Showing posts with label poet. Show all posts
Showing posts with label poet. Show all posts

Tuesday, 27 July 2021

KAVIMANI DESIYA VINAYAGAM PILLAI , POET BORN 1876 JULY 27 -1954 SEPTEMBER 26

 

KAVIMANI DESIYA VINAYAGAM PILLAI , POET

 BORN 1876 JULY 27 -1954 SEPTEMBER 26


கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.



வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 இல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போல வளர்த்தார்.[1][2]

ஆசிரியர் பணி[தொகு]

நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

குழந்தை இலக்கியப் பணி[தொகு]

தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1938 ஆண்டு வெளியான அவருடைய மலரும் மாலையும் தொகுதியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், 7 கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தது. தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது குழந்தைப் பாடல்களில் ஒன்று.[3]

மொழிபெயர்ப்பாளர்[தொகு]

எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.

ஆராய்ச்சியாளர்[தொகு]

ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.[4].

விருதுகள்[தொகு]

Kavimani Desigavinayagam Pillai 2005 stamp of India.jpg

24 டிசம்பர் 1940 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.[5]. 1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.[2]

கவிமணியின் நூல்கள்[தொகு]


கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி தான் தமிழகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ள எஸ். விஜயதாரணி என்பது குறிப்பிடத்தக்கது. 
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பதிலளிக்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக அவர் கூறினார்


* கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் சிலை, மற்றும் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம், அவரது சொந்த ஊரான, நாகர்கோயில் அருகில் உள்ள தேரூரில் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

* இரட்டைமலை சீனிவாசனுக்கு மதுராந்தகத்தில் நூலகத்துடன் ஒரு கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

* பேராசிரியர் முத்தரையருக்கு திருச்சியில் ஒரு கோடி மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். 

* பெனிக்குவிக், வீரன் அழகுமுத்துக்கோன், மா.பொ.சி, சி.பா.ஆதித்தனார் ஆகியோர் பிறந்த நாள்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். காளிங்கராயன் நினைவை போற்றும் வகையில் அரசு விழா நடத்தப்படும் என்றும் அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

Saturday, 17 October 2020

KANNADASAN ,POET,LYRICS DIED OCTOBER 17,1981

 



KANNADASAN ,POET,LYRICS

 DIED OCTOBER 17,1981



"காலமெனும் ஆழியிலும்
காற்று, மழை, ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு...
அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...!

கண்ணதாசன், கம்பனுக்கு எழுதிய கவிதை இது. கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும்.
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (அக்டோபர் 17ம் தேதி) 35வது ஆண்டு நினைவு நாள்.




சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.

செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாவதாகப் பிறந்ததாலோ என்னவோ, கண்ணதாசனுக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் பள்ளிக்கல்வி வாய்த்தது.




சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார்.

ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோவிலிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். பத்திரிகை துறையின் மீது பெரும் நாட்டம் ஏற்பட்டது.

ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டு வந்தார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது ஃபேஷனாக இருந்தது. அதிலும் ”தாசன்” என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. கிடைத்த சில நொடிகளில் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.

கண்ணதாசனின் திறமையைத் தொடர்ந்து கவனித்த பத்திரிகையின் அதிபர், ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.

பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. அவை அப்போதைய இலக்கிய ஆளுமைகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றன.

கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். திரையுலகமே அவர் எழுதும் கவிக்காக காத்துக் கிடந்தது.
ஆசுகவி என்பார்களே... அதைப்போல, கண்ணதாசனிடம் அருவியெனக் கொட்டியது தமிழ். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார் இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.

பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது.

அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். திமுகவில் தொடங்கிய அவருடைய அரசியல் காங்கிரசில் முடிவுற்றது. ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார். அவரின் இயல்புக்கு அரசியல் பொருத்தமாக இல்லை. வெளிப்படையான பேச்சு, ஒரு கொள்கை தவறெனப் படும்போது தயக்கமில்லாமல் மாற்றிக்கொள்ளும் நேர்மை, எதற்கும் அஞ்சாத விமர்சனங்கள்... இதெல்லாம் அரசியலுக்கு சரிப்படவில்லை.
பாடலில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கண்ணதாசன் செல்வத்தில் திளைத்தார். ஆனால், சேமித்து வைக்கும் வழக்கமில்லை. சொந்தப்படங்கள் எடுத்தார். அவை கடனில் தள்ளின.

”பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். இந்து மதம் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு எளிய மொழில் பதில்களையும், அனுபவங்களையும் உள்ளடக்கி அவர் எழுதிய ”அர்த்தமுள்ள இந்துமதம்” தொகுப்பு இன்றளவும் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது.
கண்ணதாசனுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் செய்யத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஆளுமைகள் யாருமில்லை. வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுய சரிதம் ஆகிய 4 நூல்களும் கண்ணதாசனின் சுய சரிதைகள்.

கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர். 15 பிள்ளைகள்.

“கண்ணதாசன் எப்போதுமே பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ள மாட்டார். ஒருநாள் மௌண்ட்ரோடு பக்கமாக காரில் போகும்போது அவரது பாக்கெட்டில் பணம் இருந்தது. உடனடியாக ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி உள்ளே நுழைந்து, ”குழந்தைகளுக்கான உடை வேண்டும்” என்று கேட்டார். கடைகாரர் ”குழந்தைக்கு என்ன வயது?” என்று கேட்டார். கவிஞர் திகைத்து விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, ”நம்ம வீட்டில் எல்லா வயதிலும் குழந்தைகள் உண்டு. எல்லா வயசுக்கும் ஒன்னொன்னு குடுப்பா” என்று சிரித்துக்கொண்டே வாங்கிச் சென்றார்...” என்று கண்ணதாசன் பற்றிய தன் நினைவுகளை சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார் அவரிடம் உதவியாளராக இருந்தவரும் மூத்த இயக்குனருமான எஸ்பி, முத்துராமன்.

கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. அந்தந்த சூழலுக்கேற்ப பாடல் புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை.

ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார்.

”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.

இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம்.

”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்றார் அவர்.

காலமாகி 35 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான்..!
கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்

* கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள். இயக்குனர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம் உதவியாளர்களாக பணியாற்றினார்கள்.

* ”இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே... உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது யார்?” என்று கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது. ”என் தாய் வாசாலாட்சி பாடிய தாலாட்டு தான் என் பாடல்களுக்கு ஆதர்சம்” என்றார் கண்ணதாசன்.

* மெட்டுக்கு இசையமைப்பதையே விரும்புவார் கண்ணதாசன். பெரும்பாலும், வெறும் சூழ்நிலையை மட்டும் கேட்காமல் படத்தின முழுக்கதையையும் கேட்டு, அக்கதையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதுவார். அப்படி அவர் எழுதிய பாடல்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் இயக்கிய பெரும்பாலான ”பா” வரிசைப் படங்களின் பாடல்கள் அப்படி எழுதப்பட்டவை தான்.

* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள் எழுதும்போது மது அருந்தமாட்டார்.

*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன். குறிப்பாக அசைவ உணவுகள். கண்ணதாசனின் மனைவி பார்வதி ஆச்சி மிகச்சிறப்பாக அசைவ உணவுகளை சமைப்பார். அவரது மகள் ரேவதி சண்முகம் சமையல் நிபுணராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

* சேரமான காதலி படைப்புக்காக கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

Image may contain: 2 people, selfie and closeup
Image may contain: 2 people, including Tagi Dada, people smiling
Image may contain: 3 people, including கார்த்திக் ருத்ரன், people smiling
Image may contain: 2 people, people smiling

Thursday, 24 September 2020

PABLO NERUDA ,POET DIED 1904 JULY 12 -1973 ,SEPTEMBER 20

 


PABLO NERUDA ,POET DIED 

1904 JULY 12 -1973 ,SEPTEMBER 20



பாப்லோ நெரூடா died sep 20,1973

காலச்சுவடு, ஆகஸ்ட் 2004


உலகமெங்கும் செத்துப்போன உதடுகள் ஒன்று

கூடுகின்றன. “இறந்துகிடக்கும் உங்கள் உதடுகளுக்காகப் பேச வந்திருக்கிறேன்” 

என்று அறிவித்தவரைப் பற்றி அவை பேசுகின்றன.


