NELLIYAAN ,PALAIYUR FREEDOM FIGHTER SHOT DEAD 1918 AUGUST 16 - 1942 AUGUST 12
NELLIYAAN ,PALAIYUR FREEDOM FIGHTER SHOT DEAD 1918 AUGUST 16 -1942 AUGUST 12 பாலையூர் தீரன் நெல்லியான் அவர்களின் 78 வது நினைவஞ்சலி : இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஆங்கிலேயப் படையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பாலையூரைச்சேர்ந்த கொத்தரியா வீடு தீரன் நெல்லியான் அவர்கள் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவுத்தூணுக்கு மாலையணிவித்து பாலையூர் இளைஞர்கள் மற்றும் அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். 12.8.1942-ல் தடையை மீறி காரைக்குடியில் இன்றைய காந்தி சதுரங்கம் பகுதியில் போராட்டத்தில் பலர் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க தடியடி நடத்தியும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அதில் 24 வயதே ஆன பாலையூர் தீரன் நெல்லியான் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தார். இவரது நினைவாக நினைவுத் தூண் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் பாலையூர் பகுதியில் இருந்து எண்ணற்ற இளைஞர்கள் ஜோதி எடுத்து வந்து சுதந்திர போராட்ட வீரரை வணங்குவர்...