P.T.USHA , RUNNER OF HURDLES BORN 1964 JUNE 27
P.T.USHA , RUNNER OF HURDLES BORN 1964 JUNE 27 பி. டி. உஷா, கேரளாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற இந்திய தடகள வீராங்கனை ஆவார். 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டளர்களில் ஒருவராக விளங்கியவர். இந்த சாதனையை இதற்கு முன்பும், இதற்கு பின்பும் வேறு எந்த இந்தியரும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. சர்வதேச அரங்கில் தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த இவரை “இந்திய தடகளங்களின் அரசி” எனவும், ‘இந்தியாவின் தங்க மங்கை’ எனவும், “பய்யொலி எக்ஸ்பிரஸ்” எனவும் வர்ணிக்கப்படுகிறார். தனது அதிவேக ஓட்டத்தின் மூலம் விளையாட்டுத் துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, இந்தியத் தடகள விளையாட்டுகளில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராக கருதப்படும் பி. டி. உஷா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: ஜூன் 27, 1964 இடம்: பய்யோலி (கோழிக்கோடு மாவட்டம்), கேரளா மாநிலம், இந்தியா பணி: தடகள விளையாட்டு விராங்கனை. நாட்டுரிமை: இந்தியன் பிறப்...