Friday 6 August 2021

 



வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார்

இந்த கால கட்டத்தில் சத்தியபாமா அவர்களின் குடும்ப நண்பர் (கேரளா) திரு. நாராயணன் என்பவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் முக்கியஸ்தராக பணிபுரிந்து வருகிறார். தற்செயலாக சத்தியபாமா அவர்கள் வீட்டிற்கு வருகிறார். அது சமயம் சத்தியபாமா அவர்கள் நாராயணனிடம் தன்னுடைய பையன்களை பற்றி விபரமாக சொல்லுகிறார். எல்லா விபரத்தையும் கேட்ட நாராயணன் இவ்வளவு கஷ்டத்தில் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாது. அதனாலே பையன்கள் இருவரும் நல்லா அழகாக இருக்கின்றார்கள். இவர்களை நாடக கம்பெனியில் நான் வேலைக்கு சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி செல்கின்றார். ஒரு வாரம் கழித்து பையன்களை கம்பெனியில் சேர்க்க அழைத்து செல்ல வருகிறார். அது சமயம் சத்தியபாமா அவர்களிடம் கம்பெனியின் விதிமுறைகளை விளக்கமாக எடுத்து செல்லுகிறார். கம்பெனியின் விதிமுறை யார் எந்த வேலைக்கு சேர்ந்தாலும் கம்பெனியிலே அவர்களுக்கு சாப்பாடு, துணிமணிக்ள, தங்குவதற்கு இடம் கொடுப்பார்கள். சம்பளம் உடனே போடமாட்டார்கள். பையன்களுடைய திறமையை அறிந்து அவர்கள் நடப்புக்கு உள்ளவர்களா, அல்லது எடுபடி வேலைக்கு தகுதி உள்ளவர்களா என்பதை அறிந்து கம்பெனியால் சம்பளம் கொடுக்க முடிவுக்கு வருவார்கள். எனவே நீங்கள் எதற்கும் தயங்காமல் பையன்களை உடனே என்னுடன் அனுப்புங்கள், இப்போது அவர்கள் நல்லா சாப்பிட்டு உடல் வளர்ச்சி அடைய கூடியவர்கள் அவர்களுக்கு இப்போது முக்கியம் உணவு தான் எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நாராயணன் பையன்கள் இருவரையும் அழைத்து இந்த விவரத்தை சொல்லுகிறார். இதை கேட்ட பையன்கள் இருவரும் அம்மாவுடைய சம்மதத்தை எதிர்பார்க்கிறார்கள்.

உடனே நாராயணன் சத்தியபாமா அவர்களை அழைத்து அம்மா உங்கள் பையன்களை அழைத்து உங்க சம்மதத்தை சொல்லுங்கள் என்கிறார். இதை கேட்ட சத்தியபாமா அவர்கள் பையன்களை அழைத்து மகன்களே நீங்கள் வேலைக்கு போவதாக சொன்னீர்கள் இப்போது உங்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு கிடைத்து இருக்கிறது. உங்களோட அபிப்ராயம் என்ன மகன்களே என்று கேட்கின்றார்கள். அம்மா நாங்கள் வேலைக்கு செல்ல விரும்புகின்றோம். நாராயணன் மாமா சொன்ன விவரங்களை நாங்கள் நன்றாக கேட்டு கொண்டோ ம். ஆனால் நாங்கள் உங்களை தனியாக விட்டு விட்டு எப்படி போவது என்று எங்களுக்கு வருத்தமாக இருக்கின்றது. இந்த வார்த்தையை கேட்ட தாய் இரு மகன்களையும் கட்டி கொண்டு மாறி மாறி முத்தம் கொடுக்கிறார். எதுவுமே சொல்லாமல் பிள்ளைகளும் அம்மாவை கட்டி பிடித்து அழுகின்றார்கள். இதை பார்த்து கொண்டு இருந்த நாராயணன் அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்லி இருவரையும் அழைத்து செல்கின்றார். பாண்டிச்சேரியை சேர்ந்த காரைக்கால் என்ற ஊரில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரின் நாடகங்கள் நடந்து கொண்டு வருகிறது. இந்த கம்பெனியால் நடத்தும் நாடகங்களில் நடிப்பவர்கள் பெரும்பகுதி சிறுவர்கள்தான் இந்நிலையில் நாராயணன் அழைத்துச் சென்ற இந்த இரு சிறுவர்களையும் கம்பெனி முதலாளி பார்த்து விட்டு பையன்கள் நன்றாக நல்ல நிறமாக, அழகாக இருக்கின்றார்கள் இவர்களை நடிக்க வைக்கலாம் என்று சொல்லி நடிகர்களுக்கான பயிற்சி கூடத்திற்கு அனுப்புகிறார்.

வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

குழப்பத்தில் ஆழ்ந்த சத்திய தாய்

MGRஇதை கேட்ட சத்தியபாமா அவர்களுக்கு மிக குழப்பமாகி விட்டது. மகன்களுடைய வளர்ச்சி முக்கியமா, தன்னுடன் வீட்டில் வந்து தங்கி செல்வது முக்கியமா என்ற குழப்பத்தில் உள்ள போது மீண்டும் நாராயணனை சந்தித்து விபரத்தை சொல்லி இதற்கு என்ன வழி என்று கேட்கும்போது வாரத்தில் நாடகங்கள் இல்லாத நாட்களில் ஒரு நாள் அல்லது இரு நாள் என்னுடன் என் பிள்ளைகள் வந்து தங்கி செல்ல வழி வகுத்து கொடுங்கள் என்று நாராயணனிடம் அவர் மிக அன்போடு கேட்கிறார். அதன்படி நாராயணன் அவர்களும் முதலாளியை சந்தித்து இந்த விவரத்தை தெரிவிக்கிறார். இந்த விஷயத்தை கேட்ட முதலாளி இந்த இரு பையன்களும் நமக்கு முக்கியமாக நாடகத்திற்கு வேண்டும் என்ற நினைப்போடு இந்த பையன்களுக்கு ஒரு சலுகை, நாடகங்கள் இல்லா காலத்திலும் பயிற்சிகள் இல்லாத நாட்களிலும் ஒரு, இரு நாட்களுக்கு தங்கி வரலாம் என்று கம்பெனி முதலாளி சொல்கி஢றார். இதுவே பெரிய தெய்வ வாக்காகக் கொண்டு சத்தியபாமா அவர்களிடம் விவரத்தை சொல்கிறார் திரு. நாராயணன் அவர்கள், அதன்படி MGRக்கும் சக்கரபாணி அவர்களுக்கும் நாடகங்கள் இல்லாத நாட்களில் லீவு நாட்களில் அம்மாவுடன் தங்கியிருந்து கம்பெனி முதலாளி அனுமதித்தை அறிந்து இருவரும் ஆனந்தம் அடைகிறார்கள். அதன் படி அந்த நாட்களில் இருவரும் ஓரிரு நாட்களில் தங்கி இருந்து தன் அம்மா கையினால் சாப்பாடு சாப்பிடுவதை நினைத்து பூரிப்பு அடைகின்றார்கள். அதே நேரத்தில் சத்தியபாமா அவர்கள் தன் இளைய மகன் சாப்பாட்டை மிக குறைத்து சாப்பிடுவதையும் மிக மெலிந்து இருப்பதையும் கவனிக்கிறார்.

