BICYCLE THEIF MOVIE CREATED DIRECTOR SATYAJIT ROY
BICYCLE THEIF MOVIE CREATED DIRECTOR SATYAJIT ROY விதைகளில் இருந்து தான் ,மரங்களும் ,செடிகளும் ,கொடிகளும் உருவாகின்றன .இவ்வாறு விதைத்த விதைகளில் இருந்து தான் ஒரு சத்தியஜித் ராய் நமக்கு கிடைத்தார் .அவர் பார்த்த இந்த திரைப்படம் அவருக்கு இருந்த உணர்ச்சிகளையும் ,யதார்த்தத்தையும் வெளிக்கொணர்ந்தது - அந்த படம் " bicycle thief " @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ உங்கள் வாழ்வில் எப்போதேனும் நீங்கள் திருடியிருக்கிறீர்களா..? இந்தக்கேள்வியைக் கேட்டால் யாரிடமிருந்தும் ஒருமாதிரியான புன்னகைதான் பதிலாக வரும். அந்தப் புன்னகைக்கு ஆமாம் என்றும் அர்த்தம் கொள்ளலாம்..அல்லது இல்லையென்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உள்ளே திருடனாக ஒளிந்திருப்பதென்னவோ.. அப்பப்ப... விளையாட்டுத்தனமாகவேனும்... சின்னச்சின்னத் திருட்டுகளில் நாம் ஈடுபட்டிருக்கிறோம் என்பதாக த்தான் இருக்கும். வெற்றிகரமான திருட்டின் சாகசத்தன்மைதான் மறுபடியும் மறுபடியும் நம்மை அதை நோக்கி தள்ளியிருக்கக்கூடும். கள்ளன்-போலீஸ் விளையாடுகிறபோதும்கூட, ஒரு போலீஸ்காரனாய் இருந்து திருடனை கண்டுபிடிக்கும்போது கிடைக்கிற பெருமிதத்தைக...