Sunday 26 April 2020

R.SUDARSANAM,MUSIC DIRECTOR BORN 1914,APRIL 26 - 1991




R.SUDARSANAM,MUSIC DIRECTOR BORN 1914,APRIL 26 - 1991

ஆர் .சுதர்சனம் வறுமையான குடும்பத்தில்,  ராமகிருஷ்ணா செட்டியாருக்கு மகனாய் ஏப்ரல் 26 ,1914  இல் பிறந்தார் .குடும்பத்தை 
நடத்தி செல்ல வழியின்றி மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இசைக்குடும்பத்தில் அவருடன் உடன் பிறந்தவர்கள் 11  பேர் .
பிள்ளைகள் ஐந்து பேர் .மூத்தவர் சுதர்சனம் 

சுதர்சனம் வறுமையின் தாக்கத்தினால் குப்பி வீரண்ணா நாடக கம்பெனியில் சேர்க்கப்பட்டார் . முதலில் நாடக நடிகன் .பின்னர் ஆர்மோனிய கலைஞன் .அப்புறம் வயலின் பாய்ஸ் கம்பெனி கேசவ மூர்த்தியிடம் இசைப்பயிற்சி பெற்றார் .தாய்மொழி தெலுங்கு ,கன்னட நாடகமாக வாழ்க்கை ஓடி கொண்டிருக்கையில் மெட்றாஸ் அழைத்தது.1930  களில்  மக்களின் சிறந்த மலிவான பொழுதுபோக்கு சாதனம் இசை தட்டும் ,கிராமபோனும் தான் .நாடகமும் ,பேசும்
சினிமாவும் இதற்கு அடுத்துதான் . ஏவி மெய்யப்ப செட்டியார் odeon கம்பெனியுடன் சேர்ந்து இசைத்தட்டுகள் தயாரித்து வந்தார் .நாடகங்கள் இசைத்தட்டில் பதிவு செய்ய ,ஆர்மோனியம் இசை வாசிக்க மாதம் அறுபது ரூபாயில் வேலையில் அமர்ந்து கொண்டார் .பின்னர் சர்மா பிரதர்ஸ் மூலம் இசை எடிட்டிங் கற்றார் .இவ்வாறாக 1939  இல் தியாகராஜ பாகவதருக்கு திருநீலகண்டரில் இசை அமைத்தார்..ஏவிஎம் நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு இசை அமைத்தார் .1944  வரை 
படங்களில் சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்ச்செஸ்டரா என்றே இருந்தது .1945  இல் ஸ்ரீ வள்ளியில் தான் முதன் முதலாக இசை அமைப்பாளர் பெயர் 
போடப்பட்டிருந்தது .இவ்வாறாக ஏவிஎம் மின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஆனார் . .1950  களில் பாடல் வரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 

அதற்கு மெருகூட்டும் வகையில்ஜி .ராமநாதன் ,கே .வி .மகாதேவன் ,விசுவநாதன் ராமமூர்த்தி    இசை அமைத்து வந்தனர் .அதே பாணியினிலேயே சுதர்சனமும் தன்முத்திரையை பதித்தார்  .என்றாலும் விசுவநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் முன்னணியில் 
ஏறுமுகத்தில் இருந்தனர் .நானும் ஒரு பெண் க்கு அப்புறம் சோபிக்கவில்லை ;

பிற்கால வாழ்கை 
ஆண் பிள்ளைகள் நாலுபேர் திரை இசையில் வாசித்துக்கொண்டிருக்கின்றனர்.சிலருக்கு 
வீணை கற்று கொடுத்தார் . கேரம் விளையாடுவதில்  கில்லாடி .நெடுநாளைய வெற்றிலை ,புகையிலை பழக்கம் கல்லீரலை பாதித்தது 1990 . அறுவை சிகிச்சைக்கு பின் ஆறு மாதத்தில் இறந்தார் 1991


தமிழ்த் திரைப்படங்கள்[2][3]
திருநீலகண்டர் 1939 
வாயாடி போலி பாஞ்சாலி 1940 
பூ கைலாஷ் ( தெலுங்கு ) 1941 
சபாபதி 1942 
என் மனைவி 1942 
ஹரிச்சந்திரா 1944
ஸ்ரீ வள்ளி (1945)
நாம் இருவர் (1947)
வேதாள உலகம் (1948)
வாழ்க்கை (1949)
ஓர் இரவு (1951)
பராசக்தி (1952)
பெண் (1954)
செல்லப்பிள்ளை (1955)
பக்த இராவணா (1958)
மாமியார் மெச்சின மருமகள் (1959)
களத்தூர் கண்ணம்மா (1960)
தெய்வப்பிறவி (1960)
அன்னை (1962)

நானும் ஒரு பெண் (1963)
பூம்புகார் (1964)
அன்புக்கரங்கள் (1965)
கார்த்திகைத்தீபம் (1965)
பூமாலை (1965)
மணிமகுடம் (1966)






.

No comments:

Post a Comment