R.SUDARSANAM,MUSIC DIRECTOR BORN 1914,APRIL 26 - 1991
R.SUDARSANAM,MUSIC DIRECTOR BORN 1914,APRIL 26 - 1991 ஆர் .சுதர்சனம் வறுமையான குடும்பத்தில், ராமகிருஷ்ணா செட்டியாருக்கு மகனாய் ஏப்ரல் 26 ,1914 இல் பிறந்தார் .குடும்பத்தை நடத்தி செல்ல வழியின்றி மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இசைக்குடும்பத்தில் அவருடன் உடன் பிறந்தவர்கள் 11 பேர் . பிள்ளைகள் ஐந்து பேர் .மூத்தவர் சுதர்சனம் சுதர்சனம் வறுமையின் தாக்கத்தினால் குப்பி வீரண்ணா நாடக கம்பெனியில் சேர்க்கப்பட்டார் . முதலில் நாடக நடிகன் .பின்னர் ஆர்மோனிய கலைஞன் .அப்புறம் வயலின் பாய்ஸ் கம்பெனி கேசவ மூர்த்தியிடம் இசைப்பயிற்சி பெற்றார் .தாய்மொழி தெலுங்கு ,கன்னட நாடகமாக வாழ்க்கை ஓடி கொண்டிருக்கையில் மெட்றாஸ் அழைத்தது.1930 களில் மக்களின் சிறந்த மலிவான பொழுதுபோக்கு சாதனம் இசை தட்டும் ,கிராமபோனும் தான் .நாடகமும் ,பேசும் சினிமாவும் இதற்கு அடுத்துதான் . ஏவி மெய்யப்ப செட்டியார் odeon கம்பெனியுடன் சேர்ந்து இசைத்தட்டுகள் தயாரித்து வந்தார் .நாடகங்கள் இசைத்தட்டில் பதிவு செய்ய ,ஆர்மோனியம் இசை வாசிக்க மாதம் அறுபது ரூபாயில் வேலையில் அமர்ந்து கொண்டார் ....