மஹாத்மா காந்தி வழியில் மார்ட்டின் லூதர் கிங் 1963 ஆகஸ்ட் 28 இல் ஆற்றிய உரை
மஹாத்மா காந்தி வழியில் மார்ட்டின் லூதர் கிங் 1963 ஆகஸ்ட் 28 இல் ஆற்றிய உரை எழுந்திரு அமெரிக்கா, உனது இலக்குக்குத் திரும்பிவா.” “என்னுடைய வெள்ளையினச் சகோதர, சகோதரிகளை ஆன்மரீதியிலான மரணத்திலிருந்து காப்பாற்று வதற்கு என்னுடைய உடல்ரீதியிலான மரணம்தான் விலையென்றால், அதைவிட வேறு எந்தவித மீட்சியும் சிறப்பாக இருக்காது" “கலவரங்களில் ஈடுபடுவதற்கும் கோழைத்தனமான அடிபணிதலுக்கும் மாற்றாக ஒரு வழிமுறை நமக்குத் தேவை. அகிம்சைதான் நமது வலுவான ஆயுதம்.” அகிம்சை என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள், தர்மத்தின் மார்புக் கவசத்தை அணிந்துகொள்ளுங்கள், உண்மையின் கேடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், நிற்காமல் போய்க்கொண்டே இருங்கள்.” மார்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King, Jr.; ஜனவரி 15, 1929 - ஏப்ரல் 4, 1968)[1] ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சி...