டாக்ஸ் ரோட்டிலிருந்து ஸ்டூடியோவுக்குபோய் வந்து கொண்டு இருந்த எம்.ஜி.ஆருக்கும், எம்.ஜி.சிக்கும் இப்போ அடையாரிலிருந்து ஒரு புது இடம் அடையாரிலிருந்து ஸ்டுயோவுக்கு போய் வர இவர்கள் இருவருக்கும் இது ஒரு புதிய வழியாகவும், புரியாத ஒரு விஷயமாக தோன்றியது. எது எப்படி இருந்தாலும் தினம் குடும்ப செலவுக்கு வீட்டு வாடகைக்கும் அண்ணன் குழந்தைகள் மற்றும் இதர செலவுகளுக்கும் மாத வருமானத்தை பற்றி எம்.ஜி.ஆரும், எம்.ஜி.சியும் யோசித்தார்கள். இதுவரையிலும் தொழிலுக்கான எடுத்த முயற்சியை விட இனிமேல் சற்று கடுமையாக உழைத்து ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு மன உறுதியோடு தன் மனைவியையும், தாயையும் உடன்பிறந்த அண்ணன் மனைவி மக்களையும் எந்த சிரமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று தன் உழைப்பில் எம்.ஜி.ஆர். அவர்கள் தீவிர முயற்சி எடுத்து கொண்டார்கள். தன் உழைப்பு அண்ணனுடைய உழைப்பு இதை தவிர தன் குடும்பத்திற்கு வேறு யாரும் உதவி செய்கின்ற நிலைமையில் இல்லை. பொதுவாக திருமணம் ஆன பிறகு பெண் வீட்டார் வழியிலிருந்து உதவிகள் கிடைக்க வேண்டும் அல்லது பையன் வீட்டார் வழியிலிருந்து பெண் வீட்டாருக்கு உதவி கிடைக்க வேண்டும். இது இரண்டும் சரியில்லை என்றால் அந்த குடும்பம் எப்படி இருக்கும்? ஆனால் இவர்கள் இரு வீட்டிலும் ஏழைகள். ஒருவருக்கு ஒருவர் பொருள் உதவி பணம் உதவி செய்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள்.
இதை எல்லாம் யோசிக்காமல் தன் மகன்களுக்கு தன்னுடைய சொந்த ஊரிலேயே பெண் பார்த்து கல்யாணம் செய்து விட்டார். இதை எல்லாம் சிந்தித்த எம்.ஜி.ஆர். அவர்கள் மனம் எப்படி இருந்து இருக்கும். இதோடு இன்னொரு விஷயமும் சொல்கிறேன் எம்.ஜி.ஆர் அவர்களுடைய சிந்தனையில் கல்யாணம் செய்த உடனேயே சென்னை வால்டாக்ஸ் ரோட்டிலிருந்து வடசென்னை பகுதியிலிருந்து தென் சென்னை பகுதிக்கு ஏன் வீடு மாற்ற வேண்டும் என்ன இதற்கு காரணம் என்று யோசிக்கிறார். இதற்கு ஒரு முடிவு கிடைக்காமல் தன் அண்ணியிடம் ஒரு நாள் தனியாக இந்த விஷயத்தை சொல்லி கேட்கிறார். அம்மா எதுவுமே காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள். இதற்கு என்ன காரணம் தயவு செய்து சொல்லுங்கள் என்று கேட்ட உடனேயே தன் கொழந்தனாருடைய பரிதாப நிலையை கேட்டவுடன் அந்த அம்மாவால் தன் மனதிற்குள் மறைத்து வைத்து உள்ள ஒரு முக்கியமான விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் தம்பி நான் இப்போ சொல்லுகிறேன். இந்த விஷயம் யாருக்கும் நான் சொன்னேன் என்று தெரிய கூடாது. நான் உங்களிடம் சொல்லுகின்ற விஷயம் யாருக்குமே தெரிய கூடாது. உங்கள் மனதிற்குள் இருக்கவேண்டும். தம்பி நம்ம வால்டாக்ஸ் ரோட்டில் இருக்கும்போது நம்ம வீட்டிற்கு எதிர் வீட்டிலிருந்து அந்த பெண்ணின் பெயரை சொல்லி நம் வீட்டு வாசலுக்கு தினமும் காலையில் தண்ணீர் பிடிக்க வருவாள். அந்த பெண்ணை நீங்கள் காதல் செய்வதாக நினைத்து அத்தை அவர்கள் உங்களுக்கு உடனே கல்யாணம் செய்யவேண்டும் சொந்த ஊரிலேயே, சொந்தத்திலேயே கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்று நினைத்து உங்களுக்கு கல்யாணத்தை செய்தார்கள். அதனால் எடுத்த முடிவுகள் தான் இது எல்லாம். தம்பி அம்மா மேலே வைத்து இருக்கிற அன்பும், பாசமும் தான் இதற்கு காரணம். எனவே, நடந்தது எல்லாவற்றையும் மறந்து நம் குடும்பம் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டிய வளர்ச்சியும் முழுபொறுப்பும் உங்களிடம் தான் இருக்கிறது. தொடர்ந்து உங்கள் முயற்சியை கைவிடாமல் மனம் தளராமல், எந்த குறைபாடுகளும் இல்லாமல் உங்கள் மனைவியிடம் நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் எல்லாம் எவ்வளவு பேர்கள் இருந்தாலும், பேசினாலும் தன் கணவர் வந்து தன்னிடம் பேசினால்தான் அவளுக்கு ஒருமன நிம்மதி கிடைக்கும் தங்கை பார்க்கவியை மனம் நோகாமல் பார்த்து கொள்ளுங்கள் இதைகேட்ட எம்.ஜி.ஆர் உடனே வெளியே சென்று நடமாடுவது போல் இவைகளை எல்லாம் யோசித்தார். | More Articles | |
வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு | எம்.ஜி.ஆர். முத்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு குழந்தைக்கு தந்தை ஆனார் யோசித்து இனிமேல் அவர் எப்படி இந்த குடும்பத்தை நடத்தி செல்லவேண்டும் என்று அடுத்த நாளில் இருந்த எந்த விதமான குடும்ப சிந்தனையும் இல்லாமல் ஒரு புதுமனிதன் போல் வெளியே தன் தொழிலுக்காக செல்கிறார். காலையில் எழுந்து எப்போதும் போல் காலை 5 மணிக்கு எழுந்து தன் காலை கடன்களை முடித்து கொண்டு வெளியில் செல்லும் போது தன் மனைவியை அவர்களுடைய அறையில் செல்லமாக மனைவியின் கன்னத்தை கிள்ளிவிட்டு அடுத்து ஒரு பொன் சிரிப்போடு சிரித்து விடைபெற்று அடுத்து அம்மாவுடைய ஆசிரிவாதத்தோடு வெளியே செல்லும் பழக்கத்தை வைத்து கொண்டார். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு காலம் ஆகிவிட்டது ஒருவருடம் ஆகிவிட்டதா என்று யோசித்து காலங்கள் இவ்வளவு வேகமாக போகிறதே அம்மா என்று நினைத்து கொண்டு இருக்கும்போது இன்று மகனே உன் மனைவியை அழைத்து கொண்டு எங்கேயோவது கோயிலுக்கு சென்று விட்டு வாருங்கள். உடனே மகன் எம்.ஜி.ஆர் எனக்கு எப்போதுமே கோயில், குளம் சினிமா கடைவீதி கடற்கறை அங்கு இங்கு சென்று போய் பழக்கம் உண்டா, அதனாலே நீயே அழைத்துபோய் கோயில், குளம் என்று சிரித்து கொண்டு சொல்கிறார். எந்த படத்தில் எந்த வேஷத்தில் கிடைத்தாலும் நடிப்போம் என்ற முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது ஒரு நாள் தன் தாய் எம்.ஜி.ஆர் சூட்டிங் முடித்து வீட்டிற்கு வந்த பிறகு சந்தர்ப்பம் பார்த்து மகனே என்று அழைத்து உனக்கு நான் ஒரு சந்தோஷமான செய்தியை சொல்ல போகிறேன். அப்படியா என்னங்கம்மா சொல்லுங்கம்மா என்கிறார் எம்.ஜி.ஆர் மகனே நீ ஒரு குழந்தைக்கு தகப்பனராக ஆகிவிட்டாய் என்று தாய் மிக மன மகிழ்ச்சியோடு சொல்கிறார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் முகத்தில் எந்த விதமான ஒரு சந்தோஷமும் இல்லை. ஆனாலும் அதை அம்மாவிடம் காட்டி கொள்ளாமல் அம்மா ரொம்ப சந்தோஷம் என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார். அண்ணனுக்கு இரண்டு குழந்தைகள் ஒரு பெண், ஒரு ஆண் இந்த நிலையில் இவ்வளவு சீக்கிரம் நமக்கும் குழந்தையா என்று நினைத்து வேதனைப்பட்டார். என்ன செய்வது, எல்லாம் கடவுள் செயல். உழைப்பில் கவனமாகவும், உறுதியாகவும் இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மீண்டும் ஒரு கடுமையான சோதனை ஏற்பட்டது.
வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு | எம்.ஜி.ஆர். முத்து முதல் மனைவி மறைவு கர்ப்பமாக இருந்த தன் மனைவியை 7வது மாதத்திலேயே ஊருக்கு தாய் வீட்டுக்கு கடிதம் போட்டு தங்கள் மகள் இப்போது 7 மாதமாக இருக்கிறாள். நீங்கள் வந்து முறை பிரகாரமாக அழைத்து செல்லுங்கள் என்று சொன்னவுடன் தன் மாமியார் வீட்டார் முறைபிரகாரம் செய்ய வேண்டிய முறைகளை செய்து தன் ஊருக்கு தன் மகளை அழைத்து சென்றார்கள். பிறகு ஒரு மாதம் கழித்து மாமனார் வீட்டிலிருந்து சத்திய தாய்க்கு ஒரு கடிதம் வந்தது. உங்களது மருமகள் பார்க்கவி உடல் நலம் சரியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறாள். தன் கணவரை பார்க்கவேண்டும் கடிதம் போட்டு என் கணவரை உடனடியாக வரசொல்லுங்க என்று சொல்கிறார். எனவே உடனடியா தாங்கள் உங்கள் மகனை அழைத்து கொண்டு வரவேண்டும். இந்த கடிதத்தை பார்த்த சத்திய தாய் தன் மூத்த மருமகளுடன் ஆலோசனை நடத்தி தன் மகன்கள் படபிடிப்புக்கு சென்றவர்கள் வீட்டிற்கு வந்தவுடனே ஊருக்கு புறப்படலாம் என்று முடிவுடன் இருந்தார்கள். அன்று இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்த தன் மகன்களிடம் இந்த கடிதத்தை காண்பித்து மகனை என்னுடன் உடனே புறப்படு என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லுகிறார். அவர் படித்து பார்த்து விட்டு அம்மா நாங்கள் தினமும் இரண்டு, மூன்று நாட்களாக தொடர்ந்து சூட்டிங் போய் கொண்டு இருக்கிறோம். உடனே நீ ஊருக்கு போகவேண்டும் புறப்படு என்றால் எப்படி தொடர்ந்து ஒரே படத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு போக வேண்டும். நீ உடனே புறப்படு என்றால் எப்படி இந்த படப்பிடிப்பு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முடிந்து விடும் பிறகு நான் வருகிறேன் என்று உடனே சொல்லி அண்ணே உடனே அம்மாவை ரயில் ஏற்றி அனுப்பிவிட்டு வாங்க என்ற சொன்ன உடனே சத்தியதாய் ஏதும் மறுப்பு சொல்ல முடியாமல் புறப்பட்டு விட்டார். கடிதத்தை படித்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இது ஒரு பெரிய வேதனையாக இருந்தது.
