HOW PAKISTANIS DEFEATED IN 1965 WAR
HOW PAKISTANIS DEFEATED IN 1965 WAR . இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படையினர் சிக்கிக் கொண்டது எப்படி: 1965 போர் ரெஹான் ஃபஜல் பிபிசி 9 செப்டெம்பர் 2017 1965 செப்டம்பர் 6-ஆம் தேதி இரவு முதல் 7-ஆம் தேதி காலை வேளைக்குள் பாகிஸ்தானின் பி-57 விமானங்கள் இந்திய நிலைகளில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. அவற்றைத் தொடர்ந்து வந்த சி-130 ஹெர்குலஸ் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன. ஒவ்வொரு விமானத்திலும் எலைட் சிறப்பு சேவைகள் குழுவின் அறுபது கமாண்டோக்கள் இருந்தனர். இந்தியாவின் அல்வரா, ஆதம்பூர், பதான்கோட் ஆகிய நகரங்களின் விமான நிலையங்களில் நள்ளிரவில் பாராசூட் மூலம் இறங்குவது அவர்கள் திட்டம். விமான நிலையங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அங்குள்ள இந்திய விமானங்களை அழிக்கவேண்டும் என்பது அவர்கள் இலக்கு.இரவு இரண்டு மணிக்கு 'மேஜர் காலித் பட்' தலைமையில் 60 பாகிஸ்தானிய கமாண்டோக்கள் பதான்கோட் விமானத் தளத்திற்கு அருகில் இறங்கினார்கள். இறங்கியவர்களை ஒன்றன்பின் மற்றொன்றாக பல சிக்கல்கள் சூழ்ந்தன. விமான நிலையத்தைச் சுற்றி கால்வாய்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் சேறு நிறைந்த வயல்க...