Showing posts with label APRIL 13. Show all posts
Showing posts with label APRIL 13. Show all posts

Monday, 13 April 2020

PATTUKOTTAI KALYANASUNDARAM LYRICS / POET BORN 1930 APRIL 13- 1959,OCTOBER 8





PATTUKOTTAI KALYANASUNDARAM 
LYRICS / POET  BORN 1930 APRIL 13- 1959,OCTOBER 8


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு வளர்ப்பு குடும்பம்
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும் வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.

எழுத்தாற்றல்
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

பொதுவுடைமை ஆர்வம்
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார்.

தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர். இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ. ஏ. கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகியும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞராக உருவானார்.[1]


கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்
விவசாயி
மாடுமேய்ப்பவர்
மாட்டு வியாபாரி
மாம்பழ வியாபாரி
இட்லி வியாபாரி
முறுக்கு வியாபாரி
தேங்காய் வியாபாரி
கீற்று வியாபாரி
மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
உப்பளத் தொழிலாளி
மிஷின் டிரைவர்
தண்ணீர் வண்டிக்காரர்
அரசியல்வாதி
பாடகர்
நடிகர்
நடனக்காரர்
கவிஞர்

மறைவு
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடித்து ஐந்து மாதங்களில் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார். இவர் இறக்கும் போது இவருக்கு 5 மாதத்தில் குழந்தை இருந்தது.[2] இவரது மறைவுக்கு கலைஞர் மு. கருணாநிதி தனது அஞ்சலியில் "கண்களை மூடுகிறேன்; கல்யாணம் தெரிகிறார் -- ஒளி தெரிகிறது! கண்களைத் திறக்கிறேன்: கல்யாணம் இல்லை - கலையுலகு இருட்டாயிருக்கிறது" எனத் தெரிவித்தார்.[2]

மணி மண்டபம்
தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.


பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் :
கருப்பொருள்:இயற்கை
பாடல் - படம் - வெளிவந்த ஆண்டு

1.ஆடுமயிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
2.ஓ மல்லியக்கா ( மக்களைப் பெற்ற மகராசி 1957 )
3.வம்புமொழி ( பாண்டித்தேவன்1959 )
4.வா வா வெண்ணிலவே ( செளபாக்கியவதி 1957 )
5.கனியிருக்கு ( எதையும் தாங்கும் இதயம் 1962 )

6.கொக்கரக் கொக்கரக்கோ சேவலே ( பதிபக்தி 1958 )
7.சலசல ராகத்திலே -கங்கையக்கா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
8.துணிந்தால் துன்பமில்லை ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
9.காக்காய்க்கும் ( பிள்ளைக் கனியமுது )
10.வா வா சூரியனே ( பாண்டித்தேவன் 1959 )
11.என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
கருப்பொருள்:சிறுவர்
12.குழந்தை வளர்வது அன்பிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
13.அன்புத் திருமணியே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
14.அமுதமே என் அருமைக்கனியே ( உலகம் சிரிக்கிறது 1959 )
15.செங்கோல் நிலைக்கவே - மகுடம் காக்க ( இரத்தினபுரி இளவரசி 1959 )
16.சின்னஞ்சிறு கண்மலர் ( பதிபக்தி 1958 )
17.அழாதே பாப்பா ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958)
18.ஆனா ஆவன்னா ( அன்பு எங்கே 1958 )
19.இந்த மாநிலத்தை பாராய் மகனே ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
20.சின்னப்பயலே...சின்னப்பயலே ( அரசிளங்குமரி 1958)
21.தூங்காதே தம்பி தூங்காதே ( நாடோடி மன்னன் 1958 )
22.திருடாதே பாப்பா திருடாதே ( திருடாதே 1961 )
23.ஏட்டில் படித்ததோடு இருந்துவிடுதே ( குமாரராஜா 1961 )
24.உன்னைக் கண்டு நானாட ( கல்யாண பரிசு )
கருப்பொருள்:காதல்,மகிழ்ச்சி,சோகம்
25.பக்கத்திலே இருப்பே ( தேடிவந்த செல்வம் 1958 )
26.வாடாத சோலை ( படித்த பெண் 1956 )