பாப்லோ நெரூடாவின்( 1904- 1973) நூற்றாண்டு

இது. காதலர்கள் பரிமாறிக்கொண்ட ரகசியக்

கடிதங்களில் மட்டுமின்றி, புரட்சியாளர்களின் கடைசி

நாட்குறிப்புகளிலும் இடம்பெற்றிருந்தவை அவரது

கவிதைகள் .ஓர் ஓவியனின் பெயரையும்(பாப்லோ பிக்காஸோ)ஓர் எழுத்தாளனின் பெயரையும் (யேன் நெரூடா) கலந்து தனது புனைப்பெயரை உருவாக்கிக்கொண்ட அவரது உண்மையான பெயர் ((Ricardo Eliecer Neftali Reyes

Basoalto) பலருக்கும் தெரியாது. அவர் பிறந்த அடுத்த

மாதமே அவரது தாய் இறந்துவிட, அவரது அப்பா,

நெரூடாவுக்கு இரண்டு வயதானபோது மறுமணம்

செய்து கொண்டார்.




உலகப்புகழ்பெற்ற கவிஞராக அறியப்படும் நெரூடா

முதலில் எழுதியது கட்டுரைதான். அவர் வசித்துவந்த

டெமூகோ என்ற நகரத்தில் பிரசுரிக்கப்பட்டு

வந்த செய்தியேடு ஒன்றில் நெரூடாவின் முதல் கட்டுரை

வெளியானது. அப்போது அவருக்கு வயது பதின்மூன்று.


அதற்கு அடுத்த ஆண்டில் அவர் எழுதிய கவிதைகள்

பிரசுரமாகின. சரியாகப் படிக்கக்கூடத் தெரியாத

வயதில் ஒரு நாள் ஒரு கொந்தளிப்பான உணர்வு.

சில சொற்கள் , அறிமுகமில்லாத சொற்கள் அவருள்

தோன்றின. தினப்படி புழங்கும் சொற்களல்ல அவை.

அதற்குமுன் அனுபவித்திராத உணர்வை அனுபவித்த

நெரூடா தனக்குள் தோன்றிய அந்தச் சொற்களை

ஒரு காகிதத்தில் எழுதிவைக்கிறார். அது தான் அவரது

முதல் கவிதை பிறந்த விதம்.


கவிதை, கட்டுரை, விமர்சனம் எனப் பலவாறாக

எழுதிக் குவித்த நெரூடாவின் ஐம்பதாவது பிறந்தநாள்


கொண்டாடப்பட்டபோது உலகமெங்குமிருந்து

எழுத்தாளர்கள் நேரில் சென்று வாழ்த்தினார்கள் .

தனது இருபத்து மூன்றாவது வயதில் பர்மாவுக்கான

சிலி நாட்டுத் தூதராக நியமிக்கப்பட்ட அவர் சிங்கப்பூர்,

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும்

பணியாற்றினார். அவரது பணியின் காரணமாகவன்றி

அர்ப்பணிப் பின் காரணமாக அரசியலில் அவர்

தீவிரமாக ஈடுபட்டார். அரசியல் அவரது வாழ்வில்

மட்டுமல்ல கவிதையிலும் ஓர் அங்கமாக மாறியது.

இலக்கியம், அரசியல் ஆகியவற்றைப் போலவே

விதவிதமான உணவுகளின் மீதும், பெண்களின் மீதும்

நெரூடாவுக்கு அளவுகடந்த விருப்பம் இருந்தது. அவரது நினைவுக் குறிப்புகளைப் படிக்கும்போது ( Memoirs, Pengu,1978) எந்த விதமான தயக்கமுமின்றி அவர் தனது வாழ்வைத் திறந்து வைத்திருப்பதை நாம்

உணரலாம். “நினைவுக் குறிப்புகளை எழுதும் ஓர்

எழுத்தாளன் நினைவுகூர்பவை ஒரு கவிஞன்

நினைவுகூர்பவை அல்ல.


ஒரு கவிஞன் குறைவாக வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவன் ஏராளமானவற்றைப் புகைப்படம் எடுத்தது போல தன்னுஷீமீ பதிந்துவைக்கிறான். நமக்காக மிகுந்த கவனத்தோடு துல்லியமாக அவற்றை அவன்

மறுஆக்கம் செளிணிகிறான். கவிஞன் அவனது காலத்தின் தீயாலும், இருட்டாலும் அலைக்கழி க்கப்பட்ட பேளிணிகளை ஒரு 'காலரி' நிறைய நமக்குத் தருகின்றான்” என்ற நெரூடா, “நான் எனக்குள் மட்டும் வாழவில்லை; மற்றவர்களது வாழ்வுகளையும் வாழ்ந்திருக்கிறேன்” என்கிறார்.

“வேலைச் சுமைகளை மீறி, கனவுகள் தரும்

இடைவெளிதான் நம்மை எழுந்து நிற்கவைக்கிறது”

என்ற நெரூடாவின் வரிகளை இப்போது மீண்டும்

படிக்கும்போது காப்ரியல் கார்ஸியா மார்க்யெஸ்

நெரூடாவைச் சந்தித்தது பற்றி எழுதியுள்ளது

நினைவுக்கு வருகிறது ((Strange Pilgrims, Joanathan Cape,

London 1993). கனவு காண்பதையே

தொழிலாகக்கொண்ட ஃப்ரா ஃப்ரீடா என்கிற

பெண்ணைப் பற்றி விவரிக்கும் மார்க்யெஸ், அவளை

நெரூடாவுடன் சேர்த்து ஸ்பெயினில் சந்திக்கிறார்.

எல்லோரும் மதிய உணவு உண்டபின் நெரூடா

சிறிதுநேரம் தூங்கச் செல்கிறார். அந்தப் பெண்

அவளது அறைக்குச் செல்கிறாள்

பத்து நிமிடம் தூங்கிவிட்டு நெரூடா

புத்துணர்வோடு வருகிறார்.

“அந்தக் கனவு காணும் பெண்ணை என் கனவில்

பார்த்தேன்” என்றார் அவர். அந்தக் கனவைப் பற்றிச்

சொல்லுங்கள் என்றார் (அவரது மனைவி) மெடில்டா.

கவி ஆளுமை “அவள் என்னைப் பற்றிக் கனவு காண்பதுபோல

நான் கனவு கண்டேன்” என்றார் அவர்.

“இது போர்ஹே எழுதியது போல இருக்கிறது”

என்றேன் நான்.

அவர் என்னைப் பார்த்தார், அவமதிப்படைந்தது

போல அவரது தலை குனிந்திருந்தது “அவர் அதை

ஏற்கனவே எழுதிவிட்டாரா?”

“இதுவரை எழுதவில்லையென்றால் என்றாவது

ஒருநாள் அவர் அதை எழுதத்தான் வேண்டும்”

என்றேன் நான்.

. . . மாலையில் நெரூடா ஊருக்குப் புறப்படுகிறார்.

ஃப்ரா ஃப்ரீடாவும் அதே கப்பலில் கிளம்புகிறாள் .

“நான் உங்கள் கவிஞரை எனது கனவில் பார்த்தேன்.”

வியப்படைந்த மார்க்யெஸ் அவளிடம் அந்தக் கனவு

பற்றிக் கேட்கிறார்.

“ அவர் என்னைப் பற்றிக் கனவு காண்பதுபோலக்

கனவு கண்டேன் என்றாள் அவள் . அதை நான்

நம்பவில்லை என்பதுபோல நான் பார்த்த பார்வை

அவளைக் குழப்பிவிட்டது. ‘நீ எதை எதிர்பார்க்கிறாய் ?

சிலநேரங்களில் நாம் காணும் கனவுகளில் யதார்த்த

வாழ்க்கையோடு எந்தத் தொடர்புமில்லாத ஒரு கனவு

இருக்கக்கூடும்’ என்றாள் அவள் . ஆனால் நெரூடாவின்

கனவுகளிலும் கவிதைகளிலும் வாழ்வோடு

தொடர்பில்லாத எதுவுமே இருந்ததில்லை. “புராதன

விளக்குகளைச் சொற்கள் உரசும் தன் கவிதைகளால்

பற்றவைத்துச் சாதாரண மக்களின் ரத்தத்தையும்

தழும்புகளையும் பார்த்தவர் அவர். நம்மையும் பார்க்கச்

செய்தவர் .”

