SIVAJI KILLED AFSAL KHAN 1659 NOVEMBER 10
SIVAJI KILLED AFSAL KHAN 1659 NOVEMBER 10 ச த்ரபதி சிவாஜியின் மனதிற்குள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மாற்றம் என்பது வாழ்வின் மறுபெயர் என அவர் எண்ணிக்கொண்டிருந்தார். குறுகிய காலத்தில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுவிட்டது? 1659 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 5 ஆம் நாள் அவரது மனைவி சயிபாய் காலமானார். துக்கம் ஆழ்ந்த நிலைமை. அரசவையாளர்கள் அனைவரின் உள்ளங்களும் துக்கத்தால் கனத்திருந்தன. மகாராஜா துக்கத்தால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார் என்று அவர்கள் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சிவாஜியோ தனது பணியில் முனைந்திருந்தார். ஒருவேளை அவர் தன்மனதில் இப்படி சொல்லிக் கொண்டிருக்கக்கூடும், சகோதரா மரணம் என்பது அனைவரது வாழ்விலும் நிகழ்கின்ற இயற்கையான நிச்சயமான நிகழ்வு. அதற்கு இவ்வளவு ஏன் கவலைப்பட வேண்டும். அவள் என் அன்பு மனைவி என்பது உண்மைதான். அழுவதால் மட்டும் என் மனைவி திரும்பக் கிடைப்பாளா? அழுவதற்கு எனக்கு நேரம் எங்கே இருக்கிறது? இங்கே உயிரினும் மேலான கடமை உணர்வு என்னை உந்துகிறது. தேச, தர்ம காரியங்கள் காத்துக் கிடக்கின்றன. சிவாஜி காட்டிய மன அமைதியும் தீர்மானமா...