Posts

Showing posts with the label HISTORY / BIOGRAPHY

RAJINIKANTH HISTORY / BIOGRAPHY

Image
  RAJINIKANTH HISTORY / BIOGRAPHY சில ஆண்டுகளுக்கு முன் ரஜினி ரசிகர் ஒருவர், சூப்பர் ஸ்டாரை உங்களுக்கு என்ன தெரியும் என்று நம்மை பார்த்து நக்கலடிக்க, அடேய் நாங்க பார்த்த ரஜினியே வேறடா என்று சொல்லி பிறந்தநாளுக்கு என இந்த பதிவை போட்டோம்.   அண்ணாமலை, பாட்சா ரஜினியை தெரியும், இதெல்லாம் உனக்கு தெரியுமாடா என்று பொங்கியதின் விளைவு இந்த பதிவு.. படிச்சு பாக்கணும் என்பது உங்கள் தலையெழுத்து என்றால்  படியுங்கள்.. படிக்க ஆரம்பிக்கும்போது ஷேவ் பண்ணியிருந்தால் முடிக்கும் போது கண்டிப்பாக தாடி வளர்ந்திருக்கும். இன்றைக்கு ஒரு படத்தின் பட்ஜெட்டே 540 கோடி ரூபாய்.. தமிழ்ச்சினிமாவில் ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியாய் முப்பதாண்டுகளுக்கு வெளிவந்த ஒட்டு மொத்த படங்களின் பட்ஜெட்டை ஒன்றாக சேர்ந்தால்கூட மேலே சொன்ன 2.0 பட்ஜெட்டுக்கு வராது.. 1960 களின் இறுதியில் பெங்களுரில் பள்ளிப்படிப்பு முடிந்து மேற்கொண்டு படிக்க விரும்பாமல், சுயமாய் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியான மனநிலை… மூட்டைக்கு 10 பைசா கூலி என அரிசி மூட்டை தூக்கியும், ஆபிஸ் பாயாகவும் வேலைபார்த்த ஒரு சாதாரண இளைஞன்தான் இன்றைக்கு 540 கோடி பட்ஜெட்...