AJINAMOTTO - BUSINESS TRICKS
AJINAMOTTO - BUSINESS TRICKS நவீன உணவுகள் பற்றி நாம் பேசத் துவங்கும் போதெல்லாம் உடனடியாக நம் நினைவுக்கு வரும் பெயர்களில்ஒன்று ,அஜினோ-மோட்டோ. *அஜினோமோட்டோ ஆபத்தான சுவை கூட்டும் உப்பு. *அஜினோமோட்டோ மூளையில் கேன்சரை உருவாக்கும் தன்மை கொண்டது. *அஜினோமோட்டோ கலக்கப்பட்ட உணவுகள், தீராத நோய்களை ஏற்படுத்தும். - இப்படி விதம்விதமான கருத்துக்கள் அஜினோ மோட்டோவைப் பற்றி உலா வருகின்றன. பல ஹோட்டல்களில் ‘இங்கு அஜினோமோட்டோ பயன்படுத்துவது இல்லை’ என்று பெயர்ப் பலகை வைக்கும் அளவிற்கு இந்த பயம் பரவலாக இருக்கிறது. ஆனாலும் இதை யெல்லாம் மீறி நம்முடைய அன்றாட உணவுகளில் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் அஜினோ மோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2008ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவின் அளவு, ஆண்டிற்கு 5000 டன் ஆகும். உலகம் முழுவதும் பயன்படும் அஜினோ மோட்டோவின் அளவு பத்தரை லட்சம் டன். பயம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதை விட பல மடங்கு அஜினோமோட்டோவின் உற்பத்தியும், விற்பனையும் அதிகமாகிக் கொண்டே போகிறது. உண்மையில் அஜினோமோட்டோ அவ்வளவு ஆபத்தானதா? அஜினோமோட்டோவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால...