EE .VE . RAA .PERIYAAR DIED 1973 DECEMBER 24
EE .VE . RAA .PERIYAAR DIED 1973 DECEMBER 24 சமூகத்தின் சமத்துவவாதி ஈ.வே.ரா! தமிழகத்தின் போற்றப்படும் தலைவர்களில் பெரியார் மிக முக்கியமானவர். அவரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகள் சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை களைந்துள்ளது. மூட நம்பிக்கைகளை உடைத்தெரிந்து ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கப் போராடியவர் ஈ.வெ.ராமசாமி பெரியார். அவரின் நினைவு தினமான இன்று அவரை நினைவு கூறுவோமே! இளமைக் காலம் ஈ. வெ. இராமசாமி பெரியார் 1879ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவரின் சீர்த்திருத்தக் கொள்கைகளில் முக்கியமானது பெயருக்குப் பின்னர் உள்ள சாதியை நீக்குவது.தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். நவம்பர் 13ஆம் தேதி 1938ல் சென்னையில் நடந்த 5000க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துகொண்ட தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிலேயே ‘பெரியார்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டார். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல்...