SEKIRIYA MOUNTAIN OF SRILANKA
SEKIRIYA MOUNTAIN OF SRILANKA சீகிரியா என்றதும் காசியப்ப மன்னனால் கட்டப்பட்டது. அஜந்தாவை ஒத்த ஓவியங்கள் தீட்டப்பட்டது என்பன மட்டும் தான் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அதில் மேலும் பல சுவாரஸ்யங்கள் ஒளிந்துக் கிடக்கின்றன. தம்புள்ளை ஹபரைணை பிரதான வீதியில் இனாமலுவவிலிருந்து கிழக்கே 10 கிலோமீற்றர் சென்றதும் சீகிரியா குன்றை காணலாம். அதன் அடிவாரம் வரையில் வாகனத்தில் சென்று இருபுறமும் அடர்ந்த காட்டின் நடுவே கொஞ்ச தூரம் இயற்கையை ரசித்தவாறு நடந்துசெல்லும் போது சம தரையில் இரண்டு புறமும் புல்வெளிகள் , பூத்துக் குலுங்கும் மரங்களுக்கு நடுவே இருக்கும் நேர் பாதை சீகிரியா குன்றை சென்றடைகிறது. ஏறுவதற்கு ஒரு வழி இறங்கி செல்ல ஒரு வழி என இரண்டு வேறுப்பட்ட வழிகளில் உள்ளன. இத்தனை பிரமாண்டங்களை கொண்ட சீகிரியா குன்றின் வரலாறு காசியப்ப மன்னனால் உருவானது. அனுராதபுரத்தை தலைநகராகக்கொண்டு இலங்கை முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த மன்னன் தான் தாதுசேனன். அவனுக்கு இரண்டு மனைவியர், மூன்று பிள்ளைகள். மூத்தவன் காசியப்பன் ஆனால் அவனின் தாய் தாழ்ந்த சாதிப்பெண் என்பதால் அவன் சிம்மாசனத...