Showing posts with label RAKUL. Show all posts
Showing posts with label RAKUL. Show all posts

Thursday, 7 November 2019

RAKUL PREET SINGH ,INDIAN ACTRESS BORN 1990 OCTOBER 10



RAKUL PREET SINGH ,INDIAN ACTRESS 
BORN 1990 OCTOBER 10




ரகுல் பிரீத் சிங் (பிறப்பு 10 அக்டோபர் 1990) ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாதிரியாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறைகளில் பணிபுரிகிறார்.[4] இவர் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.[5]

கன்னட திரைப்படமான கில்லி (2009) படத்தில் நடித்து அறிமுகமான போது, கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார். 2011 இல் அவர் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தில் வந்தார்.[6][7][8][9]

தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார்.

வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் (2013), தற்போதைய தெகா (2014), ரஃப் (2014), ரஃப் (2014), லூகிம் (2014), கிக் 2 (2015), புரூஸ் லீ - தி ஃபைட்டர் (2015), நன்னகு பிரேமதா (2016), த்ருவா (2016), ஸ்பைடர் (2017) மற்றும் தீரன் திகாரம் ஒன்று (2017) முதலிய படங்களில் நடித்தார். செல்வராகவன் இயக்கத்தில் தயாராகி வரும் என். ஜி. கே திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார்.


ஆரம்ப வாழ்க்கை

புது தில்லியில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்.[10] ரகுல் தவுலா கவுன் இராணுவ பள்ளியில் பயின்றார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் இயேசு மற்றும் மேரி கல்லூரியில் கணித பாடங்களைப் படித்தார்.[11][12]

தொழில்
அறிமுகம் (2009-2014)

மெஹ்பூப் படப்பிடிப்பகத்தில் ரகுல் பிரீத் சிங்
ராகுல் ப்ரீட் சிங் எப்போதுமே ஒரு நடிகையாக கனவு கண்டதாகக் கூறினார். 18 வயதிலேயே மாடலிங்கில் தனது தொழிலை தொடங்கினார்.[13] 2009 இல், கன்னட திரைப்படமான கில்லி , செல்வராஜனின் 7 ஜி ரெயின்போ காலனி ரீமேக்கில் ரீமேக் திரைப்படத்தில் நடித்துள்ளார்.[14] "சிறிய பணத் தொகையை சம்பாதிக்கலாம்" என்று படத்தில் அவர் கையெழுத்திட்டார் என்றும், "தென்னிந்திய திரைப்படங்கள் எவ்வளவு பெரியவை என்று தெரியவில்லை" என்றும் கூறினார்.[14] தனது பட்டப்படிப்பை முடித்து, 2011 ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் போட்டியிடும் முன் நடித்த பாத்திரத்திற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[15]
கோலிவுட் மற்றும் பாலிவுட் என சினிமா துறை உலகில் கலக்கி கொண்டிருப்பவர் நடிகை ரகுல் பிரித் சிங். தற்போது ரகுல் பிரித் சிங் அவர்கள் நடிகர் ரகுல் அடிக்கடி வெளியே செல்வதாகவும், டேட்டிங் செய்வதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றன. பாகுபலி வில்லன் நடிகர் ராணா அவர்கள் சில காலங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகையான திரிஷாவுடன் டேட்டிங் செய்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
ஆனால், திடீரென்று இவர்களுடைய காதல் டைட்டானிக் கப்பல் போல் மூழ்கியது. மேலும், இதுகுறித்து நடிகை த்ரிஷாவிடம் கேட்டபோது திரிஷா அவர்கள் கூறியது, நான் ராணாவை காதலிக்கவில்லை. மேலும்,நான் ராணாவுடன் நட்பு முறையில் தான் பழகி வந்தேன் என விளக்கம் அளித்தார். மேலும், திரிஷா கூறியதை நடிகர் ராணாவால் ஏற்றுக்கொள்ள முடிந்ததோ? இல்லையோ?ஆனால், ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அதன் பிறகு நடிகை தமன்னாவுக்கு ராணாவுக்கும் கிசு கிசு உள்ளதுஎன இணையங்களில் பரவியது. இந்நிலையில் தமன்னாவும் ராணாவை நான் காதலிக்கவில்லை என்று நைசாக நழுவி விட்டார். காதலிக்கவில்லை நடிகை ரகுல் பிரீத் சிங் நடிகர் ராணாவை காதலிப்பதாக சில காலமாகவே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ரகுல் பிரீத் சிங்கிடம் கேட்டபோது அவரும் நான் ராணாவை காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறுகின்றார். இதைக் கேட்டவுடன் ரசிகர்கள் மனது சுக்குநூறாக நொறுங்கியது என்று கூட சொல்லலாம். இதுகுறித்து நடிகை ராகுல் பிரீத் சிங் அவர்கள் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, நானும் ராணாவும் நல்ல நண்பர்கள். அதுமட்டுமில்லாமல் நடிகர் ராணா என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் அதாவது என்னுடைய விடும் அவருடைய வீடும் அருகில் தான் உள்ளது.

நான் திரையுலகிற்கு நுழைந்த முதல் நாள் அன்றே ராணாவை எனக்கு நல்லா தெரியும். அப்போது இருந்தே நாங்கள் நெருங்கிய நண்பர்கள். தற்போதைய சூழலில் நான் வேலையில் நண்பர்கள். பிசியாக உள்ளேன் தவிர எனக்கு காதலிக்க நேரமில்லை. அதுமட்டும் இல்லாமல் இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. குறிப்பாக நான் சிங்குலாக தான் இருக்கிறேன் என கூறியுள்ளார். மேலும்,நடிகை ரகுல் பிரீத் சிங் ‘தடையர தாக்க’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு ஸ்பைடர்,தீரன், என்ஜிகே, என்னமோ ஏதோ,தேவ் ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் ‘sk 14’ என்ற படத்திலும், உலக நாயகன் கமலஹாசனின் ‘இந்தியன் 2 படத்திலும்’ நடித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.





மதுபானக்கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கும் இளம் நடிகை!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், வைரலாகி வந்த அவரது வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கார்த்தி, சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் சாலையை க்ராஸ் செய்யும் புதிய வீடியோ இணையத்தில் வெளியானது. அவர் மதுபானக்கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி செல்வதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டது. இதையடுத்து ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''வாவ்.., மெடிக்கல் ஷாப்பில் மதுபானங்கள் விற்கிறார்கள் என்பதை நான் இதுவரையிலும் அறிந்ததில்லை'' என நச் ரிப்ளை கொடுத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ் குவிந்து வருகிறது.