GOWDAMI ,INDIAN ACTRESS BORN 1965 JULY 2
GOWDAMI ,INDIAN ACTRESS BORN 1965 JULY 2 கௌதமி (பிறப்பு 2 ஜூலை 1965) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் கௌதமி. தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவ மைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார். வட இந்திய தொழிலதிபர் சந்தீப் என்பவரை திருமணம் செய்து பின் விவகாரத்து பெற்றார். இந்த விவகாரத்துக்குப் பின்ன் கமலஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் கவுதமி. இருவரும் கடைசியாக பாபநாசம் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் Nidadavole என்கிற ஊரில் 1965 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தேதி பிறந்தவர் நடிகை கவுதமி. விசாகப்பாட்டினம் GITAM கல்லூரியில் படித்தவர், அவருடைய பதினெட்டவது வயதில் ரஜினிகாந்த், ஹேமமாலினி நடித்த அந்த கானுன் இந்திப் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார். இந்தப் படம் 1983ல் வெளியானது. அதன் பிறகு 1987ல் அவரது உற...