இருந்தாலும் வாழ்க்கையில்தான் எடுத்த லட்சியத்தை மனதில் மிகவும் உறுதியுடன் வைத்து கொண்டார். இங்கு இருந்து பாலக்காடு சென்ற தன் தாய் பாலக்காட்டிலிருந்து 20 மைல் உள்ள மருதூர் என்ற ஒரு சிறிய ஊர் அங்கு செல்லவேண்டும். இங்கிருந்து இரவு 9 மணிக்கு ரயிலில் புறப்பட்டவர், அடுத்த நாள்மதியம் சம்பந்தி வீட்டிற்கு போய்சேருகிறார். அந்த நேரம் தன் மருமகளுக்கு இன்னும் மிக மோசமான நிலையில் வைத்தியர்கள் வைத்தியம் செய்து பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த சத்தியதாயை கண்டவுடன் உங்கள் மகன் வரவில்லையா என்ற ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள். உடனே சத்தியதாய் மகன் நாளைக்கு புறப்படுவார் என்று சொல்லிவிட்டு தன் மருமகளை பார்த்து என்ன செய்கிறது உனக்கு என்று ஆவலோடு மருமகள் கன்னத்தை தொட்டு பார்த்து கேட்கிறார். உடனே மருமகள் அறையும், குறையுமாக அந்த பக்கம், இந்த பக்கம் பார்த்து விட்டு ஏக்கத்துடன் தன் கணவர் வரவில்லையா என்று மாமியாரை மீண்டும் பார்த்து கேட்கிறார். உடனே அவர் நாளைக்கு வருவான் என்று ஆறுதல் சொல்கிறார். அதை கேட்டவுடன் மருமகள் தங்கமணியின் முகத்தில் ஆறுதல் இல்லை. பார்கவி என்ற தன் மருமகளுக்கு தங்கமணி என்ற பெயர் எப்படி வந்தது. சத்திய தாய்க்கு பிறந்த குழந்தைகளில் மூத்த மகளின் பெயர் தங்கமணி, அந்த குழந்தை மிகவும் அழகாக இருப்பார். அந்த இளைய மருமகளின் ஜாடை இருந்ததால் தன் மகளின் ஞாபகமாக தங்கமணி என்று வீட்டில் எல்லோரும் அழைக்க ஆரம்பித்தார்கள். இப்போ தங்கமணிக்கு திடீர் என்று பிரசவ வேதனை ஏற்பட்டது. மூன்று நாட்களாக காய்ச்சலில் படுத்து இருந்த தங்கமணிக்கு திடீர் என்று பிரசவ வலி வந்தது. உடனே வைத்தியரை அழைத்து பார்க்கும்போது சற்று நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று சொல்லி வைத்தியத்தை பார்க்கிறார்கள். இதை பார்த்து கொண்டு இருந்த சத்திய தாய்க்கு மிகவும் கவலை அதிகமாகிவிட்டது. இருந்தாலும் சத்தியதாயின் மன தைரியத்தை விடாமல் நடப்பது நடக்கட்டும் என்று எல்லாம் அந்த மகாகாளி கிருபை என்று நினைத்து கொண்டு 5 பிள்ளைகளை பெற்ற இந்த தாய் தன் மருமகளுடைய பிரசவ வேதனையால் துடித்து கொண்டு இருக்கும் தன் இளைய மருமகளின் நிலைமை என்ன ஆகும் என்பதை கூர்மையாக கவனிக்கிறார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து வைத்தியருடைய விடா முயற்சியால், குழந்தையை பிறக்க செய்கிறார்கள். ஆனால் குழந்தை உயிருடன் இல்லை. எப்படியோ குழந்தை வயிற்றுக்குள்ளே இருந்து வெளியே வந்தது போதும் என்ற நிலை இருந்தது. எல்லோருக்கும் குழந்தை ஆண் குழந்தை என்று தெரிந்து கொண்டார்கள். அடுத்து தங்கமணியுடைய நிலை எப்படி இருக்கிறது என்று கவனிக்கும் போது முன்பை இருந்ததை விட மிக மோசமாக இருப்பதை வைத்தியர்கள் அறிந்தார்கள். தங்கமணிக்கு மூளை காய்ச்சல் அதிகமாகிவிட்டது. வைத்தியர்களும் தங்கமணி உடைய தாய், தந்தையர்களும், சம்பந்தி அவர்களும் பக்கத்தில் உள்ள கொல்லம் கோடு என்ற ஊரில் மருத்துவமனை இருக்கிறது. 10 மைல் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போக ஏற்பாடு செய்தார்கள்.