27.புது அழகை -ஆணும் பெண்ணும் ( அவள் யார் 1959 )
28.படிக்க படிக்க நெஞ்சிருக்கும் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
29.காலம் எனுமொரு ஆழக்கடலில் ( அமுதவல்லி 1959 )
30.உள்ளங்கள் ஒன்றாகி ( புனர்ஜென்மம் 1961)
31.இன்று நமதுள்ளமே ( தங்கப்பதுமை 1958 )
32.கழனி எங்கும் கதிராடும் ( திருமணம் 1958 )
33.ஆசை வைக்கிற இடந்தெரியனும் ( கலையரசி 1963 )
34.என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 )
35.அன்புமனம் கனிந்தபினனே ( ஆளுக்கொருவீடு 1960 )
36.நீயாடினால் ஊராடிடும் ( பாண்டித் தேவன் 1959 )
37.வாடிக்கை மறந்ததும் ஏனோ ( கல்யாணபரிசு 1959 )
38.நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு ( இரும்புத் திரை 1960 )
39.வருஷத்திலே ஒருநாளு தீபாவளி ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
40.ஆசையினாலே மனம் ( கல்யாணபரிசு 1959 )
41.துள்ளி துள்ளி அலைகளெல்லாம் ( தலை கொடுத்தான் தம்பி )
42.பெண்ணில்லே நீ ( ஆளுக்கொருவீடு 1960 )
43.ஆண்கள் மனமே அப்படித்தான் ( நான் வளர்த்த தங்கை )
44.மஞ்சப்பூசி பூ முடிச்சு ( செளபாக்கியவதி 1957 )
45.கன்னியூர் சாலையிலே ( பொன் விளையும் பூமி 1959 )
46.போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் -தாலி ( வீரக்கனல் 1960 )
47.அடக்கிடுவேன் ( அவள் யார் 1959 )
48.எழுந்தென்னுடன் வாராய் ( தங்கப்பதுமை 1958 )
49.ஆடைகட்டி வந்த நிலவோ ( அமுதவல்லி 1959 )
50.மானைத் தேடி மச்சான் வர ( நாடோடி மன்னன் 1958 )
கருப்பொருள்:காதல்
51.துள்ளாத மனமும் துள்ளும் ( கல்யாணபரிசு 1959 )
52.அழகு நிலாவின் பவனியிலே ( மஹேஸ்வரி 1955 )
53.உனக்காக எல்லாம் உனக்காக ( புதையல் 1957 )
54.கண்ணுக்கு நேரிலே ( அலாவுதினும் அற்புத விளக்கும் 1957 )
55.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப்பதுமை 1959 )
56.கற்பின் இலக்கணமே ( நான் வளர்த்த தங்கை 1958 )
57.எதுக்கோ இருவிழி ( செளபாக்கியவதி 1957 )
58.உன்னை நினைக்கையிலே ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
59.உன்னைக் கண்டு நானாட ( கல்யாணபரிசு 1959 )
60.ஆசை கொண்ட நெஞ்சிரண்டு ( இரும்புத் திரை 1960 )
61.மொகத்தைப் பார்த்து முறைக்காதிங்க ( விக்கிரமாதித்தன் 1962 )
62.இல்லாத அதிசயமா ( கற்புக்கரசி 1957 )
63.துடிக்கும் வாலிபமே ( மர்மவீரன் 1958 )
64.கன்னித் தீவின் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
65.வேல் வெல்லுமா ( மஹாலட்சுமி 1960 )
66.ஐயா நானாடும் நாடகம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
67.மாந்தோப்பு வீட்டுக்காரி ( இரத்தினபுரி இளவரசி 1959 )
68.பார் முழுவதுமே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
69.கண்கள் ரெண்டும் வண்டு ( அமுதவல்லி 1959 )
70.ஊரடங்கும் வேளையிலே ( ரங்கோன் ராதா 1956 )
71.சின்னக் குட்டி நாத்துனா ( அமுதவல்லி 1959 )

