Monday 27 April 2020

J.C.DANIEL ,BEESMA OF MALAYALAM CINEMA BORN 26 FEBRUARY 1900 - 1975 APRIL 27






J.C.DANIEL ,BEESMA OF MALAYALAM CINEMA 
BORN 26 FEBRUARY 1900 - 1975 APRIL 27


.

மாற்று சினிமாக்களின் களமாக விளங்கும் மலையாள சினிமாவின் முதல் கலை வாசலை திறந்து வைத்தவர் தமிழர் என்பதை நம்ப முடிகிறதா..? ஆம். நம்பிதான் ஆக வேண்டும். மலையாளத்தில் விகதகுமாரன் எனும் முதல் திரைப்படத்தை உருவாக்கியவர் ஜெ.சி டேனியல்.  படத்தின் தயாரிப்பு, இயக்கம், கதை, படப்பிடிப்பு, படத்தொகுப்பு மற்றும் கதநாயகனாகவும் நடித்திருந்தார்.

கேரளத்தின் தென்பகுதியான திருவிதாங்கூரில் நடத்தப்பட்ட டேனியலின் முன்னோடி முயற்சியில் இப்படம் எடுக்கப்பட்டது. அன்றைய திருவிதாங்கூர் பகுதி இன்றைய தமிழ்ப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியது.

மலையாள சினிமாவின் தந்தையாக மதிக்கப்படும் டேனியல் பிறப்பால் தமிழர் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த நெய்யாற்றின்கரையில் 26.2.1900-ல் ஞானாபர்னம் ஜோசப் டேனியல் ஞானாம்பள் தம்பதியினாருக்கு ஏழாவது மகனாக பிறந்தார்.

பின்பு 1904-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்திஸ்வரத்தில் குடியேறினார். பள்ளி படிப்பையும் அங்கேயே பயின்றார். பின் உயர்கல்விக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் சேர்ந்து படித்தார்.


1924-ம் ஆண்டு தனது வாழ்க்கை துணையான ஜானெட்டை இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.


திரைப்படக் கலை மீதான பெரும் ஆர்வத்தால் அதில் ஈடுபட முயற்சி மேற்கொண்டார். அன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் தெரிந்த புராணக்கதைகள், நல்லத்தங்காள் போன்ற தொன்மக் கதைகள் நடகமாகப்பட்டிருந்தன.

ஆனால் டேனியல் தற்காப்புக் கலையான களரியில் ஆர்வமும் பயிற்சியும் பெற்றிருந்த அவர், மக்களிடையே களரி குறித்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைப்படம் ஒன்றையே இயக்க விரும்பினார்.

தனது நிலங்களை விற்று நிதி திரட்டி பம்பாய்க்கும் சென்னைக்கும் சென்று சினிமா அறிவைத் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அன்றைய சமூகத்தில் அதற்கு மதிப்பு இருக்கவில்லை. அது கீழான செயலாகக் கருதப்பட்டது.


'பம்பாயில் கோவிந்த பால்கே சினிமா பிடித்துப் பணக்காரராகியிருக்கிறார். மதராசில் நடராஜ முதலியாரும் முதல் சினிமா எடுத்துப் பெரிய ஆளாகியிருக்கிறார். திருவிதாங்கூரில் அதைச் செய்து இந்த ஜெ.சி. டேனியல் பெரிய ஆளாவேன்' என்று மனைவி ஜானெட்டிடம் செல்லுவர்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஜெ.சி. டேனியல் தன்னுடைய பகுதியான திருவிதாங்கூரில் முதல் மலையாளப் படத்தைத் தயாரிக்க முயன்றார்.

அக்கால கட்டத்தில் படம் பிடிப்பதே பெரிய விஷயமாய் இருந்திருக்கும். அதிலும் ஒரு பெண்ணை நடிக்க வைப்பது என்பது ஜெ.சி. டேனியல் முன்பிருந்த மிக பெரிசாவலாகும்.


