Posts

Showing posts with the label BHARATHANATYAM DANCER

BALASARASWATHI ,BHARATHANATYA DANCER BORN 1918 MAY 13- 1984 FEBRUARY 9

Image
BALASARASWATHI ,BHARATHANATYA DANCER BORN 1918 MAY 13- 1984 FEBRUARY 9 பாலசரஸ்வதி born 1918 may 13 பரதநாட்டியத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பாலசரஸ்வதியின் நாட்டியம் ஒன்று. இன்னொன்று மற்றவர்களின் நாட்டியம்  தி ஜானகிராமன் பாலசரஸ்வதியின் நாட்டியம் எப்படிப்பட்டதென்பதற்க்கு இவ்வரிகளே போதுமானவை என்று தோன்றுகிறது. தி ஜானகிராமனின் எழுத்துக்களை வாசித்தவர்கள் அவர் எத்தனை சிறந்த கலா ரசிகர் என அறிவார்கள். Dougles Knitht எழுதியுள்ள ‘Balasaraswathi - Her Art and Life’ என்ற புத்தகத்தை வாசித்தேன். பாலசரஸ்வதியின் கலை வாழ்க்கையை ஒரு காலகட்டத்தின் சமூக மாற்றத்துடன் இணைத்து எழுதப்பட்டுள்ள புத்தகம் என இதை சொல்லலாம் பரதமுனி எழுதிய நாட்டிய சாஸ்திரம் நான்காம் நூற்றாண்டை சேர்ந்தது. இன்று பரதநாட்டியம் என பரவலாக அறியப்படும் நடனத்திற்க்கு சதிர் என்று பெயர். இந்த நடனமும் இசையும் காலம்காலமாக குரு சிஷ்ய மரபுப்படி பயிற்றுவிக்கப்பட்டு அன்று ஆண்ட அரசர்களால் பேணப்பட்டு வந்த கலைவடிவம். முக்கியமாக தேவதாசி சமூகத்தை சார்ந்தவர்கள் வழிவழியாக இக்கலையை சிரத்தையுடன் பயின்று தன் அடுத்த தலைமுறைக...