இது சத்திய தாயின் தூண்டுதலின் பெயரில் அப்படி இருந்தும் தங்கமணி நாடி துடிப்பு மிக மோசமாக இருப்பதை வைத்தியர் அறிந்தார். இதற்கிடையில் தங்கமணியை அந்தகாலத்தில் கார், டாக்சி இந்த ஊரில் இல்லை. ஆஸ்பத்திரிக்கு மாட்டு வண்டியின் மூலமாக கொண்டு போக ஏற்பாடுகளும் ஆகிவிட்டது. வைத்தியர் சத்திய தாய் அவர்களை தனியாக அழைத்து, இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம் என்று சொல்கிறார். இதற்கிடையில் தன் மகன்களுக்கு இந்த செய்தியை எப்படியாவது மிக மோசமாக இருக்கிறாள். உடனடியாக புறப்பட்டு வா, என் தந்தி மூலமாக தெரியபடுத்த வேண்டும் என்று வேண்டிய ஏற்பாடுகளை உடனடியாக செய்தார். தந்தி கொடுக்கவேண்டும் என்றால் பாலகாட்டிற்குத் தான் செல்லவேண்டும். சென்னைக்கு தந்தி கொடுக்க சென்றவர் திரும்பி வருவதற்குள் எம்.ஜி.ஆர். அவர்களுடைய மனைவி பார்கவி என்ற தங்கமணி இறந்துவிட்டார். அடுத்த நாள் சென்னையில் தந்தியை பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள் எம்.ஜி.சியுடன் உடனே புறப்படுகிறார்கள். புறப்பட்டு தங்கமணியுடைய ஊருக்கு வருகிறார்கள். மூன்றாவது நாள் தன் மனைவி தங்கமணி வீட்டிற்கு அண்ணனும் தம்பியும் வருகிறார்கள். தங்கமணி இறந்து போன இரண்டாவது நாள் வருகிறார்கள், தங்கமணி வீடு மிக அமைதியாக இருக்கிறது. எம்.ஜி.ஆரும், எம்.ஜி.சியும் பார்த்தவுடன் அங்கு இருந்த அனைவரும் தன் தாயும் சேர்ந்து தன் மகன் எம்.ஜி.ஆரை கட்டி பிடித்து ஓ.... என்று கதறி அழுகிறாள். இதை அறிந்த எம்.ஜி.ஆரும் என் தங்ககுட்டிக்கு என்னவாயிற்று எங்கே என் தங்ககுட்டி என்று உடனே வீட்டிற்குள் செல்கிறார். தங்ககுட்டி இறந்து விட்டாள். நீங்கள் எல்லோரும் சேர்ந்து அவளை கொன்றுவிட்டீர்கள். ஓ! என்று கத்துகிறார். இதை பார்த்த அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் தங்கமணிக்கு வீட்டிக்கு வந்து ஆறுதல் சொன்னார்கள். தங்கமணி எப்படி இறந்தார் என்ற விளக்கத்தையும் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்டு அறிந்த எம்.ஜி.ஆர் மெளனம் அடைந்து வாய் திறந்து பேச முடியாத அளவிற்கு துக்கம் கொண்ட எம்.ஜி.ஆர். யாரிடமும் பேசாமல் மெளனமாக அமர்ந்து விடுகிறார்.
சிறிது நேரம் கழித்து தன் மகன் கண்ணீரும், கவலையுமாக அமர்ந்து இருப்பதை பார்த்து தன் மகனிடம் வந்து மகனே, நீ, அழுகாதே என்று ஆறுதல் சொல்கிறார். இதை கேட்ட மகன் தாயை பார்த்து எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். அதை கேட்காமல் உன் இஷ்டத்திற்கு எனக்கு கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்து ஒரு வருடத்தில் அந்த அன்பு மனைவியை இழந்து என்னை இப்படி ஒரு விதவையாகிவிட்டாயே என்று தாயிடம் உங்களுடைய சமாதானம் தேவையில்லை என்று சொல்கிறார். இந்த வார்த்தைகளை கேட்ட தாய் வாய் அடைத்து போய் விட்டார். இதை பார்த்த எம்.ஜி.சி. அவர்கள் இப்போது தாயிடம் எதுவும் பேச கூடாது என்று மெளனமாக இருந்து கொண்டார். கொஞ்ச நேரத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் தன் அண்ணனை அழைத்து அண்ணே அம்மாகிட்ட செலவுக்கு பணத்தை கொடுத்து எல்லா விஷயத்தையும் முடித்துவிட்டு சென்னைக்கு வர சொல்லுங்கள் நாம இப்போ புறப்படுவோம். தன் மகளை பறிகொடுத்த மாமனாரும் மாமியாரம் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆரை பார்த்து என்னய்யா வந்தவுடன் புறப்படுகிறீங்க? உடனே எம்.ஜி.ஆர் நான் என் தங்ககுட்டியை கல்யாணம் செய்து கொள்ளும் போது இந்த ஊருக்கு வந்தவன் அதற்கு பிறகு எனது தங்ககுட்டியை இறந்து போன பிறகு வந்து இந்த வீட்டில் இருக்க எனக்கு மனம் இல்லை என்று சொல்லிவிட்டு வாங்க அண்ணே போகலாம் என்று புறப்படுகிறார்கள். சென்னைக்கு வந்த சேரும் வரை எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்கவில்லை. அடுத்த நாள் சென்னைக்கு வந்த பிறகு, வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டிலேயே படுத்துவிட்டார். இதற்கிடையில் எம்.ஜி.சியுடைய மனைவி தன் கணவருடன் தங்கமணியின் வீட்டில் நடந்த விஷயங்களை கேட்டு அறிக்கிறார்கள். எம்.ஜி.சி. தன் தம்பி உடைய வாழ்க்கை நிலையை நினைத்து வேதனை பட்டாலும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற யோசனையில் தானும் வீட்டுக்குள் இருக்காமல் தம்பிக்கு அடுத்து எந்த கம்பெனியில் என்ன சூட்டிங் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு தம்பியின் நிலைமைகளை சொல்கிறார். தம்பி இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தான் சூட்டிங் வர முடியும் என்பதை தெரியபடுத்துகிறார். இதற்கிடையில் அண்ணி அவர்கள் எம்.ஜி.ஆரை பார்த்து தம்பி நடந்தது நடந்துவிட்டது நீங்கள் கவலைபட்டு கொண்டு வீட்டிற்குள் இருப்பதால் இறந்து போன உங்களுடைய தங்ககுட்டி திரும்ப வரவா போகிறாள், மூன்று நாள் எங்களிடம் யாரிடமும் பேசாமல் எதுவும் சாப்பிடாமல் இப்படி படுத்து கிடப்பது உங்களுடைய உடம்பு என்னவாகும். நீங்கள் இப்படி படுத்து கிடப்பது, மணியும் ராமும் ஏன் சித்தப்பா சாப்பிடாமல் படுத்து கிடக்கிறார்கள் என்று கேட்கிறார்கள்.
