ARTHUR ,THOMAS COTTON WHO BUILT MUKKOMBU DAM,ANAIKKARAI,SCHEMING TO VETTARU ,VENNAARU
ARTHUR ,THOMAS COTTON WHO BUILT MUKKOMBU DAM,ANAIKKARAI,SCHEMING TO VETTARU ,VENNAARU முக்கொம்பு அணையை கட்டிய ஆர்தர் தாமஸ் காட்டன் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் டெல்டா பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து இருந்தாலும், பழமையும் பெருமையும் தேக்கி வைத்து நின்ற முக்கொம்பு பாலம் உடைந்தது மக்களை கவலைக்குள்ளாகியது... தண்ணீரை தேக்கி வைக்க கல்லணையை கரிகாலன் கட்டியது போல முக்கொம்பு அணைக்கு விதை போட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சர். ஆர்தர் தாமஸ் காட்டன்....பிரிட்டிஷ் காரர்களின் ஆதிக்கத்தில் தமிழகம் இருந்தபோது, 1822 ஆம் ஆண்டு ஏரி பராமரிப்பு துறையில் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு உதவியாளராக பணி நியமனம் செய்யப்பட்டவர் தாமஸ் காட்டன்...1829ஆம் ஆண்டு காவிரி பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக இவரை ஆங்கிலேய அரசு நியமித்தது. அப்போது கல்லணையின் கட்டுமானத்தையும், அதன் பயன்பாட்டையும் பார்த்து வியந்த காட்டன், கொள்ளிடத்தில் தடுப்பணையை கட்டினார். காவிரியும், கொள்ளிடமும் பிரியும் இடமான முக்கொம்புவிற்கு வரும் தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுத்து, அதை மக்களுக்கு பயன்ப...