Posts

Showing posts with the label TOP POSITION

JEYALALITHA ,CAPTURED TOP POSITION ,IN A DAY , SENIOR MEMBERS HARDLY DIGEST

Image
JEYALALITHA ,CAPTURED TOP POSITION ,IN A DAY ,  SENIOR MEMBERS HARDLY DIGEST  மீண்டும் ஒரு பழங்குடி சொல்லாடலில் இருந்தே துவங்குகிறேன். “உங்களது ஆழ் மனது விருப்பங்கள்தான் உங்களை இயக்குகிறது. அதுதான் உங்கள் ஆளுமையை தீர்மானிக்கிறது. ஆழ் மனது விருப்பங்கள் விளக்கு அல்ல... அது தான் பாதை” - இது பரம்பிக்குளம் பகுதியில் நான் சந்தித்த பழங்குடி ஒரு மிக நீண்ட உரையாடலுக்குப் பின் கூறியது. இந்த சொல்லாடல் மிகச் சரியாக ஜெயலலிதாவுக்கு பொருந்திப் போகிறது. ஆம், ஜெயலலிதாவுக்கு எப்போதுமே அரசியல் மீது ஆழ் மனதில் விருப்பம் இருந்திருக்கிறது. அந்த விருப்பம்தான் அவரை இயக்கி இருக்கிறது. அதுதான் அவர் ஆளுமையை வடிவமைத்திருக்கிறது. அந்த விருப்பம் அமைத்துக் கொடுத்த பாதையில் பயணித்து தான் அரசியலில் அவர் இந்த உயரங்களைத் தொட்டு இருக்கிறார். அவர் நடிக்கத் தொடங்கிய காலத்தில் அளித்த ஒரு பேட்டியில், “நான் சினிமாவுக்கு வராவிட்டால், அரசியலுக்குத் தான் வந்திருப்பேன்...” என்றார். சினிமாவில் பிஸியாக இயங்கியபோதும், அரசியல் மீதான அவரது காதல் உயிர்ப்புடன் தான் இருந்திருக்கிறது. ‘நீங்கள் அரசியலில் முழு மூச்சுடன...