Posts

Showing posts with the label MAHESH BABU

BUSINESS MAN ,TELUGU -TAMIL DUBBED MOVIE REVIEW

Image
BUSINESS MAN ,TELUGU -TAMIL DUBBED MOVIE REVIEW கொல்ட்டிகள் என்று தமிழர்களால் ஏளனம் செய்யப்பட்டவர்கள் இன்று தமிழர்களை வாய் பிளக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நாம் உணர வேண்டிய உண்மை. நான் இதுவரை பார்த்த தெலுங்கு திரைப்படங்களை பத்து விரல்களில் அடக்கி விடலாம். அதில் தோழி ஜெயமாலினிக்காக மற்ற காட்சிகளை சகித்துக் கொண்டு பார்த்தது எட்டாவது இருக்கும். தினகரன் வார இதழ் இணைப்புகளில் நண்பர் சிவராமன் இன்ன பிற தென்னிந்திய மொழித் திரைப்படங்களைப் பற்றி 'படம் பக்காவாக வந்திருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி கல்லாவை நிரப்பியிருக்கிறது' என்றெல்லாம் ரகளையாக எழுதி வருவதால் ஏற்பட்ட மனவெழுச்சியில் 2012-ல் வெளிவந்து மெஹா ஹிட்டான 'பிஸினெஸ் மேன்' படத்தை (தமிழ் டப்பிங்கில்) இன்று பார்த்து தீர்த்தேன். மகேஷ்பாபு போன்ற ஓர் அமுல்பேபி முகத்தை ஒரு டானாக கற்பனை செய்து பார்ப்பதற்கே அசாத்தியமான துணிச்சல் வேண்டும். இயக்குநர் பூரி ஜெகன்னாத் தனது முரட்டுத்தனமான அதிரடி ட்ரீட்மெண்ட்டால் அதை நம்ப வைக்க முயற்சி்த்து சற்று வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொ...