Wednesday 29 April 2020

ANJALI RAO , ACTRESS BORN 1990 APRIL 29



ANJALI RAO , ACTRESS BORN 1990 APRIL 29



.அஞ்சலி ராவ் என்பவர் இந்திய திரை நடிகையும், தொலைக் காட்சி நடிகையும் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார். வன்மம் (திரைப்படம்) (2014) மற்றும் பேபி (2015) மூலம் அறியப்படுகிறார்.
இவர் நடித்த படங்கள்:  சூது கவ்வும், பீட்சா II: வில்லா, மாலினி 22 பாளையங்கோட்டை, வன்மம், பேபி, அச்சம் என்பது மடமையடா, பீச்சாங்கை, அண்ணனுக்கு ஜே, செய்
அஞ்சலி ராவ் என்பவர் இந்திய திரை நடிகையும், தொலைக் காட்சி நடிகையும் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.

வன்மம் (திரைப்படம்) (2014) மற்றும் பேபி (2015) மூலம் அறியப்படுகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தலையணைப் பூக்கள்' சீரியலில், 'வேதாஜி' கதாபாத்திரத்தில் நிஷாவுக்குப் பதிலாக களம் இறங்கியிருப்பவர், அஞ்சலி ராவ். 'சூது கவ்வும்' படத்தின்மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர். தற்போது, சின்னத்திரையின் முக்கிய நாயகிகளுள் ஒருவராக இடம்பிடித்திருக்கிறார். அவரது வெள்ளித்திரை டூ சின்னத்திரை பயணம் குறித்து கலகலவென பேசத் தொடங்கினார். 

''நீங்க எந்த ஊர்? உங்க ஃபேமிலி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...'' 

''என் அப்பா ஆர்மியில் வேலை பார்க்கிறவர். அதனால், அடிக்கடி டிரான்ஸ்பர்; வேற வேற ஊர்களுக்கு இடம் மாறிட்டே இருப்போம். நானும் தம்பியும் பஞ்சாப்ல பொறந்தோம். ஆனால், நான் படிச்சது எல்லாம் சென்னையில்தான். எம்.பி.ஏ முடிச்சிருக்கேன்.'' 


''வெள்ளித்திரை நாயகியாக ஜொலித்த சில வருஷங்களிலேயே சின்னத்திரைக்கு வந்துட்டீங்களே ஏன்?'' 

''நான் நிறைய தமிழ்ப் படங்களில் நடிச்சிருக்கேன். இன்னும் நிறையப் படங்களில் நடிக்க ரெடிதான். ஆனால், எனக்கு கிளாமர் ரோல் பிடிக்காது. அதனாலேயே தேடிவந்த பல வாய்ப்புகளை தவிர்த்துட்டிருந்தேன். அப்போதான் சன் டி.வியில் ஒளிபரப்பாகும் 'மகாலட்சுமி' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. மக்கள் பாராட்டற மாதிரி நல்ல கேரக்டர் பண்றதுதான் விருப்பம். அது வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ, நடிப்புத் திறமையை வெளிப்படுத்தணும்னு நினைச்சேன். அந்த சீரியலில் நடிக்க ஆரம்பிச்சேன்.'' 


''இப்போ பலரும் நடிப்பு மட்டுமில்லாமல் ஒரெ நேரத்தில் பல துறையில் கலக்கறாங்க. அஞ்சலி எப்படி?'' 

''எனக்கு டைரக்‌ஷன் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக, விளம்பரப் படங்களை டைரக்ட் பண்றது பிடிச்ச விஷயம். அதைப் பண்ணிட்டிருக்கேன். விளம்பரப் படங்களில் நடிக்கவும் செய்யறேன். மாடலிங் வாய்ப்பும் வருது. ஆனால், அதில் எனக்கு விருப்பம் இல்லை. அப்புறம், நான் வாலிபால் பிளேயர். இப்போகூட விட்டீங்கன்னா, கிரவுண்டுல இறங்கி விளையாட ஆரம்பிச்சுடுவேன். வாலிபால் என்னுடைய ஃபேவரைட் கேம்.'' 

'' 'தலையணைப் பூக்கள்' சீரியலின் புது வேதாஜி பற்றி மக்கள் என்ன சொல்றாங்க?'' 

''வேதாஜி கேரக்டர் மக்களிடம் ரொம்பவே ஃபேமஸா இருந்துச்சு. அதில், ஆரம்பத்தில் மக்கள் என்னை ஏத்துக்கலை. ஆனாலும் நம்பிக்கையோடு தொடர்ந்து நடிச்சேன். இப்போ எல்லாரும் என்னை வேதாஜினு கூப்பிடறதைக் கேட்கறப்போ ரொம்ப ஹேப்பி.'' 


''உங்க பிளஸ்...'' 

''ஃபேமிலிதான் என்னுடைய பிளஸ். அவங்களோடு அதிக நேரம் செலவழிப்பேன். வீட்டையும் ஷூட்டிங் ஸ்பாட்டையும் தவிர்த்து எங்கேயும் போனதில்லே. முக்கியமான பண்டிகையின்போதுகூட முந்தைய நாளில் ஷாப்பிங் போயிட்டு சீக்கிரமே வந்துடுவேன். ஜீன்ஸும் டாப்ஸும் விரும்பி வாங்குவேன். அது எனக்கு நல்லா செட்டாகுது. இப்போ, சீரியலுக்காகப் புடவைகள் வாங்கறேன்.'' 


''மறுபடியும் வெள்ளித்திரையில் தொடர்ந்து நடிப்பீங்களா?'' 

''நடிக்ககூடாதுனு இல்லே. ஒரு கேரக்டர் பண்ணாலும் அது மக்கள் மனசுல ஆழமாகப் பதியணும். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நடிக்க காத்திருக்கேன்.'' 


''வீட்டில் அடிக்கடி திட்டு வாங்குற விஷயம்...'' 

''நான் ரொம்ப குழந்தைத்தனமா இருப்பேன். யார்கிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாமல் விளையாடிட்டா ஏதாவது சொல்லிடுவேன். அதுக்காக அடிக்கடி அம்மா திட்டுவாங்க. அப்புறம், நானும் தம்பியும் இந்தியாவும் பாகிஸ்தானுமா மோதிப்போம். அதுக்கும் எனக்குத்தான் செமையா திட்டு கிடைக்கும்.'' 

''கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டீங்களா?'' 



''இப்போதைக்கு இல்லே. ஆனால், லவ் அண்டு அரேன்ஜ் மேரேஜா இருக்கும்னு சொல்லிக்கிறேன்.''

No comments:

Post a Comment