படத்தில் நடிக்கும் பெண்ணை  இழிவாகப் பார்க்கப்படும் நேரம் அது.

அரும்பாடுபட்டுத் திரைப்படத் தயாரிப்பைத் தொடங்கிய டேனியலுக்குக் கலை சார்ந்த சமூகப் பிரச்சனையாக முன் நிற்பது இந்த ஒவ்வாமை.

படத்தில் நடிக்கப் பெண்ணைத் தேடி அலுத்துபோய் உள்ளூர்ப் பெண்ணான ரோசம்மாவை நடிக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால், ரோசம்மா தீண்டப்படாத சாதி என்று முத்திரை போடப்பட்ட தாழ்த்தப்பட்ட இனப் பெண்

டேனியல் படமாக எடுக்க விரும்பும் படத்தின் கதையில் அவளுக்கு அளிக்கப்படுவது உயர் சாதியான நாயர் பெண்ணின் பாத்திரம். அதை படக் குழுவில் இருக்கும் ஒருவரே எதிர்க்கிறார்.

சினிமாவில் தீண்டாமையும் விலக்கும் இல்லை என்று நம்பும் டேனியல் அவரை சரோஜினி என்ற நாயர் பெண்ணாக நடிக்கவைத்துப் படப்பிடிப்பை முடிக்கிறார்.

திருவாங்கூர் நேஷனல் பிக்சர் இந்த படத்தை தயரித்தனர். படத்தை ஜெ.சி. டேனியல் திருவனந்தபுரத்தில் உள்ள கேபிடல் தியேட்டரில் நவம்பர் 7 1928 திரையிட்டார்.


படத்தின் முதல் திரையிடலே அலங்கோலமாகியது. தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த பெண் நடிப்பது மட்டுமல்லாமல் உயர் சாதிக்காரியாக வேடம் கட்டுவதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று சாதிய சமூகம் சீறியது.

அதுமட்டும்மல்லாது ரோசியாக மாறிய ரோசம்மாவைக் கொல்லவும் விரட்டியது. உயிர் தப்பி ஓடும் ரோசி பின்னர் என்ன ஆனார் என்று அறிய முடியாமல் போனது. மலையாள சினிமாவின் முதல் நாயகி தனது முகத்தைத் திரையில் பார்க்கவே முடியாமல் மறைந்து போனார்.  

இந்த சம்பவம் தந்த கசப்புக்கும் தோல்விக்கும் பிறகு கடனாளியான டேனியல் பல் மருத்துவம் கற்று மருத்துவத் தொழில் ஈடுபட்டார். வசதியான வாழ்க்கைக்கு திரும்பிய அவரை, மீண்டும் சினிமா ஈர்த்தது.

மீண்டும் கைப்பொருள் இழந்து வறுமைக்குள் விழுந்தார். மனைவியைத் தவிர மக்களும் சுற்றமும் அவரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகுகியது. டேனியல் தனது எஞ்சிய வாழ்நாளை அகஸ்தீஸ்வரத்திலும் பாளையங்கோட்டையிலும் வறுமையில் கழித்தார்.

திரைப்படக் கலை மீதான பெரும் ஆர்வத்தால் அதில் ஈடுபட்ட டேனியல் அவர் கனவு கண்டபடி பெரும் செல்வந்தராகவோ புகழ் பெற்றவராகவோ ஆகவில்லை. சாபக்கேடாக கலைஞனை ஒட்டிக் கொள்ளும் வறுமையில் தள்ளப்பட்டார். கடனாளியாகித் தலைமறைவாக வாழ்ந்தார். அவரது முன்னோடி முயற்சி அடையாளம் காணமல் போனது.