என்ன மகனே மிகவும் மெலிந்து இருக்கிறாய் சாப்பாடும் சரியாக சாப்பிடவில்லை என்று கேட்கிறார். உடனே செல்ல மகன் MGR அவர்கள் மிகதுடிப் போடு செல்லத்தோடு அம்மாவோட கண்ணத்தை வருடி அம்மா நான் மெலிந்து போனால் நான் என்ன செய்ய முடியும். நான் என்னால் முடிந்த வரைதான் சாப்பிடமுடியும் முன்போல் இப்போது எல்லாம் சாப்பிடமுடியவில்லை அம்மா. அதை கேட்ட தான் மகனை தொட்டு தழுவி மேலும் கீழுமாக பார்க்கிறார். அடுத்த நாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தன் இளைய மகனுடைய உடல் மெலிவை பற்றியும், உணவு குறைவாக உன்னுவதை பற்றியும், இதற்கு ஏதாவது வைத்தியம் உண்டா என்று கேட்கிறார். இதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதில் ஒருவர் பெரியதாக வைத்தியம் செய்ய வேண்டாம் நான் சொல்வது போல் சீரகம், கொஞ்சம் வெந்தயம், தண்ணீர், போட்டு நன்றாக சுடவைத்து அதோடு மேலும் கொஞ்சம் பச்சை தண்ணியை கலந்து ஒரு சொம்பில் குடிப்பது போல் ஊற்றி வைத்து அந்த தண்ணீரை குடிக்க சொல்லு, அதோடு வாரத்திற்கு இரண்டு நாட்கள் பாவாக்காய் சமைத்து கொடு வயிற்றுக்குள் பூச்சி இருந்தால் செத்துவிடும். அப்புறம் அவனுக்கு முடிந்த வரைக்கும் பால், பழங்கள் ஏதாவது கொடுத்து வா இதோடு சேர்த்து முடிந்தால் ஒரு கோழி முட்டை கொடு என்று ஒரு வயதான பாட்டி சொல்லுகிறார். இந்த நிலையில் கம்பெனியில் நாடகம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து நாடகத்தில் நடிப்பவர்கள் அத்தனை பேரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அடுத்து நாடகத்தில் நடிக்கிற முக்கியமானவர்கள் நடனம் பயிற்சியும், சண்டை பயிற்சியும் பாட்டு பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்காக கம்பனெ஢ தனித்தனியாக வாத்தியர்களை நியமித்து உள்ளர்கள். இப்படி இருக்கும்போது MGRக்கும் சக்கரபாணியும் அம்மாவுடன் இருந்தால் எப்படி என்று நாராயணன் அவர்கள் கேட்டு சத்தியபாமா அவர்களிடம் சொல்லி மீண்டும் ஒரு வார காலத்தில் அழைத்து சொல்கிறார். மீண்டும் தொடர்ந்து எல்லா வேலைகளும் நடந்து வருகிறது.

தொடரும்

தொடரும்

வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

உடற்பயிற்சி செய்ய கற்றுக்கொள்கிறார்

MGRஇதில் MGR அவர்கள் அண்ணனைவிட எல்லா பயிற்சிகளையும் கற்று கொள்கிறார். இப்படி இருக்கும் போது பாட்டுக்கு குரல் அமைப்பு சரியாக அமையவில்லை. சரி இப்போதைக்கு MGR அவருக்கு என்ன கற்று கொள்ள வருகின்றதோ அதை கற்று கொடுங்கள் என்று சொல்லுகிறார்கள். முதலாளி MGRக்கு உடற்பயிற்சி செய்வதும், அடுத்து சண்டை பயிற்சியையும் செய்வதிலும் மிக வேகமாக, கவனமாகவும் வாத்தியார் அவர்களிடம் பிரம்பு அடி வாங்காமல் செய்வார், நடன பயிற்சியும் சற்று குறைவுதான் ஆயினும் அதை விடாமல் செய்து கொண்டுவந்தார். எப்படியாவது நாம் சொந்த குரலில் பாட வேண்டும் என்று முயற்சி செய்து அதற்கு குரல் வலம் சரியாவரவில்லையே என்று வேதனைப்பட்டு கொண்டார்.

இந்த விஷயத்தில் அண்ணனிடம் எனக்கு பாட வரவில்லையே என்ன செய்யலாம் என்று கேட்கிறார். அதற்கு அண்ணன் சொல்கிறார் தம்பி இதை தவிர மற்றதெல்லாம் உனக்கு சரியாக வருகிறது. அவைகளை விடாமல் ஒழுங்காக கற்று கொள். அதோடு அவர் நிறுத்தாமல் இந்த மாதிரி சின்ன விஷயங்களை எல்லாம் நினைத்து வருத்தப்பட கூடாது. எனக்கு எல்லா கலைகளும் சரியாக வரவில்லை அதை பற்றி நான் என்ன கவலைபட்டு கொண்டா இருக்கின்றேன். காலைக்காலில் தொடர்ந்து வாரத்தில் இரண்டு மூன்று விதமான நாடகங்கள் நடந்து கொண்டு வரும், ஒரு நாள் நல்லதங்காள் நாடகம் அன்று முதல் முதலாக நடைபெற இருக்கிறது. அந்த நாடகத்தில் நல்லதங்காலுக்கு 7 பிள்ளை அதில் கடைசி மகனாக MGRக்கு மட்டும் தான் நடிப்பும், வசனமும் உண்டு இது தினமும் MGR அவருக்கு பயிற்சி அளித்து வந்தார்கள்.

தொடரும்

வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

7வது மகனாக நாடகத்தில்

இந்த நாடகம் இந்த தேதியில் இந்த கிழமையில் நடைபெறும் விளம்பரம் செய்யபட்டு வந்தது. அந்த காலத்தில் சினிமாவைவிட நாடகங்கள் தான் அதிகம், ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு நாடகங்கள் நடத்தி வந்தார்கள். சில ஊர்களில் சில கிராமங்களில் இம்மாதிரி நாடகங்கள் நடக்கும்போது, நாடக கொட்டைகளில் மின்சார வசதி இருக்காது, மைக் இருக்காது பெட்ரோமாஸ் லைட்களும் மண்ணென்யை லைட்களும் தான் எங்கும் இருக்கும் நாடகத்தில் நடிப்பவர்கள் வசனங்களையும் பாடல்களையும் மிக சத்தமாக பேச வேண்டும் நாடகம் நடக்கின்ற அன்று நாடகத்தை பார்க்க வந்த மக்கள் கூட்டம் மிக மிக அதிகம், நாடகம் நடந்து கொண்டு இருக்கின்றது. இதில் நல்லதங்காள் தன் குழந்தைகளை கிணற்றில் தூக்கி போட்டு கொள்ளும் காட்சி மேடைக்கு வருகிறது. ஏழு குழந்தைகளையும் மேடையில் அமைக்கப்பட்ட கிணற்று பக்கத்தில் நிற்க வைத்து விட்டு கிணற்றில் தண்ணீர் இருக்கின்றதா கிணற்றில் போட்டால் குழந்தைகள் செத்து போய்விடுமா என்று கிணற்றை நோக்கி பார்க்கிறார்.

கதையில் அமைப்பின் படி வாழ்க்கையில் தோல்வி அடைந்த நல்லதங்காள் தான் பெற்ற மனம் வெறுத்து 7 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் சாக வேண்டும் என்ற முடிவோடு கிணற்றை பார்க்கின்றார் அதன் படி தன்னுடைய குழந்தைகளை கட்டி அழுகிறார். இந்த நேரத்தில் நாடகத்தை பார்க்கின்ற பொது மக்களிடமிருந்து ஒரு சிறிய சத்தம்கூட கேட்கவில்லை. இது ஒரு முக்கியமான பெரிய அம்சமான காட்சி, மேடையின் திரையின் உள்பகுதியில் நாடகத்தில் அமைப்பாளரும் முதலாளியும் மற்ற திரைகளை ஏற்றி இறக்கும் தொழிலாளிகளும் மிக கவனத்தோடு தயாராக இருக்கிறார்கள், இப்போது நல்லதங்காள் ஒவ்வொரு குழந்தையாக கிணற்றில் தூக்கி போடுகிறார். 7வது குழந்தையாக MGR தூக்கி கிணற்றில் போட வேண்டும். தனக்கு முன் 6 குழந்தை கிணற்றில் போட்டு கொண்டு இருக்கும் காட்சியை பார்த்த MGR தன்னிடம் அந்த தாய் வரும் போது தாயின் பிடியில் அகப்படாமல் அங்கம் இங்கும் ஓட ஆரம்பித்து விட்டார் இதை அறிந்த கம்பெனி முதலாளியும் நாடக இயக்குனரும் திரைக்கு மறைவில் நின்று கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து போய் பையனை எப்படியாவதும் அழ வைக்க வேண்டும் என்ற என்னத்தோடு பையன் ஓடி திரை அருகே வரும் போது தன் கையில் இருந்த பிரம்பால் தலையில் ஓங்கி அடித்து விடுகிறார்கள். அந்த அடியில் பலி தாங்க முடியாமல் MGR அம்மா, அம்மா என்று பலத்த குரலில் கிணற்றை சுற்றி சுற்றி வரும்போது தன் தாயான நல்லதங்காள் இவனை பிடித்து விடுகிறாள். பிடித்தவுடனே அந்த பையன் அம்மா என்னை கொன்றுவிடாதீர்கள் என்னை கொன்று விடாதீர்கள் என்று பலத்த குரலில் கத்துகிறான்.

தொடரும்

வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர். முத்து

ஒரு மாதம் வைத்தியம் செய்ய வேண்டும்

MGRஇந்த நேரத்தில் இவர்கள் குடியிருக்கும் வீட்டுக்காரரும், அவரது மனைவி மக்களும் நாங்கள் இதுவரைக்கும் எம்.ஜி.ஆரை பார்க்கவில்லை என்று சொல்லி பார்க்க வருகின்றார்கள். வீட்டுமுதலாளி பெயர் ஆறுமுக நாடார் இவர் வயதானவர் அந்த ஊரிலேயே நல்லவர் என்று பெயர் உள்ளவர். இவருக்கு பல கள்ளுகடைகள் இருந்தன. சொந்தத்தில் தோப்புகளும் இருந்தன. இவர் ஒரு நாட்டு வைத்தியர். இவர் எம்.ஜி.ஆரை பார்த்து கொண்டே இருந்தவர் உடனே அவரே, அழைத்து கைபிடித்து நாடியை பார்த்தார். உடனே சத்தியதாயை பார்த்து உங்க மகன் ராமச்சந்திரனுக்கு வியாதி ஏதும் இல்லை. உஷ்ணம் அதிகமாக இருக்கிறது. அதனாலே குடல்புண், குடல் பூச்சி ஏற்பட்டு உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். இதை குணப்படுத்தி விடலாம். நீங்கள் கவலைபடாதீர்கள் இதற்கு மருந்து கொடுத்து சரி செய்யலாம் என்று சொல்லி விட்டு பிறகு சத்தியபாமா அம்மாவை தனியாக அழைத்து அம்மா நாளை முதல்வைத்தியம் ஆரம்பிக்க வேண்டும். எப்படியாவது கம்பெனி முதலாளியிடம் சொல்லி 1 மாதம் லீவு வாங்கனும், இது எல்லாம் ரெடி செய்து கொண்டு என்னிடம் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்கள். இந்த விஷயத்தை சத்தியதாய் எம்.ஜி.ஆரிடம் சொல்லுகிறார். எம்.ஜி.ஆர் அதை கேட்டு நான் நல்லாதான் இருக்கேன். என்னை எதற்காக தொந்தரவு செய்கின்றீர்கள் என்று சொல்லி வருத்தப்படுகிறார். எனக்கு 1 மாதம் லீவு எல்லாம் கிடைக்காது வேண்டாம். விட்டுறும்மா என்று சொல்லி இவர்கள் இருவரும் கம்பெனிக்கு சென்று விடுகிறார்கள்.

சத்தியபாமா அம்மா அவர்கள் கம்பெனிக்கு சென்று நாராயணனை சந்தித்து அவர்களிடம்தன் மகன் எம்.ஜி.ஆர் உடல்நிலையைப் பற்றி சொல்லுகிறார்கள். எல்லாவற்றையும் கேட்ட நாராயணன் நீங்கள் இருங்க முதலாளியே பார்த்து பேசலாம் என்று நாராயணன் சொல்லுகீறார். அதன்படி கம்பெனி முதலாளியிடம் சென்று ராமச்சந்திரன், சக்கரபாணி தாயார் வந்து இருக்கிறார். ராமச்சந்திரனின் உடல் நிலையை பற்றி தங்களிடம் பேச வேண்டும் என்று அதன்படி கம்பெனி முதலாளியிடம் சத்தியபாமா அம்மா அவர்களை அழைத்து சென்று பேச வைக்கிறார். முதலாளியை பார்த்த சத்தியபாமா அவர்கள் பயபக்தியோடு வணக்கத்துடன் தன்னுடைய இளைய மகனை பற்றி சுருக்கமாக, விவரமாக சொல்லுகின்றார். எல்லாவற்றையும் கேட்டு கம்பெனி முதலாளி சற்று யோசிக்கிறார்.