“(கவிதை) இருளில் நடந்து செல்ல வேண்டும்,

மனிதர்களின் இதயங்களை எதிர்கொள்ள வேண்டும்,

பெண்களின் விழிகளை, தெருக்களில் இருக்கும்

அறிமுகமற்ற மனிதர்களை, நட்சத்திரங்களை ஒளிரும்

இரவின் நடுவில் அல்லது அதிகாலையின்

மெல்லிருட்டில் இருப்பவர்கள் கவிதையின் ஒரே

ஒரு வரியேனும் வேண்டும் என உணர வேண்டும். . .

நாம் அறிந்திராதவற்றுக்குள் நாம் மறைந்துபோக

வேண்டும். அவர்கள் திடீரென்று நம்முடைய ஒன்றைக்

கண்டெடுக்க வேண்டும், தெருவிலிருந்து, மணலிலிருந்து,

அதே காடுகளில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக

வீழ்ந்துகொண்டிருக்கும் இலைகளிலிருந்து. . . நாம்

உருவாக்கிய ஒரு பொருளை அவர்கள் கண்டெடுக்க

வேண்டும். . . அப்போதுதான் நாம் கவிஞர்கள் . அந்தப்

பொருளில் நம் கவிதை வாழும். . .”

நெரூடாவைப் பற்றி எழுதுபவர்கள் அவரது

கொந்தளிக்கும் கவிதை வரிகளால் அடித்துச்

செல்லப்படுவதிலிருந்து தப்பிக்க முடியாது. 1973

செப்டம்பர் 11இல் சல்வடார் அலண்டேயின் அரசு

கவிழ்க்கப்பட்டு அவர் இறந்த பன்னிரெண்டாவது

நாளில் நெரூடா இறந்தார். தனது இளம் வயதில்

தான் எழுதிய கவிதைகளில் கற்பனையாகச்

சித்தரித்திருந்த தனிமை; இறக்கும்போது தன்னையும்,

ராணுவத்தினரால் உடைத்து நொறுக்கப்பட்ட தனது

வீட்டையும் சூழ்ந்திருக்கப் போகிறதென்பது

நெரூடாவுக்குத் தெரியாது.

சிலியில் நடந்த ராணுவப் புரட்சியும்

அலெண்டேயின் மரணமும், நெரூடாவின் இறப்புக்கு

ஒரு துயரார்ந்த பின்னணியைத் தந்துவிட்டன. ஆனால்

அவற்றைத் தாண்டி நெரூடாவை நினைவுகூர

எத்தனையோ அற்புதமான வழிகள் இருக்கின்றன.

நெரூடாவின் நினைவுக் குறிப்புகளைப் படித்து

முடித்தபோது அவரது கனவுகளையும், கவிதைகளையும்,

காதல் அனுபவங்களையும் மீறி என்னுள் ஒரு கேள்வி

உறுத்தியது. காந்தியின் சத்திய சோதனை பெண்களை

எப்படிக் கையாண்டது என்பது நமக்குத் தெரியும்.

அதுபோலவே நெரூடா ‘அனுபவித்த’ பெண்களுக்கும்

சொல்வதற்கு நிறைய இருந்திருக்கும். அதிலும்

குறிப்பாக அவர் பர்மாவிலிருந்தபோது சந்தித்த ஜோஸி

ப்ளிஸ் என்ற பெண்ணுக்கு . ஆங்கிலேயப்

பெண்ணைப்போல உடுத்திக்கொண்டிருந்த,

அதுபோலவே பெயர் வைத்துக் கொண்டிருந்த பர்மியப்

பெண் அவர். நெரூடாவுடன் சேர்ந்து வாழ்ந்தார்.

தன்னை நெரூடா கைவிட்டுவிடுவாரோ என்ற பயம்.

இரவெல்லாம் கத்தியோடு நெரூடாவின் படுக்கையைச்

சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருப்பார். தன்னை மட்டுமே

நெரூடா நேசிக்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு

மந்திரச் சடங்குகளைச் செய்வார் . ‘அதிர்ஷ்டவசமாக’

அந்த நேரத்தில் நெரூடாவுக்கு இலங்கைக்கு மாற்றல்

உத்தரவு வந்தது. ஜோஸியிடமிருந்து தப்பித்து அவர்

இலங்கைக்குச் சென்றுவிட்டார்.

ஆனால் சில நாட்களில் அவரைத்தேடி ஜோஸி

இலங்கைக்கு வந்துவிட்டார். அவரை நெரூடா

வீட்டுக்குள் சேர்க்கவில்லை. எதையும் செய்யக்கூடிய

“love - smitten terrorist” என்று நெரூடாவால்

வர்ணிக்கப்பட்ட ஜோஸி தெருவிலேயே கிடந்து

தோற்றுத் தனது ஊருக்குத் திரும்புவதென முடிவுசெய்து

நெரூடாவை வழியனுப்ப வரும்படி கேட்கிறார். கப்பல்

புறப்படும் நேரம் கண்ணீர் வழிய நெரூடாவை

முத்தமிடுகிறார். அவரது ஷுக்களை முத்தமிடுகிறார்.

ஷு பாலிஷ் ஜோஸியின் முகமெங்கும்

அப்பிக் கொள்கிறது . “அடக்கமுடியாத துக்கம், அவளது

முகத்தில் உருண்ட கண்ணீர்த் துளிகள் இன்னும்

என் நினைவில் பசுமையாக உள்ளன ” என்று கூறுகிறார்

நெரூடா. ஜோஸி ப்ளிஸ்ஸுடனான நெரூடாவின்

உறவில் இரண்டு மனிதர்களின், முரண்பட்ட இரு

கலாச்சாரங்களின் மோதலையே பார்க்கிறோம்.

நெரூடாவிடம் வெளிப்படுகிற ‘ஓரியண்டலிச’

மனோபாவம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

இலங்கையில் நெரூடாவுக்கு ஏராளமான பெண்கள்

கிடைக்கிறார்கள். அவர்களில் பெருபாலானோர்

‘காலனியத்தின் விளைபொருட்கள்’. அதில் ஒரு பெண்

ஒரே இரவில் பதினான்கு பேரைப் புணர்ந்தவள் .

ஆனால் அவள் விபச்சாரியல்ல. எல்லாம் ஒரு

‘ஜாலிக்காக’. அவ்வளவுதான். இப்படிப் பெண்கள்

சுலபமாகக் கிடைத்தாலும் நெரூடா

திருப்திகொள்ளவில்லை . அவரது உடல் இரவு பகல் இடையறாது பெரு

நெருப்பாக எரிந்துகொண்டிருந்தது. பல பெண்கள் தாங்களாகவே

விரும்பி அந்த நெருப்புக்குத் தமது உடல்களைத்

தந்து சென்றனர். போயர் பெண்கள், ஆங்கிலேயப்

பெண்கள், திராவிட ரத்தம் ஓடும் பெண்கள்.

நெரூடா கொழும்பில் வசித்த பங்களா மிகப்

பெரியது. அதன் கழிவறை வெளியே தனியே

அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கழிவறையை யார்

சுத்தம் செய்கிறார்கள்என்பது நெரூடாவுக்குத்

தெரியாது. ஒரு நாள் அது யாரென்பது நெரூடாவுக்குத் தெரியவந்தது. “இலங்கையில் நான் இதுவரை சந்தித்திராத அழகி. ஒரு சிலையைப் போல இருந்தாள்.அவள் ஒரு தமிழ்ப் பெண், பறையர் சாதியைச் சேர்ந்தவள் அவள் சிவப்பும் பொன் நிறமும் கொண்ட

மட்டரகமான புடவையை உடுத்தி இருந்தாள் . கைகளில் கனமான வளையல்கள். அவளது மூக்கின் இருபுறமும் இரண்டு சிறிய சிவப்பு மூக்குத்திகள்

மின்னிக்கொண்டிருந்தன. அவை வெறும்

கண்ணாடிதான் என்ற போதிலும் அவளது

முகத்தில் ரத்தினங்களாக மின்னிக்கொண்டிருந்தன.”

அவளை வசியப்படுத்த நெரூடா பலவித

முயற்சிகளைச் செய்கிறார். எதற்கும் பலனில்லை.

“ஒரு நாள் நேராகச் சென்று அவளது கையைப்

பிடித்தேன், கண்களைப் பார்த்தேன். அவளோடு

பேச என்னிடம் ஒரு மொழியும் இல்லை. ஒரு சிறு

புன்னகைகூட இன்றி அவள் படுக்கையறைக்கு

வந்தாள்.” ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட

தென்னிந்தியச் சிற்பத்தைப் போல அவள் இருந்ததாக

நெரூடா வர்ணிக்கிறார். “அவளைப் புணர்ந்தது ஒரு

சிலையைப் புணர்ந்ததுபோல இருந்தது. கடைசிவரை

அவளது கண்கள் திறந்தபடியே இருந்தன.

அவளிடமிருந்து ஒரு எதிர்வினையும் இல்லை”.

நெரூடாவின் வர்ணனையைப் படிக்கும்போது ஏறத்தாழ நெரூடா 

அப்பெண்ணைக் கற்பழித்தார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

நெரூடாவின் அற்புதமான நினைவுக் குறிப்புகளைப்

படித்து முடித்தபோது (15 ஆண்டுகளுக்கு முன்)

அந்நூலைப் பெண்ணிய நோக்கில் வாசித்தால்

எப்படியிருக்கும் என எண்ணிப் பார்த்தேன்.

நெரூடாவின் நூற்றாண்டிலாவது யாரேனும் அதைச்

செய்ய வேண்டும். ஒரு பெண்தான் அத்தகைய

வாசிப்பைச் செய்ய முடியும் என்பதைத் தனியே

சொல்லத் தேவையில்லை.


Friday, 14 August 2020

BERTOLT BRECHT PLAYWRITER,POET BORN 1898 FEBRUARY 10 - 1956 AUGUST 14





BERTOLT BRECHT PLAYWRITER,POET 
BORN 1898 FEBRUARY 10 - 1956 AUGUST 14



பெர்தோல்ட் பிரெக்ட் (ஆங்கில மொழி: Bertolt Brecht) (/brɛkt/;[2][3] பிறப்பு About this soundஐகன் பெர்தோல்ட் பிரெட்ரிக் பிரெக்ட் (உதவி·தகவல்); 10 பெப்ரவரி 1898 – 14 ஆகத்து 1956) ஓர் செருமானிய கவிஞரும் நாடகாசிரியரும் நாடக இயக்குனரும் ஆவார்.[4]

இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ள பிரெக்ட் நாடக வடிவாக்கலில் புதுமையை மேற்கொண்டு நிகழ்காவிய அரங்கு என்ற நாடக வகையை உருவாக்கினார். பிரெக்டும் அவரது மனைவி ஹெலன் வீகலும் இணைந்து இயக்கிய பெர்லினர் ஆன்செம்பிள் என்ற நாடக கம்பனி பல இடங்களுக்கும் பயணித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[5]

வாழ்கை வரலாறு
பிரெக்ட் 1898 ஆம் ஆண்டு செர்மனிப் பேரரசின் ஆக்ஸ்பர்க் நகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை சிறிய காகித ஆலையொன்றின் நிர்வாக இயக்குநர்; தாயார் பிளேக்ஃபாரஸ்ட் பகுதியில் பணிபுரிந்த ஓர் அரசாங்க அலுவலரின் மகள். முதல் உலகப் போர் தோடங்கியபோது, பிரெக்ட் மாணவராக இருந்தார். அப்போதே இவர் துணிச்சலாகப் போர் எதிர்ப்புக் கொள்கைகளை வெளியிட்டார். மியூனிச் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் பல்கலைக் கழக மரபுகளுக்கு மாறான பணிகளில் ஈடுபட்டதோடு, ஒரே சமயத்தில் பலபெண்களைக் காதலிக்கும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். இவ்வழக்கம் அவர் வாழ்நாளில் இறுதிவரை தொடர்ந்தது.[6]

கல்வியை முடித்துக் கொண்டு, ஜெர்மன் இராணுவ மருத்துவமனையில் சிலகாலம் பணிபுரிந்தார். முதல் உலகப் போர் முடிவுற்றதும் இராணுவப் பணியிலிருந்து விலகி பவேரியப் பொதுவுடைமைப் புரட்சியில் பங்கு கொண்டார். 1933-இல் ரீச்ஸ்டாக் என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின், இவர் ஜெர்மனியை விட்டு வெளியேறினார், ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, ஆகிய நாடுகளில் ஏழாண்டுகள் எளிய வாழ்க்கை மேற்கொண்டு சுற்றித் திரிந்தார். 1941-ஆம் ஆண்டு உருசியநாடு வழியாகப் பயணம் செய்து, அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவை அடைந்தார்.

உருசியாவில் பயணம் செய்த காலத்தில் அந்நாட்டில் ஏற்பட்டிருந்த திட்டமிட்ட முன்னேற்றங்களைக் கண்டு மிகவும் வியப்படைந்தார். தன்னை அறியாமல் இவர் உள்ளம் மார்க்சீயத்தின்பால் ஈர்க்கப்பட்டது. இவருடைய படைப்புக்களில் மார்க்சீயத்தின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டது. அமெரிக்காவில் இருந்த போது, தமது நாடகங்களையும் கவிதைகளையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரங்கேற்ற விரும்பினார். அதில் ஓரளவே வெற்றி பெற்றார். ஹாலிவுட்டில் திரைப்படத் தொழிலில் ஈடுகடத் தீவிரமாக முயன்று அம்முயற்சியைக் கைவிட்டார். 1947-ஆம் ஆண்டு அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கை விசாரணைக் குழுவின் (Un-American Actryities Committee) முன் வருகைத் தரும்படி அமெரிக்க அரசாங்கம் அவரைப் பணித்தது. அக்குழு கேட்ட கேள்விக்குக் குதர்க்கமான வாக்குமூலங்களை வழங்விட்டு, அமெரிக்காவை விட்டு வெளியேறிக் கிழக்கு ஜெர்மனியை அடைந்தார். அங்கு தம் மனைவியோடு சேர்த்து புகழ்மிக்க பெர்லினிய இசைக்குழுவைத் தோற்றுவித்தார்.

கிழக்கு ஜெர்மனி அப்போது ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்த நேரமாகும். ஸ்டாலினிய அதிகாரிகளோடு பிரெக்டால் ஒத்துப் போக முடியவில்லை. அடிக்கடி அவர்களோடு பூசலும், புகைச்சலுமாகவே இவர் இறுதி வாழ்க்கை கழிந்தது. 1956-ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி ஹூகதாட் இடுகாட்டுக் கல்லறையில் அவர் புதைக்கப்பட்டார்.[6]

இலக்கியப் பணிகள்
பவேரியப் பொதுவுடைமைப் புரட்சியில் பங்கு கொண்டபோது. அங்கு பொழுது போக்கு அரங்குகளிலும், விடுதிகளிலும் நாடோடிப் பாடகராகச் சிலகாலம் புகழ்பெற்றார். அன்றையப் பிற்போக்கு நாடகங்களைத் தாக்கிப் பத்திரிகைகளில் விமரிசனம் எழுதினார். பின்னர் இவரே நாடகம் எழுதிப் புகழ் பெறத் தொடங்கினார். 1924 முதல் 1933 வரை பெர்லின் நாடக உலகில் துடிப்போடு இயங்கினார். சிறந்த இசைப் புலவரான 'குர்த்வீல்' என்பாரின் துணையோடு ‘மூன்று பென்னிய இசைநாடகம்’ (The Three Penny Opera) என்ற சிறந்த படைப்பை வெளியிட்டார். அந்நாடகம் பெர்லினில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஜெர்மனியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் அது எல்லாராலும் விரும்பி நடிக்கப்பட்டது. இவர் அமெரிக்காவில் இருந்த போது, தமது நாடகங்களையும் கவிதைகளையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரங்கேற்ற விரும்பினார். அதில் ஓரளவே வெற்றி பெற்றார்.[6]

நாடக ஆசிரியராக விளம்பரம் பெற்ற பிறகே இவர் கவிதை எழுதத் தொடங்கினார். மதம், அரசியல் சமுதாயம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை மக்கள் கண் முன்னால் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு நாடகமே சிறந்த சாதனம் என்பதை இவர் அறிந்திருந்தாலும், அன்றாட உண்மைகளைச் சொல்லோவியங்களாக மாற்றி மக்கள் நாவில் நடமாட விடுவதற்குக் கவிதை விறுவிறுப்பான சாதனம் என்பதையும் அறிந்திருந்தார். பிரெக்ட், கவிதையின் எல்லாச்சட்டதிட்டங்களையும் உடைத் தெறிந்துவிட்டு எழுதினார். சாமான்யர்களிடையில் காணப்பட்ட சாதாரணப் படிமங்களையே (Common Place Images) இவர் தமது கவிதைகளில் கையாண்டார். மேலும் இவர் பாடல்கள் பிரச்சார அடிப்படையிலேயே- குறிப்பாக மார்க்சீயச் சிந்தனை- அமைந்திருந்தன.

யாப்பமைதியோடு கூடிய தன்னுணர்ச்சிப் பாடல்களை இவர் அரிதாகவே எழுதினார். தொடர்களை உடைத்தெழுதும் துண்டுக் கவிதையையே (Official back- verse) இவர் விரும்பிக் கையாண்டார். ப்ரெக்டின் கவிதை முதன் முதலாக வெளியான போது, அதற்குப் பலமான எதிர்ப்பு இருந்தது. அதைக் கவிதையென்று யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் பிரெக்டை ஒரு சிறந்த கவிஞர் என்பதை விட, ஒரு சிறந்த நாடகாசிரியர் என்றே இலக்கியத் திறனாய்வாளர்களுள் ஒரு சாரார் கருதுகின்றனர். மற்றொரு சாரார் சிறந்த கவிஞருக்குரிய எல்லாப் பண்புகளும் பிரெக்டிடம் இருப்பதாக வாதிடுகின்றனர்.[6]


பிரெக்டின் கவிதையாற்றலுக்கு மூலமாக விளங்கியவர்கள் லூதரும், கிப்ளிங்கும் ஆவர். இவர்களையும்விட ஆர்தர் வேலியின் சீனக்கவிதை மொழிபெயர்ப்புகள், பிரெக்டின்மீது அதிகத்தாக்கத்தை ஏற்படுத்தின. அம்மொழிபெயர்ப்புகள் ஒரு புதிய நடையைத் தம்மிடத்தில் தோற்றுவித்துக் கொள்ளப் பிரெக்டிற்குப் பெரிதும் உதவின் இவரும் சில சீனப்பாடல்களை மொழிபெயர்த்ததோடு, அதே பாணியில் தாமே சில கவிதைகளும் எழுதியுள்ளார். சீன மொழிபெயர்ப்புகளின் தொடர்பால் பிரெக்டின் கவிதைகளும் ஹைக்கூவைப் போலவும் டங்காவைப் போலவும், சுருக்கமும் சித்திரத் தன்மையும் பெற்றன. அதற்கு எடுத்துக்கட்டாக இவர் எழுதியுள்ள சிங்கக் கவிதை (To a Chinese Tea Root Lion) குறிப்பிடப்படுகிறது.[6]

மேற்கோள்கள்


அறிவியலின் கதியும் அறிவியலாளனின் நிலையும்
கி.பி பத்தாம் நூற்றாண்டில் பாரசீக அறிஞர் அல்பெருணி அன்றைய இந்தியாவின் சாதி, மதச் சமூகத்தையும் அறிவியல் முன்னேற்றத்தையும் தனது நூலொன்றில் அற்புதமாகப் படம் பிடித்தார்.

பிரெக்ட்
பெர்தோல்ட் பிரெக்ட்
அன்றைய அறிவியலாளர்களான வராகமிகிரர், பிரம்ம குப்தர் இருவரையும் பற்றிக் கூறும்போது, “இவ்வறிஞர்களுக்கு சூரிய – சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது என்பது நன்றாகத் தெரியும். இவர்கள் அறிவியல் விவரங்களைக் கணக்கிட்டு கிரகணம் பற்றித் துல்லியமாக தமது ஆய்வு நூல்களில் விளக்கி வரும் போது திடீரென்று ராகு பாம்பு சூரியனை விழுங்குகிறது என்ற பிராமணர்களின் பழைய நம்பிக்கையைக் குறிப்பிடுகிறார்கள். தனது மனச்சாட்சிக்கு விரோதமாக பார்ப்பனர்களுக்குப் பயந்து இப்படிச் சொல்ல வேண்டியிருப்பது பற்றி,” அல்பருணி வருத்தப்படுகிறார்.

17-ஆம் நூற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த கலிலியோ திருச்சபைக்குப் பயந்து தனது வானியல் ஆய்வுகளைக் கைவிடுகிறார். மனச்சாட்சிக்கு விரோதமான கலிலியோவின் வாழ்வை சமகால நாடகமாக்கியிருக்கிறார், பிரெக்ட் என்ற ஜெர்மனியின் மார்க்சியக் கலைஞர்.

பிரெக்டின் நாடகத்தில் இரண்டு விதமான கலிலியோக்களைக் காண்கிறோம். ஒருவர் மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த உண்மையான கலிலியோ. இவரைத் தெரிந்து கொள்வதற்கு மறுமலர்ச்சிக்கால வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்திருப்பது அவசியம்.

***


பழமையான கிரேக்க நாகரீகம் தான் ஆரம்பகால அறிவியல் சாதனைகளைப் படைத்தது. அரிஸ்டாட்டிலும் அவருக்குப் பின் 5 நூற்றாண்டுகள் கழித்து வந்த தாலெமியும் (கி.பி.2-ஆம் நூற்றாண்டு) பூமியை மையமாக வைத்து சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் சுழல்கின்றன எனும் வானியல் கோட்பாட்டைப் படைத்தனர். பின்பு கிரேக்கத்தின் அறிவுத் துறை வரலாறு அரேபியாவுக்கு இடம் பெயர்ந்தது. அரேபிய அறிவியலாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கிரேக்க அறிவியல் 13-14-ம் நூற்றாண்டுகளில் மீண்டும் ஐரோப்பா வந்தது. அன்றைய உலகின் மையமாக இருந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை தாலமியின் பூமி மைய வானியல் கோட்பாட்டினை வரவேற்று அங்கீகரித்தது.

எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் ஏராளமான சொத்துக்களை வைத்திருந்த திருச்சபை, கல்வி – அறிவியல் -இறையியல் – அரசியல் போன்ற முக்கியத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி, நிலவுடைமைச் சமூகத்தின் பிற்போக்குக் கோட்டையாக விளங்கியது. அதனுடைய இறையியல் பணியும், விவிலிய விளக்கமும் அதற்காகவே பயன்பட்டது. எனவே, திருச்சபை பூமியின் மையம் என்பதை நிறுவ பூமிதான் அண்ட வெளியின் மையம் என்று விளக்கிய தாலமி கோட்பாடு அவர்களின் அங்கீகாரம் பெற்றது. தவறெனச் சொன்னவர்கள் திருச்சபையின் மதவிரோத குற்ற விசாரணைக் குழுவான இன்க்விஸிசன் பயங்கரவாதிகளால் தண்டிக்கப்பட்டார்கள்.

பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற விளக்கிய போலந்து நாட்டுப் பாதிரி கோப்பர் நிக்கஸ் திருச்சபையால் முடக்கப்பட்டார். அதையே உரத்து முழங்கிய இத்தாலியைச் சேர்ந்த ஜோர்தனோ புருனோ நாத்திகன் எனக் குற்றம் சாட்டப்பட்டு எரிக்கப்பட்டார். கோப்பர் நிக்கசின் ஆய்வுப்படி தயாரிக்கப்பட்ட வானியல் வரைபடங்கள், நேரக்கணிப்பு, பஞ்சாங்கம் ஆகியவற்றை ஏற்ற திருச்சபை அவரது கோட்பாட்டை மட்டும் மதவிரோதம் என்று அறிவித்தது.

தனது தொலைநோக்கியின் மூலம் கோப்பர்நிக்கசின் வானியல் கொள்கையை நிரூபித்த இத்தாலியின் கலிலியோவும் திருச்சபையால் சிறை வைக்கப்பட்டார். இறுதியில் தனது ஆய்வையே தவறென மறுக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டார். இருப்பினும் தனது ‘டிஸ்கோர்சியா’ என்ற நூலில் தாலமி கோட்பாட்டை ஆதரிப்பவனுக்கும், கோப்பர்நிக்கசின் கோட்பாட்டை ஆதரிப்பவனுக்கும் நடைபெறும் உரையாடலின் மூலம் தனது கொள்கையை மனிதகுலத்திற்குப் பறைசாற்றிவிட்டு 1642-ம் ஆண்டில் கலிலியோ மடிந்தார்.


