KERALA CINEMA GAINED POPULARITY DUE TO DIRECTION TECHNIQUE
KERALA CINEMA GAINED POPULARITY DUE TO DIRECTION TECHNIQUE கேரளத் திரையுலகம், வேறு தளத்திற்கு நகர்வதை ஒரு தொடர் நிகழ்வாகவே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. 80களில் மலையாளத் திரைப்படம் பார்ப்பவன் என்றால் கேவலமாகப் பார்த்த நிலை போய், இன்று நல்ல திரைப்படம் என்றால் அங்கிருந்துதான் சாத்தியம் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் வந்த உஸ்தாத் ஹோட்டல், இந்தியன் ருபி, டயமண்ட் நெக்லேஸ், 22 ஃபீமேல் கோட்டயம் போன்றவை ஒரு வகை என்றால் தற்போது வந்திருக்கும் மகேஷிண்டே பிரதிகரம், கம்மாட்டி பாடம், ஒழிவு திவசத்தே கழி, அங்கமாலி டயரீஸ் எல்லாம் வேறு விதம். அதிலும் ஒழிவு திவசத்தே களி மாதிரி ஒரு படம் இந்தியத் திரையுலகில் சாத்தியமாவெனத் தெரியவில்லை. நண்பர்கள் சிலர் ஒரு தேர்தல் விடுமுறையன்று ஒரு பிக்னிக் போவதும் அங்கு நடைபெறும் சம்பவங்களே திரைப்படம். எவரும் தொழில் முறை நடிகர்கள் அல்ல. மிக மெதுவாக நகரும் திரைக்கதை உச்சம் பெற்று அதிர்ச்சிகுள்ளாக்குகிறது. மகேஷிண்ட பிரதிகரம் ஒரு சாதாரண பழிவாங்கும் கதை. அதற்காக கதாநாயகன் பறந்து பறந்து தாக்குவதெல்லாம் இல்லை. அத்தகைய கதாநாய...