பிறகு, சத்தியபாமா அம்மாவை பார்த்து, அம்மா நீங்க சொல்கிறபடி ராமச்சந்திரன் அவனுக்க உள்ள வேகமான செயலுக்கும், விவேகமான அறிவுக்கும் அழகுக்கும் அவனுக்கு தகுந்த உடம்பு இல்லையே என்பதை இப்போது தான் நான் யோசிக்கிறேன். நீங்கள் சொல்லுகிறபடி இந்த ஒரு மாதத்தில் ராமச்சந்திரனுடைய உடல் ஆரோக்கியத்தை சரியா கொண்டு வரலாம் என்றால், உடனே ராமச்சந்திரனிடம் சொல்லி உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். அம்மா, பெற்ற தாய் நான் எப்படியும் என் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்று நினைத்து செயல்களின் நான் ஈடுபடும்போது கடவுளுடைய கிருபையும் உங்களை போன்ற பெரிய மனிதர்களுடைய ஆசிர்வாதமும், உதவியும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். உடனே கம்பெனி முதலாளி உள்ளே சென்று சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் அழைத்து வர சொல்லுகிறார். அழைத்து வரச் சொன்னதும், முதலாளி ஏன் அழைக்கின்றார் நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்து கொண்டு இருவரும் முதலாளியிடம் வருகின்றார்கள். அந்த இடத்தில் தன்னுடைய தாயை இருவரும் பார்க்கின்றார்கள். பார்த்து அம்மா எதற்கு கம்பெனிக்கு வந்து இருக்கிறார்கள்.

முதலாளியை பார்த்து கொண்டு அந்த நேரத்தில் பையன்கள் தாயாரை பார்க்காமல் கை கட்டி கொண்டு நிற்கிறார்கள். முதலாளி பிறகு இருவரையும் பார்த்து கொண்டு ராமசந்திரா உனக்கு உடல் மிகவும் மெலிந்த உள்ளது. இன்னும் கொஞ்சம் உடல் பொருத்தால் நல்லா இருக்கும். உன் அழகுக்கும். உன் திறமைக்கும் உன் புத்தி கூர்மைக்கும் உடல் பொருத்து இருப்பது நல்லது. அதனாலே நீ இப்போ உங்க அம்மா கூடபோய் இருந்து 1 மாதத்திற்கு நீ உன் உடல்நிலையை சரிபார்த்துக்கொண்டு வா, அதோடு காலையில் உன் வழிபடி எப்போதும் எடுக்கும் என் உடல் பயிற்சியை செய்ய தவறிவிடாதே இடையிலே உனக்கு முடிந்தவரையில் கம்பெனிக்கு வந்து போகலாம் என்பதை கூறி தாயார் அவர்கள் வசம் அனுப்பி வைக்கிறார். இதை எல்லாம் பார்த்து கொண்ட இருந்த சக்கரபாணி அவருக்கு மனதில் தம்பி எப்படியாவது நல்ல குணமாகி வரவேண்டும் என்று ஆண்டவனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு வெளியே சென்று தாயாருடன் வழி அனுப்பி வைக்கிறார்.

போகின்ற வழியிலே தன் தாயை பார்த்து என்னம்மா இதெல்லாம் நான் ஒரு மாதம் வீட்டில் வந்து என்னுடைய உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தேவையா, நம் குடும்பம் இருக்கும் நிலவரம் என்ன வீட்டுக்குப் போய் சென்ற பிறகு மறுநாள் காலையில் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் ஆன ஆறுமுகம்நாடார் சத்தியபாமா வீட்டிற்கு வந்து ராமச்சந்திரனை அழைத்து நாடி பார்க்கின்றார். நாடி பார்த்த பிறகு எதுவும் சொல்லாமல் நாளை காலையில் 7 மணிக்கு அம்மா நான் உங்களிடம் சொன்னபடி அந்த மருந்தை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி முடிந்தவரை 1/2 லிட்டருக்கு குறையாமல் கொடுக்க வேண்டும். மருந்து கொடுத்த பிறகு கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. நடக்கலாம், ஓடலாம், பசி எடுத்தால் நல்ல உணவுகளை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

தொடரும்

More Articles

 

No comments:

Post a Comment