COVAI , CINEMA STUDIOS - DISAPPEARED CIVILISATIONS
COVAI , CINEMA STUDIOS - DISAPPEARED CIVILISATIONS கோவை - திருச்சி சாலை வழியாகச் செல்லும் கோவையின் நகரப் பேருந்துகளில் 6 கிலோ மீட்டர் தொலைவு சென்றதும் ஓரிடத்தில், ‘சென்ட்ரல் ஸ்டுடியோ எறங்கு!’ என நடத்துநர் உரக்கச் சொல்வதைக் கேட்கலாம். ஊருக்குப் புதியவர்கள் யாராவது அங்கே இறங்கிப் பார்த்தால் ஸ்டுடியோவும் இருக்காது; சென்ட்ரலும் இருக்காது!விவரம் தெரிந்த அந்தக் காலத்து மனிதர்களைக் கேட்டால் மட்டும், அந்தப் பேருந்து நிறுத்தத்துக்கு நேர் தென்புறம் உள்ள காம்பவுண்டுக்குள் இருக்கும் அந்தப் பரந்த வெளிதான் சென்ட்ரல் ஸ்டுடியோ இருந்த இடம் என்பார்கள். இப்போது அதனுள்ளே நுழைந்தால் சுமார் அரை ஏக்கருக்கு இருபுறமும் பார்த்தினியம் செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. அதைக் கடந்தால் உள்ளே சில பார்சல் அலுவலகங்கள், கம்பெனிகள், இரும்புக் குடோன்கள் வியாபித்திருக்கின்றன. கனவு காண வைத்தார்கள் இந்த வளாகத்தில் தான் அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட கதாநாயகர்கள் கதாநாயகிகளுடன் டூயட் பாடினார்கள். ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ.!’ என வெற்றிலைச் சிவப்பு வாயால் பா...