MARUTHANAYAGAM , THE MOHAMED YUSUF KHAN HISTORY
MARUTHANAYAGAM , THE MOHAMED YUSUF KHAN HISTORY முகமது யூசுப் கான் என்றழைக்கப்பட்ட மருதநாயகம் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும் பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்தார்.][1] ஆங்கிலேயரும் ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர். பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர். தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். அக்டோபர் 15, 1764 ஆம் ஆண்டில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிப்பட்டார் முகமது யூசூப் கான் இளமை[மூலத்தைத் தொகு] சிவகங்கை அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டு மருதநாயகம் சாம்பவர் குல வேளாளர் இனத்தில் பிறந்தார்.[2] பனையூரில் இருந்த சாம்பவர் குல வேளாளர்களின் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்ற...