கலிலியோ காலத்து ஐரோப்பியச் சமூகம் நவீன கால வரலாற்றின் தொடக்கமும், மனிதகுல வரலாற்றின் திருப்புமுனையும் ஆகும். ரோஜா யுத்தம், சிலுவை யுத்தம் போன்ற பெரும் போர்களினாலும், காலரா-பிளேக் போன்ற கொள்ளை நோய்களினாலும் அக்கால மக்கள் தொகை கணிசமாகக் குறைந்தது. யாரைச் சுரண்டிக் கொழுத்தார்களோ அந்தப் பண்ணையடிமைகளுக்குக் கூட வேலையும், கால்வயிறுக் கஞ்சியும் கொடுக்க முடியாமல் நிலவுடைமை ஆளும் வர்க்கம் திணறியது. பழைய உலகம் அழுகியபோது புதிய உலகமும் பிறப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தது.

கலிலியோ கலிலீ
கலிலியோ கலிலீ
புதிய கடல் வழிகள் அறியப்பட்டன. நீராவி – விசைத்தறி எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிறு, நடுத்தர பட்டறைத் தொழிற்சாலைகள் தோன்றி சந்தைக்கான உற்பத்தியைத் தொடங்கின. வேலை இழந்த பண்ணையடிமைகள் நகரத்தை நோக்கிப் படையெடுத்தனர். அரசியல் அரங்கில் திருச்சபை, நிலப்பிரபுக்கள், பேரரசர்கள் ஒருபுறமும்; சிற்றரசர்கள், வணிகள்கள், பட்டறை முதலாளிகள் மறுபுறமும் முரண்படத் தொடங்கினர். மத அரங்கில் ஜெர்மனியின் மார்டின் லூதர் திருசபையை எதிர்த்து புராட்டஸ்டண்டு மதத்தை தோற்றுவித்தார். திருச்சபையின் மண்ணுலக ராஜ்ஜியத்தில் மூன்றிலொரு பங்கு பிரித்து சென்றது. அறிவியலறிஞர்களினால் விண்ணுலக ராஜ்ஜியமும் தகர்க்கப்பட்டது. நிலவுடைமைச் சமூகத்தை அழித்து 18-ம் நூற்றாண்டில் நடைபெற இருந்த முதலாளித்துவ புரட்சியின் கொதிநிலைக் களனாக இருந்த இக்காலம் ‘மறுமலர்ச்சிக் காலம்’ என்ற வரலாற்றில் புகழப்படுகிறது.

மறுமலர்ச்சிக்கால அறிஞர் பெருமக்களைத்தான் மார்க்சியப் பேராசான் ஏங்கெல்ஸ் மாபெரும் மனிதர்கள் என்று புகழ்ந்துரைக்கிறார். விரிவாகப் பயணம் செய்வதிலும், பன்மொழிப் பயிற்சியிலும், பல்துறைத் திறமைகளிலும் ஈடுபாடு கொண்ட அம்மாமனிதர்கள் பேசியும், எழுதியும், வாளெடுத்தும் தம் காலப் போராட்டத்தில் பங்கேற்றனர். படிப்பறை ஆராய்ச்சி மட்டும் செய்வது அப்போது இழிவாகக் கருதப்பட்டது. இத்தகைய மறுமலர்ச்சிக் கால அறிவியலாளர்களில் கலிலியோவும் ஒருவர்.

எத்தகைய ஒரு புரட்சியினை உருவாக்கப் போகிறோம் என்பதை மறுமலர்ச்சிக்கால மாவீரர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. அவ்வகையில் அவர்கள் வரலாற்றின் கருவியாகச் செயல்பட்டனர். வரலாற்றுணர்வை விளக்குகின்ற தத்துவமும், சமூக அறிவியலும் அப்போது குழந்தைப் பருவத்திலிருந்தன. இயற்கையை, அதன் இயக்கத்தை, தனித்தனித் தோற்றங்களாக மாறா நிலையில் வைத்துப் பார்த்த அன்றைய அறிவு, சமூகத்தை புரிந்து கொள்ளவும் அந்தப் பார்வையையே பயன்படுத்தியது.

எனவேதான் திருச்சபையையும், விவிலியத்தையும் மனதார ஏற்றிருந்த கலிலியோ தன் அறிவியில் ஆய்வுகளை திருச்சபை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை முற்றிலும் அறிந்திருக்கவில்லை. அப்போது முளைவிடத் தொடங்கியிருந்த முதலாளித்துவ சமூகமும், முகிழ்த்து வந்த தெளிவற்ற வர்க்கப் போராட்டமும் கலிலியோவின் குழப்பத்தை நமக்கு உணர்த்தும்.

ஆயினும் பிரெக்டின் இன்னொரு கலிலியோ இத்தகைய குழப்பங்களுக்கு விடை தருகிறார். காரணம் மறுமலர்ச்சி காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரையும், இனிமேலும் வரக்கூடிய ஒரு அறிவியலாளனின் வாழ்க்கை இயக்கத்தை இந்த புதிய கலிலியோவிடம் காண்கிறோம். தத்துவத்திற்கும் – அறிவியலுக்கும், அறிவியலுக்கும் – சொத்துடமை வர்க்கச் சமூகத்திற்கும், தூய அறிவியல் விதிகளுக்கும், சமூக அறிவியலின் தேவைகளுக்கும், உள்ள முரண்பாடுகளை பொருத்தமான காட்சியமைப்புகளுடனும், அழகான நகைச்சுவையுடனும், இயல்பான துணைப் பாத்திரங்களின் சித்தரிப்புடனும் பிரெக்ட் இந்நாடகத்தைப் படைத்திருக்கிறார்.

தத்துவத்தை உயிராகவும் நடைமுறையை உடலாகவும் கொண்ட மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டத்தைக் கற்றுத் தேர்ந்த ஒருவரே இத்தகைய வரலாற்றுணர்வு கொண்ட, கலையழகு மிளிருகின்ற ஒரு இலக்கியத்தைப் படைக்க முடியும். பிரெக்ட் அந்நாடகத்தில் வரலாற்றுக் கலிலியோவை இன்றைய நவீன அறிவியலாளனையும் இணைத்து ஒன்றாகப் படைத்திருப்பதன் காரணம் என்ன?

மேற்கண்ட முரண்பாடுகளிலிருந்து அறிவியலின் ஆரம்பகால அவஸ்தையையும், நவீன அறிவியலின் அவலநிலையையும், நேர்மறையில் ஒரு அறிவியலாளனது இலக்கணங்கள் என்ன என்பதையும் வாசகர்கள் உணர வேண்டும் என்பதே நாடகத்தின் கருவும், நாடகாசிரியரின் நோக்கமும் ஆகும்.