72.இன்ப முகம் ஒன்று ( நான் வளர்த்த தங்கை 1958 )
73.அன்பு அரும்பாகி ( தலை கொடுத்தான் தம்பி 1959 )
74.ஒன்றுபட்ட கணவனுக்கு ( தங்கப்பதுமை 1959 )
75.பறித்த கண்ணைப் பார்த்துவிட்டேன் ( தங்கப்பதுமை 1959 )
76.ஓ...சின்ன மாமா ( செளபாக்கியவதி 1957 )
77.ஓ...கோ கோ மச்சான் ( செளபாக்கியவதி 1957 )
78.சிங்கார பூங்காவில் ஆடுவோமே ( செளபாக்கியவதி 1957 )
79.என்றும் இல்லாமல் ( கலைஅரசி 1963 )
80.நினைக்கும்போது நெஞ்சம் ( கலைஅரசி 1963 )
81.கண்ணாடிப் பாத்திரத்தில் ( புனர் ஜென்மம் 1961 )
82.உருண்டோடும் நாளில் ( புனர் ஜென்மம் 1961 )
83.மருந்து விக்கிற ( தங்கப்பதுமை 1959 )
84.மச்சான் உன்னைப் பாத்து ( பாசவலை 1956 )
85.சிங்கார வேலவனே ( செளபாக்கியவதி 1957 )
86.காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் ( கல்யாணபரிசு 1959 )
87.காதலிலே தோல்வியுற்றான் கன்னியொருத்தி ( கல்யாணபரிசு 1959 )
88.மங்கையரின்றி தனியாக ( குமார ராஜா 1960 )
89.கண்ணோடு கண்ணு ( நாடோடி மன்னன் 1958 )
90.மணமகளாக வரும் ( குமார ராஜா 1960 )
91.நான் வந்து சேர்ந்த இடம் ( குமார ராஜா 1960 )
92.ஆனந்தம் இன்று ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
93.சின்னப் பொண்ணாண ( ஆரவல்லி 1957 )
கருப்பொருள்:நகைச்சுவை
94.நந்தவனத்திலோர் ஆண்டி ( அரசிளங்குமரி 1958)
95.மாமா மாமா பன்னாடெ ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
96.காப்பி ஒண்ணு எட்டணா ( படித்த பெண் 1956 )
97.கோபமா என்மேல் ( குல தெய்வம் 1956 )
98.கையாலே கண்ணைக் கசக்கிக்கிட்டு ( குல தெய்வம் 1956 )
99.கோழியெல்லாம் கூவையிலே ( குல தெய்வம் 1956 )
100.காயமே இது மெய்யடா ( கற்புக்கரசி 1957 )
101.ராக் ராக் ராக் ராக் இண்ட்ரோல் ( பதிபக்தி 1958 )
102.சீவி முடிச்சிக்கிட்டு ( பிள்ளைக்கனியமுது 1958 )
103.இந்தியாவின் ராஜதானி டில்லி ( நான் வளர்த்த தங்கை 1958 )
கருப்பொருள்: கதைப்பாடல்
104.நாட்டுக்கு ஒரு வீரன் ( ரங்கோன் ராதா 1956 )
105.அடியார்கள் உள்ளத்தில் ( குலதெய்வம் 1956 )
கருப்பொருள்: நாடு
106.எங்கே உண்மை என் நாடே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
107. துள்ளி வரப் போறேன் ( திருமணம் 1958 )
108.ஒற்றுமையில் ஓங்கிநின்ற ( மர்ம வீரன் 1958 )
109.தஞ்சமென்று வந்தவரைத் ( கலையரசி 1965 )
110.மூளை நெறஞ்சவங்க ( உத்தம புத்திரன் 1958 )
கருப்பொருள்: சமூகம்
111.வீடு நோக்கி ஓடுகின்ற ( பதிபக்தி 1958 )
112.வீடு நோக்கி ஓடிவந்த ( பதிபக்தி 1958 )
113.ஒரு குறையும் செய்யாம - இருக்கும் ( கண் திறந்தது 1959 )
114.உருளுது பொரளுது ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
115.ஆம்பிளைக் கூட்டம் ( புதுமைப் பெண் 1959 )
116.பாடுபட்டு காத்த நாடு ( விக்கிரமாதித்யன் 1962 )
117.தாயில்லை தந்தையில்ல ( ஆளுக்கொருவீடு 1960 )
118.சூதாடி மாந்தர்களின் ( உலகம் சிரிக்கிறது 1959 )
119.அண்ணாச்சி வந்தாச்சி ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
120.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)ஸ்ரீ
கருப்பொருள்: அரசியல்
121.மனிதரை மனிதர் ( இரும்புத் திரை 1960 )
122.எல்லோரும் இந்நாட்டு மன்னரே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
123.படிப்பு தேவை அதோடு உழைப்பும் ( சங்கிலித் தேவன் 1960 )
124.சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் ( பாண்டித் தேவன் 1959 )
125.மனுசனைப் பாத்துட்டு ( கண் திறந்தது 1959 )
126.விஷயம் ஒன்று சொல்ல ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
127.தேனாறு பாயுது செங்கதிரும் ( படித்த பெண் 1954 )
கருப்பொருள்: தத்துவம்
128.ஔவிதியென்னும் குழந்தை ( தங்கப்பதுமை 1959 )
129.ஏனென்று கேட்கவே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
130.கல்லால் இதயம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