நீங்கள் வீட்டிற்குள் நுழைந்த உடனே அவர்கள் இருவரையும் அழைத்து செல்லமாக கொஞ்சுவீர்களே. அந்த சின்ன சிறு குழந்தைகள் உங்களை நினைத்து உங்களிடம் வருவதற்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள். தயவு செய்து எழுந்து குளித்து வந்து சாப்பிடுங்க, எந்த விஷயத்தையும் எப்படிபட்டதாக இருந்தாலும் கவலைபடாமல் உங்களுடைய முயற்சியே வீண்போகாமல் நடந்து கொள்ள கூடிய நீங்கள் இப்படி படுத்து கொண்டு இருக்கலாமா, உங்களுடைய வெற்றி பாதையை இடையிலேயே விட்டு விடலாமா என்று சொல்லிவிட்டு அவர் அந்த அறையை விட்டு போய்விடுகிறார். இவைகளையெல்லாம் நினைத்து பார்த்த எம்.ஜி.ஆர். எழுந்து அவருடைய பணிகளை தொடங்க முயற்சி செய்கிறார்.
ஆனாலும், அவர் அடையாரில் அவர் தங்கி இருக்கும் வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று ஒரு உத்திராட்சை கொட்டை வாங்கி கழுத்தில் கட்டி கொண்டு நெற்றியில் விபூதிபட்டை அடித்து கொண்டு, கதர்சட்டை கதர்ஜிப்பா அணிந்து கொண்டு நேராக அவர் நடித்து வரும் பட கம்பெனிகளுக்கு சென்றார். அங்கு எம்.ஜி.ஆரை மிக ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். ஏற்கனவே எம்.ஜி.சி அவர்கள் சொன்ன தகவலை மனதில் நினைத்து கொண்டு வாங்க எம்.ஜி.ஆர் உங்க அண்ணன் எம்.ஜி.சி அவர்கள் ஏற்கனவே எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார். நடப்பது எல்லாம் நம்ம கையிலா இருக்குது எல்லாம் அவன் செயல் கவலை படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னார்கள். இதை கேட்ட எம்.ஜி.ஆர் சற்று சிரித்தமுகத்தோடு அவர்களை பார்த்து கடவுளே நான் ஏற்கனவே இந்த முடிவுக்கு வந்து விட்டேன். என் கடன் பணி செய்து கிடப்பதே, நான் கழுத்தில் உத்திராட்சை கொட்டையும், நெற்றியில் விபூதி பட்டையும் போட்டு இருப்பதை பார்த்து என்னை ஒரு சாமியார் என்று நினைத்து விடாதீர்கள். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உள்ள விரதம் என்று சொல்லி விட்டு மற்ற கம்பெனிகளுக்கும் இவர் செல்லும் இடம் எல்லாம் இதே கேள்வி இதே பதில் எந்த எந்த கம்பெனியில் சூட்டிங் இருக்குது என்று அறிந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி வரும் போது தன்னுடைய அண்ணன் குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொண்டு வருகிறார். வீட்டிற்குள் நுழையும்போது மணி, ராமு என்று அண்ணன் குழந்தைகளை அழைக்கிறார். சித்தப்பாவின் குரலை கேட்ட அந்த குழந்தைகள் ஓடோ டி வந்த கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் இட்டு கொஞ்சுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருந்த அண்ணனும், அண்ணியும் கண்ணீர் விடுகிறார்கள். காரணம் எம்.ஜி.ஆர் கழுத்தில் இருக்கும் உத்திராட்ச கொட்டையும் நெற்றியில் உள்ள விபூதி பட்டையும் அடுத்து எம்.ஜி.ஆர் அவர்கள் எப்போதும் போல் படப்பிடிப்புக்கு செல்ல ஆரம்பித்தார். தன் மனைவி ஊருக்கு செல்லும்போது குழந்தையை பெற்று நீ குழந்தையுடன் நீ வரும் போது நான் ஒரு கதாநாயகனாக சினிமாவில் நடித்து கொண்டு இருப்பேன், என்று சொன்னதை நினைத்து பார்க்கிறார். அதன்படி தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற முயற்சியை இன்னம் தீவிர படுத்துகிறார். இந்த முயற்சியில் தான் பிரபல பட தயாரிப்பாளர் ஆன நாராயணன் கம்பெனியாரால் A.S.A. சாமி அவர்கள் டைரக்ஷனில் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய கதை வசனத்தில் உருவாக இருக்கும் "ராஜகுமாரி" என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிற்று. ஒரு வருடத்தில் இந்த படபிடிப்பு முடிந்து வெளியே வந்தது. அதே நேரத்தில் ஜெமினி ஸ்டூடியோவினால் டைரக்ஷன் ஜெமினி வாசன் அவர்களால் பல லட்சக்கணக்கான ரூபாயால் தயாரிக்கப்பட்ட படம் பெயர் "சந்திரலேகா" இதில் நடித்தவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிக வேண்டிய நண்பராகிய எம்.கே. ராதா, டி.ஆர். ராஜகுமாரி, ரஞ்சன், என்.எஸ்.கே, டி.ஏ. மதுரம் அவர்கள் நடித்த படம் ஓ ஓ என்று ஓடிக்கொண்டு இருக்கும் போது எம்.ஜி.ஆர் நடித்து "ராஜகுமாரி"யும் ஓடிக்கொண்டு இருந்தது. இதற்கு முன்னாடி எம்.கே. தியாகராஜபாகவதர், டி.ஆர். ராஜகுமாரி நடித்த படம் "அரிதாஸ்" என்ற இந்த படம் ஒரே தியேட்டரில் மதுரையில் ஒருவருடத்திற்குமேல் ஓடியது. சென்னையில் இதே போல் பி.யு. சின்னப்பா, பி.கண்ணாம்பாள், இருவரும் நடித்த கண்ணகி என்ற சரித்திர படம் இதைவிட பிரமாதமான பெண்களுக்கு உரிய கதை அம்ஸம் கொண்ட படம். இந்த மூன்று படத்துக்கும் இடையிலே புதுமுகமாக நடித்த எம்.ஜி.ஆர். அவர்களின் முதல்படம் நான்காவது இடத்தில் ஓடி கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டு இருக்கும் போது ஒரு நாள் இவர்களையெல்லாம் சந்தித்து பேசி கொண்டு வரும் நேரத்தில் என்.எஸ்.கே. அவர்களை சந்திக்கிறார்.
