Posts

Showing posts with the label NARAYANASWAMY

SAROJ NARAYANASWAMY - ALL INDIA RADIO

Image
  SAROJ NARAYANASWAMY - ALL INDIA RADIO ஆல் இண்டியா ரேடியோ .. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி .. TV காலத்துக்கு முந்தையவர், எங்களை ப்போல. இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரின் இன்முகம் காண்போமே .. ! வயது 85 இந்த உலகில் அழகால் அறியப்படுபவர்களுக்கு இணையாக குரலால் அறியப்பட்டு, அழியாப் புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள். இப்படி தமது குரலால் புகழ் பெற்றவர்களில் முக்கியமான ஒருவரைத் தேடி கண்டடைந்தோம். அவர்தான் அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான “கலைமாமணி’ சரோஜ் நாராயண சுவாமி. சென்ற தலைமுறை தமிழர்கள், தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை இவரது கம்பீரமான குரலுக்காகவும், உச்சரிப்புக்காகவும் விரும்பிக் கேட்டிருக்கிறார்கள். இப்போது மும்பையில் வசிக்கும் சரோஜ் நாராயணசுவாமி இந்த 82 வயதிலும் முதுமையின் சுவடுகள் எதுவும் முகத்தில் தெரியாமலும், அதே கம்பீரமான குரலுடனும் பேசுகிறார். அவர் நம்மிடம் பகிர்ந்ததை கேளுங்கள் “என்னுடைய முன்னோர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஆனால் நான் பிறந்து வளர்ந்து பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தது எல்லாம் மு...