131.இரை போடும் மனிதருக்கே இரையாகும் ( பதிபக்தி 1958 )
132.நீ கேட்டது இன்பம் ( ஆளுக்கொருவீடு 1960 )
133.ஈடற்ற பத்தினியின் - ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ( தங்கப்பதுமை 1959 )
134.தர்மமென்பார் - இந்த திண்ணைப் பேச்சு ( பதிபக்தி 1958 )
135.உனக்கெது சொந்தம் ( பாசவலை 1956 )
136.சூழ்ச்சியிலே - குறுக்கு வழியில் ( மகாதேவி 1957 )
137.எல்லோரும் - அது இருந்தால் ( நல்ல தீர்ப்பு 1959 )
138.உறங்கையிலே - பொறக்கும் போது ( சக்கரவர்த்தி திருமகள் 1957 )
139.இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ( பாசவலை 1956 )
140.கருவில் உருவாகி ( செளபாக்கியவதி 1957 )
கருப்பொருள்: பாட்டாளிகளின் குரல்
139.செய்யும் தொழிலே தெய்வம் ( ஆளுக்கொரு வீடு 1960 )
140.பள்ளம் மேடுள்ள பாதையிலே ( கன்னியின் சபதம் 1958 )
141.கொடுமை - சோகச் சுழலிலே ( பாண்டித் தேவன் 1959 )
142.சின்னச் சின்ன இழை ( புதையல் 1957 )
143.டீ டீ டீ ( கல்யாண பரிசு 1959 )
144.எதிரிக்கு எதிரி ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
145.என் வீட்டு நாய் ( உலகம் சிரிக்கிறது 1959 )
146.நாட்டுக்குப் பொருத்தம் - விவசாயம் ( எங்கள் வீட்டு மகாலெட்சுமி )
147.வெங்கிமலை உச்சியிலே ( வாழவைத்த தெய்வம் 1959 )
148.என்றும் துன்பமில்லை ( புனர் ஜன்மம் 1961)
149.பொங்காத பெருங்கடல் நீதி ( புதுமைப் பெண் 1959 )
150.உண்மை ஒரு நாள் ( பாதை தெரியுது பார் 1960 )
151.ஏற்றமுன்னா ஏற்றம் ( அரசிளங்குமரி 1958)
152.நன்றிகெட்ட மனிதருக்கு ( இரும்புத் திரை 1960 )
153.உலகத்தில் இந்த மரணத்தில் - கலங்காதே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
154.உண்மையை -இன்ப உலகில் ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
155.கரம்சாயா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
156.குட்டுகளைச் சொல்லணுமா ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
157.தை பொறந்தா வழி பொறக்கும் ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
158.சட்டையிலே தேச்சிக்கலாம் -சரக்கு ( சங்கிலித் தேவன் 1960 )
159.சும்மா கெடந்த ( நாடோடி மன்னன் 1958 )
கருப்பொருள்: இறைமை
160.பார்த்தாயா மானிடனின் லீலையை ( நான் வளர்த்த தங்கை 1958 )
161.ஓங்கார ரூபிநீ -அம்பிகையே ( பதிபக்தி 1958 )
162.தேவி மனம் போலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
163.அறம் காத்த தேவியே ( மஹேஸ்வரி 1955 )
164.ஊருக்கெல்லாம் ஒரே சாமி ( ஆளுக்கொரு வீடு 1960 )
165.ஓ மாதா பவானி ( செளபாக்கியவதி 1957 )
166.ஆனைமுகனே -புள்ளையாரு கோயிலுக்கு ( பாகப்பிரிவினை 1959 )
167.கண்டி கதிர்காமம் -எட்டுஜான் குச்சிக்குள்ளே ( அரசிளங்குமரி 1958)
168.அம்மா துளசி ( நான் வளர்த்த தங்கை 1958 )
169.கங்கை -தில்லையம்பல நடராஜா ( செளபாக்கியவதி 1957 )
கருப்பொருள்: பொது
170.தூங்காது கண் தூங்காது ( கற்புக்கரசி 1957 )
171.வரும் பகைவர் படைகண்டு ( அம்பிகாபதி 1957 )
172.பாசத்தால் எனையீன்ற ( அமுதவல்லி 1959 )
173.ஜிலு ஜிலுக்கும் -சிட்டுக் குருவியிவ ( அமுதவல்லி 1959 )
174.அள்ளி வீசுங்க காசை ( மஹேஸ்வரி 1955 )
175.சவால் சவாலென்று ( கலைவாணன் 1959 )
176.அடியார்க்கு -அன்பும் அறிவும் ( ஆளுக்கொரு வீடு 1960 )
177.மங்கையருக்கு -அக்காளுக்கு வளைகாப்பு ( கல்யாணப் பரிசு 1959 )
178.ஆட்டம் ( பாகப்பிரிவினை 1959 )
179.கையில வாங்கினேன் ( இரும்புத் திரை 1960 )
180.பிஞ்சு மனதில் -கோடி கோடி ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
181.ஓரொண்ணு ஒண்ணு ( மகனே கேள் 1965 )
182.ஆறறிவில் ஓரறிவு ( மகனே கேள் 1965 )
183.கலைமங்கை உருவம் ( மகனே கேள் 1965 )
184.ஆட்டம் பொறந்தது ( மகனே கேள் 1965 )
185.மட்டமான பேச்சு ( மகனே கேள் 1965 )
186.லால லால- பருவம் வாடுது ( மகனே கேள் 1965 )
187.மணவரையில் -சூதாட்டம் ( மகனே கேள் 1965 )






.பாட்டுக்கோட்டையார் என்றும், பட்டுக்கோட்டையார் என்றும் தமிழர்களால் அன்புடன் நினைவுக் கூற‌ப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், ஒரு சிறந்த தமிழ் அறிஞராகவும், சிந்தனை யாளராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும் திகழ்ந்தவராவார். இவரது  பெரும்பாலான  பாடல் கள் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி இயற்றப்பட்டவையாகும். இவருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.



இத்தனைக்கும் இவர் வாழ்ந்தது இருபத்தொன்பது வயதுவரைதான். அதிலும் சினிமாவில் பணி யாற்றியதோ வெறும் ஐந்தே வருடங்கள். ஆனாலும் தமிழ் சினிமாவில் பலவருடங்கள் கழிந்த நிலையிலும் இன்றும் அவர் பாடல்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையல்ல

1930ல் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கம் படைத்தான்காடு கிராமத்தில் பிறந்த பட்டுக் கோட்டையார் முதன்முதலில் கவிதை எழுதுத ஆரம்பித்தபோது அவருக்கு வயது பதினான்கு. இவரது தந்தை அருணாசலக் கவிராயரும் கவிஞர் என்பதால் இவருக்கும் கவிதை ரத்தத்திலேயே ஊறியிருந்தது. பொதுவுடமைச் சிந்தனைகள் அவரிடம் மேலோங்கியிருந்ததால் சுயமரியாதை இயக்கக் கூட்டங்களிலும் கம்யூனிஸ்ட் கூட்டங்களிலும் பங்கேற்றுப் பாடிவந்தார்.

பாவேந்தர் பாரதிதாசனை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட பட்டுக்கோட்டையார் பாண்டிச் சேரிக்கு வந்து பாரதிதாசனைச் சந்தித்து அவரிடம் மாணவராகச் சேர்ந்து அவர் நடத்திவந்த ‘குயில்’ இதழை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டார்.

பட்டுக்கோட்டையாரின் திருமணம்கூட பாரதிதாசனின் தலைமையில்தான் நடைபெற்றது. அதன் பின்னர் அவரை அழைத்துவந்து மார்டன் தியேட்டர்ஸில் பாட்டெழுத சேர்த்துவிட்டார் பாரதி தாசன். பட்டுக்கோட்டையாரின் சினிமாப்பிரவேசத்திற்கு பிள்ளையார்சுழி போடப்பட்ட்து இங்கே தான். இவர் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில்தான் புராணப்படங்களின் ஆதிக்கம் குறைந்து சமூகப்படங்களின் வரவு தலைதூக்கவும், பாடல்களில், வசனங்களில், நடிப்பில் மாற்றங்கள் உருவாகவும் ஆரம்பித்திருந்தன.

இவர் முதன்முதலில் பாடல் எழுதிய படம் படித்த பெண். ஆனாலும் இரண்டாவது படமான மகேஸ்வரி முந்திக்கொண்டு 1955ல் ரிலீஸானது. இவர் பாடல் எழுத ஆரம்பித்த நேரத்தில் உடுமலை நாராயணகவி, கண்ணதாசன், மருதகாசி போன்றவர்கள் வலுவான இடத்தில் இருந்தனர்.

ஆனாலும் பட்டுக்கோட்டையாரின் பாடல்வரிகள் இவர்கள் யாருக்கும் போட்டியாக இல்லாமல் நாடோடி மரபோடும் முற்போக்கு கருத்தோடும் தனிப்பாதையில் நடைபோட ஆரம்பித்தன. திரையுலகம் அவரைத் தன் தோள்களில் பெருமையுடன் தூக்கிவைத்துக்கொண்டது. பட்டுக் கோட்டை பாட்டுக்கோட்டை ஆனார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த படங்களில் இவர் பாடல் எழுத ஆரம்பித்தபின் அவருக்கு வெற்றிமேல் வெற்றி குவிய ஆரம்பித்தது. ‘சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா’., ‘ தூங்காதே தம்பி தூங்காதே’, ‘திருடாதே பாப்பா திருடாதே ’, குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்’என எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் அரசியல் அரங்கில் எம்.ஜி.ஆர் வெற்றிநடை போட ரத்தினக்கம்பளம் விரித்தன.

தூங்காதே தம்பி தூங்காதே பாட்டைக் கேட்டு பல தமிழர்கள் தங்களது நீண்டநாள் அறியாமை உறக்கம் கலைந்து கண்விழிக்க ஆரம்பித்தார்கள். இன்னும் சொல்லப்போனால் பட்டுக்கோட்டை யாரின் பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு சினிமாவிலும் அரசியலிலும் ஒரு புதிய தோற்றத்தை வடிவமைத்துக் கொடுத்தன என்றுகூட சொல்லலாம்.



திரையுலகில் நுழையும் யாரும் ஏதோ ஒருகட்டத்தில் சில சமரசங்கள் செய்து கொள்வது வாடிக்கை யான ஒன்றுதான்.. ஆனால் இசைக்கு ஏற்ப பாடல் எழுதும் நிலையிலும் தனது அடையாளத்திலிருந்து பட்டுக்கோட்டையார் ஒருபோதும் விலகி நிற்கவில்லை.

