SAARAL NAADAN,SRILANKA WRITER DIED 2014 JULY 31
SAARAL NAADAN,SRILANKA WRITER DIED 2014 JULY 31 மலையக இலக்கிய வளர்ச்சியை ஆய்வு செய்யப்போகின்ற ஆய்வாளர்கள், விமர்சகர்கள் கால க்கணக்கெடுப்பு நடத்தும் பொழுது 1930 களின் பின்னர் நடேசய்யர் யுகம் என்றும், 1950களின் பின்னர் சி.வி. வேலுப்பிள்ளை யுகம் என்றும் 1980களின் பின்னர் சாரல் நாடன் யுகம் என்றும் கணிக்க வேண்டும் என்று மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் போத்திரெட்டி பல ஆண்டு களுக்கு முன் இலக்கிய உரையாடல் ஒன்றின்போது தெரிவித்திருந்தார். கடந்த முதலாம் திகதி எம்மை விட்டு பிரிந்த சாரல் நாடனின் எழுத்துக்கள் தென்றலாக வீசி, புயலாக மலையக இலக்கியத்திற்கு வலிமை சேர்ப்பதை மலையக இலக்கிய வராலாற்றில் அவருக்கு தனி அத்தியாயம் எழுதப்பட வேண்டும். அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி உருவாக்கிய சாரலின் திறமை கண்டு இரா.சிவலிங்கம் அவரை எஸ்.திருச்செந்தூரன் போன்ற ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர். 1960களில் எழுத்திலும், பேச்சிலும், கவிதைகளிலும் புதியதோர் ஆத்திகப் பரம்பரை மலைய கத்தில் உருவாகியது. சீற்றம் மிகுந்த அந்த இளந்தலைமுறையினரை பல்வேறு வகைகளிலும் சி.வி.வேலுப்பிள்ளை உற்சாகப்படுத்தினார். அப்பரம்பரையின...