Posts

Showing posts with the label GAUTHAMA

GAUTHAMA BUDDHA DIED FEBRUARY 8, 483 B.C

Image
  GAUTHAMA BUDDHA DIED FEBRUARY 8, 483 B.C பௌத்த சமயத்தில் பரிநிர்வாணம் (parinirvana) என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும்.[1][2] காந்தார நாட்டுச் சிற்பம்கௌதம  புத்தரின்  மகாபரிநிர்வாணத்தை  விளக்கும் காந்தார நாட்டுச் சிற்பம்,  காலம் 2-3-ஆம் நூற்றாண்டு புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.[3] புத்தர் மகாபரிநிர்வாணம் அடையும் நிகழ்வை விளக்கும்  சிற்பம், விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் புத்தரின் மகாபரிநிர்வாணக் காட்சி கௌதம புத்தர் குசிநகரில் தமது 80வது அகவையில் படுத்த கோலத்தில் மகாபரிநிர்வாணம் அடைந்தார். அப்பரிநிர்வாணக் காட்சி குசிநகரில் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

GAUTHAMA NEELAMBARAN ,WRITER BORN 1948 JUNE 14- SEPTEMBER 14,2015

Image
GAUTHAMA  NEELAMBARAN ,WRITER BORN 1948 JUNE 14- SEPTEMBER 14,2015 கௌதம நீலாம்பரன் (இயற்பெயர்: க. கைலாசநாதன், சூன் 14, 1948 - செப்.14,2015) தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் புதின எழுத்தாளர் ஆவார். இவரது முதல் சிறுகதை, புத்தனின் புன்னகை, சுதேச மித்திரனில் 1970 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[1] இதனைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வரலாற்றுப் புதினங்கள், வானொலி மற்றும் தொலைக் காட்சி நாடகங்கள் என பல படைப்புகளை ஆக்கியுள்ளார். தீபம், இதயம் பேசுகிறது, ஞானபூமி, ஆனந்த விகடன், குங்குமம், குங்குமச் சிமிழ் போன்ற இதழ்களில் இவர் பணியாற்றியுள்ளார். இந்த இதழ்களில் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் வருகையை பெரிதும் ஊக்குவித்தார். 'முத்தாரம்' வார இதழில் இவர் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இத்தொடர் பின்னர் புத்தர் பிரான் என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.[2] இவரது வரலாற்று புதினங்களான சேது பந்தனம், மன்னன் மாடத்து நிலவு, ஈழவேந்தன் சங்கிலி, பல்லவன் தந்த அரியணை, வெற்றித் திலகம், விஜய நந்தினி, பல்லவ மோகினி, மாசிடோனிய மா...