Tuesday 21 April 2020

FILM NEWS ANANDAN 1928 JANUARY 1 - 2016 APRIL 21







FILM NEWS ANANDAN  
1928 JANUARY 1 - 2016 APRIL 21



பிலிம் நியூஸ் ஆனந்தன் ஒரு வரலாற்று பெட்டகம் என்றும், ஒவ்வொரு பத்திரிகையாளரும் அவரை போல் வரவேண்டும் என்றும் நடிகர் கமலஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் பிலிம் நியூஸ் ஆனந்தனின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமலஹாசன், பிரபு, விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், திரை உலகத்தில் பிலிம் நியூஸ் அனந்தனின் உழைப்பு ஈடு செய்ய முடியாதது என்று தெரிவித்தார். 

பல லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அவர் சேர்த்து வைத்த தகவல்களை மீண்டும் பெற முடியாது என்று தெரிவித்த கமல், ஒவ்வொரு பத்திரிகையாளரும் அவரைபோல் வரவேண்டும் என்றும், அவரிடமிருந்து பத்திரிகைகள் வாங்கிய சிறு, சிறு தகவல்களை எல்லாம் திருப்பி தந்தால் அவர் சேகரித்த பொக்கிஷங்களை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். 


பிலிம் நியூஸ் ஆனந்தன்
உழைப்பு உயர்வைத் தரும்

இது
கலைமாமணி

பிலிம் நியூஸ் ஆனந்தனைப் பற்றிய தொகுப்பு

55 ஆண்டு கால திரைஉலக சேவை

P.R.O தொழில் உருவாகியது எப்படி? - பிலிம்நியூஸ் ஆனந்தன்

பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது கதை வசனம் எழுதுவது வழக்கம். இதுவே எனது கலை ஆர்வத்திற்கு வித்து. சிறுவயது முதல் புகைப்படம் எடுக்கும் ஆர்வம். எனது யுக்தியால் இரட்டைவேடப்படம் பாக்ஸ் கேமிராவில் எடுத்தேன். இதைக்கண்ட என்.எஸ்.கே.யின் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், ஒளிப்பதிவு செய்யும் கலையை எனக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் கூறிய யோசனைப்படி விலையுயர்ந்த ஸ்டில் கேமிராவை வாங்கி படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.

1954ல் பிலிம்சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பை பற்றிப் செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டேன். திரைக்கலைஞர்களை கேமராவில் படம் பிடித்தேன்.

எனது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த பிலிம்நியூஸ் பத்திரிகையில் நான் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் ஆனந்தன், பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறினேன்.

நடிகர் சங்கத்தின் நடிகன் குரல் பத்திரிகையின் போட்டோ - ஜர்னலிஸ்ட் - ஆக மாறினேன். அதன் ஆசிரியர் வித்வான் வே.லட்சுமணன், நடிகன் குரலின் பதிப்பாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். அவர்களை தினமும் சந்திப்பார். அவருடன் நானும் செல்வேன்.

1958 எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அலுவலக மேளாளராக இருந்தவர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது அன்நாளைய வழக்கம் “ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” - என்று கேட்டேன். “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர். பாராட்டினார். P.R.O. என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு காரணமானது இந்த சம்பவம் தான்.

பத்திரிகை ஆசிரியராக பணிபுரிந்து

1) எனது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜ் நடத்திய பிலிம் நியூஸ் பத்திரிகையில் நிருபராகவும் புகைப்பட கலைஞராகவும் பணிபுரிந்தது(1954) ஆனந்தன் - பிலிம் நியூஸ் ஆனந்தனாக மாறியதற்கு காரணமானவர்.
2) ஸ்டார் வாய்ஸ்(வார இதழ்) ஆசிரியராக பணிபுரிந்தது. வெளியிட்டவர் மயிலை குருபாதம் (தயாரிப்பாளர்).
3) பிலிம் நியூஸ் (மாத இதழ்) ஆசிரியராக பணிபுரிந்தது. வெளியிட்டவர் : டைமண்ட் பாபு (2006).
4) பிலிம் சேம்பர் - பத்திரிகையில் பணிபுரிந்து வருவது.