***

அறிவுத் தேடலுக்காக அல்ல ஆடம்பரக் கனவுகளுக்காகவே கல்வி என்பதற்கு இன்றைய கணினி மோகம் ஒரு எடுத்துக்காட்டு. அன்றோ அந்த மோகம் அறிவியலாக இருந்தது. தனக்கு விருப்பமில்லாமல் தாயாரின் தொந்தரவிற்காக அறிவியல் கற்க வரும் பணக்கார வாலிபனிடம் கலிலியோ கேட்கிறார். ‘இயற்பியலை ஏன் கத்துக்கணும்? குதிரை வளர்ப்பைப் பத்தி படிக்கலாமே?’
கலிலியோவின் தொலைநோக்கியை வைத்து பார்க்கம் கனவான்களில் ஒருவர், ‘இனி மொட்டை மாடியில் நம் வீட்டுப் பெண்கள் குளிக்கக் கூடாது’ என்கிறார். மற்றொருவர் தொலைவில் படகில் தெரியும் மீனை பொரித்துச் சாப்பிட்டால் எப்படியிருக்கும் என்கிறார். இன்னுமொருவர் தொலைநோக்கிக்கு என்ன விலை வைக்கலாம் என்று வியாபாரக் கணக்குப் போடுகிறார். வானியல் ஆய்வுகளுக்குப் பயன்பட வேண்டிய தொலைநோக்கி ஒரு விளையாட்டு – வியாபாரப் பொருளாக பயன்படுவது பற்றி கலிலியோ நொந்து கொள்கிறார். இன்றும் பழிவாங்கும் அமெரிக்க டயனோசர்கள், வீட்டு வேலை செய்யும் ஜப்பானிய ரோபட்டுகள், ஜாதகம் கணிக்கும் இந்தியக் கம்ப்யூட்டர்கள், ஆஸ்திரேலிய யானை குட்டி போட்டதை உலகச் செய்தியாக காட்டும் தொலைக்காட்சிகள் என இந்த விளையாட்டு தொடருகிறது. அதனால்தான் ஒரு அறிவியலாளன் தன் ஆய்வையே ஒரு வியாபாரமாக செய்வதற்கு மட்டும் சுதந்திரம் உண்டு என்று கலிலியோ புலம்புகிறார்.
தொலைநோக்கி மூலம் பால்வெளி மண்டலத்தின் நட்சத்திரக் கூட்டத்தை நண்பனுக்குக் காட்டுகிறார் கலிலியோ. ‘திருச்சபையின் அறிவை எதிர்க்கும் இந்தக் காட்சியை யார் நம்புவார்கள்’, நண்பர் கவலையடைகிறார். “நாளைக்கு பயணம் என்றால் இன்று தன் சுமையிழுக்கும் கழுதைக்கு ஒரு கட்டுப் புல்லை அதிகமாகப் போடும் கிழவி, மழை வருவதை உறுதி செய்து கொண்டு தலையில் குல்லா போடும் பள்ளிச் சிறுவன் என சாதாரண மக்கள் – தங்கள் வாழ்க்கையில் பகுத்தறிவைப் பயன்படுத்தும் பாமரர்கள், அறிவியல் ஆய்வுகளை நிச்சயம் ஏற்பார்கள்”. நம்பிக்கை கொள்கிறார் கலிலியோ, திருப்தியுறாத நண்பரோ, ‘உன்னைப் பார்க்கும் போது சிதையின் மேல் நிற்பது மாதிரி தெரியுது’ (புருனோவை திருச்சபை எரித்ததை நினைக்கிறார்) என்று பதறுகிறார்.தொலைநோக்கி
வானியல் ஆய்வுகளுக்குப் பயன்பட வேண்டிய தொலைநோக்கி ஒரு விளையாட்டு – வியாபாரப் பொருளாக பயன்படுவது பற்றி கலிலியோ நொந்து கொள்கிறார்.
இங்கே சமஸ்கிருதத்தைப் போல ஐரோப்பாவில் லத்தீன் ஆதிக்கம் செலுத்திய காலம். கலிலியோவின் சீடரும், கண்ணாடிக்குச் சாணைபிடிக்கும் தொழிலாளியுமான ஒருவருக்கு லத்தீன் தெரியாது. அறிஞர் பெருமக்கள் லத்தீனில் விவாதிக்கும் போது கலிலியோ நமது மொழியிலேயே (இத்தாலிய மொழி) விவாதிக்க வேண்டும் என மல்லுக்கட்டுகிறார். அறிஞர்களோ அறிவின் மேன்மையே பாழ்பட்டுவிடும் என்று பார்ப்பனர்களைப் போல சாபமிடுகிறார்கள். போப்பிடம் பேசும் இன்க்விசிஷன் தலைவனொ, ‘இந்தக் கயவன் கலிலியோ தன் வானசாஸ்திர நூல்களை லத்தீனில் எழுதாமல் செம்படவச்சி பாஷையில், ஆட்டுரோமம் விற்பவர்களின் பாஷையில் எழுதுகிறான்’ என கோபம் கொள்கிறான்.
தன் ஆய்வு வசதிக்காக அருகாமை நாட்டிற்கு குடிபெயர விரும்பும் கலிலியோ அந்நாட்டின் அரசனுக்கு (10 வயது சிறுவன்) முழு அடிமைத்தனத்தோடும் மிகுந்த பணிவுடனும் ஒரு கடிதம் எழுதுகிறார். பின்பு ‘என்னை மாதிரி ஒருவன் கவுரவமான பதவியை அடையணும்னா குப்புறப்படுத்து கும்புடு போடறதைத் தவிர வழியில்லப்பா’ என்று விளக்கம் தருகிறார். பில்கேட்சை இதயக் கோவிலில் வழிபடும் கணினி இளைஞர்கள், இந்த விசயத்தில் மட்டும் கலிலியோவை மிஞ்சுகிறார்கள்.
அரிஸ்டாட்டிலின் விளக்கம் தவிர வேறு எதையும் ஏற்கமாட்டோம் என்று தொலைநோக்கி வழியாகக் கோள்களை பார்க்க மறுக்கும் அறிஞர்களிடம், ‘உண்மைகள் பிறப்பது அதிகாரத்தின் அதட்டலிலிருந்து அல்ல; நடைமுறை அனுபவங்களிலிருந்தே அவை உதிக்கின்றன’ என்று சீறுகிறார் கலிலியோ. “பண்டிதராகிய நீங்கள் உங்களின் பத்தாம்பசலித்தனமான கருத்துக்களை கைவிட வேண்டும்” அவரது சீடரான கண்ணாடித் தொழிலாளியும் வாதிடுகிறார்.
தங்களது அறிவார்ந்த விசயங்களில் ஒரு தொழிலாளி எப்படித் தலையிடலாம் என்று கோபமடையும் அறிஞர்களிடம், பல்வேறு உழைக்கும் பிரிவினரிடம் தான் கற்றுக் கொண்டதைப் பட்டியலிடும் கலிலியோ, அம்மக்கள் மட்டுமே ஐம்புலன்களையும் பட்டறிந்து உண்மைகளை ஏற்பவர்கள், அந்த உண்மைகள் தங்களை எங்கு கொண்டு செல்லுமோ என்று கவலை கொள்ளாதவர்கள் என்கிறார். இன்றும் அறிவை அதிகாரத்தோடு பயன்படுத்தும் கல்லூரிப் பேராசிரியர்களும் அரசு அதிகாரிகளும் சாதாரண மக்களை ஆட்டு மந்தையாகவும், கீழ்பணிவையே கடமையாகக் கொண்ட அடிமைகளாகவும்தானே கருதுகிறார்கள்!
பிளேக் நோயின் வருகையினால் நகரமே காலியாகிறது. காலி செய்ய இயலாத ஆதரவற்றவர்களுடன் கலிலியோவும் தங்குகிறார். தனது ஆய்வை விட்டகல அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் “எந்த வசதியுமில்லாத இந்தியாவில். தம்மாத்துண்டு சம்பளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்” என்று அமெரிக்கா போவதை நியாயப்படுத்துகிறார்கள் ஐ.ஐ.டி.யின் இளம் விஞ்ஞானிகள்.
“மனித குலத்தைச் சுமந்திருக்கும் இப்பூவுலகை அண்டவெளியின் ஒரு சாதாரண கோளாக்கி பூலோகத்தையும், பரலோகத்தையும் வேறுபாடில்லாமல் ஆக்கிவிட்டீர்களே, இன்னும் சில நாட்களில் மனிதனும் மிருகமும் ஒன்றுதான் என்று கூறுவீர்களோ” என்று கேட்கும் பாதிரி ஒருவனுக்கு கலிலியோ தரும் பதில் சுவாரசியமானது! எப்போதும் சட்டைப் பையிலிருக்கும் தனது கல்லைக் கீழே போட்டு, “இல்லை சுவாமி (மனிதனுக்கும் கீழோ இந்த அற்பக்கல்) இது… எப்படிக் கீழே விழ முடியும்? அதை நான் மேலே எழும்பச் செய்கிறேன்” என்று குனிந்து எடுக்கிறார். பொறுக்க முடியாத பாதிரி தரும் பதில் ‘திமிர் பிடித்த பன்றி’
அறிவியல் ஆர்வம் காரணமாக கலிலியோவின் மாணவராகிறான் ஒரு இளம் பாதிரி. தனது பெற்றோரைப் போன்ற பரம ஏழைகள் தமது துன்ப துயரங்களைப் பொறுத்துக் கொண்டு வாழ்வது எதனால், இவையெல்லாம் விதி எனக் கற்பித்து ‘நம்பிக்கை’யளிப்பது விவிலியமும், திருச்சபையும் தானே, அவற்றைக் கேள்வி கேட்டால் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் எப்படி ‘அமைதியாக’ வாழ முடியும், என்று வாதிடுகிறான் அந்த மாணவன். அது அறியாமையின் அமைதி, தனது தொலை நோக்கி கொண்டு கோள்களை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தையும் நெருக்கமாகப் பார்க்கும் மக்கள் தங்கள் துயரங்களுக்குக் காரணம் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள், ‘ஐயம்கொள் ஆய்ந்து பார்’ என்ற நமது ஆய்வுமுறை அவர்களுக்கு இகலோக விடுதலையைக் கொண்டுவரும் என வேறு ஒரு இடத்தில் பதிலளிக்கிறார் கலிலியோ.
“நமது ஆய்வு உண்மையாக இருந்தால் நம்முடைய உதவியில்லாமல் அது வெற்றியடையணுமே” என்கிறான் மாணவன். “இல்லை, நாம் எந்த அளவு வெற்றி பெறுகிறோமோ அந்த அளவுக்கே உண்மையும் வெற்றி பெறும்” என்கிறார் கலிலியோ. அதற்கு மக்களிடமிருக்கும் ‘புனிதமான பொறுமையை’ ‘நியாயமான கோபமாக’ மாற்ற வேண்டும். இந்த உண்மை தெரியாமல் இருப்பவன் முட்டாள்; தெரிந்தே பொய் என்று சொல்பவன் அயோக்கியன் என்று சினமடைகிறார் கலிலியோ.
‘ஹெரெஸ் என்ற கவிஞனின் பாடல் ஒன்றில் ‘இருக்கை’ என்ற சொல்லை போடச் சொன்னால் அந்தக் கவிஞன் சம்மதிப்பானா? என்னுடைய பிரபஞ்சக் கோட்பாட்டில் வளர்ச்சி – தேய்வு இல்லாத ஒரு வெள்ளிக் கோளைக் கொண்டு வந்து பொருத்தினால் என்னுடைய அழகியல் உணர்வு புண்படாதா என்று அறிவியலின் விதியை அழகியலோடு உவமை சேர்த்து ஒரு கவிதைக் கேள்வியைக் கேட்கிறார் கலிலியோ.
“அவர்கள் சிரிக்கும் போது எனக்கு வயிறு கலங்குகிறது, ஏன் அப்படிச் சிரிக்குறீர்கள் புரியவில்லையே” கலிலியோவின் வேலைக்காரம்மாள் கேட்கிறார். “குருமார்களுக்கு ஆலய மணி ஒலிப்பது எப்படியோ அப்படித்தான் இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு சிரிப்பு என்று அப்பா அடிக்கடி கூறுவார்” பதிலளிக்கிறார் கலிலியோவின் மகள். ஆன்மீகத்தின் பொய்யொழுக்கமும், அறிவியலின் உண்மைக் கொண்டாட்டமும் அழகிய முரண் உவமையாகச் சேர்ந்திருக்கக் காரணம். இரண்டும் இருபிரிவினரிடத்தில் கொண்டிருக்கும் முக்கியத்துவம் தான்.
“நமது ஆய்வை முழு நம்பிக்கையோடு அல்ல, ஓரளவு நம்பிக்கையோடு தான் தொடங்க வேண்டும். நமது ஊகமும், முடிவுகளும் மாறலாம். ஒவ்வொன்றையும் துருவித் துருவித் திரும்பத் திரும்பக் கேள்விகளை எழுப்ப வேண்டும். இன்று சரி எனக் கண்டதை நாளையே மறுக்க வேண்டி வரலாம். நமது வேகம் நத்தையைப் போல மாறலாம். இறுதியில் தோற்றுப் போய் குப்புற விழலாம். சோர்வு வரலாம். ஆயினும் மீண்டும் மீண்டும் ஆய்வு. அதுவே நமது தெளிவான இறுதி முடிவைத் தரும். அப்போது அதை எதிர்ப்பவர்களை இரக்கம் காட்டாமல் எதிர்ப்போம்” என்று அறிவியல் ஆய்வில் வழிமுறையைக் கூறுகிறார் கலிலியோ. தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள உறவைப் புரிந்து, முரணை வென்று வரும் புரட்சி நமது நினைவுக்கு வருகிறது.
திருச்சபையின் வீட்டுச்சிறைக் கண்காணிப்பில் தனது இறுதி நாட்களைக் கழிக்கும் கலிலியோ தனது பழைய மாணவனைச் சந்திக்கிறார். தன்னைப் பற்றியும், அறிவியலைப் பற்றியும் சுயவிமரிசனம் செய்கிறார். “மனிதகுலத்தின் சுமைகளைக் குறைப்பதுதான் அறிவியலின் ஒரே இலக்காக இருக்க வேண்டும். அறிவியல் அறிவியலுக்கே என்று தூயகலைவாதம் பேசினால் அறிவியல் முடங்கிவிடும்; நமது கண்டுபிடிப்புகளும் மனித குலத்தை அடக்குவதற்கும், பின்னடையச் செய்வதற்கும் தான் பயன்படும்; இத்தகைய அறிவியலாளர்களின் வெற்றிக் குரல் மனிதகுலம் பயத்தால் எழுப்பும் கூக்குரலாக எதிரொலிக்கும்.”
“அறிவியலாளனான எனக்கு ஒரு வாய்ப்பிருந்தது. என்கால அறிவியல் சாதாரண மக்களையும் சென்றடைந்தது. இந்த அரிய சூழ்நிலையில் நான் ஒருவன் உறுதியாகப் போராடியிருந்தால் அது மாபெரும் விளைவுகளை உருவாக்கியிருக்கும், மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் ‘ஹிப்போக்ரெடசின் உறுதி மொழி’ போன்று அறிவியலாளர்களும் மனிதகுல மேன்மைக்காக மட்டுமே எங்களின் ஞானத்தைப் பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி மேற்கொள்ளும் நிலை உருவாகியிருக்கும். ஆனால் இன்றைய நிலையில் எதற்கு வேண்டுமானாலும் தங்களை விற்றுக் கொள்ளும், சில்லறைச் சுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் அடிமை விஞ்ஞானிகளின் ஒரு தலை முறையை நாம் எதிர்பார்க்கலாம். அவ்வளவுதான்… என்னுடைய தொழிலுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன். என்னைப் போன்ற துரோகிக்கு அறிவியலாளர்களின் குழுவில் இடமில்லை”

