DEVADASS TAMIL MOVIE LYRICS ALL
கனவிதுதான் நிஜமிதுதான்
உலகினிலே என யார் சொல்லுவார்
விதி யார் வெல்லுவார்..ஓ....ஓஒ...ஓ.
கனவிதுதான் நிஜமிதுதான்.....(கனவிதுதான்)
இள வயதின் நினைவினிலே
ஏக்கமெனும் இருள் சூழ்ந்திடலாம்
ஒளி மாய்ந்திடலாம்....ஓ...ஓ......ஓ...
கனவிதுதான் நிஜமிதுதான்....
மனம் ஓரிடமும் உடல் வேறிடமும்
இரு கூறானதும் விதி வசமே
சிறு போதுடனே வாழும் நறுமணம்
மலரானதும் வெகுதூரம் செல்வதுபோல்
காதலின் தன்மை விலகி போவதும் உண்மை (கனவிது)
நிறைவேறாத ஆசை வளர்வதும் ஏனோ
நிலை பெறாததும் ஏனோ வினை தானோ
எது நேரினும் அழியாதே
இரு மனம் ஒன்றாகிய மெய்க்காதல்
எந்நாளும் காணுமே இன்பம்....
பிரிந்தால் காதலே துன்பம்......(கனவிதுதான்)
சந்தோஷம் வேணுமென்றால் பாடல் வரிகள்
சந்தோஷம் வேணுமென்றால் இங்கே
கொஞ்சம் என்னை பாரு கண்ணால்
கொஞ்சம் பாரு கண்ணால்
வண்டாட தேவன் மருவும் பூ மாங்கனி
பேசும் வனிதா மணி நேசம் பெறவே இனி
என்னை பாரு கண்ணால் கொஞ்சம் பாரு..(சந்தோசம்)
அன்பாலே நேர் தேடும் ஆனந்தமே கூடும்
பெண் போலே வந்தாடும் காட்சி
ஆணில் அனுராகமே பாட இனிதாகுமே
ஆவலாய் மேவலாம் காதல் பெறவே இனி
கொஞ்சம் பாரு கண்ணால்.....(சந்தோஷம்)
உல்லாசமாய் இந்த உயிரோவியம் வாழ்வில்
உன்னோடு எந்நாளும் வாழும் இன்ப
சல்லாபமே நம்மில் சரி லாபமே
ஸ்வாமி நீ தாமதம் செய்யலாமா இனி
என்னைப் பாரு கண்ணால்
கொஞ்சம் பாரு கண்ணால்.......(சந்தோஷம்)
எல்லாம் மாயைதானா பாடல் வரிகள்
எல்லாம் மாயைதானா பேதை
எண்ணம் யாவும் வீணா
ஏழை எந்தன் வாழ்வில் இனி
இன்பம் காண்பேனா.....(எல்லாம்)
இணை பிரியாத சினேகம் மறந்தனையோ
உன்னை ஈன்றவர் சொல்லை மீறவும் பயந்தனையோ
என் ஏழ்மையினாலே பிரேமக் கபாடம்
தானே மூடியதோ விதிதான் விளையாடியதோ (எல்லாம்)
கனவிலும் மறவா காதல் நினைவுடனே
முன் கண்டறியாத ஒருவன் துணையுடனே
மன வேதனை என்னும் தீயதனால் நான்
வெந்தே மாள்வதா இது நன்றோ தேவதாஸ் (எல்லாம்)
உறவுமில்லை பகையுமில்லை பாடல் வரிகள்
உறவுமில்லை பகையுமில்லை
ஒன்றுமே இல்லை
உள்ளதெல்லாம் நீயே அல்லால்
வேறே கதியில்லை
இனி யாரும் துணை இல்லை......(உறவும்)
எனது வாழ்வின் புனித ஜோதி
எங்கே சென்றாயோ
இதயம் குளிர சேவை செய்யும்
நினைவும் வீணானதே
என் கனவும் பாழானதே......(எனது)
முடிவில்லாத துன்பமதிலும் இன்பம் வேறேது
கெடுதி செய்வார் தனிலும் மேலாம் நண்பர் வேறேது
அடைய முடியா பொருளின் மீது
ஆசை தீராது உறவு அபிமானம் மாறாது (உறவும்)
குளம் நிறைந்தால் ஜலம் வழிந்தே வேறே வழியேகும்
குமுறி புகையும் எரிமலையும் ஓர் நாள் அமைதியாகும்
மனதில் பொங்கும் துயர வெள்ளம்
வடியும் நாளேது ஒரு முடிவு தானேது
எனது வாழ்வின் புனித ஜோதி
எங்கே சென்றாயோ
உள்ளதெல்லாம் நீயே அல்லால்
வேறே கதியில்லை
இனி யாரும் துணை இல்லை......(உறவும்)
உலகே மாயம் பாடல் வரிகள்
உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்....
அலையும் நீர் மேவும் குமிழாதல் போலே
ஆவதுப் பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே
ஆவதுப் பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே
அரச போகமும் வைபோகமும் தன்னாலே
அழியும் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்....
உறவும் ஊராரும் உற்றார் பெற்றாரும்
ஓடிடுவார் கூட வாரார் நாம் செல்லும் நேரம்
ஓடிடுவார் கூட வாரார் நாம் செல்லும் நேரம்
மறை நூல் ஓதுவதும் ஆகுமிதே சாரம்
மனதில் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்.....
தேவதாஸ் படிப்பு இதானா பாடல் வரிகள்
ஓ.......ஓ.....தேவதாஸ்.....ஓ....ஓ..பார்வதி
படிப்பு இதானா வெள்ளைக்காரன் பிள்ளைப்போலே
வேஷம் வினோதம் ஆஹா.....பிரமாதம் (ஓ...ஓ..தேவதாஸ்)
நாகரீகம் தெரிந்ததா நாட்டுப் பெண்ணுக்கு
நாணம் நீங்கி பேசும் திறமை உண்டாச்சே
இளம் மொட்டு மலராகி எழில் மணம் வீசுதே
என் கண் கூசுதே...ஓ...ஓ......பார்வதி
இருந்த நிலைமை மாறினும் இடமும் மாறினும்
இன்னும் தாங்கள் மட்டும் சின்ன பாப்பாவோ
சிறு வயதின் நினைவெல்லாம் கனவே ஆகுமோ
கண் முன் காணுமோ....ஓ...ஓ..பார்வதி....
ஏனிதுபோல் வீண் சந்தேகம்
வாழ்விதுவே ஓர் பொய்யாகும்
பொய்யும் மெய்யும் நன்றாய் அறிந்த
அய்யா மஹா வேதாந்தி
இந்நாளும் அந்நாளும் இதுவே பாடமா
எதற்கும் கோபமா ஓ...ஓ..சினுக்கு பார்வதி
ஓ...ஓ.....துடுக்கு தேவதாஸ்..
பாராமுகம் ஏனய்யா பாடல் வரிகள்
பாராமுகம் ஏனய்யா ஸ்வாமி
பாராமுகம் ஏனய்யா என் ஸ்வாமி
பாராமுகம் ஏனய்யா...
அன்பாலே உன் மேலே உயிரானேன்
ஏழையிடம் பாரா முகம் ஏனய்யா...
பாரோர் சொல்லும் என் பழி நீங்கவே
பதிலாக தடையேன் சம்மதம் தா கண்ணா இந்த
பணம் தந்த பல பேரை தினம் வேண்டினேன்
சற்குணவானென்று உனையே என் மனம் நாடினேன்
துணை நீயென்றும் உன் இணை நானென்றே
சுகம் தேடும் வாழ்வோங்கும் சுபம் காணவே இன்னும்..(பாரா)
துணிந்த பின் மனமே பாடல் வரிகள்
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே
அணையும் காற்றில் அகல் விளக்கேற்றி
மறைப்பதில் பயனுண்டோ – கையால்
மறைப்பதில் பயனுண்டோ – அதனால்
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே.....
பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னால்
நீந்துவதால் பயனேது..ஆ....ஆ....ஆ...
சீறும் புயலும் மழையும் சேர்ந்தால்
சின்னக் குடை தாங்காது.......(துணிந்த)
காதல் தந்த துயர் தீர போதை
கடலில் மூழ்கிடலானாய்.....ஆ...ஆ..ஆ..
சாவது நிஜமே நீ ஏன் வீணாய்
சஞ்சல பேய் வசம் ஆனாய்....(துணிந்த).
தேவதாஸ் (பிள்ளை) பாடல் வரிகள்
ஓ...ஓ......தேவதாஸ்....ஓ...ஓ..பார்வதி
படிப்பு இதானா வாத்தியாரு தூங்கிபோனா
ஓசைப் படாமே ஓட்டம் பிடிக்கிறே
ஓ...ஓ......தேவதாஸ்.......
கோண தென்ன மரத்திலே குருவிக் கூட்டிலே
குஞ்சு பொரிச்சிருக்கு பிடிக்கப் போறேனே
பள்ளிக்கூடம் இல்லையானால்
தினமும் இவ்வாறே மனம்போல் ஆடலாம்
ஓ.........ஓ........பார்வதி...