கடைசி காலத்தில் மனைவி ஜானெட் மட்டும் அவருக்கு உறுதுணையாக இருந்தார். இந்திரா காந்தி பிரதமாராக இருந்த போது டேனியலுக்கு ஒரு விருது கிடைத்தது. அந்த விருதுக்காக சந்தோஷம் அடையும் நிலையில் இல்லை. வெறும் ஓரு துளி கண்ணீர் மட்டும் அந்த விருதை வரவேற்றது.

மாதம் வெறும் அரசிடம் இருந்து வரும் 300 ரூபாய்காக காத்திருந்து காத்திருந்து அது வராமல் போனது தான் கொடுமையின் உச்சம். 1975 ஏப்ரல் 29-ம் தேதி இயற்க்கையாகவே மரணம் எய்தினார்.

அதன்பிறகு வெளிவந்த மலையாள சினிமா எல்லாம் ஜெ.சி டேனியலின் வழி வந்த முயற்சியின் பரிணாம வளர்ச்சியே. ‘விகதகுமாரன்' படத்தின் பிரதிகள் அழிந்து போயிருக்கின்றன. அப்படி ஒரு படம் எடுக்கப்பட்டதற்கான நிலையானஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற காரணத்தால் அவரது முன்னோடி முயற்சி புறக்கணிக்கப்படுகிறது.

ஆனால் உண்மையான காரணம் ஆதாரமில்லை என்பதல்ல. பேசாப்படமாக எடுக்கப்பட்ட ஒன்றை எப்படி முதல் மலையாளப் படம் என்று சொல்வது? இரண்டாவது அதை எடுத்தவர் ஒரு தமிழர். மூன்றாவது ஒரு மாபெரும் கலையின் முன்னோடி, சாதியில் குறைந்த நபர். அவரை எப்படி முன்னிறுத்துவது?

மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கமலின் 'செல்லுலாய்ட்' திரைப்படத்தின் தமிழ் மாற்று 'ஜெ.சி. டேனியல்'. இந்தியத் திரைப்பட நூற்றாண்டைச் சிறப்பிக்கும் நோக்கில் மலையாளத்தின் முதல் திரைப்படத்தை உருவாக்கிய ஜெ.சி.டேனியலுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அவரைப் பற்றி படம் எடுத்தார்.

இந்திய சினிமாவின் ஆரம்ப முயற்சிகளை ஒப்பிடும்போது டேனியலின் ‘விகதகுமாரன் ' பல விதங்களில் உண்மையாகவே முன்னோடி முயற்சிதான்.

தொடக்க கால இந்தியப் படங்கள் பெரும்பான்மையும் புராணக் கதைகளை மையமாகக் கொண்டவை. டேனியலின் படம் சமூக நாடகத்தை மையமாகக் கொண்டது.

ஆரம்ப காலப் படங்களில் பெண் வேடங்களில் ஆண்களே நடித்தனர். அல்லது விலைமாதர்களே அந்தப் பாத்திரங்களை ஏற்றனர்.

ஒரு பெண்ணைத் திரைப்படத்தில் பங்கேற்கச் செய்த முதல் இயக்குநர் டேனியல் மட்டுமே. ‘கலைக்குச் சாதியில்லை' என்ற தனது நம்பிக்கையை அழுத்தமாக உணர்த்த அன்றைய தீண்டத்தகாத சாதிப் பெண்ணை நடிக்க வைத்த பெரும் துணிவும் அவருக்கே உரியது.

அவரது துணிவைப் பொது சமூகம் உதாசீனப்படுத்தியது என்ற குற்ற உணர்ச்சியையும் அதற்குக் கழுவாயாக அவரை ஒரு மாநில மொழி சினிமாவின் தந்தையாக இன்று போற்றுகிறது. அது ஏனோ கேரளா  அரசு அவருக்கான உரிமையை வழங்க மறுத்தது.
.



ஜெ.சி.டேனியல் ! மலையாள சினிமாவின் தந்தை ஒரு தமிழர்

ஜெ.சி.டேனியல் - மறக்கப்பட்ட தமிழரின் மரியாதைக்குறிய பதிவு! ஆம் ஆண்டு மலையாளத்தின் முதல் அசையும் திரைப்படமான ‘விகட குமாரன்’ படத்தை எடுத்தவர் தமிழரான ஜெ.சி.டேனியல். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய
பணக்காரர் இவர்(கன்னியாக்குமரி மாவட்டம்
அப்போது கேரள மாநிலத்துடன் இணைந்திருந்தது.  சினிமாவின் மீது உள்ள காதலால் பம்பாய்க்கும், மதராஸுக்கும் சென்று சினிமா கற்றுக்கொண்டு தன் சொத்துக்களை எல்லாம் விற்று சொந்தமாக ஒரு கேமரா வாங்கி தன் சொந்த ஸ்டூடியோவை கேரளாவில் துவங்கினார். இந்தியிலும், தமிழிலும் இதிகாசங்களும் புராணங்களும் திரைப்படங்களாக வந்த நேரத்தில் வாழ்வியலை சொல்லும் சமுகம் சார்ந்த கதையை திரைப்படமாக எடுத்தார் ஜெ.சி.டேனியல். இந்த திரைப்படத்தில் நாயகியாக யாரும் நடிக்கவராத காரணத்தால் கேரளாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்படுகிற சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் தெருக்கூத்துக் கலைஞரை நாயகியாக நடிக்க வைத்தார். இந்த திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்தும் இருந்தார்.


திரைப்படத்தில் கதாநாயகி நாயர் சமூகத்தை சேர்ந்தவராக சித்தரிக்கப்பட்டிருந்தது. ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை எப்படி உயர்ந்த சமூகத்தை சேர்ந்த பெண்ணாக நடிக்க வைக்கலாம் எனக் கூறி அப்போதிருந்த ஆதிக்க சமூகத்தினர் இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என தடுத்து நிறுத்தினர். மூன்று காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்ட அந்த படத்தை தயாரித்த ஜெ.சி.டேனியல் தன் சொத்துக்கள் பறிபோனதால் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த படத்தின் பிரதிகள் எரிக்கப்பட்டதால், மலையாளத்தின் முதல் சினிமாவை எடுத்தவர் ஜெ.சி.டேனியல் என்ற பதிவு இல்லமலே போனது. அவர் தமிழர் என்ற காரணத்தால் ஜெ.சி.டேனியலுக்கு சேரவேண்டிய மரியாதையை கேரள அரசாங்கம் கொடுக்க மறுத்தது. இந்த உண்மையை தெரிந்துகொண்ட ஒரு பத்திரிக்கையாளர் எடுத்த முயற்சியால், இப்போது கேரள அரசாங்கம் ஜெ.சி.டேனியலை மலையாள சினிமாவின் தந்தையாக ஏற்றுக்கொண்டுள்ளது. ஜெ.சி.டேனியல் பெயரில் வருடம் ஒருமுறை விருதும் வழங்கப்படுகிறது. 

படம் எடுப்பதற்காக ஜெ.சி.டேனியல் எடுத்த முயற்சிகளையும், படம் எடுத்த பின்னர் அவர் பட்ட துன்பங்களையும் தான் வெள்ளித்திரையில் விளக்குகிறது பிருத்விராஜ், மம்தா உட்பட பலர் நடித்திருக்கும் ஜெ.சி.டேனியல் திரைப்படம். மலையாளத்தில் ரிலீஸாகி 7 மாநில அளவிலான விருதுகளை வென்ற இத்திரைப்படத்தை தற்போது தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்< இத்திரைப்படத்தில் இடம்பெறும் ’காற்றே காற்றே’, ’அம்மாடி நான்’ என்கிற பாடல்கள் மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்றதோடு தமிழிலும் பல ரசிகர்களை கவந்துள்ளது

No comments:

Post a Comment