பட்டுக்கோட்டையின் பாடல்களில் நகைச்சுவை, கேலி, கிண்டல் எல்லாமே ஆங்காங்கே விரவிக் கிடக்கும். ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி’, ’ஆடைகட்டிவந்த நிலவோ, ‘வாடிக்கை மறந்தது ஏனோ’, ‘என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே’ ‘உன்னைக்கண்டு நானாட’ ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என எல்லாவிதமான பாடல்களிலும் முத்திரை பதித்தவர் பட்டுக்கோட்டையார்.

1959-ம் வருடம் தனது இருபத்தொன்பது வயதிலேயே மரணத்தை தழுவிய பட்டுக்கோட்டையார் சினிமாவில் தான் பணியாற்றிய ஐந்து வருடங்களில் மட்டும் ஐம்பத்தேழு படங்களில் மொத்தம் இருநூற்று அறுபத்தியிரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார்.

1981ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது மறைந்த பட்டுக்கோட்டையாருக்கு தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கி அவரை கௌரவப்படுத்தினார். 1993ல் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது பாடல்களை நாட்டுடமை ஆக்கினார். 2000-ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி பட்டுக்கோட்டையில் அவருக்கு மணிமண்டபம் அமைத்து தமிழர்களின் நீண்டநாள் ஏக்கத்தை தீர்த்துவைத்தார்.


பட்டுக்கோட்டையார் பிறந்த தின பதிவு





வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே!' -

திருடாதே என்ற படத்தில் இடம்பெற்ற 'திருடாதே... பாப்பா திருடாதே 'என்ற பாடலில் இடம்பெறும் இந்த பாடலை கேட்கும் யாருக்கும் மனதில் ஒரு ஆழமான தன்னம்பிக்கை உயர்ந்து நிற்கும். இப்படி காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களை எழுதிய பொதுவுடைமைக் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாள் இன்று.

குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்கு சொந்தம்

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்டதெல்லாம் சொந்தம் என்ற தீர்க்க தரிசன வரிகளுக்கு சொந்தக்காரர் அவர்.

மகாகவி பாரதியாருக்குப் பிறகு,  சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்களின் மனதில் வெள்ளமெனப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தனது வறுமையின் பொருட்டு விவசாயம், வியாபாரம், நாடக நடிப்பு, டிரைவிங், உப்பளத்தொழில் என எண்ணற்ற தொழில்களையும் வேலைகளையும் செய்தவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றவர். அவரது குயில் இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

வறுமை மிகுந்த சூழலில்,  பெரும் முயற்சிக்குப் பிறகு தனது 25வது வயதில் 'படித்த பெண்' என்ற திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதினார். அடுத்தடுத்த வருடங்களில் தனது அபாரமான கவிதை ஆற்றலால் திரையிசைப்பாடல் உலகில் அழுத்தமாக காலூன்றினார். அவரது கவிதைக்கொடி,  புகழ்காற்றில் படபடத்தது.

பொதுவுடமைக் கருத்தியலை தீவிரமாக நம்பியவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரையிசையைப் பயன்படுத்தினார். இளைஞர்களுக்கு மட்டுமின்றி,  சிறுவர்களுக்கும் தனது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று விரும்பியவர். சினிமாவின் கதை சிச்சுவேஷன்களைப் பயன்படுத்தி, சிறுவர்களுக்காக பல பாடல்களை எழுதினார். அவற்றில் ・சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா・ திருடாதே பாப்பா... திருடாதே・ தூங்காதே தம்பி... தூங்காதே・போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை.


பட்டுக்கோட்டை எனும் பாட்டுக்கோட்டை ! 
தத்துவம், அரசியல், காதல், நகைச்சுவை, சோகம் என பல உணர்வுத்தளங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். 187 பாடல்களை மட்டுமே எழுதியிருந்த சூழலில்,  தனது 29 வயதிலேயே காற்றில் கலந்தார். பட்டுக்கோட்டையைப் பொறுத்தவரை பாடல்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. அவரது வரிகள் ஒவ்வொன்றும் காலத்தில் எதிர் நீச்சல் போடுபவை. மனிதன் பூமியில் வாழ்கின்ற காலம் வரைக்கும் நிலைத்து நிற்பவை. எல்லா காலங்களுக்கும் பொருந்திப் போகிறவை.        

உதாரணமாக சமீபத்தில், வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு விஜய்மல்லையா உல்லாசப் பயணத்திலிருப்பதையும், டிராக்டருக்கு தவணை கட்டவில்லையென ஒரு விவசாயி போலீசால் தாக்கப்பட்டதையும் ஒப்பிட்டு பார்ப்போம். கீழே பட்டுக்கோட்டையின் வரிகள்: 

பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது - ஒரு
பஞ்சையத்தான் எல்லாம் சேர்ந்து திருடனென்றே ஒதைக்குது!   
(பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது...)