அவரிடம் தன் நிலைமைகளை தெரிவிக்கிறார் என்.எஸ்.கே. அவர்கள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தம்பி நீ எதற்கும் கவலைபடாதே அவசரபடாதே உன் முயற்சியிலிருந்து தவறாதே காலங்கள் கடந்தாலும் உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரும் காலங்கள் இருக்கிறது. உன்னுடைய அழகுக்கும், திறமைக்கும் வாய்ப்புகள் உன்னை தேடிவரும். முதலில் இந்த வேஷத்தைக் கலைத்துவிடு, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் என்னை வந்து பார்த்து பேசி செல்லு என்று வாழ்த்தி அனுப்புகிறார்.
அங்கிருந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் கேரளாவுக்கு சென்று இருந்த தன் தாய் வீட்டிற்குள் இருப்பதை கண்டார். தன் மகன் வீட்டிற்குள் நுழைந்த உடன் தாய் ஓடோ டி வந்து தன் மகனை பார்த்து, மகனே என்று சொல்லி கட்டி பிடித்து அழுகிறார். மகனே என்னடா வேஷம் என்று சொல்லி கொண்டு அழுகிறாள். மகன் ஒன்றும் சொல்லாமல் தன் ரூமுக்குள் சென்று விட்டார். அடுத்தநாள் காலையில் என்.எஸ்.கே. அவர்கள் சொன்ன அறிவுரைப்படி எப்போதும் போல் ஜிப்பாவும், வேஷ்டியும் அணிந்து செல்கிறார்.
இதை பார்த்த அம்மாவும், அண்ணனும் அண்ணியும் மூவரும் மன சந்தோஷப்படுகிறார்கள். முதல்நாள் இரவு எம்.ஜி.ஆர் கட்டிபிடித்து இது என்ன கோலம் என்று தாய் கட்டி அழுததால்தான் எம்.ஜி.ஆர் உடுத்தியிருந்த உடைகளை கழற்றிவிட்டார் என்று மூவரும் நினைத்து கொள்கிறார்கள். வெளியே சென்ற பிறகு எம்.ஜி.ஆர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்தபடி படங்களில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் சில படங்களும் ஒப்பந்தம் ஆகிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய முன்னேற்றப் பாதையில் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறார். உலகில் முதல் யுத்தம் 1938, நடந்து கொண்டு இருந்த சமயத்தில் இந்தியாவில் இந்தியாவுக்கும் ஆங்கிலேயர்க்கும் கடும்போர் நடக்கிறது. சென்னையில் ஆங்கிலேயர்கள் குண்டு வீசப்படும் அபாயகட்டத்தில் இருந்தது. இந்த சூழ்நிலையில் கூட எம்.ஜி.ஆர் எதற்கும் அஞ்சாமல் படப்பிடிப்புக்கு போனார். சென்னையைதாக்க வந்த எதிரிகளின் விமானங்களை இந்திய படை விரட்டி அடிக்கின்றது. இந்த மாதிரி ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் சென்னையை போன்ற பெரிய நகரங்களில் உள்ள 18 வயது நிரம்பிய வாலிபர்களை கட்டாயமாக ராணுவத்திற்கு அழைத்தார்கள். இதை அறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமாவில் நடிக்க ஸ்டூடியோக்களுக்கும், கம்பெனிகளுக்கும் அலைவதை விட பேசாமல் ராணுவத்தில் சேர்ந்து ஒரு வீரனாகி விடலாம் என்று நினைத்தது உண்டு. பிறகு ஒரு நாள் அம்மாவிடமும், அண்ணனிடமும் இதை பற்றி பேசும் போது அம்மாவும், அண்ணனும் இந்த யோசனை ஏற்றுகொள்ளவில்லை. இதற்கு பதிலாக எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் தம்பி நீ குதிரை, ஒட்டகம், கத்தி சண்டை, கம்பு சண்டை, குத்து சண்டை இவைகளை எல்லாம் நீ சரளமாக செய்கிற மாதிரி வரனும், இதோடு கொஞ்சம் ஆங்கிலமும் எழுத படிக்கிற மாதிரி கத்து கொள்ளனும். நீ ஏற்கனவே பல தமிழ் புத்தகங்களை வாங்கி, தமிழ் பேப்பர்களையும் படித்து நல்ல அனுபவசாலியாகி விட்டாய். இப்போ நீ தமிழை சரளமாக எழுதுகிறாய், படிக்கிறாய், நீ எப்படியும் ஒரு பெரிய ஆளாய் ஆகனும், ஆவாய் இனிமேல் இந்த மாதிரி மிலிட்டரி ராணுவம் என்று பேசாதே என்று சொல்லுகிறார். 1942ல் தந்தி பேப்பர் விலை ஒரு அணா, இதை வாங்கி படிக்க தவறுவது இல்லை எம்.ஜி.ஆர். அவர்கள்.
