DISTANCE RELATIVES தூரத்து சொந்தங்கள் [சிறுகதை]
தூரத்து சொந்தங்கள் [சிறுகதை] DISTANCE RELATIVES . By ரெங்கசுப்ரமணி ”வர்ற மாசி மாசம், எட்டாந்தேதி நம்ம அருள்மிகு கதலி சீனிவாச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கமிட்டி கூட்டம் நடக்குதுங்க, எல்லாரும் வந்து கலந்துக்கங்க” டமடமடமடம… கதலி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், வைகை நதிக்கரை ஓரமாக இருக்கும் சின்ன ஜம்புலிபுத்தூரில் இருக்கும் கோவில். ஜம்புலிபுத்தூரில் இருப்பது கதலி நரசிம்மர், இவர் கதலி ஸ்ரீநிவாசர். விஸ்வநாத நாயக்கன் காலத்தில் பிரிக்கப்பட்ட ஜமீன் என்பார்கள் இல்லை இது சொக்கநாதன் காலத்தில் பிரிக்கப்பட்டது என்பார்கள். ஆனால் இன்று பெயருக்கு ஜமீன்தார் மட்டுமே இருக்கின்றார். “வழக்கம் போல ஜமீன்தார் லோகன்துரைதான் திருவிழா கமிட்டி தலைவர், பெருமாள் கணக்குவழக்கு பாத்துப்பாரு, மந்தைய கவுண்டர், குருணை வெள்ளை, ஆண்டவர் மூணு பேரும் நிதி வசூல்” “எல்லா ஜாதிக்கட்டு வரியும் வந்திருச்சி” “அம்பி ஐயங்கார் கிட்ட மறுபடியும் நினைவு படுத்துங்க, அவர் பாட்டுக்கு கொடியேத்தம் அன்னிக்கி கடைய திறந்து வச்சிட்டு உக்காந்துரப் போறாரு” “கொடிக்கயிறு வாங்க வேண்டாமா” “அதுக்குதான் நாளைக்கு மந்...