DIABETES DISEASE -CURED BY INSULIN FOUNDED 1921 MAY 16
DIABETES DISEASE -CURED BY INSULIN FOUNDED 1921 MAY 16 ‘உங்களுக்கும் சுகர் இருக்கா?’ என்று சாதாரணமாக விசாரித்துக் கொள்ளும் அளவுக்கு இன்று சர்க்கரை நோயும் பரவலாகிவிட்டது. அதன் சிகிச்சைகளும் எளிதாகிவிட்டன. காரணம், நீரிழிவுக்கான ஆணிவேரையும் தீர்வையும் நாம் கண்டுபிடித்துவிட்டோம். நாம் உண்ணும் உணவு குளுக்கோஸ் எனும் சர்க்கரையாக ரத்தத்தில் சென்று மாற்றமடைகிறது என்பதையும், அந்தச் சர்க்கரையின் அளவை கணையத்தில் சுரக்கும் இன்சுலின் கட்டுப்படுத்துகிறது என்பதையும் 1869ம் ஆண்டு ஜெர்மனை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் பால் லாங்கர்ஹேன்ஸ் என்பவர்தான் முதலில் கண்டுபிடித்தார். சாதாரணமாக இறந்தவர்களின் உடலையும் நீரிழிவு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலையும் ஆராய்ச்சி செய்தபோது நீரிழிவாளர்களின் கணையத்தில் இருந்து ஏதோ ஒரு திரவம் குறைவாக சுரப்பதைக் கண்டுபிடித்தார். பால் லாங்கர்ஹேன்ஸின் கருத்தை உறுதிப்படுத்துவதற்காக, 1889ல் ஜெர்மனியை சேர்ந்த ஆஸ்கர் மின்கோவ்ஸ்கி மற்றும் ஜோசப் வான்மெரிங் ஆகிய இரு மருத்துவர்கள் ஒரு நாய்க்கு கணையத்தை அகற்றிவிட்டு, நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள். கணையத்த...