Showing posts with label CORPORATION. Show all posts
Showing posts with label CORPORATION. Show all posts

Friday, 7 May 2021

SONY 1946 MAY 7

 




உலகின் புகழ்பெற்ற சோனி நிறுவனம் 

துவக்கப்பட்ட நாள் ! 07-05-1946




உலகின் புகழ்பெற்ற சோனி நிறுவனம் துவக்கப்பட்ட நாள் !


இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர். ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.


அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா. சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதா மகனின் தன்முனைப்பூட்டும் கதை.


1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.


பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.


1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.


அந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது.


சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.


இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.


அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும்.


1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.


அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உட

Tuesday, 6 April 2021

NEIVELI LIGNITE CORPORATION HISTORY

 

NEIVELI  LIGNITE CORPORATION HISTORY




1934ல் தனது 620 ஏக்கர் நெய்வேலி நிலத்தில் கிணறுகள் வெட்டிய ஜம்புலிங்க முதலியார் நீரில் கரித்துண்டுகள் இருப்பதைக் கண்டு ஆங்கில கலெக்டரிடம் தெரிவிக்கிறார். அவர் ஆங்கில அரசுக்குக் கொண்டு சென்று மேற்கொண்டு ஆய்வு நடத்தச் சொல்கிறார்.
சென்னையின் பின்னி கம்பெனி ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துக் கைவிடுகிறது. பின்னர் அரசின் ஜியோலாஜிகல் சர்வே அமைப்பு களம் இறங்கி, 500 டன் கரி இருப்பதாகக் கூறுகிறது. பின்னர் 1947ல் இந்திய அரசின் சுரங்கப் பொறியாளர் கோஷ் தலைமையிலான குழு சுமார் 2000 மில்லியன் டன் கரி இருப்பதாக உறுதி செய்கிறது. 1951ல் அமெரிக்க அரசு தனது பொறியாளர்களை அனுப்பி ஆய்வு செய்து, பொருளாதார ரீதியாகப் பலன் அளிக்கும் முயற்சியே என்று சான்றளிக்கிறது.
ஜம்புலிங்க முதலியார் தனது நிலத்தை அரசுக்கு இலவசமாக அளிக்கிறார்.



1953ல் கிருஷ்ண ராவ் என்னும் சென்னை மாகாண தொழில் மந்திரி முதல் சுரங்கம் வெட்டும் பணியைத் துவக்கி வைக்கிறார். 1954ல் பண்டித நேரு நெய்வேலிக்கு விஜயம் செய்கிறார். காமராஜர், வெங்க்கட்ராமன், சி.சுப்பிரமணியன் முதலியோரின் முயற்சியால் நெய்வேலி நிலக்கரி முயற்சியை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. பண்டித நேருவின் முயற்சியால் கிழக்கு ஜெர்னிமனியின் கே.எஃப்.டபிள்யூ. நிதி நிறுவனம் பணம் வழங்க, நெய்வேலி உருப்பெறுகிறது. டி.எம்.எஸ்.மணி என்னும் ஐ.சி.எஸ். அதிகாரியை நேரு அனுப்பி வைக்கிறார்.
இத்தனைக்குப் பின்னரே நெய்வேலி நிறுவனம் உருவாகிறது.
தேவையான பொறியாளர்கள் இல்லாத நிலையில், மணிமுத்தாறு அணைக்கட்டு வேலை முடிந்த நிலையில் அங்கு பணிபுரிந்த பி.டபிள்யூ.டி பொறியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் நெய்வேலியில் வேலைக்கு ஏற்பாடாகிறது. எக்கச்சக்க வேலை, ஆனால் ஆள் இல்லை. அதனால் டிப்ளமா படித்தவர்கள் பலருக்கும் நெய்வேலியில் வேலை உறுதியாகிறது. தஞ்சை கிராமங்களில் இருந்த படித்த இளைஞர்கள் தட்டெழுத்தாளர், குறுக்கெழுத்தாளர் பதவிகளில் வேலைக்குச் சேர்ந்தனர்.
நெய்வேலியின் முதல் அனல் மின் நிலையத்தின் தலைமைப்



பொறியாளராக எஸ்.ராமச்சந்திரன் இருந்தார். அருமையான பொறியாளரான அவர் தேதியூர் சுப்பிரமணிய ஐயரின் மகனாவார். தேதியூர் சுப்பிரமணிய ஐயர் சௌந்தர்யலஹரிக்கு வியாக்கியானம் எழுதியவர்.
நெய்வேலி துவங்கப்பட்ட போது மந்தாரக்குப்பம் என்னும் கிராமத்திலேயே அனைத்து வேலைகளும் நடந்தன. பின்னரே நெய்வேலி நகரியம் கட்டப்பட்டது.
நெய்வேலி நஷ்டத்திலேயே இயங்கி வந்தது. மத்திய அரசு உதவி இல்லையேல் நெய்வேலி என்றோ காணாமல் போயிருக்கும். நெய்வேலியை லாபகரமாக மாற்றிய பெருமை பின்னர் வந்த சேர்மன் யக்ஞேஸ்வரன் என்னும் சுரங்கப் பொறியாளரையே சேரும்.
நெய்வேலியின் துவக்கத்தில் எந்தத் தொழிற்சங்கமும் இல்லை. முதலில் தோன்றியது INTUC மட்டுமே. அதன் தலைவராகக் கர்னாடகத்தைச் சேர்ந்த பட் என்பவர் இருந்தார். எந்தப் பிரச்னையிலும் மேலிடத்துடன் பேசியே சுமுகமாக முடித்து வைப்பரவராகத் திகழ்ந்தார். பின்னர் AITUC வந்தது. அதுவரை பிரச்னை இல்லை. பின்னர் CITU வந்ததும் வேலை நிறுத்தங்கள் துவங்கின. ஆனால், அப்போதும் லஞ்சம் இல்லை. பின்னர் திமுகவின் தொமுச தோன்றியது. லஞ்சம் நெய்வேலிக்குள் அடியெடுத்து வைத்தது.



பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்த குடும்பத்தில் இருந்து நெய்வேலியின் சேர்மனாக வந்து சேர்ந்த ஜி.எல்.டாண்டன், நெய்வேலியைச் சுற்றிப் பார்க்கையில் கோவில்கள் இல்லாத நிலையைக் கண்டார். ஒவ்வொரு பிளாக்கிலும் கோவில் கட்ட அனுமதித்தார். தற்போது உள்ள பல மாரியம்மன் கோவில்கள் அவர் காலத்தில் உருவானவை, வளர்ச்சி பெற்றவை.
நெய்வேலி நிர்வாகத்தில் அரசியல் தலையீடு துவங்கியது காங்கிரஸ் எம்.பி. வள்ளல்பெருமான் காலத்தில். இன்றும் தொடர்கிறது.
நெய்வேலிக்கு நாங்கள் தான் காரணம் என்று மார்தட்டிக்கொள்ள இவர்களுக்கு மட்டுமே தகுதி உண்டு:
1. ஜம்புலிங்க முதலியார்
2. காமராஜ்
3. ஆர்.வெங்கட்ராமன்
4. சி.சுப்பிரமணியம்
5. பண்டித நேரு
6. டி.எம்.எஸ்.மணி ஐ.சி.எஸ்.
பி.கு.: 1965ல் 'நெய்வேலியா? பூணூல் வேலியா?' என்று கையேடு அச்சடித்து விநியோகித்தது யார் என்று சொல்பவர்களுக்கு எந்தப் பரிசும் கிடையாது.