WORLD WOMAN`S DAY -MARCH 8 THE HISTORY OF TEARS
WORLD WOMAN`S DAY -MARCH 8 THE HISTORY OF TEARS உலக மகளிர் தினம் - கண்ணீர்களின் வரலாறு - ரங்கோலி, ஃபேஷன் ஷோ நடத்தவா உருவானது மகளிர் தினம்?... மார்ச் மாதம் தொடங்கியதுமே மகளிர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி அழைப்பிதழ்களை ஏராளம் பார்க்க முடியும். அவற்றில் பல கோலப்போட்டி, ஃபேஷன் ஷோ, பாட்டுப் போட்டி, ரங்கோலி எனப் போட்டிகளின் அணிவகுப்பாகவே இருக்கும். மகளிர் தினம் உருவான வரலாற்றைத் தெரிந்துகொண்டால், இதுபோன்ற போட்டிகளை நடத்த மாட்டார்கள் என்றே நம்பலாம். மகளிர் தினம் பற்றிப் பல வரலாறுகள் சொல்லப்பட்டுவருகின்றன. அவற்றை எல்லாம் அலசி, தெளிவான ஒரு நூலை எழுதியிருக்கிறார் இரா.ஜவஹர். அதனால்தான் நூலின் பெயரையே, 'மகளிர் தினம் உண்மையான வரலாறு' என்று வைத்திருக்கிறார்.......... அழகிப் போட்டிகளைப் பெரு நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்துக்கான தளமாக மாற்றிவரும் சூழலில், மகளிர் தினமும் அந்தப் பாதிப்பு வளையத்துக்குள் சென்றுக்கொண்டிருக்கிறது. மகளிர் தினத்தன்று நடத்தப்படும் அழகுப் போட்டிகளுக்கு ஏராளமான பொருள்செலவு செய்யப்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள்மூலம் பணம் ஈட்டும் வணிகம் வழியாக மகளிர...