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்படுகிறது. தன் தாய் சொல்லை தட்டாத இவருக்கு அந்த தாய் வழியாக இரண்டாம் கல்யாணம் ஏற்பாடு ஆகிறது. பெண்ணின் பெயர் சதானந்தவதி சுமாரான அழகு, நல்ல அன்புகுணமுள்ளவர், சத்தியதாயுடன் வழி வம்சத்தை சேர்ந்தவர், இந்த பெண் வீட்டார் எம்.ஜி.ஆருக்கு பெண் கொடுக்க முழு சம்மதத்தையும் தெரிவித்து விட்டார்கள். இந்த விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் எப்படி பேசுவது யார் பேசுவது என்ற சிக்கல் ஏற்பட்டது. சக்கரபாணி அவர்களும் அவரது மனைவியும் எம்.ஜி.ஆரிடம் பேச மறத்துவிட்டார்கள். தங்கமணி இறந்து ஒரு வருடம் ஆச்சு மகன் இன்னும் அவளையே நினைத்து கொண்டு இருக்கிறான். அவனுக்கு எப்படியும் இந்த திருமணத்தை செய்து வைக்கனும் அவனிடம் நாமே பேசிவிடலாம் என்ற எண்ணத்தோடு ஒரு நாள் இந்த விஷயத்தை பற்றி எம்.ஜி.ஆர் அவர்களிடம் தாய் பேசுகிறார். தாய் சொன்னதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த எம்.ஜி.ஆர் உடனே அம்மா இப்போது தான் நான் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இனி அடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு தேட வேண்டும். நான் எப்படியாவது ஒரு பெரிய நடிகனாக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லையே எனக்கு கல்யாணம் தான் முக்கியமா, நான் என் வாழ்க்கையில் முன்னேறுவது முக்கியமா, தயவு செய்து இனிமேல் என்னிடம் இந்த கல்யாண பேச்சை பேசாதீர்கள் என்று சற்று கோபத்தோடு பேசியதும் சத்தியதாய் வாய் அடைத்து போய் இருந்துவிட்டார். எப்படி இருந்தாலும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகன்று கொடுக்கும் இந்த விஷயத்தை சத்தியதாய் விடவில்லை கொஞ்சநாள் கழித்து மீண்டும் மீண்டும் தன் மகனுடைய மூடுபொறுத்து இந்த திருமண விஷயத்தை மீண்டும் பேசுகிறார்.
எம்.ஜி.ஆருக்கு தன் அன்பு தாயின் வேண்டுதலை உதரிதல்ல முடியவில்லை. தாயிடம் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். வேறுவழி இல்லாமல் இந்த திருமணம் பெண் வீட்டிலேயே நடந்தது இதை சினிமா வட்டாரத்திற்கு தெரியப்படுத்தவில்லை. ஆனால் தனக்கு வேண்டிய மூத்த நடிகர்களிடம் மட்டும் சொன்னார். முதல் திருமணம் போல் இந்த திருமணத்திற்கும் யாரையும் அழைக்கவில்லை. கேரளாவில் திருமணம் நடந்தது சென்னைக்கு வந்து விட்டார்கள். பிறகு எப்போதும் போல் எம்.ஜி.ஆர். அவர்கள் தினமும் தவறாமல் படப்பிடிப்புக்கு செல்வார். வருடத்திற்கு வருடம், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புதிய படங்கள் ஒப்பந்தம் ஆகியது. சிரமங்கள் இல்லாமல் குடும்பம் நடந்து கொண்டு இருந்தது. சதானந்தவதி அவர்கள் கர்ப்பம் அடைந்தார். குடும்பத்தில் மிகவும் சந்தோச நிலை ஏற்பட்டது. ஆனால் விதி விடவில்லை. சதானந்தவதிக்கும் மூன்றாவது மாதம் கர்ப்ப சிதைவு ஏற்பட்டது. இதனால் சதானந்தவதி அவர்கள் சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பிறகு உடல் நலம் குணம்பெற்று சுப வாழ்வுக்குள்ளானார். எம்.ஜி.ஆர் அவர்கள் குடும்ப பொறுப்பை தாயிடமும், அண்ணி இடமும் விட்டு விட்டு அண்ணனும், தம்பியும் முழுக்க, முழுக்க படப்பிடிப்பில் ஈடுபட்டார்கள். இவர்களுடைய கடும் உழைப்பு வருவாய்க்கு தகுந்தாற் போல் செலவுகள் இருக்கணும். இது போல் கொஞ்சம் வசதியான வீடு பார்க்கனும், இந்த விஷயத்தில் எம்.ஜி.சி. அவர்கள் ரொம்பவும் ஈடுபாடு கொண்டு இருந்தார். இதில் சென்னை ராயப்பேட்டை என்ற இடத்தில் நாடக நடிகர்கள் சில சினிமா நடிகர்களும் வசிக்கிறார்கள். இதனால் இந்த ஏரியாவில் ஒரு நல்ல வீடு பார்க்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் அவர்களிடம் சொன்னார் நல்லவர்கள் மனதிற்கு நல்லதே நடக்கும் என்றது போல ராயப்பேட்டை லாயஸ்ரோட்டில் ஒரு வீடு அமைந்தது வீடு பழையதாக இருந்தாலும் சற்று பெரிய வீடு எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் சத்தியதாய்க்கும் மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் வாடகை சற்று அதிகம் என்ன செய்வது என்ற பிரச்சனை ஏற்பட்டது. சரி நாம் மற்ற செலவுகளை எல்லாம் குறைத்து கொள்வோம் எப்படியும் இந்த வீட்டை அமைத்து விடுங்கள் என்று சத்தியதாய் சொல்லின்படி அந்த வீட்டை வாடகைக்கு அமைத்து குடியும் வந்து விட்டார்கள். இந்த வீடு ஏற்கனவே குடி இருந்த வால்டாக்ஸ்ரோடு, அடையாறு வீட்டை விட நல்ல வசதியாக இருந்ததோ இல்லையோ பெரியவர் எம்.ஜி.சி அவர்களுடைய குழந்தைகளுக்கு மிக மிக வசதியாக இருந்தது.