தயாரித்த புத்தகங்கள்

1) மாண்புமிகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் முழு நிதி உதவியுடன் “சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு” நூல் தயாரித்தது(2004)
2) சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்ட போது “சாதனை மலர்” தயாரித்தது (1995).
3) திரைக்கலைஞர்கள் விலாசங்கள் கொண்ட ‘திரைக்கலை தொகுப்பு’ - நூல் தயாரித்தது(1978).
4) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதி அன்று ‘திரைப்பட புள்ளி விபரம்’ - என்ற பெயரில் திரைஉலகினருக்கும், பத்திரிகைகளுக்கு உபயோகப்படும் வகையில், 1954 முதல் ஆண்டு அறிக்கை நூல் இலவசமாக தொடர்ந்து வழங்கி வருவது.
5) திரை நட்சத்திரங்களின் 100-வது படம் வெளிவரும்போது, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, கமல்ஹாசன் சிவக்குமார் ஆகியோருக்கு ஆல்பம் தயாரித்தது.
6) கமலின் 200வது படமான ஆளவந்தான் படம் வெளியிட்ட அன்று படஆல்பம் நூல் தயாரித்தது(2001).
7) சிவாஜியின் 150 படமான சவாலே சமாளி படம் வெளியான போது மலர் வெளியிட்டது(1971).
8) கலைஞர் சின்ன அண்ணாமலை அவர்களுக்காக ‘நடிகர் திலகம்’ - என்ற பெயரில் புகைப்பட ஆல்பம் நூல் தயாரித்தது. காங்கிரஸ் தலைவர் திரு.காமராஜ நாடார் அவர்களால் வெளியிடப்பட்டது(1969).
9) “நெஞ்சில் நிலைத்து நின்று, நினைவை விட்டு அகலாத கவிஞர்களின் திரை இசைப்பாடல்கள்” - என்ற பெயரில் கவிஞர்களின் ஒரு பாடல் தொகுப்பு நூல் தயாரிக்கப்பட்டது(2008).

கண்காட்சிகள் அமைத்தது

திரை உலகம் 50 ஆண்டை முன்னிட்டு, கண்காட்சி 10 நாட்கள் நடத்தப்பட்டது. சாதனைகள் செய்த கலைஞர் 10 பேரை கௌரவப்படுத்தப்பட்டனர்.(1981)

தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சியில், சினிமா உலக கண்காட்சி தொடர்ந்து மூன்று முறை சென்னையில் நடத்தப்பட்டு மூன்றாண்டும் சிறந்த அரங்கு விருது கிடைத்தது.

மதுரை சுற்றுலா பொருட்காட்சியில் சினிமா உலக கண்காட்சி நடத்தி சிறந்த அரங்கு விருது கிடைத்தது.

உலகப் படவிழாவின் போது தெலுங்கு, மலையாளப்பட கண்காட்சி முறையே ஹைதராபாத்திலும் திருவனந்தபுரத்திலும் நடத்தப்பட்டது.

என்.டி.ஆரின் படகண்காட்சி ஹைதராபத்தில் ஆந்திரா பிலிம் சேம்பர் சார்பாக நடத்தப்பட்டது.

கமல்ஹாசன் பிறந்த நாளில் மூன்று முறை கண்காட்சி நடத்தப்பட்டது.

தெலுங்கு திரைப்பட வைர விழாவின்  போது தெலுங்கு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக சென்னையில் நடத்தப்பட்டது.

திரைப்பட நடிகைகள் அஞ்சலி தேவி, ஜமுனா-வாணிஸ்ரீ ஆகியோரில் வெள்ளி விழாவின் போது ஹைதராபாத்தில கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

CINEMA TODAY சார்பில் “78 ஆண்டு தமிழ் சினிமா கண்காட்சி(2009)

பிலிம் நியூஸ் ஆனந்தன், 208, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை- 14.

பட்டங்கள்

1) ‘கலைமாமணி - தமிழக அரசு (1991)
2) ‘கலைச் செல்வம் - நடிகர் சங்கம்(1997)
3) ‘திரைத்துறை அகராதி’ - கண்ணதாசன் மையம்
4) ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ - ராஜபாளையம் ரசிகர் மன்றம்
5) ‘1997- ம் ஆண்டின் சிறந்த மனிதர்’விருது அமெரிக்காவில், வடக்கு கெரோலினா சர்வகலாசாலை வாழ்க்கை வரலாறு கழகம் - வழங்கியது.
6) தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கண்ணசௌத்ரி “கலா பீடம்” விருது(1986)
7) காமராஜர் தேசிய சங்கம் “செய்தி சிகரம்”
8) “கலை மூதறிஞர்” - விருது (ராஜ்கதிரின் கலாலயா)
9) தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கம் “கௌரவ இயக்குனர்” விருதினை வழங்கி கௌரவித்தனர் (1989).
10) ‘நடமாடும் திரையுலகக் கலைக்களஞ்சியம்’ - சிவக்குமார்
11) ‘சினிமா செய்தி தந்தை’ - மௌலி
12) திரையுலக உ.வே.சா. - யூகி சேது