***

பிரெக்டின் நாடகத்திலிருந்து எதைச் சொல்வது எதை விடுவது என்ற குழப்பத்தாலும், பக்க அளவு கருதியும் இந்நூலறிமுகத்தை முடித்துக் கொள்கிறோம். இத்தகைய கருத்துச் செறிவான நூலை விறுவிறுப்புடனும், நயத்துடனும், அதே சமயம் எளிமையுடனும் தி.சு.சதாசிவம் மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கும் இந்த அரிய நூலை வெளியிட்ட அலைகள் பதிப்பகத்தாருக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். நாடகத்தைச் செறிவுடன் உணரும் வாசகருக்கு ஏராளமான முக்கியமான செய்திகள் இருக்கின்றன. அதற்கு கீழ்க்கண்ட நூல்களைச் சேர்த்துப் படிப்பது பயனளிக்கும்.

ஏங்கெல்சின் ‘இயற்கையின் இயக்கவியல்’ என்ற கட்டுரை.
ஏங்கெல்சின் ‘கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்’ என்ற கட்டுரை.
நவீன ஐரோப்பிய வரலாறு.
ஜார்ஜ் தாம்சனின் ‘மனித சமூக சாரம்’
மாவோவின் ‘அறிவுத் தோற்றம்’ பற்றிய கட்டுரை.
நாடகத்தைப் படித்து முடித்ததும் வாசகர்கள் சிந்திக்க வேண்டிய விசயங்களும் நிறைய இருக்கின்றன. அன்று திருச்சபையால் கட்டி வைக்கப்பட்ட அறிவியல் இன்று எதனால் கவ்வப்பட்டிருக்கிறது? இன்று கோள்களின் சுழற்சி உட்பட ஏராளமான அறிவியல் உண்மைகள் மக்களுக்குத் தெரிந்திருந்தால் அறியாமையும், மூடநம்பிக்கையும், ஏழ்மையும் இன்னும் ஏன் அகலவில்லை? இந்தக் கேள்விகளுக்கு உங்களால் விடை காண முடிகிறாதா?

இல்லையென்றால் மீண்டும் நாடகத்தைப் படியுங்கள்.


– வேல்ராசன்