பட்டுக்கோட்டை எனும் பாட்டுக்கோட்டை ! 
எத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரது பாடல்,  இன்றைய சமூகத்தை தோலுரிப்பதாக உள்ளது...இதுதான் பட்டுக்கோட்டையார். அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் கேட்க வேண்டிய மற்றொரு பாடல்:

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா- இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா- தம்பி
தெரிந்து நடந்துகொள்ளடா- இதயம்
திருந்த மருந்து சொல்லடா!- இப்படி பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

பட்டுக்கோட்டை எனும் பாட்டுக்கோட்டை ! 
சைனஸ் தொல்லைக்காக ஆபரேஷன் செய்தபோது, டாக்டர்கள் தவறான இடத்தில் ஆபரேஷன் செய்துவிட, அதன் பக்கவிளைவாக முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி,  தமது 29 வயதில் 08.10.1959 ல் பட்டுக்கோட்டையார் இயற்கை எய்தினார்.

ஒரு முறை ஜனசக்தி பத்திரிக்கை ஆசிரியர், கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடம், "பெரிய கவிஞர்களான கம்பன், இளங்கோ, பாரதி போன்றவர்களே பெயரை சிறிதாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் இவ்வளவு பெரிய பெயரை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு பட்டுக்கோட்டை, " அவர்கள் பெரிய கவிஞர்கள். நான் சின்னக் கவிஞன் பெயராவது பெரிதாக இருக்கட்டுமே...?!" என்றாராம்.

தன்னடக்கமாக அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும்,  மானுட சமூகத்தின் மீது அவர் கொண்ட நேசத்தாலும் அக்கறையாலும், மாபெரும் கவிஞராகவே மக்களின் இதயத்தில் என்றென்றும் நிறைந்திருப்பார்.

பட்டுக்கோட்டையின் பாடல்களை நாட்டுடமையாக்கி,  அரசு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இவரையும் இவரது பாடல்களையும் நாம், நம் குழந்தைகளுக்கும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவதின் வாயிலாக பெருமை தேடிக்கொள்வோம். அவரது பாடல்களை கேட்பதின் வாயிலாகவும் நினைவுக்கூறுவதின் வாயிலாகவும் இன்றைய நாளை நீங்கள் மகத்துவமானதாக மாற்றலாம்.


- மாயன்








.

Thursday, 18 January 2018

S.BALA CHANDAR ,MUSICIAN ,ACTOR BORN 1927 JANUARY 18







S.BALA CHANDAR ,MUSICIAN ,ACTOR
BORN 1927 JANUARY 18






எஸ். பாலச்சந்தர் அல்லது சுந்தரம் பாலச்சந்தர் (Sundaram Balachander, சனவரி 18, 1927 – ஏப்ரல் 13, 1990), ஒரு சிறந்த வீணைக் கலைஞராகவும் தமிழ்த் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் பெயர் பெற்றவர். சென்னையில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். தான் இயக்கிய திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார்
குடும்பமும் இளமையும்[மூலத்தைத் தொகு]

பாலச்சந்தர் தஞ்சாவூரின் ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவர்களது பூர்வீகம் நன்னிலம் வட்டத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் கிராமம் ஆகும். தந்தை சுந்தரம் ஐயர் சென்னைக்கு வந்து சட்டப் படிப்பை முடித்த பின்னர் மைலாப்பூரில் வக்கீலாகத் தொழில் பார்த்து அங்கேயே குடியேறி விட்டார். சென்னையிலேயே பாலச்சந்தர் பிறந்தார். பாலச்சந்தரின் அண்ணன் ராஜமும் புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞரும் ஓவியருமாவார். இவரது அக்காள் ஜயலட்சுமி சிவகவி என்ற திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் உடன் நடித்துள்ளார். இவருக்குப் பின்னர் சரசுவதி என்ற பெண்ணும் கல்பகம், கோபாலசாமி என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.

தமது ஐந்தாவது அகவையிலிருந்தே கருநாடக இசையில் நாட்டம் கொண்டார். கஞ்சிரா பயின்ற பாலச்சந்தர் விரைவிலேயே தமது அண்ணன் மற்றும் பிற இசைக்கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக இசைக்கத் துவங்கினார். பின்னர் வீணை, தபேலா, மிருதங்கம், ஆர்மோனியம், புல்புல்தாரா, தில்ருபா, சித்தார் மற்றும் செனாய் இசைக்கருவிகளை ஆசான் எவரும் இன்றி இசைக்கக் கற்றார்.

பாலச்சந்தர் 1952-ஆம் ஆண்டில் சாந்தா என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இராமன் என்ற மகன் உள்ளார்.

