Showing posts with label ACTRESS 1985. Show all posts
Showing posts with label ACTRESS 1985. Show all posts

Sunday, 5 May 2019

SHERIN ,KANNADA ACTRESS BORN 1985,MAY 5




SHERIN ,KANNADA ACTRESS BORN 1985,MAY 5



ஷெரின் ஶ்ரீருங்கார் என்ற கன்னட நடிகை மே 5, 1985ல் பிறந்தவர். அலி என்ற முஸ்லீம் மற்றும் யசோதா என்பவருக்கும் பிறந்தவர். பெங்களூரில் பிறந்து, வளர்ந்து, படித்து மாடலாக இருந்து வந்தார். பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இயக்குனர் ஆசையில் அபாய நடிகை! “துள்ளுவதோ இளமை” படத்தின் நாயகி ஷெரீன் “அபாயம்” படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வர இருக்கிறார். “டேன்ஜர்”

எனும் பெயரில் தெலுங்கில் வெளிவந்த திகில் மற்றும் பேய் படம் தான் “அபாயமாக” தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. பாவம், ஏதோ தமிழில் “அபாயமே” இல்லத மாதிரி! அந்த நடிகைக்கு தான் டைரக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டு சொன்னதை இப்படி தமாஷாக “நக்கீரன்” நக்கலடித்துள்ளார்[1]. அவர் ஏற்கெனெவே பலான படத்தை எடுப்பதில் கூட வல்லவர் என்று நிரூபித்துள்ளார்.

ஷெரின் காணவில்லை என்று நிருபர்களுக்கு கவலையாம்: ஷெரின் காணாமல் போன மாயம் பற்றி நிருபர்கள் கேட்ட போது, ”நான் இத்தனை நாட்கள் ஆஸ்திரேலியாவில் “ட்ராயிங் மற்றும் ஸ்கிரீன் பிளே கோர்ஸ்” (பாருங்கள் நமது நிருபர்களுக்கு, இதனை தமிழில் எழுதமுடியவில்லை போலும்) படிக்க சென்றிருந்தேன். வந்ததும் நல்ல கதையம்சம் கொண்ட படமாக அபாயம் வந்ததால் அதில் நடித்தேன். என் படிப்பு இன்னும் முடியவில்லை. அதை முடித்துவிட்டு தமிழ் டைரக்டர் கிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா வேலைக்கு சேர்ந்து நல்ல டைரக்டரா ஆகணும்.”, என்று கூறியுள்ளார்[2]. பாவம், தமிழ் நிருபர்களுக்கு, நடிகைகள் காணாமல் போனது தான் கவலையளிக்கிறது போலும். அப்படியென்ன அவர்கள் தருகிறார்கள்? கவரா, பரிசு பொருட்களா, ஹோட்டலில் பார்ட்டியா அல்லது வெறேதையாவது விஷேசமாக கொடுக்கிறாரா?

என் காதல் நாட்கள் எல்லாம் எனது கெட்ட பக்கங்கள் அவற்றை இப்போது கிளற வேண்டாம்: ஷெரீன் சில நாட்களுக்கு முன்பு நிருபர்களை சந்தித்தார். அப்போது, “உங்களது காதல் என்னாயிற்று? ஒரு பாய் ஃபிரண்டுடன் சுற்றிக்கொண்டு இருப்பதாக நியூஸ் வந்திச்சே?”, என நிருபர்கள் கேட்டதற்கு, “எனக்கு நிறைய பாய் பிரண்டுகள் இருந்தார்கள் நீங்கள் யாரை கேட்கிறீர்கள்? என கேட்டதோடு, என் காதல் நாட்கள் எல்லாம் எனது கெட்ட பக்கங்கள் அவற்றை இப்போது கிளற வேண்டாம்”, என்றும் கூறியுள்ளார். பாவம், அப்படி கிளரத்தான் அவர்கள் வந்தார்களோ? நித்தி என்ற போது ஜொல்லு விட்டுக் கொண்டு, படுக்கையறையிலேயே “புளூ பிளிம்” எடுத்தார்களே, இதையெல்லாம் எப்படி விட்டு வைத்தார்கள்?

ஒரு பாய் ஃபிரண்டா? எனக்கு நிறைய பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க. என்னோட பெஸ்ட் ஃபிரண்ட் என்னோட பெட் டாக் வெண்ணிலாதான். இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை. நல்லா சமைக்க தெரிந்த, வீட்டை சுத்தமாக வைக்க தெரிந்த தமிழ் ரசிகரை[3] கல்யாணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்”, என்ற ஷெரின் அநியாயத்திற்கு ஓபன் டைப்பாக இருக்கிறார்[4]. அதாவது வேலைக்கரனுக்கு ஒரு தமிழனைத் தேடுகிறார் போலும்!

என் நாயை நன்றாக கவனித்துக் கொள்பவர் தாம் எனக்கு கணவராக வரமுடியும்! ஒருவழியாக, இப்படி உண்மையைச் சொல்லியுள்ளார், “மேலும் இப்போதைக்கு எனது பிரண்ட் என் செல்லக்குட்டி பெண் நாய் குட்டி வெண்ணிலா தான் என்றார். அதன் மீது அன்பு செலுத்தவும், அதை பராமரிக்கவும் எனக்கு பிடித்த உணவுகளை சமைக்கவும் தெரிந்தவரே இனி என் காதலராகவும், கணவராகவும் முடியும்[5]. மற்றபடி நான் அவரிடம் எதுவும் எதிர்பார்க்க மாட்டேன்”, என்று கூறியுள்ளார் ஷெரீன்[6]. அதாவது, அவரும் அதேப்போல, நாயைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான், ஷெரினிடம் எதுவும் கிடைக்காது. நாயுக்கு முத்தம் கூட கிடைக்கும், ஆனால், நாயை கவனிப்பவருக்கு எதுவும் கிடைக்காது

அழகும் அபிரிதமான திறமையும் கொண்ட நடிகை ஷெரின். துள்ளுவதோ இளமைக்குப் பிறகு பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் திறமைக்கு தீனி போடாத படங்களில் நடித்தே திரையுலகிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தனது அழகான தெற்றுப்பல்லை சரிசெய்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக பீமா படத்தில் ஒரு பாடலுக்கு விக்ரமுடன் ஆடியதாக ஞாபகம். நந்தாவுடன் ஒரு படத்திலும் நடித்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஷெரின். படம் மலேசியா நண்பர்கள்.

கரண் நடித்த தீ.நகர், ஷாம் நடித்த அகம் புறம் படங்களை இயக்கியவர் திருமலை. நெல்லை சந்திப்பு, மான் வேட்டை போன்ற படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவர் இயக்கி நாயகனாக நடிக்கும் படம்தான் மலேசியா நண்பர்கள். இந்தப் படத்தில் ஷெரின் ஹீரோயினாக ரீ என்ட்ரியாகிறார்.