இந்த வீட்டின் வசதியை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் எம்.ஜி.சிக்கு ஏதோ ஒரு அளவுக்கு முன்னேறி வருகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த வீட்டிற்கு குடி வந்த பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னை விட சூட்டிங்கில் பிசியாக இருந்தார். அவர் சூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு அவரிடம் எந்த விதமான குடும்ப பிரச்சனைகளை பற்றி பேசக்கூடாது. அவரும் சாமியார்போல் இருக்காமல் தான் சினிமாவில் வாங்கும் சம்பளத்தை அப்படியே அம்மாவிடம் கொடுத்துவிடுவார். முன்பெல்லாம் மகன்கள் கொண்டு வந்து கொடுக்கின்ற பணத்தை சுருக்கு பையில் போட்டு மடியில் சொருகி வைத்து கொள்ளும் காலம் போய் இப்போ காட்ரேஜ் பிரோவில் வைத்து அந்த பீரோவின் சாவியை தான் தன் இடுப்பில் சொருகி வைத்து இருப்பதை பார்த்த மகன்கள் ஆனந்தமடைந்தார்கள். குடும்பம் ஓர் அளவிற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் சமயத்தில் 1949ல் மீண்டும் சதானந்தவதிக்கு கர்ப்பம் உண்டாகி பிறகு அது முன்போல் கருசிதையு ஏற்பட்டு உடல்நலம் சரி இல்லாமல் படுக்கையில் கிடந்து விட்டார். இதை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் தன் மனைவி சதானந்தவதிக்கு உடலில் ஏதோ ஒரு வியாதி இருக்கிறது. அது என்ன வியாதி என்பதை அறிந்து கொள்ள விரும்பினார். இதற்காக சில டாக்டர்களை எம்.ஜி.ஆர் அவர்கள் நேரில் சென்று அனுகினார் அதன்படி சதானந்தவதிக்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் எம்.ஜி.ஆரிடம் வியாதியின் விபரத்தை சொன்னார்கள். இருதய நோய் மற்றும் கர்பப்பையில் கோளாறு இப்படி பல விஷயங்களை எம்.ஜி.ஆர். அவர்களிடம் சொன்னார்கள். சதானந்தவதி அவர்கள் இனிமேல் எந்த வேலைகளையும் செய்யக்கூடாது என்று சொன்னார்கள். இந்த விஷயத்தை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய இடி விழுந்தது போல் இருந்தது. தனக்கு இந்த மாதிரி சோதனைகள் ஏற்பட்டால் எதையும் சமாளிக்கும் தைரியத்தையும் மனத்திடத்தையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு மேலும் சற்று வேகமாக சினிமா வட்டாரத்தில் வீர நடை போட ஆரம்பித்தார்.
இவர் வீர நடை நடந்தாலும் வீட்டில் தன் மனைவி, தாய், அண்ணன், அண்ணி மிகவும் சோர்ந்து விட்டார்கள். தன்னுடைய இளைய செல்லமகனுக்கு வாழ்க்கையில் இப்படி கடுமையான சோதனைகள் ஏற்படுகிறதே என்று ஆண்டவனையும் அந்த அம்மனையும் நினைத்து வேதனை பட ஆரம்பித்து விட்டார்கள். தன் மகனுடைய சம்மதம் இல்லாமல் அவனுக்கு கல்யாணம் செய்தது ஒன்றுக்கு இரண்டும் சரியாக அமையவில்லையே இதற்கு காரணம் என்னவாக இருக்கும். மகனுடைய இல்லற வாழ்க்கையை நாம் கெடுத்து விட்டோ மோ இப்படி சத்தியதாய் பலவாறு தன் மனதை குழப்பி கொண்டே இருந்தார்.
இந்த சமயத்தில் வால்டாக்ஸ் ரோட்டில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு தனியாக சென்று அந்த கோயில் பூசாரியிடம் தன்னுடைய இளைய மகனுக்கு இல்லற வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களைப் பற்றி விவரமாக சொன்னார். அந்த காளி கோயில் பூசாரி இவைகளை எல்லாம் கேட்டுவிட்டு அம்மா நீங்க அடுத்த வெள்ளிக்கிழமை வாருங்கள். விபரம் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார். அதன்படி அடுத்த வெள்ளிக்கிழமை அன்று அந்த கோயிலுக்கு சென்று பூசாரியை பார்த்து விபரம் கேட்டார். பூசாரி சொன்ன பதில் அம்மா உங்கள் இளைய மகனுக்கு 27 வயது வரை இல்லற வாழ்க்கை அதாவது திருமணம் பாக்கியம் இல்லை. | More Articles | |
| | | | |
| |
|
No comments:
Post a Comment