விருதுகள்

1. அஞ்சலி தேவியை தலைவராகக் கொண்ட வி.நாகையா நினைவு சாதனையாளர் விருது(2008).
2. லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் விருது
3. சென்னை மவுண்ட் ரோட்டரி கிளப் சிவாஜி விருது
4. புதுக்கோட்டை ரோட்டரி கிளப்
“Vocational Award ”2003
5. எனது 61-வது பிறந்த நாளை திரைஉலகம் சிறப்பாக நடத்தியது (1990)
6. தமிழக அரசு நடத்திய “நட்சத்திர இரவு” சிறப்பாக நடைபெற உதவியதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் மோதிரம் அணிவிக்கப்பட்டது.
7. சிறந்த பி.ஆர்..ஓ விருது - தமிழ்நாடு டி.வி.பார்வையாளர் சங்கம்.

* 1989 -ல் திரைஉலக 75 ஆண்டு வைர விழவில் “அகில இந்திய சாதனை புரிந்தவர்கள் ” என்ற முறையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை 75 பேரில் ஒருவராக தேர்ந்தெடுத்து கௌரவித்தது.

* 2002 -ல் பிலிம்நியூஸ் ஆனந்தன் 52 ஆண்டுகளாக சேகரித்து வைத்திருந்த திரைசம்மந்தப்பட்ட கலை பொக்கிஷங்களை தமிழக அரசு அரசுடமை ஆக்கிக் கொண்டது, அவைகளை வைத்து நிரந்தர கண்காட்சி ஒன்றினை அமைக்க திட்டம் வகுத்துள்ளது.

சாதனையாளர் விருதுகள்

1. எஸ்.எஸ்.வாசன் விருது - எல்.வி.பிரசாத் விருது
2. சிவாஜி விருது - எம்.ஜி.ஆர்.சிவாஜி அகாடமி விருது(2003)
3. மெகா பைன் ஆர்ட்ஸ் எம்.ஜி.ஆர் விருது
4. மதி ஆர்ட்ஸ் அகாடமி காமராஜர் விருது
5. ஃttN விருது(2004)
6. வெரைட்டி பிலிம் விருது(2008)
7. சினிமா ரசிகர் சங்கம்- விருது மூன்று முறை 1980; 1988; பொன் விழாவில் 1995.
8. வல்லமை தாராயோ- இயக்குனர் மதுமிதா நடத்திய பாராட்டு விழா(2008)
9. ஸ்ரீ ராமானுஜர் டிரஸ்ட் விருது (2008)
10. வி.4 விருது
11. ஓம் சக்தி அகாடமி (பொன் விழாவில் விருது)
12. தமிழக அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட “சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு ” தயாரித்தற்காக, சென்னை சினிமாரசிகர்கள் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட வரலாறு” தயாரித்தற்காக, சென்னை சினிமா ரசிகர்கள் சங்கமும், தமிழ்நாடு டி.வி.பார்வையாளர் சங்கமும் இணைந்து, விழா எடுத்து கௌரவித்தது.
13. ஜெய்சங்கர் அவர்களால் கீழ்பாக்கம் உடல் ஊனமுற்றவர்கள் இல்லத்தில் கௌரவிக்கப்பட்டார்.
14. வி.ஜி.பி.- தம்ஸ் அப் - அஜந்தா
15 அம்பத்தூர் கலைக்கழகம்
16. ரைசிங் ஸ்டார் பிலிம் விருது(2008).
17. சிவாஜி - பிரபு அறக்கட்டளை சார்பில் சிவாஜி கணேசன் பிறந்த நாளில் கௌரவிக்கப்பட்டார் (2008).
18. CINEMA TODAY சார்பாக விருது (2007)

பத்திரிகைகள் விருது

1. சினிமா எக்ஸ்பிரஸ் விருது
2. தமிழ் மூவிஸ் விருது
3 தினகரன் விருது
4. விக்டரி சினிமா டைரி விருது
5. ரைசிங் ஸ்டார் விருது
6. ஹதராபாத் பிலிம் கிளப் வெள்ளி விழா ஆண்டு விருது
7. தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்றதர்க்கு பாராட்டு விழா
8. சென்னையில் 75 ஆண்டு தெலுங்கு சினிமா கண்காட்சி நடத்தியமைக்கு, தெலுங்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு விழா
9 சூப்பர் சினிமா - வெரைட்டி சினிமா விருது(2008).

டி.வி.சேனல் விருது

1) விஜய் டி.வி.(சாதனையாளர் விருது) (2008)
2) ராஜ் டி.வி.“75 ஆண்டு திரை உலகம் விருது (2008)
3) இந்து டி.வி.(2008)

No comments:

Post a Comment