KANTHA SHASTI KAVASAM
KANTHA SHASTI KAVASAM கந்த சஷ்டி கவசம் எப்படி உருவாயிற்று? அவர் பெயர் பால தேவராயர், தீரா நோயுற்றிருந்தார். நோய் என்றால் கடும் நோய் எந்த மருந்துக்கும் அடங்கா கொடும் நோய், மருந்தில்லா நோய்க்கு மரணமே தீர்வென கிளம்பினார் தேவராயர். திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு சாக முடிவெடுத்து ஆலயம் சென்றவருக்கு முருக பெருமான் காட்சி தந்து ஒரு பதிகம் இயற்றுமாறும் அது அவர் நோயினை மட்டுமல்ல உலக நோயினை எல்லாம் நீக்கும் பாடலென்றும், யாரெல்லாம் படிக்கின்றார்களோ அவர்கள் நோயும் அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீருமென சொல்றார் காரணம் கோவிலில் அந்நேரம் பாலதேவராயர் மட்டுமின்றி இன்னும் ஏக்பட்ட நோயாளிகள் இருந்தனர் வயிற்றில் வலி, மார்வலி.,, என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய் தலையில் கட்டி, கன்னத்தில் புற்று, கழுத்தில் கழலை, நெஞ்சு கூடும் ஒரு எலும்புருக்கி நோய், மூலம், தொடை புண் , கணுக்கால் வலி.. என பல இது போல பேய் , பில்லி சூன்யம் என பாதிக்கபட்டு வந்திருக்கும் கூட்டம் ஒன்று, சித்தபிரம்மை பிடித்த கூட்டம் ஒன்று வறுமை கூடிய கூட்டமொன்று, இன்னும் நோய் பிணி வறுமையில் வாடி நிற்கும் பெரும் கூட்டமொன்று அங்கிருந்த மக்கள...