RAZIA SULTAN BEGUM , MURDERED 1240 OCTOBER 13
RAZIA SULTAN BEGUM , MURDERED 1240 OCTOBER 13 ரஸியா பேகம்.DIED 1240 OCTOBER 13 முகமது கோரி தன் ரத்தக் களி ஆட்டத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊர் போய் சேருவதற்கு முன் குதுப்புதீன் அய்பக் என்ற அடிமையை டில்லிக்கு ராஜாவாக வைத்து விட்டுப்போனான் (இதன் காரணமாகத்தான் அடிமை சாம்ராஜ்யம் “Slave Dynasty” என பெயர் பெற்றது). அடுத்து வந்த இல்துமிஷ் தன் பங்குக்கு நன்றாகவே ஆட்சி செய்தார். ஆனால் அவருக்கு வாய்த்த மகன்களோ அது இது மது மாது என்று எல்லா தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி ஒரு அரசனுக்கு உண்டான எந்த தகுதியும் இல்லாமல் போனார்கள். அந்தக் குறையை தீர்க்கத்தான் அவருடைய மகள் இருந்தாள். அவள் பெயர் ரஸியா பேகம். வீரத்தில் மட்டுமல்ல, எல்லோரிடமும் பழகுவதிலும் சரி, அறிவிலும் சரி ரஸியா சுல்தான் பேகம் சிறந்து விளங்கினாள். சாகும் தருவாயில் இல்துமிஷ் தன் மகளைத்தான் பட்டத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று ஆசைப் பட்டார். ஆனால் பிற்போக்கு சிந்தனை கொண்ட அமைச்சர் குழு “பெண்ணாகப் பிறந்தவள் மண்ணாளுவதா?” “அணங்கிற்கு நாங்கள் இணங்கி போவதா?” என்று பஞ்ச் வசனம் பேசி, ரஸியாவின் ஒன்றுவிட்ட சகோதரன் “ருக்னுதீன் பிரோஸ்” என்ப...