KOLUKKU MALAI , TOURIST SPOT OF MADURAI
மதுரை: 8,000 அடி உயரம், சூரிய உதயம், சிறந்த தேனீரின் ருசி... குளு குளு கொழுக்குமலைக்கு ஒரு ட்ரிப்! வழியில் கண்களுக்கு எட்டிய தூரம்வரை தேயிலைத்தோட்டம்தான் காட்சியளிக்கும். அத்தேயிலை தோட்டங்களுக்கு நடுவே, சத்தமில்லாமல் நகர்ந்து செல்லும் மேகக்கூட்டங்களை ரசித்தபடியே, ஜீப் பயணத்தைத் தொடரலாம். வளர்ச்சி, வசதி, வர்த்தகம் என்ற பெயரில் இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்கள் அதன் தன்மை மாற்றப்பட்டு செயற்கை முலாம் பூசப்பட்டு வரும் நிலையில், இன்னும் தன் சுயத்தை இழக்காமல் இயற்கையின் அற்புதங்களை தாங்கி நிற்கும் அதிசயமான இடங்கள் மதுரைக்கு அருகில் இருக்கின்றன. இயற்கையை ரசிக்கவும், நல்ல காற்றை சுவாசிக்கவும், இதற்காக நேரம் அதிகமானாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்களுக்கு பேரின்பத்தை தரும் சுற்றுலாத்தலம்தான் கொழுக்கு மலை! தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கொழுக்குமலை, கடல் மட்டத்திலிருந்து 7900 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கை தன் கருணையை அதிகம் பொழிந்த இம்மலை, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இயற்கையான முறையில் தேயிலை வளரும் தோட்டங்களாக மாற்றப்பட்டது. நம் தொழிலாளர்கள் சிந்திய விய...