Posts

Showing posts with the label காமராஜ்

விருதுநகர் சதி வழக்கு

Image
விருதுநகர் சதி வழக்கு  விருதுநகர் சதி வழக்கு  1942ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் இந்தியத் திருநாடு கொந்தளிப்பில் ஆழ்ந்த நேரம். தமிழ்நாடு அதிலும் பின்தங்கிவிடவில்லை. தேவகோட்டை கலவரம், திருவாடனை சிறை உடைப்பு, குலசேகரப்பட்டினம் கலவரம், புகளூர் தண்டவாளப் பெயர்ப்பு, கோவை சூளூர் விமான தளம் எரிப்பு போன்ற பல புரட்சிகள் நடந்து கொண்டிருந்த நேரம். இதற்கெல்லாம் முன்னோட்டமாக 1933ஆம் வருஷம் தென் தமிழ்நாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்வோம். அந்தக் காலத்தில் விருதுப்பட்டி என்று அழைக்கப்பட்ட விருதுநகரில் தீவிர காங்கிரஸ்காரர்களாக விளங்கிய கு.காமராஜ், அவருடைய நண்பர் கே.எஸ்.முத்துச்சாமி ஆகியோர் சுதந்திரப் போர் எழுச்சியில் தீவிரமாக ஈடுபட்ட நிகழ்ச்சியொன்றை இப்போது பார்ப்போம். ஒரே ஊரைச் சேர்ந்த இவ்விருவரும் காங்கிரசில் பிரபலமாக வளர்ந்து வந்தார்கள். கு.காமராஜ் அவர்களின் பெற்றொர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மையார். கே.எஸ்.முத்துச்சாமி அவர்களின் பெற்றோர் கே.சங்கரநாராயண ஆச்சாரி, அன்னபூரணத்தம்மாள். 1933இல் உதகமண்டலத்தில் ஓய்வெடுக்கச் சென்றிருந்த வங்காள மாநிலத்தின் கவர்னர...