RWANDA GENOCIDES BURST 1994 APRIL 7
RWANDA GENOCIDES BURST 1994 APRIL 7 ருவாண்டா இனப்படுகொலை (Rwandan Genocide) என்பது 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் நூறாயிரக்கணக்கில் துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும். இதன் போது சில மாதக் காலப் பகுதியில் 500 000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். பெருந்தொகையானோர் ஊனமாக்கப்பட்டோர். பெரும் உடைமை அழிவும் நிகழ்ந்தது. இந்த படுகொலை தொடங்கிய நாள் ஏப்ரல் 7 1994. பெரும்பான்மையினரான ஊட்டு இன அரசின் இனவாதக் கொள்கைகள் இந்தப் படுகொலைகளுக்கு காரணமாக அமைந்தன.[5] 1994ஆம் ஆண்டு ஒரு நூறு நாள் காலகட்டத்தில் ருவாண்டாவில் எட்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இறந்தவர்கள் பெரும்பான்மையாக துத்ஸி இனத்தார்; கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையாக ஹூட்டு இனத்தார். பின்னணி ருவாண்டாவின் அப்போதைய ஜனத்தொகையில் 85% சதவீதம் பேர் ஹூட்டு இனத்தார் என்றாலும், அங்கு சிறுபான்மையாக வாழ்ந்துவந்த துத்ஸி இனத்தாரின் கை மேலோங்கியிருந்தது. 1959ல் ருவாண்டாவின் துத்ஸி மன்னராட்சி முறையை ஒழித்துவிட்டு ஹூட்டூக்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர். வரைபடத்தில் - ...