ரெக்கையில்லாக் குஞ்சுகள் பிடித்தால் பாபமே
பள்ளியில் படித்ததெல்லாம் வீணுக்குதானா
பயனில்லா படிப்பாலே மனம்தான்
கோழையாய் மாறும் பார்வதி......(ஓ..ஓ..பார்வதி)
நானறிவேன் உன் பிரதாபம்
ஏனறியேன் உன் முன் கோபம்
முன் கோபம் தான் என்னோடினி
ஒன்றாய் இனி சேராதே.....
ஹான்னாலும் ஹூன்னாலும்
அழுகை பிடிக்கிறே அசட்டு பெண்ணாட்டம்
வா....வா....கிறுக்கு பார்வதி..
போ......போ.....துடுக்கு தேவதாஸ்.......(ஓ..ஓ..பார்வதி)
சந்தோஷம் தரும் பாடல் வரிகள்
சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ
சல்தி போவோம் சலோ சலோ
அந்தி பொழுதே ஆகு முன்னே
அன்பை காணுவோம்........(சந்தோஷம்)
ஆசை வதனம் வாடும் – அதில்
ஆவல் ரேகை நெளிந்தோடும் – வெளி
வாசல் தன்னை நாடும் – மலர்
விழிகள் திண்டாடும் – அதை
நாமும் காணலாம்......(சந்தோஷம்)
எழிலார் சிற்பமாக – என்
எதிரில் நாணி மறைந்திடுவாள் ஆ....ஆ...ஆ
கனி மொழியாள் வாவென்றழைப்பாள்
இரு விழியால் பேசுவாள்
விரைவாகப் போவோம் நாம்...(சந்தோஷம்)
அன்பே பாவமா பாடல் வரிகள்
அன்பே பாவமா அதில் ஏதும் பேதமா
ஆவல் கொண்ட பேதை எந்தன்
காதல் பாவமா என் அன்பே பாவமா
பண்பே இல்லாத ஈன ஜன்மம் பாரினில் நானே
பணி ஏவும் சேவை செய்தும்
பயன் ஒன்றும் காணேனே
பல நாள் வீணில் இலவே காத்த
கிளி போல் ஆனேனே....(அன்பே)
என் மனதை நன்றாய் அறிந்த பின்னும்
என்னை இழிவாகவே மதித்தார்
ஏவல் செய்யும் அடிமையாய்
அவருடன் இருக்கவும் விடை மறுத்தார்
நிறைவேறிடாத காதல்
நினைவே நீங்கவுமில்லை
உயர் நேசம் கொண்ட என்மேல்
மன சந்தோஷமில்லை
நேர்மையற்ற வாழ்வில் கண்ட லாபமேதுமில்லை
இருள் மூடி கிடந்த என் வாழ்விலே
கலங்கரை விளக்கமானார்
மருள் சேரும் மதுவினின்றும் அவரை மீட்கும்
திறனற்ற பாவியானேன்
குடியாலே மோகனாங்க வடிவம் குன்றிடலானார்
கொடு நோயின் வாதையாலே உடல் நலமும் இழந்தார்
குணமும் கொண்ட பொருளும்
கல்வி அறிவும் துறந்தார் என் (அன்பே)
கனவிதுதான் நிஜமிதுதான் பாடல் வரிகள்
கனவிதுதான் நிஜமிதுதான்
உலகினிலே என யார் சொல்லுவார்
விதி யார் வெல்லுவார்..ஓ....ஓஒ...ஓ.
கனவிதுதான் நிஜமிதுதான்.....(கனவிதுதான்)
இள வயதின் நினைவினிலே
ஏக்கமெனும் இருள் சூழ்ந்திடலாம்
ஒளி மாய்ந்திடலாம்....ஓ...ஓ......ஓ...
கனவிதுதான் நிஜமிதுதான்....
மனம் ஓரிடமும் உடல் வேறிடமும்
இரு கூறானதும் விதி வசமே
சிறு போதுடனே வாழும் நறுமணம்
மலரானதும் வெகுதூரம் செல்வதுபோல்
காதலின் தன்மை விலகி போவதும் உண்மை (கனவிது)
நிறைவேறாத ஆசை வளர்வதும் ஏனோ
நிலை பெறாததும் ஏனோ வினை தானோ
எது நேரினும் அழியாதே
இரு மனம் ஒன்றாகிய மெய்க்காதல்
எந்நாளும் காணுமே இன்பம்....
பிரிந்தால் காதலே துன்பம்......(கனவிதுதான்)
No comments:
Post a Comment