J.C.DANIEL ,BEESMA OF MALAYALAM CINEMA BORN 26 FEBRUARY 1900 - 1975 APRIL 27
J.C.DANIEL ,BEESMA OF MALAYALAM CINEMA BORN 26 FEBRUARY 1900 - 1975 APRIL 27 . மாற்று சினிமாக்களின் களமாக விளங்கும் மலையாள சினிமாவின் முதல் கலை வாசலை திறந்து வைத்தவர் தமிழர் என்பதை நம்ப முடிகிறதா..? ஆம். நம்பிதான் ஆக வேண்டும். மலையாளத்தில் விகதகுமாரன் எனும் முதல் திரைப்படத்தை உருவாக்கியவர் ஜெ.சி டேனியல். படத்தின் தயாரிப்பு, இயக்கம், கதை, படப்பிடிப்பு, படத்தொகுப்பு மற்றும் கதநாயகனாகவும் நடித்திருந்தார். கேரளத்தின் தென்பகுதியான திருவிதாங்கூரில் நடத்தப்பட்ட டேனியலின் முன்னோடி முயற்சியில் இப்படம் எடுக்கப்பட்டது. அன்றைய திருவிதாங்கூர் பகுதி இன்றைய தமிழ்ப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியது. மலையாள சினிமாவின் தந்தையாக மதிக்கப்படும் டேனியல் பிறப்பால் தமிழர் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த நெய்யாற்றின்கரையில் 26.2.1900-ல் ஞானாபர்னம் ஜோசப் டேனியல் ஞானாம்பள் தம்பதியினாருக்கு ஏழாவது மகனாக பிறந்தார். பின்பு 1904-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்திஸ்வரத்தில் குடியேறினார். பள்ளி படிப்பையும் அங்கேயே பயின்றார். பின் உயர்கல்விக்காக திருவன...