பணிவாழ்வு[மூலத்தைத் தொகு]

தமது பன்னிரெண்டாவது அகவையிலேயே பாலச்சந்தர் சிதார் இசைப்பதில் தனிக் கச்சேரி நடத்துமளவு திறமை பெற்றார். பதினைந்து முதல் பதினெட்டு வயதிலேயே சென்னை அகில இந்திய வானொலியில் ஊதியம் பெறும் கலைஞராக பணியாற்றினார். விரைவிலேயே வீணை இசைப்பதில் நாட்டம் கொண்டு முழுநேரத்தையும் அதற்கே செலவிடலானார். இரண்டாண்டுகளில் எந்த ஆசிரியத் துணையுமின்றி கச்சேரி நடத்துமளவிற்கு பயிற்சி பெற்றார். குருவின் தாக்கமில்லாது இவரது பாணி தனித்துவமிக்கதாக அமைந்திருந்தது[1].கருநாடக இசை தவிர இந்துத்தானி இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

திரைப்படங்களிலும் திரைக்கதை, இசையமைப்பு, பாடல்களை தாமே மேற்கொண்டு இயக்கத்தையும் கவனித்தார். இவரது கலைச்சேவைகளுக்காக 1962ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது. [2]

திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]

1950 இல் பாலச்சந்தர்

1934 ஆம் ஆண்டில் பிரபாத் கம்பனியின் சீதா கல்யாணம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது தந்தை சனகராகவும், தமையன் ராஜம் இராமராகவும், தமக்கை ஜெயலட்சுமி சீதையாகவும், தமக்கை சரசுவதி ஊர்மிளையாகவும் நடித்திருந்தனர். பாலச்சந்தர் இதில் இராவணனின் அரண்மனையில் கஞ்சிரா வாசிப்பவராகத் தோன்றினார். தொடர்ந்து "ரிஷயசிருங்கர்" (1934), "ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன்" (1942) திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த பிற தமிழ் திரைப்படங்கள்: தேவகி (1951), ராஜாம்பாள் (1951 திரைப்படம்), ராணி (1952), இன்ஸ்பெக்டர் (1953), பெண் (1954), கோடீஸ்வரன் (1955), டாக்டர் சாவித்திரி (1955) மற்றும் மரகதம் (1959).

திரைப்படங்களில் நடித்ததுடன் 1960களின் மையக்காலங்கள் வரை திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். இது நிஜமா (1948), என் கணவர் (1948), கைதி (1951), அவனா இவன்? (1962), பொம்மை (1964) மற்றும் நடு இரவில் (1965) போன்ற திரைப்படங்களில் நடிப்பு, இசை, பின்னணி பாடகர், இயக்கம் என பல துறைகளிலும் பங்களித்திருந்தார். அவர் இயக்கிய அந்த நாள் (1954) எந்தவொரு பாடலுமின்றி ஓர் முன்னோடித் திரைப்படமாக விளங்கியது.

எதி நிஜம் (1956) என்ற தெலுங்கு மொழித் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.[3]


விருதுகள்[மூலத்தைத் தொகு]
சங்கீத நாடக அகாதமி விருது, 1977 [4]
சங்கீத கலாசிகாமணி விருது, 1982, வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி












Filmography[edit source]


YearFilmLanguageBannerActorDirectorMusic DirectorSingerProducerNote
1934Seetha KalyanamTamilPrabhat Film CompanyYes
1941RishyasringarTamilTamil Nadu TalkiesYes
1942Aaraichi Mani or Manuneethi ChozhanTamilKandan & CoYes
1948Idhu NijamaTamilK. G. ProductionsYesYesYesAssistant Director
1948En KanavarTamilAjit PicturesYesYesYesYesEditor
1951KaidhiTamilJupiter PicturesYesYesYesYes
1951DevakiTamilGanapathi PicturesYes
1951RajambalTamilAruna FilmsYesYesMusic Composer along with M. S. Gnanamani
1952RaniTamilJupiter PicturesYes
1953InspectorTamilJupiter PicturesYes
1954Andha NaalTamilAVM StudiosYes
1954PennTamilAVM StudiosYes
1954SanghamTeluguAVM StudiosYes
1955KoteeswaranTamilSri Ganesh MovietoneYes
1955Doctor SavithriTamilAruna FilmsYes
1956Edi NijamTeluguPratibha FilmsYes
1956Edhu NijamTamilPratibha FilmsYes
1958Bhoologa RambaiTamilAshoka PicturesYesDirector along with D. Yoganand upon the demise of K. Ramnoth
1958Bhooloka RambhaTeluguAshoka PicturesYesDirector along with D. Yoganand upon the demise of K. Ramnoth
1958Avan AmaranTamilThe People FilmsYes
1959MaragadhamTamilPakshiraja StudiosYes
1962Avana IvanTamilS. B. CreationsYesYesYesYes
1964BommaiTamilS. B. CreationsYesYesYesYes
1970Nadu IravilTamilS. B. CreationsYesYesYesYes